Untitled Document
April 25, 2024 [GMT]
ஈரானிடம் எண்ணெய் கொள்வனவை நிறுத்தியது இலங்கை!
[Wednesday 2018-09-19 08:00]

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த நாட்டில் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை, ஈரானிடம் மசகு எண்ணெயை கொள்வனவு செய்யவில்லை. சிங்கப்பூரிடம் இருந்தே மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்கிறது என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். அணுவாயுத உடன்படிக்கையை மீறியதாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முதலமைச்சருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - விக்னேஸ்வரனின் மனு நிராகரிப்பு!
[Tuesday 2018-09-18 18:00]

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.


வடமராட்சியில் பதற்ற நிலை - சிங்கள மீனவர்களை மீட்ட பொலிசுடன் மீனவர்கள் வாக்குவாதம்! Top News
[Tuesday 2018-09-18 18:00]

வடமராட்சியில் தமிழ் மீனவர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிங்கள மீனவர்கள், இன்று பிற்பகல் பொலிஸாரினால் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், பலவந்தமாக மீட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.


விஜயகலா மீது வழக்குத் தொடர சட்டமா அதிபர் நடவடிக்கை! - சபாநாயகர் அறிவிப்பு
[Tuesday 2018-09-18 18:00]

பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தொடர சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.


சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டதை அப்போது ஏன் மறைத்தார் எஸ்.பி? - மஹிந்த கேள்வி
[Tuesday 2018-09-18 18:00]

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ள கருத்தை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நிராகரித்துள்ளார்.


சட்டத்தை கவனிக்காமல் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டுமாம்!
[Tuesday 2018-09-18 18:00]

சட்ட வரையறைகளைக் கவனத்தில் கொள்ளாமல், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலர் ஞானசார தேரரை அரசாங்கம் விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தாகந்தே சுதத தேரர் தெரிவித்துள்ளார்.


வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினரின் நீக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!
[Tuesday 2018-09-18 18:00]

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


சரணடைந்த புலிகளைக் கொல்லவில்லை - எஸ்.பியின் குற்றச்சாட்டை மறுக்கிறது இராணுவம்!
[Tuesday 2018-09-18 17:00]

போரின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியைச் சேர்ந்த எஸ்.பி.திஸாநாயக்க, வெளியிட்ட கருத்தை இராணுவப் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் அளித்த உறுதிமொழி! Top News
[Tuesday 2018-09-18 17:00]

யாழ்ப்பாணத்தில் ஆராய்ச்சி நிலையங்களை அமைப்பதற்கு, தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதியளித்தார். அத்துடன், இலங்கையின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு, தமிழக அரசாங்கம் மட்டுமன்றி, மத்திய அரசாங்கமும் இணைந்து பல உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துமெனவும் தெரிவித்தார்.


கனேடிய தமிழ் ஊடகங்களின் ஆதரவு..! தனியொரு தமிழனாக போட்டியிடும் நிரன் ஜெயநேசனுக்கு..
[Tuesday 2018-09-18 17:00]

ரொறன்ரோ மாநகரசபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை தெரிவு செய்ய மக்களிடையே கடும் குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்க இருப்பதால், யாருக்கு வாக்களிப்பது என்று தமிழ் மக்களிடையே குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.


மைத்திரி , கோத்தாவின் பாதுகாப்பு விவகாரம் - நாடாளுமன்றத்தில் அமளி!
[Tuesday 2018-09-18 17:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தினால், , பாராளுமன்றத்தில் இன்று கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.


சுமந்திரன் கொலை சூழ்ச்சி வழக்கை யாழ்ப்பாணத்துக்கு மாற்ற கொழும்பு மேல்நீதிமன்றம் மறுப்பு!
[Tuesday 2018-09-18 17:00]

விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படும், மூவர் தமது வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு விடுத்த கோரிக்கை, ​கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டது. தமக்கு எதிரான வழக்கை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றாவிடின், உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக, அந்த உறுப்பினர்கள் மூவரும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னவின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.


எகிறும் அமெரிக்க டொலரின் மதிப்பு - சரிகிறது ரூபாவின் பெறுமதி!
[Tuesday 2018-09-18 17:00]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 166.64 ரூபாயாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


விறகு வெட்டியவரைப் புரட்டியெடுத்த கரடி!
[Tuesday 2018-09-18 17:00]

திருகோணமலை- கந்தளாய் பிரதேசத்தில், காட்டில் விறகு எடுக்கச் சென்றவர், கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில், நேற்று அனுமதிக்கப்பட்டார். கந்தளாய், கோவில் கிராமம் பகுதியைச் சேர்ந்த என்.ஆனந்தராசா (வயது 49) என்பவரே, கரடித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். விறகுகளை வெட்டிக்கொண்டிருக்கும் போது, மரப்பொந்து ஒன்றிலிருந்து பாய்ந்து வந்து, கரடி தாக்கியதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


வடமராட்சியில் கடலட்டை பிடித்த சிங்கள மீனவர்கள் மடக்கிப் பிடிப்பு! - பொலிசாரிடம் கையளிக்க மறுப்பதால் பதற்றம் Top News
[Tuesday 2018-09-18 07:00]

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த எட்டு சிங்கள மீனவர்களை, வடமராட்சி மீனவர்கள் மடக்கிக் பிடித்தனர். இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவாவில் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்! Top News
[Tuesday 2018-09-18 07:00]

தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள இன அழிப்பிற்கு இனிமேலும் தாமதிக்காது நீதியை பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி- ஜெனீவாவிலுள்ள ஐ.நா தலைமையகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் நேற்று ஆயிரக்கணக்கில் திரண்டு கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினர்.


உண்மைகளை மூடி மறைக்கிறது கூட்டமைப்பு! - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
[Tuesday 2018-09-18 07:00]

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மைகளை மூடி மறைத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரவித்துள்ளார்.


முல்லைத்தீவில் வரட்சியினால் 1103 குடும்பங்கள் பாதிப்பு!
[Tuesday 2018-09-18 07:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 8,103 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதுடன் முதல் கட்டமாக 6,824 குடும்பங்களுக்கும் இரண்டாம் கட்டமாக 7,296 குடும்பங்களுக்கும் வரட்சி நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


முடிவை அறிவிக்க வேண்டும் மஹிந்த! - என்கிறார் பீரிஸ்
[Tuesday 2018-09-18 07:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதற்கு, எந்தவிதமான சட்டச் சிக்கலும் இல்லை என்றும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை, நாட்டு மக்களுக்கு மஹிந்த அறிவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தெரிவித்துள்ளார்.


ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறார் மஹிந்த!
[Tuesday 2018-09-18 07:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கலந்துரையாடலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பினை அமெரிக்கா வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


மைத்திரி, கோத்தா படுகொலைச் சதி தொடர்பாக நாமலிடம் இரவிரவாக 7 மணிநேரம் விசாரணை!
[Tuesday 2018-09-18 07:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ ஆகிய இருவரையும் படுகொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்த, ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுப் படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம், 7 மணி நேரம் விசாரணைகளை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ளது.


இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான பயணம் குறித்து விபரிப்பார் ஜனாதிபதி!
[Tuesday 2018-09-18 07:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பதற்கு முன்னர் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் இது என்பதால் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.


கிளிநொச்சியில் அடிகாயத்துக்குள்ளானவர் மரணம்!
[Tuesday 2018-09-18 07:00]

கிளிநொச்சி- அம்பாள்குளம் பகுதியில் தனியார் உணவக மதுபான சாலையில் கடந்த 14 ஆம் திகதி நடந்த கத்திக்குத்து சம்பவத்தில்ட ஒருவர் படுகாயமடைந்தார். கத்தியால் குத்தியவரை அங்கிருந்த இருவர் சரமாரியாக தாக்கினர் இந்நிலையில் கத்திக் குத்துக்கு இலக்கானவரும் அடிகாயத்துக்கு இலக்கானவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.


மன்னார் புதைகுழியில் தொடரும் அகழ்வு - அதிர்ச்சியை ஏற்படுத்தும் எலும்புக்கூடுகள்! Top News
[Monday 2018-09-17 18:00]

மன்னார் 'சதொச' வளாக மனிதப் புதைகுழியில் இருந்து, கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


சட்டவிரோத மீன்பிடிக்கு அனுமதி - முல்லைத்தீவு மீனவர்கள் மீண்டும் போராட்டம்! Top News
[Monday 2018-09-17 18:00]

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 9 மணியளவில் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளதிணைக்களத்திற்கு எதிரே அமைதியான போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கறுப்புத் துணியினால் வாயினை கட்டி தமது எதிர்ப்பை காட்டினர்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ் விழா! Top News
[Monday 2018-09-17 18:00]

யாழ்ப்பாணத்தில், மாபெரும் தமிழ் விழா இன்று வெகு விமரிசையாக இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்


யாழ்ப்பாணம் அதிரப் போகும் நிகழ்வு நடக்கப் போகிறதாம்! - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
[Monday 2018-09-17 18:00]

வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர், தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினார் என யாழப்பாணத்தில் உள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.


முல்லைத்தீவில் வாளுடன் இளைஞன் கைது!
[Monday 2018-09-17 18:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸாக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் சிவில் உடையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா