Untitled Document
March 28, 2024 [GMT]
10 நாட்களின் பின்னர் மீண்டும் மன்னார் புதைகுழி தோண்டும் பணிகள் ஆரம்பம்!
[Tuesday 2018-08-21 08:00]

மன்னார் 'சதொச' வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் நேற்றுக் காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நேற்றுக் காலை 7.30 மணியளவில் 53 ஆவது நாளாக அகழ்வு பணிகள் இடம்பெற்றது.


வைத்தியரின் வீட்டை தவறுதலாக தாக்கி விட்டதாம் வாள்வெட்டுக் குழு! - பொலிஸ் கூறும் நியாயம்
[Tuesday 2018-08-21 08:00]

கொக்குவில் சம்பியன் வீதியில் வைத்தியரின் வீடு அடையாளம் தவறியே தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு வைத்தியரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும். தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அமல் கருணாசேகரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
[Tuesday 2018-08-21 08:00]

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கல்கிஸை மேலதிக நீதிவான் லோசனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மனிதகுலத்தின் மனச்சாட்சிக்காக உறுதியுடன் குரல் கொடுத்தவர் கொபீ அனான்!
[Tuesday 2018-08-21 08:00]

ஐ.நா. சாசனத்தின் நெறிமுறைகள், பெறுமானங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப தொடர்ச்சியாக இரண்டு, ஐந்தாண்டு காலங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு தலைமைதாங்கிய கொபீ அனான், அவ்வமைப்பின் செயலாளர் நாயகம் பதவியை விட்டு வெளியேறிய பின்னரும் கூட சமாதானம், மனித உரிமைகள் மற்றும் மனிதகுலத்தின் மனச்சாட்சி ஆகியவற்றுக்காக உறுதியுடன் குரல் கொடுத்து வந்தார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


கொழும்பு வந்தார் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்!
[Tuesday 2018-08-21 08:00]

இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ பயணமாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நேற்றிரவு கொழும்பு வந்துள்ளார். இலங்கை வந்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.


மகிந்தவுக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்புள்ளதா? - உயர்நீதிமன்றத்தை நாடும் பீரிஸ்
[Tuesday 2018-08-21 08:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில், உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிய, தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தலைவர் ஜீ.எல்.பீரில் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக, உயர் நீதிமன்றால் மாத்திரமே சரியான விளக்கத்தை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கீத் நொயாரையே மஹிந்தவுக்கு நினைவில் இல்லையாம்!
[Tuesday 2018-08-21 08:00]

கீத் நொயார் என்ற பெயரில் ஊடகவியலாளர் ஒருவர் இருந்ததாக ஞாபகம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியம் அளித்துள்ளார். அரச சிரேஷ்ட சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம நேற்று கல்கிஸ்ஸ மேலதிக நீதிவான் லோசன அபேவிக்ரம முன்னிலையில் திறந்த நீதிமன்றில் இதனைத் தெரிவித்தார்.


மாற்றுத் தலைமைக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!
[Tuesday 2018-08-21 08:00]

மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியத்தை முன்னிறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


விஸ்வமடுவில் பனைகள், தென்னைகள் தீக்கிரை! Top News
[Tuesday 2018-08-21 08:00]

விஸ்வமடு - புன்னைநீராவிப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் நேற்று மாலை வைத்த தீயினால் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட பனைமரங்கள் மற்றும் ஆறுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. எனினும் அப்பகுதி இளைஞர்கள், ஒன்று சேர்ந்து தீப்பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் பயந்தரு மரங்கள் பல காப்பாற்றப் பட்டுள்ளது


சம உரிமைகள் வழங்கப்பட்டால் தான் சமாதானம் சாத்தியம்! - ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் விக்கி எடுத்துரைப்பு Top News
[Monday 2018-08-20 18:00]

தமிழ் மக்கள் சம அந்தஸ்துடையவர்கள் என்ற நிலை ஏற்பட்டால் மாத்திரமே சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்று, ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எடுத்துரைத்துள்ளார்.


கல்கிசை நீதிமன்றத்தில் மஹிந்தவின் வாக்குமூலம்!
[Monday 2018-08-20 18:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊடவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலமே கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


கொக்குவிலில் மருத்துவர் வீடு மீது தாக்குதல்! - யாழ். நகரில் மருத்துவர்கள் கண்டனப் போராட்டம் Top News
[Monday 2018-08-20 18:00]

கொக்குவில் பகுதியில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டதைக் கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்ட கண்டன போராட்டம் சுமார் அரை மணிநேரம் வரை நீடித்தது.


மாநகர சபை பணியாளர்களை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்! - சபை அமர்வில் கண்டனம்
[Monday 2018-08-20 18:00]

தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியைச் சுற்றி பாதுகாப்பு வேலிஅமைக்கும் பணியில் ஈடுபட்ட யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியதற்கு, யாழ்.மாநகர சபையில் இன்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


சரத் பொன்சேகா அப்படித் தான்! - முதலமைச்சர் பதிலடி
[Monday 2018-08-20 18:00]

தமிழ் மக்கள் எப்போதும் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என எங்கும் எழுதப்படவில்லை. போர் நிறைவடைந்து 10 ஆண்டுகளாகும், நிலையில் இராணுவம் தமிழர் நிலங்களில் இருந்து படிப்படியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


கொழும்பு மாநகர சபையின் தமிழ் உறுப்பினரை கொல்வதற்கு உளவு பார்த்தவர் கைது!
[Monday 2018-08-20 18:00]

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருபானந்தனை கொலை செய்வதற்கு உளவு பார்த்தார் என்று கூறப்படும் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். குறித்த நபரை புளுமென்டால் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை புளுமென்டால் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


வெலிக்கடைச் சிறையில் பதற்றம் - மோதல்களில் 8 சிறைஅதிகாரிகளும், 3 பெண் கைதிகளும் படுகாயம்!
[Monday 2018-08-20 18:00]

வெலிக்கடை சிறைச்சலையில் பெண் கைதிகளின் போராட்டத்தையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு மோதல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மோதல்களில் எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் மூன்று பெண் சிறை கைதிகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 30 பட்டதாரிகளுக்கு அலரி மாளிகையில் அரச பணி நியமனம்! Top News
[Monday 2018-08-20 18:00]

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான, முப்பது பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.


கிளிநொச்சியில் குப்புறக் கவிழ்ந்த படி வாகனம்! - சிறுவன் படுகாயம்
[Monday 2018-08-20 18:00]

கிளிநொச்சி- முழங்காவில் 19 ஆம் கட்டைப்பகுதியில் இன்று அதிகாலை சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த படிரக வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வாகனமே விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர். சிறுவன் ஒருவன் படுகாயமடைந்தான்.


நீர்வேலி விபத்தில் இளைஞன் படுகாயம்! Top News
[Monday 2018-08-20 18:00]

நீர்வேலி வடக்கு மாசுவன் சந்தியில் இன்று காலை மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துள்குள்ளாகின. அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்தார்.


யாழ்ப்பாணத்தில் கேக் விற்பனை நிலையத்தில் சிக்கிய மாவா போதைப்பொருள்! Top News
[Monday 2018-08-20 18:00]

யாழ்ப்பாணம் - ஐந்து சந்திப் பகுதியில், கேக் விற்பனை நிலையத்தில் இருந்து, ஒரு கிலோ மாவா போதைப்பொருள் யாழ்ப்பாண பொலிஸாரால் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது. மாவா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்தக் குற்றச்சாட்டில், 45 வயது குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மானிப்பாயில் கைக்குண்டுகள் மீட்பு!
[Monday 2018-08-20 18:00]

மானிப்பாயில், இன்று காலை 6 கைக்​குண்டுகளைக் கைப்பற்றியுள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் காணப்பட்ட கிணற்றில் இருந்தே, இந்தக் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.இ்ந்தக் கைக்குண்டுகள், விடுதலைப் புலிகளின் காலத்தில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க 780 மில்லியன் ரூபா இராணுவத்துக்கு!
[Monday 2018-08-20 07:00]

வடக்கு, கிழக்கில், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளது.


நிலையியல் கட்டளைகளின் கீழ் விஜயகலா மீது நடவடிக்கை! - சபாநாயகருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை
[Monday 2018-08-20 07:00]

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிற்கு எதிராக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என ஆராயுமாறு சபாநாயகருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய உரையொன்றின் போது விடுதலைப் புலிகள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.


வாஜ்பாய் கொடுத்த பயிற்சியே கடற்புலிகளை தோற்கடிக்க உதவியது! - ரணில் பெருமிதம்
[Monday 2018-08-20 07:00]

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இலங்கையின் உண்மையான நண்பன் என்றும், விடுதலைப் புலிகளிற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கைக்கு வாஜ்பாய் உதவிபுரிந்தார் என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று வாஜ்பாய்க்கான அனுதாப குறிப்பேட்டில் பதிவு செய்த பின்னர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.


மன்னிப்புக் கோரமாட்டேன்! - விஜயகலா
[Monday 2018-08-20 07:00]

விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளவோ போவதில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன். விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று அரசாங்க நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்தார். அவருக்கு எதிரான நடவடிக்கை குறித்து விசாரணைகளும் நடத்தப்பட்டன.


காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளுடன் இடைக்கால அறிக்கை!
[Monday 2018-08-20 07:00]

காணாமல் போனோர் அலுவலகம், இம்மாதம் 30ஆம் திகதி இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் வெளியிடவுள்ளது. வலிந்து காணாமல் செய்யப்படுதலுக்கெதிரான சர்வதேச தினம், ஓகஸ்ட் 30 ஆம் திகதியாகும். அந்த தினத்துடன் சேர்ந்து வரும் வகையில் இடைக்கால அறிக்கை வெளியிடப்படும் என அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.


முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டுவதற்கு முயற்சி! - ரிஷாட்
[Monday 2018-08-20 07:00]

விடுதலைப் புலிகளிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம்கள் வசமே இருப்பதாகவும், இதனை வைத்துக்கொண்டே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர், அரசாங்கத்தை அச்சுறுத்தி, அடிபணிய வைக்க முயல்கின்றனர் எனவும், புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில், அரசாங்கம் உரிய விசாரணையை நடத்தி, உண்மை நிலையைக் கண்டறிய வேண்டுமென, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார்.


சந்திரிகாவும், மஹிந்தவும் மீண்டும் போட்டியிட முடியாது! - விஜயதாஸ ராஜபக்ஷ
[Monday 2018-08-20 07:00]

தற்போதைய அரசியல் யாப்பு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது என்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா