Untitled Document
March 28, 2024 [GMT]
இதிலும் சாதனை படைத்த நாடாளுமன்றம்! - கண்காணிக்க உத்தரவு
[Friday 2018-10-19 09:00]

நாடாளுமன்றத்தில் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பாக, முழுமையாக கண்காணிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கையிலேயே அதிகமாக உணவுகள் விரயமாக்கப்படுவது நாடாளுமன்றத்தில் தான் என கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தையடுத்தே சபாநாயகர் கருஜயசூரிய இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


வங்கக் கடலில் உருவாகும் தாழமுக்கம்!
[Friday 2018-10-19 09:00]

வங்கக் கடலில் மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு சூறாவளியாக உருமாற்றம் அடையுமா என்பது பற்றி தற்போது தெளிவாக கூறமுடியாதுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.


மோடியிடம் சரணடைந்த மைத்திரி - உரையாடல் விபரம் வெளியானது!
[Thursday 2018-10-18 18:00]

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன றோ குறித்து தான் தெரிவித்ததாக வெளியாகும் தகவல்களை மறுத்துள்ளார் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் அலுவலகம் இது குறித்து செய்திக்குறிப்பொன்றை விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமருடன் தொலைபேசி மூலம் உரையாடினார் என இந்திய பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.


15 எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு!
[Thursday 2018-10-18 18:00]

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய ஐ.ஓ.சி நிறுவனம் ஆகியனவற்றுக்கு இடையில், இணை நிறுவனமொன்றை நிறுவவுள்ளதாகக் குறிப்பிட்ட பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, திருகோணமலையிலுள்ள 15 எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவுக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


றோ மீதான குற்றச்சாட்டு- விசாரணையை திசைதிருப்பும் சதியாம்!
[Thursday 2018-10-18 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் அவசியம் இந்திய புலனாய்வு அமைப்பிற்கு கிடையாது எனத் தெரிவித்த கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கொலை சதித்திட்டம் தொடர்பிலான விசாரணைகளை திசைதிருப்பவே இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று கூறினார்.


காட்டிக் கொடுத்த அமைச்சர்களைக் கண்டுபிடிப்போம்! -மஹிந்த சமரசிங்க
[Thursday 2018-10-18 18:00]

இந்திய இரகசியப் புலனாய்வுச் ​சேவையான றோ, தன்னைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்துள்ளதாக, அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளாரென ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நான்கு அமைச்சர்கள் யார் என்பதை கண்டறிவோம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.


புளியங்குளம் விபத்தில் ஒருவர் பலி - ஐந்து பேர் படுகாயம்! Top News
[Thursday 2018-10-18 18:00]

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்றை ஏற்றிச்சென்ற டிரக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஊடகவியலாளரின் கேள்வியால் எரிச்சல் - கோபத்துடன் எழுந்து சென்றார் மஹிந்த!
[Thursday 2018-10-18 18:00]

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளால் கோபமடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து கோபமாக இடை நடுவில் வெளியேறிய சம்பவம் இன்று இடம்பெற்றது.


பிரபாகரன் படத்தை பேஸ்புக்கில் லைக் செய்த இளைஞனுக்கு 10 மாதங்களுக்குப் பின் பிணை!
[Thursday 2018-10-18 18:00]

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞன் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது.


அரசாங்கத்துக்குள் முரண்பாடு!
[Thursday 2018-10-18 18:00]

இந்திய புலனாய்வு அமைப்பான றோ தன்னை கொலை செய்வதற்கு சதி செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக வெளிவரும் செய்திகள் தொடர்பில், அரசாங்கத்துக்குள்ளேயே பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திலிருந்து அரசாங்கத்துக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளன என பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - காட்டிக் கொடுத்தது சிசிரிவி!
[Thursday 2018-10-18 18:00]

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பத்தலைவருக்கு எதிராக 4 வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


ரிஐடியின் முன்னாள் பணிப்பாளர் நாலக சில்வாவிடம் 9 மணிநேர விசாரணை!
[Thursday 2018-10-18 18:00]

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று மாலை 6 மணியளவில் விசாரணைகளின் பின்னர் வெளியாகி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9 மணியளவில் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்தியா புறப்பட்டார் ரணில்!
[Thursday 2018-10-18 18:00]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் இந்தியாவுக்கு பயணமானார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக அவர் அங்கு சென்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர் மட்ட சந்திப்பையும் நடத்தவுள்ளார்.


மல்லாகம் நீதிமன்றத்தில் போதைப்பொருளுடன் நடமாடிய இளைஞன் கைது!
[Thursday 2018-10-18 18:00]

யாழ்ப்பாணம்- மல்லாகம் நீதிமன்ற வளாகத்தில், ஹெரோயின் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞன் ஒருவர், மல்லாகம் பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவல் ஒன்றை அடுத்து, பொலிஸார் விரைந்த போது, குறித்த இளைஞன் தப்பியோடியுள்ளார். தப்பிச் சென்ற இளைஞனை மடக்கிப் பிடித்த பொலிஸார், அவரிடம் சோதனை செய்​தபோது, அவரது ஆடையில் இருந்து 665 மில்லிகிராம் ஹெரோயினைக் கைப்பற்றினர்.


அரசியல் கைதிகள் விடுதலை - மீண்டும் வாக்குறுதியுடன் அனுப்பினார் ஜனாதிபதி!
[Thursday 2018-10-18 09:00]

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய பேச்சுக்களிலும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-


மோடியுடன் தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி!
[Thursday 2018-10-18 09:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். தன்னைக் கொல்லும் சதித் திட்டத்துடன் றோவுக்கு தொடர்பு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்தே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.


ஒக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு! - ஜோன் ரோறி Top News
[Thursday 2018-10-18 09:00]

கடந்த நான்கு வருடங்களாக நகர முதல்வர் என்ற வகையில் தமிழ்ச் சமூகத்தினை நான் நன்கு அறிந்து கொண்டுள்ளேன். தாயக போரினை நினைவு கூரும் முகமாக நடைபெற்ற பல நிகழ்வுகளிலும், சமூக நிகழ்வுகளின் விழாக்களிலும், கொண்டாட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றமைக்காக கவுன்சிலர் நீதன் சண்(ற்கும் ), பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன்.


சனிக்கிழமை மோடியைச் சந்திக்கிறார் ரணில்!
[Thursday 2018-10-18 09:00]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் சனிக்கிழமை புது டெல்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பிரதமர் தனது இந்திய பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளார். பிரதமருடன் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, அர்ஜூன ரணதுங்க, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் செல்கின்றனர்.


படைத் தளங்களை மாற்ற நிதியை வழங்கத் தயார்! - ஜனாதிபதி
[Thursday 2018-10-18 09:00]

தனி


அவசரமாக ஜனாதிபதியைச் சந்தித்த இந்தியத் தூதுவர்!
[Thursday 2018-10-18 09:00]

இலங்


இந்திய நிறுவனத்துக்கு வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம்!
[Thursday 2018-10-18 09:00]

வடக்கு, கிழக்கு மாகா


கைது செய்யப்பட்ட இந்தியர் றோ உளவாளி தான்! - விமல் வீரவன்ச
[Thursday 2018-10-18 09:00]

ஜனாதிபதி மைத்


வவுனியாவில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது!
[Thursday 2018-10-18 09:00]

வவுனியாவில் சின்னக்குளம், நேரியகுளம் பகுதியில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் கஞ்சா வியாபாரம் நடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சின்னக்குளம் நேரியகுளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் வீட்டினை சோதனை செய்த போது கிணற்றின் அருகே இருந்து, T56 துப்பாக்கி ரவைகள் 22 வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 52 வயதான மரியம்பிள்ளை ஜேசுதாஸ் என்பவரை கைது செய்துள்ளனர்.


மாந்தையில் 5 ஏக்கர் காணிகளை விடுவித்தது இராணுவம்!
[Thursday 2018-10-18 09:00]

மன்னார் - திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் இருந்த 5 ஏக்கர் காணிகள் மன்னார் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார்.


அரசியல் கைதிகளுக்கான பொதுமன்னிப்பு - ஆராய்கிறதாம் அரசாங்கம்!
[Wednesday 2018-10-17 18:00]

அரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது மற்றும் விடுதலை செய்வது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்து வருவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


முள்ளிக்குளம், முள்ளிவாய்க்கால், தோப்பூரில் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி!
[Wednesday 2018-10-17 18:00]

வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் போர் நடந்த காலப் பகுதியில் முப்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட தனியார் காணிகளை காணி உரிமையாளர்களுக்கு விடுவிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்படையின், பொறுப்பிலிருந்த மன்னார், முள்ளிக்குளத்தில் அமைந்துள்ள 23 ஏக்கரும், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள 53 ஏக்கர் நிலப்பரப்பும் இலங்கை இராணுவத்தின் 224 ஆவது படைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ள திருகோணமலை தோப்பூரில் 3 ஏக்கர் காணியையும் உரிமையாளரிடம் விடுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


றோ சதித் திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி கூறவில்லை! - அவரது ஊடகப் பிரிவு அறிக்கை Top News
[Wednesday 2018-10-17 18:00]

தன்னை கொலை செய்ய​ எந்தவொரு இந்திய உளவுத்துறையும் திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி கருத்து தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.


இந்தியாவுடன் பிரச்சினையை தோற்றுவிக்கவே றோவை இழுக்க முயற்சி! - ராஜித சேனாரத்ன
[Wednesday 2018-10-17 18:00]

இந்தியா- இலங்கை இடையில் பிரச்சினையை தோற்றுவிக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய

NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா