Untitled Document
March 29, 2024 [GMT]
காணிகளை விடுவித்தால் தான் நல்லிணக்கம் சாத்தியம்! - செயலணிக் கூட்டத்தில் சம்பந்தன்
[Wednesday 2018-08-29 07:00]

நாட்டில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் ஏற்பட வேண்டுமேயானால், இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வட-கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


மணியந்தோட்டத்தில் பொலிசார் மீது தாக்குதல் - ஒருவர் படுகாயம்!
[Wednesday 2018-08-29 07:00]

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது நேற்று இரவு இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மதுபோதையில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு 5 ரூபா தண்டம் விதித்த யாழ். நீதிமன்றம்!
[Wednesday 2018-08-29 07:00]

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட மூவருக்கு, தலா 5 ரூபா தண்டப் பணம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


கொழும்பு வந்தார் ஜப்பானிய இராஜாங்க அமைச்சர்!
[Wednesday 2018-08-29 07:00]

ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கட்ஸுயுகி நகானே நேற்று உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ளார். இலங்கைக்கு ஜப்பான் அன்பளிப்புச் செய்துள்ள ரோந்துப் படகுகளை சேவையில் இணைக்கும் நிகழ்வு இன்று கொழும்பு துறைமுகத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்விலும் ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளார்.


அறிக்கை தயாரிக்க ஒதுக்கிய 51 இலட்சம் ரூபா மாயம்!
[Wednesday 2018-08-29 07:00]

மாகாண சபை தொகுதிகளின் எல்லை நிர்ணய அறிக்கை தயாரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, 51 இலட்சம் ரூபா மாயமாகியுள்ளதாகவும், அது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரி, சிவில் அமைப்புக்கள் சில நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்துள்ளன.


அடையாள அட்டையைப் பெற இனி புதிய கட்டணங்கள்!
[Wednesday 2018-08-29 07:00]

ஆட்களைப் பதிவு செய்து அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Wednesday 2018-08-29 07:00]

தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் 2 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் விளக்கமறியலை எதிர்வரும் செப்ரெம்பர் 11ஆம் திகதி வரை நீடித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


முல்லைத்தீவில் நில அபகரிப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டனர்! Top News
[Tuesday 2018-08-28 19:00]

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகத்தை துண்டாடும் வகையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை கண்டித்து, முல்லைத்தீவில் பாரிய கண்டனப் பேரணியும், போராட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டது. மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்று இந்த போராட்டம் இடம்பெற்றது.


மக்களைக் குடியேற்றும் அதிகாரம் மகாவலி அதிகாரசபைக்கு இல்லை! - மாவை
[Tuesday 2018-08-28 19:00]

மகாவலி அதிகார சபைக்கு நீர் வழங்குவதற்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் மக்களை மீளக் குடியேற்றுவதற்கோ புதியவர்களை குடியேற்றுவதற்கோ இடமளிக்க முடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.


வட-கிழக்கின் குடிப்பரம்பலை மாற்றும் நோக்கில் செயற்படும் சிங்களத் தலைமைகள்! - சித்தார்த்தன்
[Tuesday 2018-08-28 19:00]

வட-கிழக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றும் நோக்கில் சிங்களத் தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் செயற்படுகின்றனர் என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற நில ஆக்கிரமிப்புக்கு எதிரான மாபெரும் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


நிலத்தை அபகரித்து இனத்தை அழிக்கும் நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்! - கஜேந்திரகுமார்
[Tuesday 2018-08-28 19:00]

2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச தான் தமிழ் இன அழிப்பினை செய்ததார். அவருடைய ஆட்சியனை வீழ்த்தினால் தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதை மட்டுமல்ல பொறுப்புக்கூறலும் நிச்சயமாக கிடைக்கும். ஒரு சர்வதேச விசாரணை கூட கிட்டும் என்று மக்களை நம்பவைத்து இந்த ஆட்சியினை மாற்றியதன் பின், இன்று இதனை நல்லாட்சி என்று எம்மவர்கள் கூறியதன் பின்பும், இன அழிப்பின் முக்கிய அங்கமான நிலப்பறிப்பு இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என தழிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


நாளை நேபாளம் புறப்படுகிறார் ஜனாதிபதி!
[Tuesday 2018-08-28 19:00]

நேபாளத்தில், இடம்பெறவுள்ள வங்காள விரிகுடா விளிம்பு நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை காத்மண்டு செல்லவுள்ளார்.


கலஹாவில் பெரும் பதற்றம் - கண்ணீர் புகைக்குண்டு வீச்சு!
[Tuesday 2018-08-28 19:00]

கண்டி, கலஹா வைத்தியசாலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். கண்டி, கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று திடீரென உயிரிழந்ததனால், அப் பகுதி பொது மக்கள் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினால் கண்டி கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.


ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து சம்பந்தன் கடிதம்!
[Tuesday 2018-08-28 19:00]

தேசிய நல்லிணக்கத்தினையும் ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அரசியல் தீர்வொன்றினை காண்பது அத்தியாவசியமான ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


அரசியலைத் தாண்டிய மக்கள் போராட்டத்தின் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்! - சிவசக்தி ஆனந்தன்
[Tuesday 2018-08-28 19:00]

தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


அவுஸ்ரேலிய பாதுகாப்பு மாநாட்டில் தலைமையுரையாற்ற இலங்கை இராணுவத் தளபதிக்கு அழைப்பு!
[Tuesday 2018-08-28 19:00]

அவுஸ்ரேலிய பாதுகாப்பு மாநாட்டில் தலைமையுரை ஆற்ற தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு மாநாடு தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


ஊரியானில் உழவு இயந்திரம் தடம்புரண்டு இளைஞன் பலி!
[Tuesday 2018-08-28 19:00]

கிளிநொச்சி- ஊரியான் பகுதியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்தார். ஊரியான் பகுதியை சேர்ந்த 23 வயதான சியாத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் மண் ஏற்றிச் சென்ற வேளை குறித்த உழவு இயந்திரம் தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


மகாவலி 'எல்' வலயத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் இன்று பெரும் போராட்டம்!
[Tuesday 2018-08-28 07:00]

மகாவலி


யாழ். செயலகம் முன் நாளை மறுதினம் பாரிய போராட்டம்! - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
[Tuesday 2018-08-28 07:00]

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில், நாளை மறுதினம் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


இரகசிய முகாம் பற்றி ஒப்புக்கொண்டார் முன்னாள் இராணுவப் புலனாய்வு பணிப்பாளர்!
[Tuesday 2018-08-28 07:00]

கம்பஹா - படுவத்தவில் இரகசிய இராணுவ முகாம் ஒன்று இயங்கிவந்தமை தொடர்பில் தனக்கு தெரியும் என, இராணுவப் புலானய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்துள்ளார்.


தமிழ்மக்களின் காணிகளை ஆக்கிரமிக்க இடமளியேன்! - ஜனாதிபதி உறுதி
[Tuesday 2018-08-28 07:00]

முல்லைத்தீவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், அவ்வாறு ஏதாவது நடவடிக்கை இடம்பெற்றால் தான் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேவையென்றால் தானும் அப்பகுதிக்கு நேரில் வந்து மக்களைச் சந்திக்க தயாராகவிருப்பதாகவும் கூறியுள்ளார்.


மன்னார் புதைகுழி - இராணுவம் மீது குற்றச்சாட்டு இல்லையாம்!
[Tuesday 2018-08-28 07:00]

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக இராணுவம் மீது யாரும் குற்றம்சாட்டவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். மன்னாரில் சதொச வளாகத்தில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்து எலும்புக்கூடுகளையும் மனித உடல் எச்சங்களையும் மீட்கின்ற பணிகள் சுமார் இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மஹிந்தவை பிரதமராக நியமிக்க மைத்திரிக்கு விருப்பமாம்!
[Tuesday 2018-08-28 07:00]

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்வித அதிருப்தியும் இல்லை என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மியான்மார் இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை இலங்கைக்கும் ஏற்படும்! - மிரட்டுகிறார் அட்மிரல் வீரசேகர
[Tuesday 2018-08-28 07:00]

மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை விசாரணையை முன்னெடுக்க ஐ.நா அழைத்துள்ளதை போன்று இலங்கைக்கும் ஏற்படும் இதற்கான வழிமுறைகளை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார் அட்மிரல் சரத் வீரசேகர.


அரசியல் பழிவாங்கல்களுக்கே விசேட நீதிமன்றங்கள்! - கூட்டு எதிரணி குற்றச்சாட்டு
[Tuesday 2018-08-28 07:00]

அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்வதற்காகவே அரசாங்கம் விசேட நீதிமன்றங்களை உருவாக்கியுள்ளது என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பு - நெலும் மாவத்தையில் அ​மைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


வவுனியாவில் மாணவனைக் காணவில்லை!
[Tuesday 2018-08-28 07:00]

வவுனியா பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை நேற்று மாலை முதல் காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று மாலை 5 மணிமுதல் வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் சாம் எனும் 15 வயதுடைய தரம் 10இல் கல்வி கற்கும் தனது மகனை காணவில்லை என நேற்று இரவு 9மணியளவில் அவனது பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


மன்னார் புதைகுழியில் 102 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! - மழையினால் அகழ்வு பாதிக்கப்படும் அபாயம் Top News
[Monday 2018-08-27 18:00]

மன்னார் சதோச வளாகத்தில், இன்று 58ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை குறித்த வளாகத்தில் இருந்து 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 95 மனித எச்சங்கள் வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.


வடக்கில் கடும் வரட்சி - மூன்றரை இலட்சம் பேர் பாதிப்பு!
[Monday 2018-08-27 18:00]

வரட்சியான காலநிலையால், வடக்கு மாகாணத்தில்,சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த, 3 இலட்சத்து 47 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-

 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா