Untitled Document
April 23, 2024 [GMT]
சாவகச்சேரியில் 17 இலட்சம் ரூபா பட்டப்பகலில் கத்தி முனையில் கொள்ளை! Top News
[Wednesday 2018-09-19 18:00]

சாவகச்சேரி நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இன்று காலை 8.30 மணியளவில், சுமார் 17 இலட்சம் ரூபா பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று காலை வழமை போல் நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள், பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்தபோது கத்தியோடு உள்நுழைந்த ஒருவர், அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.


இரத்தக்கண்ணீர் வடிக்கும் மாதா சொரூபம்! Top News
[Wednesday 2018-09-19 18:00]

தீவகத்தில் உள்ள ஊர்காவற்றுறை, சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வெளிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, மாதா சொரூபத்தை பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.


அட்மிரல் ரவீந்திர விஜேகுணத்ன நாடு திரும்பினார்!
[Wednesday 2018-09-19 18:00]

முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானியுமான ரவீந்திர விஜேகுணரத்ன, இன்று அதிகாலை, நாடு திரும்பினார். டோஹாவிலிருந்து கட்டுநாயக்கா நோக்கி வந்த கட்டார் விமானச் சேவைக்குச் சொந்தமாக கிவ்.ஆர் 668 ரக விமானத்தினூடாக, இன்று அதிகாலை 1.45 மணிக்கு, அவர் நாடு திரும்பினார்.


இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!
[Wednesday 2018-09-19 18:00]

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவும், அவரது மகனும், இன்று காலை வாழைச்சேனைப் பொலீசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டமைக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.


மீளக்குடியேறிய குடும்பங்கள் மீது தாக்குதல் - சிவில் பாதுகாப்பு படை அடாவடித்தனம்! Top News
[Wednesday 2018-09-19 18:00]

இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட காணிகளில் குடியேறியிருந்த குடும்பங்களை, சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் இன்று ​வௌியேற்ற முயற்சித்ததால், கிளிநொச்சி


ஓவியர் புகழேந்தி நல்லூரில் திலீபனுக்கு வணக்கம் செலுத்தினார்! Top News
[Wednesday 2018-09-19 17:00]

தியாகி திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட புகழேந்தி அவர்கள் மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். இன்றைய நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு தியாகி திலீபனுக்கு வணக்கம் செலுத்தியிருந்தனர்.


முல்லைத்தீவில் மாணவிகளுக்கு அந்தரங்கத்தை காட்டிய சிப்பாய்கள் மடக்கிப் பிடிப்பு!
[Wednesday 2018-09-19 17:00]

முல்


வீட்டுக்குள் நுழைந்து பெற்றோல் குண்டு வீச்சு - கைதடியில் ஐவர் படுகாயம்!
[Wednesday 2018-09-19 17:00]

தென்மராட்சி- கைதடிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இன்று அதிகாலை 4 மணியளவில், புகுந்த கும்பல் ஒன்று, நடத்திய தாக்குதலில், 5 பேர் படுகாயமடைந்தனர். சுமார் 15க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட குழுவொன்று, குறித்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன், கூரிய ஆயுதங்களால் வீட்டில் உள்ளவர்களைத் தாக்கியுள்ளனர்.


கிளிநொச்சியில் தொல்லியல் சின்னங்கள் அழிக்கப்பட்டதா? - விசேட குழு ஆராய்வு
[Wednesday 2018-09-19 17:00]

கிளிநொச்சியில் தொல்லியல் சின்னங்கள் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் செய்தி பரப்பட்ட நிலையில் , நேற்று பகல் கிளிநொச்சிக்கு வந்த விசேட தொல்லியல் குழுவினர், சிதைக்கப்பட்டதாக கூறப்படும் தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆய்வு செய்தனர்.


வெலிக்கடைச் சிறையிலும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!
[Wednesday 2018-09-19 08:00]

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், அவர்களின் விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வெளிநாட்டு தூதரகங்களிடம் மனுக்களை கையளிப்பு! Top News
[Wednesday 2018-09-19 08:00]

கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் நேற்றுளு சர்வதேசத்திடம் கோரிக்கை மனுக்களை கையளித்தனர். கனேடிய தூதரகம், அமெரிக்க தூதரகம், ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம், பிரித்தானிய தூதரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் காரியாலயம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் இவர்கள் தங்களது மனுக்களை கையளித்துள்ளனர்.


பலாலி இந்தியாவுக்குக் கிடைக்காது! - நிமல் சிறிபால டி சில்வா
[Wednesday 2018-09-19 08:00]

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் எந்த முடிவுலும் எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


புத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்த பெண் சட்டத்தரணி மீது பொலிசார் திடீரென வழக்குத் தாக்கல்!
[Wednesday 2018-09-19 08:00]

புத்தரின் உருவம் பொறித்திருந்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். பெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுமதி வழங்குமாறு பொலிஸார் கோரியமைக்கு அமைய ஒப்புதல் வழங்கிய நீதிவான், வழக்கை வரும் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.


அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவைக் கைது செய்வதற்கு அரசாங்கம் இடமளியாது! - மஹிந்த சமரசிங்க
[Wednesday 2018-09-19 08:00]

பாதுகாப்பு படையணி பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவைக் கைது செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்கூட்டியே அறிவிக்காமை அமைச்சரவையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.


ஜெனிவாவைக் குழப்ப கிளம்பியது சரத் வீரசேகரவின் குழு!
[Wednesday 2018-09-19 08:00]

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றம் செய்யவில்லை என வலியுறுத்துவதற்காக, றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவொன்று நேற்று ஜெனிவாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இராணுவத்தினர் சார்பில் ஜெனிவாவில் நாளை உரையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதெனவும், தாம் அங்கு ​4 ஆவது தடவையாக உரையாற்ற போவதாகவும் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் கஞ்சாப் பொதிகளுடன் சிக்கிய அந்தணர்களுக்கு விளக்கமறியல்!
[Wednesday 2018-09-19 08:00]

கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்தணர்கள் இருவரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.


மூதூரில் காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
[Wednesday 2018-09-19 08:00]

திருகோணமலை - மூதூர் புளியடி பகுதியில் நேற்று மாலை பேரூந்தில் பயணித்த காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மூதூரில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பேரூந்தில் குறித்த ஆணும் பெண்ணும் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றுள்ளனர். இதன்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை இலக்கு வைத்து வெளியில் இருந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.


ஈரானிடம் எண்ணெய் கொள்வனவை நிறுத்தியது இலங்கை!
[Wednesday 2018-09-19 08:00]

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த நாட்டில் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை, ஈரானிடம் மசகு எண்ணெயை கொள்வனவு செய்யவில்லை. சிங்கப்பூரிடம் இருந்தே மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்கிறது என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். அணுவாயுத உடன்படிக்கையை மீறியதாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முதலமைச்சருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - விக்னேஸ்வரனின் மனு நிராகரிப்பு!
[Tuesday 2018-09-18 18:00]

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.


வடமராட்சியில் பதற்ற நிலை - சிங்கள மீனவர்களை மீட்ட பொலிசுடன் மீனவர்கள் வாக்குவாதம்! Top News
[Tuesday 2018-09-18 18:00]

வடமராட்சியில் தமிழ் மீனவர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிங்கள மீனவர்கள், இன்று பிற்பகல் பொலிஸாரினால் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், பலவந்தமாக மீட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.


விஜயகலா மீது வழக்குத் தொடர சட்டமா அதிபர் நடவடிக்கை! - சபாநாயகர் அறிவிப்பு
[Tuesday 2018-09-18 18:00]

பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தொடர சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.


சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டதை அப்போது ஏன் மறைத்தார் எஸ்.பி? - மஹிந்த கேள்வி
[Tuesday 2018-09-18 18:00]

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ள கருத்தை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நிராகரித்துள்ளார்.


சட்டத்தை கவனிக்காமல் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டுமாம்!
[Tuesday 2018-09-18 18:00]

சட்ட வரையறைகளைக் கவனத்தில் கொள்ளாமல், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலர் ஞானசார தேரரை அரசாங்கம் விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தாகந்தே சுதத தேரர் தெரிவித்துள்ளார்.


வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினரின் நீக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!
[Tuesday 2018-09-18 18:00]

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


சரணடைந்த புலிகளைக் கொல்லவில்லை - எஸ்.பியின் குற்றச்சாட்டை மறுக்கிறது இராணுவம்!
[Tuesday 2018-09-18 17:00]

போரின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியைச் சேர்ந்த எஸ்.பி.திஸாநாயக்க, வெளியிட்ட கருத்தை இராணுவப் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் அளித்த உறுதிமொழி! Top News
[Tuesday 2018-09-18 17:00]

யாழ்ப்பாணத்தில் ஆராய்ச்சி நிலையங்களை அமைப்பதற்கு, தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதியளித்தார். அத்துடன், இலங்கையின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு, தமிழக அரசாங்கம் மட்டுமன்றி, மத்திய அரசாங்கமும் இணைந்து பல உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துமெனவும் தெரிவித்தார்.


கனேடிய தமிழ் ஊடகங்களின் ஆதரவு..! தனியொரு தமிழனாக போட்டியிடும் நிரன் ஜெயநேசனுக்கு..
[Tuesday 2018-09-18 17:00]

ரொறன்ரோ மாநகரசபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை தெரிவு செய்ய மக்களிடையே கடும் குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்க இருப்பதால், யாருக்கு வாக்களிப்பது என்று தமிழ் மக்களிடையே குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.


மைத்திரி , கோத்தாவின் பாதுகாப்பு விவகாரம் - நாடாளுமன்றத்தில் அமளி!
[Tuesday 2018-09-18 17:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தினால், , பாராளுமன்றத்தில் இன்று கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.

Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா