Untitled Document
April 19, 2024 [GMT]
அரசியலமைப்பு சபைக்கு 6 உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை!
[Wednesday 2018-10-10 17:00]

அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் சபாநாயகர், கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வாரத்திற்குள் அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.


அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோருகிறார் சம்பந்தன்!
[Wednesday 2018-10-10 17:00]

குற்றம் இழைத்தவரகளாக இருக்கலாம் அல்லது சந்தேகத்தின் பேரில் சிறையில் இருபவர்களாக இருக்கலாம். எனினும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.


கட்டுநாயக்கவில் எதிர்பாராமல் சந்தித்த இரண்டு ஜனாதிபதிகள்! Top News
[Wednesday 2018-10-10 17:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியும் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாகச் சந்தித்தனர். சீஷெல்ஸ் நாட்டுக்கான இரண்டு நாள் உத்தயோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 11.20 மணியளவில் நாடு திரும்பினார்.


மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றம் சென்ற அமைச்சர்- விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டு! Top News
[Wednesday 2018-10-10 17:00]

நாடாளுமன்ற வீதியில் நேற்று ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கொட்டும் மழையை​யும் பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்குச் சென்றுள்ளார்.


மன்னார் புதைகுழி புலிகளால் கொல்லப்பட்ட சிங்களவர்களுடையதாம்! - மகிந்த அணி கூறுகிறது
[Wednesday 2018-10-10 17:00]

விடுதலை புலிகளின் காலத்தில் கொன்று புதைக்கப்பட்ட சிங்களவர்களின் எலும்புக்கூடுகளே மன்னார் மனிதப் புதைக்குழியில், இருந்து மீட்கப்படுவதாக கூட்டு எதிரணியின் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்தார்.


வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய் மின்சாரம் தாக்கி மரணம்!
[Wednesday 2018-10-10 17:00]

வவுனியா- இரட்டைப்பெரிய குளம் பொலிஸ் மோப்ப நாய் பிரிவில் இருந்த கூப்பர் என்ற மோப்ப நாய் இன்று காலை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நாய் மின்சார தாக்குதலுக்கு இலக்கான போது, அதனைக் காப்பாற்றச் சென்ற கூப்பரை பராமரிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஒன்றரை வயதுக் குழந்தையின் விதைப் பைகளை துண்டித்த தாய்!
[Wednesday 2018-10-10 17:00]

ஒன்றரை வயதுடைய தனது ஆண் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயாரைக் கைது செய்துள்ளதாக, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


சுவிஸ்குமாரை தப்பிக்க உதவிய வழக்கு - சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற நீதிவான் உததரவு!
[Wednesday 2018-10-10 17:00]

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக காணப்பட்ட சுவிஸ்குமார் தப்பிச் செல்வதற்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில்- தலைமறைவாக உள்ள இரண்டாவது சந்தேகநபர் இன்றி வழக்கை மேற்கொண்டு நடத்த முடியுமா? என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெறுமாறு குற்றபுலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.


ஹெரோயின், கஞ்சா வைத்திருந்த மூவர் மானிப்பாயில் கைது!
[Wednesday 2018-10-10 17:00]

ஹெரோயின், கஞ்சா ஆகிய போதைபொருட்களை வைத்திருந்த மூவரை நேற்று கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பிப்பிலி மயான பகுதியில் நேற்று மாலை பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இருவரின் உடமையில் இருந்து 550 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளும், மற்றொருவரின் உடமையில் இருந்து 50 கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.


போர்க்குற்ற விசாரணைக்கு வெளியாட்கள் தேவையில்லை! - பிரதமர் ரணில் திட்டவட்டம்
[Wednesday 2018-10-10 08:00]

இலங்கை படையினருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய பின்னர் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.


நேற்று 21 வீடுகளில் தேடுதல் - ஆவா குழு சந்தேக நபர்கள் மூவர் கைது!
[Wednesday 2018-10-10 08:00]

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று நேற்று முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மணலாறில் தொடங்கிய சிங்களப் பேராதிக்கம் மகாவெலி மூலம் வடக்கில் தொடர்கிறது! - விக்னேஸ்வரன்
[Wednesday 2018-10-10 08:00]

ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலை நேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள் அனைவரையும் ஒதியமலைச் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்துக்கொரு கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே வடக்கு முதல்வர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.


எதிரெதிரே வந்த ரயில்கள் - பயங்கர விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பின! Top News
[Wednesday 2018-10-10 08:00]

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெறவிருந்த விபத்து ஒன்று மயிரிழையில் அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டது. இன்று காலை பம்பலப்பிட்டி - வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.


ஜனாதிபதி படுகொலைச் சதி - விமல் வீரவன்சவின் மனைவிக்கும் தொடர்பு?
[Wednesday 2018-10-10 08:00]

ஜனாதிபதி படுகொலை சதி முயற்சி தொடர்பாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மளைவியை சிஐடியினர் விசாரணைக்குட்படுத்தவுள்ளனர். ஜனாதிபதி கொலை சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர் சசி வீரவன்சவை சந்தித்துள்ளமை சிஐடியினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.


ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்சவை முன்மொழிகிறார் கோத்தா!
[Wednesday 2018-10-10 08:00]

தற்போதைய கூட்டு அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஜெனிவாவில் இலங்கைக்கு சர்வதேசம் முழு ஆதரவு வழங்கும்! - திலக் மாரப்பன
[Wednesday 2018-10-10 08:00]

ஜெனீவா தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது எனவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வில், சர்வதேச சமூகம் இலங்கையை முழுமையாக ஆதரிக்கும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.


கோண்டாவிலில் வாள்வெட்டுக் குழு நேற்றிரவும் அட்டகாசம்!
[Wednesday 2018-10-10 08:00]

கோண்டாவில் ஸ்டேசன் வீதியில் அமைந்துள்ள சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று நேற்று மாலை 6.45 மணியளவில் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாதவர்களே இந்தத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பித்தனர் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.


மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது! - லக்ஷ்மன் கிரியெல்ல
[Wednesday 2018-10-10 08:00]

மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவால் ஆட்சியமைக்க முடியாது. அத்தகையை குழுவுடன் இணைய நாம் தயாரில்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.


அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுர நோக்கி பேரணி ஆரம்பம்! Top News
[Tuesday 2018-10-09 19:00]

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி இன்று நடை பவனியை ஆரம்பித்தனர். யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டது.


5 அரசியல் கைதிகளின் நிலை மோசம் - வைத்தியசாலையில் சிகிச்சை!
[Tuesday 2018-10-09 19:00]

தம்மை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அநுராதபுரம் மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும், அரசியல் கைதிகள் 55 பேரில், ஐவர் சுகயீனமுற்றநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனரென, சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. சுகயீனமுற்ற கைதிகள், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும், குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.


நாமலின் சித்தப்பாவுக்கும் இனப்படுகொலையில் பங்கு! - நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய செல்வம்
[Tuesday 2018-10-09 19:00]

தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வின் சித்தப்பாவுக்கும் பங்கு இருக்கின்றது. எமது மக்கள் 40 ஆயிரம் பேரை கொலை செய்தவர். அதனால் இந்த விவகாரத்தில் இவர்களுக்கு சுத்தமாக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


5 ஆண்டுகளில் 437 பிரேரணைகளை நிறைவேற்றிய வடக்கு மாகாண சபை!
[Tuesday 2018-10-09 19:00]

வடமாகாண சபையில், 5 வருட பதவிக்காலத்தில் 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை தனது 5 வருட ஆட்சிக்காலத்தில் 133 அமர்வுகளை இதுவரை நடத்தியுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வு 134 வது இறுதி அமர்வாகும். இதுவரை நடைபெற்ற 133 அமர்வுகளில் 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! - உயர் நீதிமன்றம்
[Tuesday 2018-10-09 19:00]

ஜேவிபியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சில சரத்துகளுக்கு நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்​கெடுப்புடன் 20ஆவது திருத்தத்தை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.


பதவி விலகவுள்ளார் பொலிஸ்மா அதிபர்?
[Tuesday 2018-10-09 19:00]

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி விலகவுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் பதவி விலகல் குறித்து அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தார் மீதான கொலைச் சதித்திட்டம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை நிலையே பதவி விலகலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.


வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
[Tuesday 2018-10-09 19:00]

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர சபையில் இதனை சமர்ப்பித்தார். கடன்களுக்கான ஒதுக்கீடு உள்ளடங்கலாக அரசாங்கத்தின் மொத்தச் செலவீன ஒதுக்கீடு ரூபா 4376 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதோடு, துண்டு விழும் தொகை ரூபா 644 பில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஞானசார தேரரின் விடுதலைக்காக 10 இலட்சம் கையெழுத்து!
[Tuesday 2018-10-09 19:00]

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறுக் கோரி 10 இலட்சம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையில் பொதுபல சேனா ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களைக் கொண்டு மனு ஒன்றைத் தயாரித்து, அதனை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.


இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
[Tuesday 2018-10-09 19:00]

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 172.34 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Tuesday 2018-10-09 19:00]

முல்லைத்தீவிலிருந்து 7 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கல்முனை பகுதியைச் சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா பொதியையும் மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா