Untitled Document
April 23, 2024 [GMT]
வடக்கு, கிழக்கு படைமுகாம்கள் ஒருபோதும் அகற்றப்படாது! - ருவன் விஜேவர்தன,
[Thursday 2018-07-19 07:00]

படை முகாம்களைக் குறைப்பது, படையினரைக் குறைப்பது இராணுவத் தலைமையகம் எடுத்துள்ள முடிவே தவிர, அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவல்​ல என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, தெரிவித்துள்ளார்.


ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த பெண் படுகாயம்!
[Thursday 2018-07-19 07:00]

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துன்னாலை பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


புலிகளை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் ஐதேக அரசாங்கம்! - திஸ்ஸ விதாரண கூறுகிறார்
[Thursday 2018-07-19 07:00]

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது, இனங்களுக்கிடையில் மோதல்களைத் தோற்றுவித்து, நாட்டில் விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், திட்டமிடுகின்றதென,லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளார்.


முதலமைச்சர், எம்.பிக்களுக்கு இணையாக்கப்பட்டார் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்!
[Thursday 2018-07-19 07:00]

கிளிநொச்சியின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக கரைச்சி பிரதேச சபை உறுப்பினரான எஸ். விஜயராஜன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.கிளிநொச்சி கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதியால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதமும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் 500 நாளை எட்டியது! Top News
[Wednesday 2018-07-18 18:00]

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 500 ஆவது நாளாக முல்லைத்தீவில் கண்ணீருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 500வது நாளை எட்டியிருக்கும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் அரசியல் வாதிகள், பொதுமக்கள், சர்வமத தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள 18 குற்றவாளிகளில் 7 பேர் தமிழர்!
[Wednesday 2018-07-18 18:00]

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போ​தைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட, 18 குற்றவாளிகளின் பெயர்கள் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழர்கள் ஏழு பேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது.


ஜனாதிபதி வேட்பாளராக கோத்தா அறிவிப்பு! - மஹிந்தவின் போலி அறிக்கையால் குழப்பம்
[Wednesday 2018-07-18 18:00]

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக, தான் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். மேற்படி விவகாரம் தொடர்பில், தன்னுடைய டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளில், பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார்.


சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? - யஸ்மின் சூக்கா
[Wednesday 2018-07-18 18:00]

சுமார் பத்து வருடங்களிற்கு முன்னர் ஹெய்ட்டியில் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த விபரங்களை கோரும் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் மனுவிற்கு, இலங்கை வெளிப்படையான பதிலை வழங்கவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


விஜயகலாவின் உரை - இதுவரை 25 பேரிடம் வாக்குமூலம்!
[Wednesday 2018-07-18 18:00]

யாழ்ப்பாணத்தில், விடுதலைப் புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பாக, இதுவரை 25 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் விசேட பிரிவு தெரிவித்துள்ளது. இன்று அல்லது நாளை விஜயகலா மகேஸ்வரனிடமும் வாக்குமூலம் பெறப்படும் எனவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.


மட்டக்களப்பில் 68 ஆயிரம் ஏக்கர் காணிகளை அபகரிக்கிறது சீன நிறுவனம்! - அரசுடன் இரகசிய ஒப்பந்தம்
[Wednesday 2018-07-18 18:00]

மட்டக்களப்பு, குடும்பிமலையில், கரும்புச் செய்கைக்காக சீன அரச நிறுவனத்துக்குக் காணி வழங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


எல்லையற்ற அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும்! - திபிலிசி மாநாட்டில் ஜனாதிபதி Top News
[Wednesday 2018-07-18 18:00]

எல்லையற்ற அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும், அதிகாரத்திற்கும் ஊழலுக்குமிடையிலான தொடர்பை துண்டிப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் இலங்கை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தெரிவித்தார். ஜோர்ஜியாவின் திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமான திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.


மன்னார் புதைகுழி - அணைத்தபடி கிடந்த இரு எலும்புக்கூடுகள்! Top News
[Wednesday 2018-07-18 18:00]

மன்னார் ச.தொ.ச விற்பனை நிலைய வளாகத்தில், இன்று 36ஆவது நாளாகவும் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில், நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் இரண்டு ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே ஒன்றாக காணப்பட்டதாக தெரிய வருகிறது.


ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம்!
[Wednesday 2018-07-18 18:00]

பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்புக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 8 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று தெரிவித்துள்ளது.


வடக்கில் 35 இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை!
[Wednesday 2018-07-18 18:00]

வடக்கில் 35 இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.


சரத் பொன்சேகாவுடன் சுற்றும் பாதாள உலக குழுவினர்! - அம்பலப்படுத்தியது கூட்டு எதிரணி Top News
[Wednesday 2018-07-18 18:00]

அமைச்சர் சரத் பொன்சேகா, தனக்கு கீழ் பாதாள உலகத்தைச் சேர்ந்த ஐவரை வைத்துக் கொண்டிருப்பதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.


கல்மடுக் குளத்தில் சடலம் மீட்பு!
[Wednesday 2018-07-18 18:00]

கல்மடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று காலை, சடலமாக மீட்கப்பட்டார். வடமராட்சி - கரவெட்டியைச் சேர்ந்த சுந்தரம் புலேந்திரன் என்பவரே, சடலமாக மீட்கப்பட்டவராவார்.


விஜயகலாவின் அங்கலாய்ப்பு குற்றமாகாது! - பொலிஸ் விசாரணையின் விக்னேஸ்வரன்
[Wednesday 2018-07-18 09:00]


அனந்தியிடம் கைத்துப்பாக்கி! - ஆதாரங்களை பகிரங்கப்படுத்துவேன் என்கிறார் அஸ்மின்
[Wednesday 2018-07-18 09:00]

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி பெற்றுக் கொண்டமைக்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அவற்றை அடுத்த மாகாண சபை அமர்வில் பகிரங்கப்படுத்துவேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.


வட மாகாண அமைச்சரவையைக் கூட்டக் கூடாது! - ஆளுநர் உத்தரவு
[Wednesday 2018-07-18 09:00]

தனது அனுமதியின்றி வட மாகாண சபையின் அடுத்த அமைச்சரவை கூட்டத்தை கூட்டக் கூடாது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.


வடக்கில் செயற்படும் ஆவா குழு பயங்கரவாத குழு அல்ல! - பிரதி அமைச்சர் நளின் பண்டார
[Wednesday 2018-07-18 09:00]

வடக்கில் செயற்படும் ஆவா குழு ஒரு பயங்கரவாத குழுவல்ல. தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து, அதில் உள்ளவாறே ஆவா குழுவினர் செயற்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் நளின் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.


உணர்ச்சிபூர்வமான சிந்தனைகளின் ஊடாக நாட்டை முன்னேற்ற முடியாது! - இரா.சம்பந்தன்
[Wednesday 2018-07-18 09:00]

உணர்ச்சிபூர்வமான சிந்தனைகளின் ஊடாக நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இலங்கை-, சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.


நாமல் தான் ஜனாதிபதி வேட்பாளர்! - அடித்துச் சொல்கிறார் ஊவா முதல்வர்
[Wednesday 2018-07-18 09:00]

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவே கூட்டு எதிர்க் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.


வவுனியாவில் விகாரையின் படம் பொறித்த ஆடை அணிந்திருந்த பெண் கைது!
[Wednesday 2018-07-18 09:00]

பௌத்த விகா


கைதடியில் முகமூடி நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல்!
[Wednesday 2018-07-18 09:00]

கைதடி தெற்


சாவகச்சேரியில் விற்கப்பட்ட பரிசுச்சீட்டுக்கு ஆறு கோடி ரூபா அதிஷ்டம்!
[Wednesday 2018-07-18 09:00]

சாவகச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட ஒரு அதிஷ்ட இலாபச் சீட்டுக்கு, 6 கோடி 11 லட்சம் ரூபா ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற சீட்டிழுப்பின் போது இந்த பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியிலுள்ள தேசிய லொத்தர் சபையின் கிளையின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட, தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள விற்பனை முகவரிடம் வாங்கப்பட்ட சீட்டுக்கே ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது.


இராணுவம் கூறுவது பொய்! - முதலமைச்சர்
[Tuesday 2018-07-17 19:00]

வடக்கில் இராணுவத்தினர் வசமிருந்த 92 சதவீத காணிகளை விடுவித்து விட்டதாக இராணுவம் கூறுவது உண்மைக்கு புறம்பானது, காணி விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்து மந்தகரமாகவே செயற்பட்டு வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


விஜயகலாவின் உரை - முதலமைச்சர், எம்.பிக்கள், ஊடகவியலாளர்களிடம் சிஐடியினர் விசாரணை!
[Tuesday 2018-07-17 18:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நிகழ்த்திய உரை தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.


திலீபன் உள்ளிட்ட 18 அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா! Top News
[Tuesday 2018-07-17 18:00]

அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோரிய, 18 பேர் இன்று இலங்கைக்கு நாடு கடத்தபபட்டனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர், பத்து மாதக் குழந்தை மற்றும் அவரது மனைவியிடமிருந்து பிரித்து கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

 gloriousprinters.com 2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா