Untitled Document
March 29, 2024 [GMT]
ஜனவரி 5இல் மாகாணசபைகளுக்குத் தேர்தல்?
[Saturday 2018-07-21 09:00]

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்லது ஜனவரி 5ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர். புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது என்பது குறித்து அடுத்த வியாழக்கிழமை பிரதமர் தலைமையில் கூடி முடிவெடுக்கவுள்ளனர்.


சம்பந்தனுக்கு அருகதையில்லை! - பசில் சீற்றம்
[Saturday 2018-07-21 09:00]

மகிந்த ராஜ


சீனாவுக்கு விற்கப்பட்ட இராணுவத்தின் காணி!
[Saturday 2018-07-21 09:00]

கொழும்பு, காலி முகத்திடலில் உள்ள இராணுவ தலைமையக காணி சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இரர்ணுவத் தலைமையக காணியின் ஒரு பகுதி சீனாவுக்கு முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சீனாவின் ஷங்கிரிலா நிறுவனத்திற்கே இந்தக் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இலவச அம்புலன்ஸ் சேவை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
[Saturday 2018-07-21 09:00]

சுவசரிய இலவச அம்புலன்ஸ் சேவை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. சுவசரிய சேவையை வட மாகாணத்திற்கு விஸ்தரிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி இன்று யாழ்ப்பாண மாநகர சபை திடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.


மாகாண சபைத் தேர்தலில் சகல தமிழ் கட்சிகளும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும்!
[Friday 2018-07-20 18:00]

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட உள்ளன.


வவுனியாவில் விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதியை விடுவிக்குமாறு கோரிக்கை!
[Friday 2018-07-20 18:00]

வவுனியாவில் விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதி ஒன்றினை விடுவிக்குமாறு வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்த சுதா கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் வவுனியா, தச்சங்குளம் பகுதியில் இருந்து மூன்று முறிப்பு பிரதேசத்திற்கு செல்வதற்கான வீதி விமானப்படையினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றது.


தந்தையின் இறுதிச் சடங்கில் சடங்கில் அரசியல் கைதி: - 13 வருடங்களின் பின் நடந்த நெகிழ்ச்சி
[Friday 2018-07-20 14:00]

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி இன்று தனது தந்தையின் மரண சடங்கில் கலந்துகொண்டார். கடந்த 18.07.2018 அன்று இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் என்ற சிவகுமாரின் தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒரு மணிநேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.


ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார்: Top News
[Friday 2018-07-20 08:00]

ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழமை (ஜுலை 25ம் திகதி) மாலை 6.30 மணிக்கு இடம்பெறும் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். இவர் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் இருந்து மீண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை வெளி உலகிற்கு 'புள்ளிகள் கரைந்தபொழுது' என்ற நாவலின் ஊடாக தமிழீழத்தில் வெளியிட்டு, கனடாவில் வெளியிட இருக்கின்றார்.


யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்!
[Friday 2018-07-20 08:00]

யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் பகுதியில் கடந்த வாரம் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.


யாழ்ப்பாணம் செல்கிறார் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர்!
[Friday 2018-07-20 08:00]

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவ்வார இறுதிக்குள் இவர் யாழ் செல்வார் என அறிவிக்கப்பட்ட போதும், இவருக்கு எதிரான வழக்கு காரணமாக இந்த விஜயத்தை அடுத்த வாரத்துக்கு தள்ளி போட்டு உள்ளார் என்று இவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இலங்கையில் முகப்புத்தகத்தில் பதிவிடப்படும் கருத்துக்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்!
[Friday 2018-07-20 08:00]

இலங்கை உட்பட பல நாடுகளில் இன முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் முகப்புத்தகத்தில் பதிவிடப்படும் கருத்துக்களைஅகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக் நிறுவனத்தின் உற்பத்தி முகாமையாளர் தெஸ்ஸா லியோன்ஸ் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மோசமாக நடந்து கொண்ட இளைஞருக்கு மனநல சிகிச்சை வழங்குமாறு உத்தரவு!
[Friday 2018-07-20 08:00]

யாழ். கொடிகாமம் பகுதியில் திடீரென மோசமாக நடந்து கொண்ட இளைஞருக்கு மனநல சிகிச்சை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!
[Friday 2018-07-20 08:00]

வட மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்கியதற்கு இடைக்கால தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கொழும்பில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விசேட கூட்டம்!
[Friday 2018-07-20 08:00]

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி நாளை விசேடகூட்டமொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டம் மருதானை, சி.எஸ்.ஆர். மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் கூறியுள்ளார்.


மஹிந்தவுக்கு நிதி வழங்கிய விவகாரம் குறித்த விவாதம்! - சீனா கடும் அதிருப்தி
[Thursday 2018-07-19 18:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் பரப்புரைகளுக்காக சீனா நிதி வழங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் விவாதம் தொடர்பாக சீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.


மஹிந்த அரசின் சலுகைகளால் மயங்கிய பிரித்தானிய எம்.பி 7 வாரங்களுக்கு இடைநிறுத்தம்!
[Thursday 2018-07-19 18:00]

வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஐன் பைஸ்லி, பிரித்தானிய பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை மீறி செயற்பட்டமையால் , 7 வாரங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஐன் பைஸ்லி, தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்துக்கான முழுச் செலவான 100,000 பவுண்ட்களை இலங்கை அரசாங்கம் ஏற்றிருந்தது.


விஜயகலாவின் எம்.பி பதவி பறிக்கப்படுமா? - முடிவு சபாநாயகரின் கையில்
[Thursday 2018-07-19 18:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான இறுதி முடிவு இவ்வார இறுதிக்குள் கிடைக்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.


அலுகோசு பதவிக்கு 8 பேர் விண்ணப்பம்!
[Thursday 2018-07-19 18:00]

மரணதண்டனையை நிறைவேற்றும், அலுகோசு பதவிக்கு 8 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. அதற்கு முன்னதாகவே இவர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள 8 பேரும் ஆண்கள் எனவும், இவர்களில் மூவர் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்காதவர்கள எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மாகாண சபையைக் கூட்டுவதை தடுக்கவில்லை! - வடமாகாண ஆளுநர்
[Thursday 2018-07-19 17:00]

மறு அறிவித்தல் என்னால் வழங்கப்படும் வரை அமைச்சரவை கூட்டத்தினை கூட்டவேண்டாம் என்று கூறியிருந்தேனே தவிர மாகாணசபையை கூட்ட வேண்டாம் என்று ஒருபோதும் நான் எங்கும் சொல்லவில்லை என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.


யாழ். மாநகர சபை மைதானத்தில் அதிகாலை முதல் குவிந்துள்ள 50 அம்புலன்ஸ் வண்டிகள்! Top News
[Thursday 2018-07-19 17:00]

இந்திய அரசின் நிதி உதவியுடன் 1990 என்ற சுவசெரிய அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக 50 அம்புலன்ஸ் வண்டிகள் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டு யாழ்.மாநகர சபை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


107 அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்! - அருட்தந்தை சக்திவேல்
[Thursday 2018-07-19 17:00]

பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரையில் 107 அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் தெரிவித்துள்ளார்.


தீபிகாவுக்கு அச்சுறுத்தல் - பிரதமர் ரணில் கண்டனம்!
[Thursday 2018-07-19 17:00]

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகமவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில், பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.


விஜயகலாவிடம் விசாரணை!
[Thursday 2018-07-19 17:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் விடுதலைப் புலிகள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். குறித்த கருத்து தொடர்பில் விஜயகலா மகேஸ்வரனிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


மஹிந்தவுக்குப் பணம் வழங்கப்பட்டதை ஒப்புக் கொண்டார் மகிந்தானந்த!
[Thursday 2018-07-19 17:00]

அரசாங்கத்திற்கு கோத்தபாய ராஜபக்ச பயம் பிடித்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே முன்னாள் ஜனாதிபதி குறித்து நியுயோர்க் டைம்ஸ் பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


மாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது! - யாழ். நகர பாடசாலையில் சம்பவம்
[Thursday 2018-07-19 17:00]

யாழ்ப்பாணத்தில், உள்ள பாடசாலை ஒன்றில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகள் இருவரை, பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர், பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


அமெரிக்க- இலங்கை கடற்படைகள் திருகோணமலையில் கூட்டுப் பயிற்சி!
[Thursday 2018-07-19 17:00]

அமெரிக்க கடற்படையின் சிறப்பு பிரிவுடன் இலங்​கை கடற்படையினர் இணைந்து திருகோணமலையில் கூட்டு பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.


சூழ்நிலையை சாதகமாக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்! - இரா.சம்பந்தன் Top News
[Thursday 2018-07-19 07:00]

நீண்டகாலமாக தொடரும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, தற்போது நிலவும் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்த வேண்டியது அவசியம் என்று இலங்கை வந்துள்ள பெல்ஜியம் பாராளுமன்ற குழுவினரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


அஸ்மின் மீது வழக்குத் தொடரப் போவதாக அனந்தி எச்சரிக்கை!
[Thursday 2018-07-19 07:00]

வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் எச்சரித்துள்ளார். வடமாகாண சபையில் உள்ள பெண் அமைச்சர் ஒருவர் அரசையும், இராணுவத்தையும் விமர்சித்துக் கொண்டு, அவர்களிடமே கைத்துப்பாக்கி ஒன்றை பெற்றுள்ளார் என மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் கடந்த மாகாணசபை அமர்வில் கூறியிருந்தார்.

Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா