Untitled Document
March 28, 2024 [GMT]
அமெரிக்காவுக்குப் பயணமானார் ஜனாதிபதி!
[Saturday 2018-09-22 18:00]

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச் சபை கூட்டம் உள்ளிட்ட அதிகாரபூர்வ நிகழ்வுகள் பலவற்றில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அமெரிக்காவுக்குப் பயணமானார். எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள, போதைப்பொருள் பிரச்சினை தொடர்பாக, உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கான சந்திப்பிலும், ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.


முல்லைத்தீவு, கிளிநொச்சி விபத்துகளில் இருவர் மரணம்!
[Saturday 2018-09-22 18:00]

முல்லைத்தீவு - முள்ளியவளை, தண்ணீரூற்று - நெடுங்கேணி வீதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், கோவில் பூசகர் ஒருவர் உயிரிழந்தார். ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தின் முதன்மை குருவான சிவசிறி பத்மகுமார குருக்கள் என்பவரே, உயிரிழந்துள்ளார். நெடுங்கேணியில் இருந்து தண்ணீரூற்று நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குருக்கள், மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானார்.


உடுப்பிட்டியில் வீதியால் சென்றவரைக் கடத்திச் சென்று கொள்ளை!
[Saturday 2018-09-22 18:00]

வடமராட்சி - உடுப்பிட்டி பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த ஒருவரைக் கடத்திச் சென்ற கும்பலொன்று, அவரிடமிருந்த உடமைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவரென, பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


வவுனியாவை சேர்ந்த பெண் விரிவுரையாளரின் சடலம் யாழிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது:
[Saturday 2018-09-22 18:00]

இலங்கை, வவுனியா காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் உடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் விடுமுறையில் சென்றுள்ளதால் பிரேத பரிசோதனையை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளுமாறு திருகோணமலை மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.


அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்! - அணி திரளுமாறு அழைப்பு
[Saturday 2018-09-22 06:00]

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, வவுனியாவில் இன்று நடத்தப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில், மக்களை அணிதிரளுமாறும் வவுனியா பொது அமைப்புகள் சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.


வரட்சியால் முருங்கையிலை சாப்பிடும் அவல நிலை - மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி!
[Saturday 2018-09-22 06:00]

கடும் வறட்சி காரணமாக கிராமம் ஒன்றில் முருங்கை இலைகளை அவித்து சாப்பிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த செய்தியை ஊடகத்தில் பார்த்த ஜனாதிபதி மிகவும் மனம் வருந்தியதுடன், நாட்டு மக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 3 மாதங்களின் பின் பிணை!
[Saturday 2018-09-22 06:00]

வட்டுக்கோட்டையில் தனியார் கல்வி நிலையத்துக்குக் கற்க வந்த பதின்ம வயது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் 3 மாதங்களின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்க் கட்சிகளின் மீது பழி போட்ட பிரதமர் ரணில்!
[Saturday 2018-09-22 06:00]

மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக் குழு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முன்வைத்த யோசனைகளுக்கு தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


கபொத சாதாரண, உயர் தரப் பரீட்சைகளை டிசம்பரில் நடத்த யோசனை!
[Saturday 2018-09-22 06:00]

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு ஆலோசித்து வருவதாகவும், இதனால் மாணவர்கள் கால தாமதம் இன்றி உயர்தரக் கல்வியை தொடர முடியும் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது!
[Saturday 2018-09-22 06:00]

வவுனியா -தாண்டிக்குளத்தில் பஸ் ஒன்றை சோதனையிட்ட போது கேரளா கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் யாழப்பாணத்திலிருந்து வவுனியாவை நோக்கி பயணித்த பஸ் சோதனையிடப்பட்டது. இதன்போது கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை குறைகிறது!
[Saturday 2018-09-22 06:00]

சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான வேலைத்திட்டங்களால், சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறைந்து வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


திரும்பி வந்த தயாசிறிக்கு மாவட்ட தலைவர் பதவி!
[Saturday 2018-09-22 06:00]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச இதனை அறிவித்துள்ளார். அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 எம்.பிக்களில் ஒருவரான தயாசிறி , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். நகரில் போராட்டம்! Top News
[Friday 2018-09-21 20:00]

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணம் பஸ் நிலையம் முன்பாக இன்று கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்றது.


அரசியல் தீர்வை அடையாவிடின் இலங்கை முன்னேறாது! - ஜப்பானிய தூதுவரிடம் சம்பந்தன் Top News
[Friday 2018-09-21 20:00]

ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக நியாயமான ஒரு தீர்வினை அடையாதவிடின், இலங்கை முன்னேறி செல்ல முடியாது. ஒரு செழிப்பான எதிர்காலத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின், அரசியல் தீர்வு இன்றியமையாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமாவிடம் தெரிவித்தார்.


அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் நாளை ஆர்ப்பாட்டம்! - திரளாகப் பங்கேற்க அழைப்பு
[Friday 2018-09-21 20:00]

பல வரு


மோட்டார் சைக்கிள் மோதி இளம் குடும்பத் தலைவர் பலி!
[Friday 2018-09-21 20:00]

புத்தூர் - மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். புத்தூர்- மீசாலை வீதியில் நடந்து சென்ற இளம் குடும்பத் தலைவர் மீது, மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். புத்தூர் - ஊறணி பகுதியைச் சேர்ந்த 28 வயதான இரத்தினம் மோகன் என்ற குடும்பத் தலைவரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.


திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு!
[Friday 2018-09-21 20:00]

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் சங்கமித்த கடற்கரையிலிருந்து, இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டார் என திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஆசிக்குளம் கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த நடராசா போதநாயகி (29 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணத்துக்குக் காத்திருக்கும் ஆபத்து! - உலக வங்கி எச்சரிக்கை
[Friday 2018-09-21 18:00]

பூகோள ரீதியாக, காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050ஆம் ஆண்டில், வாழ்க்கைத் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வட மாகாணமே இருக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. வெப்பநிலை, மழை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால், தெற்காசியாவில் ஏற்படப்போகும் மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை, உலக வங்கி, நேற்று வெளியிட்டது.


ஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்திக் கொல்லப்பட்டார்! - நீதிமன்றத்தில் சிஐடி தகவல்
[Friday 2018-09-21 18:00]

றக்பி வீரர் வஸீம் தாஜுதீன், மஹிந்த ராஜ


கைது செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்!
[Friday 2018-09-21 18:00]

குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்ட லெப்.கேணல் எரந்த பீரிசை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகவியிலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பாகவே, சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போனது குறித்து வாக்குமூலம் பெற நேற்று குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த அவர், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.


170 ரூபாவைத் தாண்டியது அமெரிக்க டொலரின் பெறுமதி!
[Friday 2018-09-21 17:00]

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. டி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 170.65 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றது.


வீரவன்ச, பிரசன்னவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கத் தடை!
[Friday 2018-09-21 17:00]

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்ன ரணவீர மற்றும், விமல் வீரவன்ச ஆகியோர், பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு இடைக்கால தடை விதிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு நான்கு வாரங்களும், விமல் வீரவன்சவுக்கு இரண்டு வாரங்களும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியையைத் தாக்கி நகைகள் கொள்ளை!
[Friday 2018-09-21 17:00]

திருகோணமலையிலிருந்து மூதூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை, இன்று காலை இனந்தெரியாத இருவர் தாக்கி, 15 பவுண் தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்றனர். மூதூர் இறால்குழி பகுதி பிரதான வீதியில் இந்தச் சம்பவம் இடம் பெற்றது. மூதூர் கஜமுக தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும், 55 வயதுடைய ஆசிரியையே தாக்குதலுக்கு இலக்கான நிலையில், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இராணுவ காவலரணில் இருந்த சிப்பாய் கொலை!
[Friday 2018-09-21 17:00]

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமின் காவலரணில் கடமையிலிருந்த, 21 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர், இன்று அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். புளத்கொஹோப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த, இராணுவ சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஜனாதிபதி! - அருட்தந்தை சக்திவேல் குற்றச்சாட்டு
[Friday 2018-09-21 09:00]

அரசியல் கைதிகள் விவகாரத்தில் தீர்வை வழங்க மறுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கோட்டையைத் தந்தால் காணிகளை விடுவிப்போம்! - பேரம் பேசும் இராணுவம்
[Friday 2018-09-21 09:00]

யாழ்.கோட்டையை இராணுவத்தினரிடம் கையளித்தால் யாழ். குடாநாட்டிலுள்ள பல காணிகளை மீளக் கையளிக்க இராணுவம் தயாராக இருக்கிறது என யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.பலாலி இராணுவ தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.


லெப்.கேணல் எரந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது!
[Friday 2018-09-21 09:00]

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த லெப்.கேணல் எரந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஊடகவியிலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சேமமடுவில் யானை தாக்கி விவசாயி மரணம்!
[Friday 2018-09-21 09:00]

வவுனியா - சேமமடு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த ஆரோக்கியநாதன் ஞானசீலன் (50 வயது) சேமமடு படிவம் 2-இல் தனது சகோதரனின் விவசாயக் காணியில் கச்சான் பயிரிட்டு தோட்டம் செய்து வந்துள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா