Untitled Document
April 24, 2024 [GMT]
தாய்லாந்துப் பிரதமரை கட்டுநாயக்கவில் வரவேற்ற ரணில்! Top News
[Thursday 2018-07-12 18:00]

தாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக அவர் இலங்கைக்கு வந்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாய்லாந்து பிரதமரை, விமான நிலையத்தில் வரவேற்றார்.


மரத்துடன் மோதிய பேருந்து - மூவர் படுகாயம்!
[Thursday 2018-07-12 18:00]

முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்தனர். கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு பயணிகளை ஏற்றிவந்த பேருந்து ஒன்று கூழாமுறிப்புக்கும் முள்ளியவளைக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது .


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம்முடன் கைகோர்க்க அழைக்கிறார் டிலான்!
[Thursday 2018-07-12 18:00]

சிங்கபூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கைக்கு மிகப் பெரிய ஆபத்தாக அமையும். அதனை தோற்கடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தங்களோடு கரங்கோர்க்க வேண்டுமென அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி கோரிக்கை விடுத்துள்ளது.


அரிய வகை வெள்ளை நிற அணில்கள் கண்டுபிடிப்பு! Top News
[Thursday 2018-07-12 18:00]

அரணாயக்க பிரதேசத்தில் அரிய வகை வெள்ளை அணில்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பீ.ஜீ.செனவிரத்ன பண்டா என்பவரின் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வெள்ளை அணில் வந்துள்ளது.பின்னர் இதனை செல்ல பிராணியாக வளர்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்னுமொரு அரிய வகை அணில் அங்கு வந்துள்ளது. தற்போது இந்த இரண்டு அணில்களும் அந்த வீட்டிலேயே வாழ பழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தங்கையின் கையைப் பிடித்து இழுத்த இளைஞனை தாக்கி காயப்படுத்திய சகோதரன் கைது!
[Thursday 2018-07-12 18:00]

திருகோணமலையில் நேற்று இரவு தனது தங்கையின் கையை பிடித்த இளைஞனை அடித்து காயப்படுத்திய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கடலூர், பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பொருளாதார அபிவிருத்திகளை திணிப்பதன் மூலம் ஐக்கியத்தை ஏற்படுத்தி விட முடியாது! - ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்
[Thursday 2018-07-12 07:00]

அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிட முடியாது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்துள்ளார்.


இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டியது அவசியம்! - அடம் பிடிக்கிறார் ஆளுநர்
[Thursday 2018-07-12 07:00]

நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்த இராணுவம் யாழ். கோட்டைக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே.


மரணதண்டனைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எதிர்ப்பு!
[Thursday 2018-07-12 07:00]

மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. போதைப்பொருள் குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார். 40 வருடங்களின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றத்தை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் இலங்கை தனது நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.


திருகோணமலை அபிவிருத்தி திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
[Thursday 2018-07-12 07:00]

சிங்கப்பூர் சர்பானா புரோகே நிறுவனம் மற்றும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சும் இணைந்து தயாரித்துள்ள திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கான செயற்திட்ட அறிக்கை நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மலிக் சமரவிக்கிரம, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம மற்றும் சிங்கப்பூர் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


தூக்கிலிடப்படவுள்ள 19 பேரின் பட்டியல் ஜனாதிபதியிடம்!
[Thursday 2018-07-12 07:00]

பாரிய போதைப்பொருள் வர்த்தக குற்றச்செயல்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளிகளென இனங்காணப்பட்டோர், விரைவில் மரணத் தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்றுஅமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, தெரிவித்தார்.


கோத்தபாயவைத் தோற்கடிக்க வியூகம் வகுக்கும் 'றோ'!
[Thursday 2018-07-12 07:00]

கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான


ஒரு மாதமாக தத்தளித்த மீன்பிடிப் படகை கண்டுபிடித்தது அமெரிக்க விமானம்!
[Thursday 2018-07-12 07:00]

சர்வதேசக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீன்பிடிப் படகை, அமெரிக்கக் கடற்படையின் கடல் ரோந்து விமானம் கண்டறிந்துள்ளதென, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசியலை விட்டு விலகமாட்டேன் என்கிறார் விஜயகலா!
[Thursday 2018-07-12 07:00]

அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்.


மொட்டு சின்னத்துடன் உருவானது கூட்டு பொதுஜன பெரமுன!
[Thursday 2018-07-12 07:00]

கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் இணைத்து, கூட்டு பொதுஜன பெரமுன என்கிற பலமிக்க புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணி, மொட்டு சின்னத்தில் எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.


யாழ். கோட்டையில் இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க முடியாது! - முதலமைச்சர் போர்க்கொடி
[Wednesday 2018-07-11 18:00]

யாழ்ப்பாணம் - கோட்டையில் நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட ஒரு போதும் அனுமதிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு ஜனாதிபதி கையொப்பம்!
[Wednesday 2018-07-11 18:00]

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கையொப்பமிடத் தயார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்று சிறையில் இருந்து கொண்டும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கே, தாம் கையொப்பமிடுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இது சம்பந்தமான தீர்மானம் ​நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.


வடக்கு இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே! - கனேடியத் தூதுவரிடம் விக்கி Top News
[Wednesday 2018-07-11 18:00]

போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகின்ற போதிலும், வடக்கு மாகாணத்தை மத்திய அரசாங்கம், தொடர்ந்தும் தனது இராணுவக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


சிறுமி றெஜினா படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Wednesday 2018-07-11 18:00]

சுழிபுரத்தில் ஆறு வயது சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


புதிய கட்சியை ஆரம்பிக்கப் போகிறீர்களா? - விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பிய கனேடிய தூதுவர்
[Wednesday 2018-07-11 18:00]

தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக தாம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தேங்காய் உடைத்து விஜயகலாவுக்கு சாபமிட்ட கூட்டு எதிரணியினர்!
[Wednesday 2018-07-11 18:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் தொடர்பாக அண்மையில் தெரிவித்த கருத்துக்கு எதிராக அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிரணியினர் இன்று ​சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்து சாபமிட்டனர். கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை, மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தேங்காய் உடைத்தனர். பின்னர் குறித்த இடத்தில் சுமார் அரை மணிநேரம் கூட்டு எதிரணியினர் அமைதிப் போராட்டம் ஒன்றையும் நடத்தினர்.


மஹிந்த அரசு தெற்கை விட வடக்கிலேயே அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டதாம்! - நாமல் கூறுகிறார்
[Wednesday 2018-07-11 18:00]

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலேயே அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்ட அவர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டார்.


பெற்ற மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை - உடந்தையாக இருந்த தாய்!
[Wednesday 2018-07-11 18:00]

மட்டக்களப்பு- வெல்லாவெளி பிரதேசத்தில், பெற்ற மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தையும், அதற்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையா நேற்று உத்தரவிட்டுள்ளார்.


இராணுவத் தளபதிக்கு ஒரு வருட சேவை நீடிப்பு!
[Wednesday 2018-07-11 18:00]

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீடிப்பை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


பிள்ளையானின் சிறைவாசம் - இன்றுடன் 1000 நாட்கள்!
[Wednesday 2018-07-11 18:00]

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறைச்சாலையில் 1,000 நாள்களைக் கழித்துள்ளார். இன்றுடன் அவர் தொடர்ச்சியாக 1000 நாட்கள் விளக்கமறியலில் இருந்துள்ளார்.


வடக்கிற்கு வருகிறேன், ஏற்பாடுகளை செய்யுங்கள்! - முதலமைச்சருக்கு ரஞ்சன் பதில்
[Wednesday 2018-07-11 18:00]

யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக, அங்கு வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை ஏற்றுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் 5000 ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது!
[Wednesday 2018-07-11 18:00]

யாழ் நகரப் பகுதியில் 5000 ரூபா கள்ள நோட்டுடன் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலையே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர். இதன் போது 5000 ரூபா கள்ள நோட்டுக்கள் மூன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவரைத் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


வடக்கில் புலிகள் ஆதரவு மனோநிலை - அடக்கும் முயற்சியில் இறங்குகிறது அரசு!
[Wednesday 2018-07-11 07:00]

வடக்கில் மீண்டும் தலைதூக்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு மனோநிலையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக, சட்டம்ஒழுங்கு அமைச்சர், ரஞ்சித் மத்தும பண்டாரவும், பொலிஸ்மா அதிபரும் நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர்.


டெனீஸ்வரன் விவகாரத்தினால் வடக்கு மாகாணசபையில் காரசார விவாதம்!
[Wednesday 2018-07-11 07:00]

அமைச்சர் பா. டெனீஸ்வரன் தனது அமைச்சர் பதவியை தொடர்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் எனவும், அவருக்கு அமைச்சருக்கான ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாணசபையில் நேற்று ஆளுங் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா