Untitled Document
February 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
மீண்டும் இனப்பிரச்சினைகளை உருவாக்க விமல் வீரவன்ச முயற்சி: ஆளும் கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டு!
[Monday 2012-11-26 08:00]

நாட்டில் மீண்டும் இனப்பிரச்சினைகளை ஏற்படுத்த அமைச்சர் விமல் வீரவன்ச முயற்சித்து வருவதாக மத்திய மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் உஜித் அனுராத தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தால் நாட்டில் மீண்டும் போர் மூழக் கூடிய அபாயம் காணப்படுகின்றது. இவ்வாறு மாகாணசபை முறைமையை ரத்து செய்யுமாறு கோரி வரும் விமல் வீரவன்ச போன்ற தரப்பினருக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து செல்கின்றது. மாகாணசபை முறைமைய விமர்சனம் செய்யும் தரப்பினர், மாகாண சபை முறைமையின் சகல நலன்களையும் அனுபவித்து வருகின்றனர். நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. வேலை செய்ய முடியாத சில அரசியல்வாதிகள் மாகாணசபை முறைமயை குறை சொல்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


இராணுவத்திற்கு களங்கம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத்தாக்கல்!
[Monday 2012-11-26 08:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் அவதூறு ஏற்படும் வகையில் பிரசாரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் கிளிநொச்சியில் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 109 தமிழ் பெண்களில் மூவரை படையினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு போலியான பிரசாரத்தில் ஈடுபட்டு படையினருக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைத்து மக்களையும் அரசு பழிவாங்குமா? :சபையில் அரியநேத்திரன் கேள்வி.
[Sunday 2012-11-25 20:00]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த பட்டதாரி பயிலுனர்கள் நிரந்தர நியமனத்தில் அரசியல் பழிவாக்கப்படுவதைப் போன்று கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைத்து மக்களையும் பழிவாங்க முடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேலுள்ளவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; 2013 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டைப் பார்க்கின்றபோது குறிப்பாக பொருளாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.


தமிழர்கள் விரும்பாத திட்டத்தை திணிப்பதற்கு துணை போகப் போகிறீர்களா? :சபையில் சுமந்திரன் கேள்வி
[Sunday 2012-11-25 20:00]

"வடமாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் விரும்பாத "திவிநெகும' சட்டத்தை அந்த மக்கள் மீது பலவந்தமாக திணிக்க சிறுபான்மை இன அமைச்சர்கள் துணைபோகப் போகின்றீர்களா?'' இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் கேட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் அவர் உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது: 'திவிநெகும' சட்ட வரைவை சட்டமாக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை அரசு பெறவேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்தச் சட்டவரைவுக்கு வடக்கு மாகாண மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.


சந்திரிக்காவின் ஆட்சி கவிழ்ந்தது போல், விரைவில் மஹிந்தவின் ஆட்சியும் கவிழும்: ரவி கருணாநாயக்க
[Sunday 2012-11-25 20:00]

"முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க தானே ஆட்சியில் நீடித்து நிலைப்பேன் என்ற மமதையுடன் பேசினார். ஆனால் எதிர்பாராத நேரத்தில் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதே போன்றுதான் இந்த அரசும் அதி விரைவில் கவிழும்" என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க கூறினார். நாடாளுமன்றம் நேற்று சனிக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் நடைபெற்றது. ரவி கருணாநாயக்க விவாதத்தை ஆரம்பித்து பேசும் போது மேலும் கூறியதாவது:


மலேசிய தமிழர்களின் எதிர்ப்பால் ரத்தான மகிந்தவின் மலேசிய விஜயம்!
[Sunday 2012-11-25 19:00]

மலேசியாவில் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளதாக மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தினால், மகிந்த ராஜபக்ஷ இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளதாகவும் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மலேசியாவில் நடைபெறவுள்ள இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


13 மைனஸ் மற்றும் பிளஸ் என்ற தீர்வே அவசியப்படுகிறது: சம்பிக்க ரணவக்க
[Sunday 2012-11-25 19:00]

சர்ச்சைக்குரிய 13 வது அரசியல் திருத்தத்துக்கு மேலே சென்று, அதிகாரப் பகிர்வினை வழங்கும் பொருட்டு, சர்வதேசத்தின் அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று மின்சாரத்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மத்துகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அது குறித்த சூழ்ச்சி தொடர்பில் அறிந்திருந்தும் மௌனமாக இருந்தால், அடுத்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து, 13ம் திருத்தச் சட்டத்தின் அதிகார பகிர்வுகளை அமுலாக்க வேண்டும் என்ற கட்டாய அழுத்தங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..


இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசு இழுத்தடித்தால் சர்வதேச சக்திகள் மூலம் அழுத்தம் கொடுப்போம்: கூட்டமைப்பு
[Sunday 2012-11-25 19:00]

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை முன்வைக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புதிய அரசியல் தந்திரோபாயங்களைக் கையாள உள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார். இதன் ஓர் கட்டமாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காணுமாறு இலங்கையை வலியுறுத்தக்கூடிய அன்றேல் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க்கூடிய நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொள்வதே கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என்றும் அவர் கூறினார்.


மாவீரன் பரிதி அவர்களுக்கு உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் வீரவணக்கம்.
[Sunday 2012-11-25 19:00]

பரிதி அண்ணா அவர்களுக்கு உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் வீரவணக்கம் உலகளாவிய தமிழ் இளையோர் அவை புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இணைந்து தமிழீழ தேசிய பணியாளரான பரிதி என்றழைக்கப்படும் திரு. மதிந்திரன் நடராஜா அவர்களை நாமும் இவ்வளையில் நினைவுகூருவதுடன் அவருக்கான தனது மரியாதையையும் செலுத்திக்கொள்கின்றது. கடந்த நவம்பர் 8, 2012 அன்று பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகவிருந்த பரிதி அண்ணா அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்துக்கு முன்னால் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட இந்தக் கோழைத்தனமான செயலை உலகளாவிய தமிழ் இளையோர் அவையானது வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழ் மக்கள் அனைவருடனும் இணைந்து இக்கொலைக்கான விசாரணைகளை விரைவாக முன்னெடுத்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதி வழங்க வேண்டுமென பிரான்ஸ் அரசினையும் அதன் காவற்துறையினரையும் வலியுறுத்துகின்றது.


ஷிராணியை பதவியிலிருந்து நீக்கும் அரசின் முயற்சிக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் கண்டனம்.
[Sunday 2012-11-25 19:00]

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை பதவியிலிருந்து நீக்கும் ஆளும் கட்சியின் முயற்சி குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் கண்டனம் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை மீதான குற்றவியல் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பான விளக்கங்கள் தெளிவாக இல்லை. நிர்வாகம், சட்டத்துறை, நீதித்துறை ஆகிய மூன்றும் தனித்தனியாக இயங்க வேண்டியவை. இவ்வாறு தனித்துவம் மிக்க துறைகளில் ஒன்றான நீதித்துறையின் சுதந்திரம் அரசின் அண்மைய நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை கண்டிக்கப்பட வேண்டியது.


தமிழ்கூறும் நல்உலகம் தலைசிறந்த தமிழ் அறிஞரை இழந்து விட்டது!
[Sunday 2012-11-25 11:00]

தமிழ்கூறும் நல்உலகம் தலைசிறந்த தமிழ் அறிஞர், தனித்தமிழ் ஆர்வலர், இலக்கியச்செம்மல் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்களை இழந்துவிட்டது. புலவர் இறைக்குவனார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மாளாத் துயரில் மூழ்கியுள்ளோம். அவரது மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்இனத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தனித்தமிழ் அறிஞரும் மிகச்சிறந்த புலமையாளருமான திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள் பட்டுக்கோட்டையில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு சென்னை திரும்பும்பொழுது தஞ்சையில் இயற்கை எய்தினார். புலவர்மணி அவர்கள் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் மருமகன் ஆவார். அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற தமிழ்ப் பணியை முன்னெடுத்துச் சென்றவர். தென்மொழி வெளியீட்டிலும் அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களது பிற நூல்கள் வெளிவருவதிலும் தொடர்ந்து பாடுபட்டவர்.


இலங்கையின் முதலாவது செய்மதியில் தேசியக்கொடியை பறக்கவிடுவதற்கு அனுமதி மறுப்பு!
[Sunday 2012-11-25 09:00]

சீனாவில் இருந்து ஏவப்படவுள்ளதாக கூறப்படும் இலங்கையின் முதலாவது செய்மதியான சுப்ரீம் சட் 1 இல், இலங்கையின் தேசியக்கொடி பறக்கவிடப்பட வேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும், தேசிய தொடர்பாடல் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவும் கோரிக்கை விடுத்திருந்தன. இந்தக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? என்று நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் றுவன் விஜயவர்த்தன இந்தக்கேள்வியை எழுப்பினார். இலங்கையர் என்ற ரீதியில் செய்மதி ஒன்று அனுப்பப்படுவதை தாம் வரவேற்பதாக குறிப்பிட்ட அவர் எனினும் அது அனுப்பப்படும் விதம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் நஞ்சு கலக்கப்பட்டமை கண்டுபிடிப்பு: பொலிஸார் விசாரணை!
[Sunday 2012-11-25 09:00]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கொஹில கிழங்கு கறியில் சயனைட் நச்சுப்பொருள் கலந்திருந்தமை அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ம் திகதி நாடாளுமன்ற உணவகத்தில் சமைக்கப்பட்ட கொஹில கிழங்கு, பருப்பு சேர்க்கப்பட்ட உணவு வழங்கப்பட்டன. அதில் கொஹில கிழங்கு கறி வழமைக்கு மாறாக சிவப்பு நிறத்தில் இருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத மரக்கறிகள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க சபாநாயகரால் உத்தரவிடப்பட்டது.


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் ஆரம்பம் தொட்டே இருந்து வருகின்றன: - அசோக் கே. காந்தா
[Sunday 2012-11-25 09:00]

இந்தியா எப்போதும் தனது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே நடவடிக்கை மேற்கொள்ளும். அதிகாரம் பெறும் நோக்கிலோ அல்லது பிராந்திய வல்லரசாகும் கொள்கையிலேயோ நாம் ஒருபோதும், செயற்படவில்லை என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா நேற்றுத் தெரிவித்துள்ளார்.


துன்புறுத்தல் தாங்க முடியாமல் இராணுவத்திலிருந்து 6 தமிழ் பெண்கள் விலகினர்..! Top News
[Sunday 2012-11-25 09:00]

இலங்கையில் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து தமிழ் பெண்கள் தப்பி ஓடியதாக முன்னர் வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார். அதேவேளை, அந்தப் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டதாகவும் வந்த செய்திகளையும் அவர் மறுத்துள்ளார். முன்னதாக, இராணுவத்துக்கு சேர்க்கப்பட்ட 109 தமிழ் பெண்களில் 3 பேர் தாம் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கூறி, அதில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியிருந்தார்.


மூன்றாவது முறையாகவும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் சனத் ஜயசூரிய!
[Sunday 2012-11-25 08:00]

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய மூன்றாவது முறையாகவும் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டுள்ளார். மூன்றாவது மனைவியாகவும் அவர் விமானப் பணிப்பெண் ஒருவரையே தெரிவுசெய்துள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவையில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிய அனுராதபுரத்தை சேர்ந்த 25 வயதான மிசேல் என்ற பெண்ணை மணந்துள்ள ஜயசூரியவுக்கு தற்போது 43 வயதாகும். அத்துடன் அந்த பெண் ஒரு நடிகையாகவும் இருக்கின்றார்.


BBC ஊடகவியலாளர்கள் சிலர் அரசின் வட்டியில்லா கடனுக்கு விண்ணப்பித்துள்ளனர் :விசாரணை செய்யுமாறு ரணில் கோரிக்கை!
[Sunday 2012-11-25 08:00]

பி.பி.சீ ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அந்த ஊடக நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பி.பி.சீ ஊடகத்திற்காக பணியாற்றி வரும் சந்தன கீர்த்தி பண்டார மற்றும் எல்மோ பெர்னாண்டோ ஆகியோரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தமாறு, ரணில் விக்ரமசிங்க பி.பி.சீ.யின் தலைவர் கிறிஸ்டோபர் பெட்டன் பிரபுவிடம் கோரியுள்ளார். குறித்த இரண்டு ஊடகவியலாளர்களும் பி.பி.சீயின் ஊடக ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டு;ள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.


அநாவசியமான கேள்விகளை எழுப்பினால், சபையிலிருந்து வெளியே அனுப்ப வேண்டிவரும்: அஷ்வரை எச்சரித்த சபாநாயகர்!
[Saturday 2012-11-24 21:00]

பாராளுமன்றில் அநாவசியமான ஒழுங்கு பிரச்சினைகளை கேள்விகளாக எழுப்பும் நபர்களை சபைக்கு வெளியில் அனுப்ப வேண்டிவருமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். 2013 வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உரையாற்றிய வேளை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை கேள்வியாக எழுப்பினார். அந்த சமயத்தில் கேள்வி ஒழுங்கு பிரச்சினையோடு தொடர்புடையதல்ல என தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாராளுமன்றில் அநாவசியமான ஒழுங்கு பிரச்சினைகளை கேள்விகளாக எழுப்பும் நபர்களை சபைக்கு வெளியில் விரட்ட வேண்டிவருமென எச்சரித்தார்.


சீனாவிடமிருந்து 4200 கோடி கடன் பெற்று செய்மதி தயாரிக்கிறது அரசு :ஜதேக குற்றச்சாட்டு
[Saturday 2012-11-24 21:00]

உலகின் 45 ஆவது நாடாக செய்மதியை அனுப்புவதற்காக அரசாங்கம் 4200 கோடி ரூபாவை செலவழித்துள்ளது. இந்த நிதியானது சீனாவிடம் இருந்து முற்று முழுதாக வணிக கடன் அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. ஆனால் வரவு செலவுத்திட்டத்தில் மகளிர் விவகார அமைச்சுக்கு 10 கோடி ரூபாவே என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விதவைப் பெண்கள் செல்லொனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் குறித்த புனர்வாழ்வுசெயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனினும் அரசாங்கம் செய்மதிக்காக வணிகக் கடனாக பெறப்பட்ட 4200 கோடி ஒதுக்கியுள்ளது என்றார்.


இறுதிப் போரின் போது எரிக்கின் திட்டத்தை தலைவர் நிராகரித்திருக்காவிட்டால், பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்களாம்: - ஜெயராஜ்சிடம் கே.பி செவ்வி
[Saturday 2012-11-24 20:00]

இலங்கை இறுதிப் போரில் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள் என்று புலிகளின் முன்னாள் சர்வதேச தொடர்பாளராக இருந்த கேபி என்ற குமரன் பத்மநாதன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். மிகவும் பிரபலமான ஊடகவியலாளர் டி.எஸ்.பி ஜெயராஜ் அவர்கள் 2010 இல் கேபி ஐ பேட்டி எடுத்திருந்தார். அண்மையில் ஐ.நாவினால் தயாரிக்கப்பட்டு ஊடகங்களுக்கு கசிந்துள்ள ஐ.நாவின் இரகசிய அறிக்கை அம்பலமாகியதன் பின்னர், மீண்டும் டி.எஸ்.பி ஜெயராஜ் கேபியை சந்தித்து இன்னுமொரு பேட்டி எடுக்கலாமா, ஒத்துழைப்பு தருவீர்களா என கேட்டதும், கேபி மிகவும் உற்சாகத்தோடு, 2010 இல் தந்த தகவல்களை விட விபரமாக பேட்டி தருகின்றேன் எனக்கூறி பல தகவல்களைக் கூறியிருக்கின்றார்.


மாவீரர்தினம் எதற்காக.....
[Saturday 2012-11-24 20:00]

யார் இந்த மாவீரர்கள்?. எதற்காக களமாடினார்கள் ?. உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த சக்தி எது?. சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்?. விடைகாணமுடியாத வினாக்கள் அல்ல இவை . ஒரு ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பிற்காகப் போராடும்போது இது புரியப்படும். போராடியோர் நினைவினைச் சுமந்து , மீண்டெழும் உணர்வினை ஊட்டும் நாளே மாவீரர்தினம்.


கூடங்குளம் அணுக் கசிவுகளால் இலங்கையர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் :அணுசக்தி பிரதிப்பணிப்பாளர்
[Saturday 2012-11-24 20:00]

தென்னிந்திய கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தால் இலங்கையர்களுக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அணுசக்தி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் அணில் ரஞ்சித்தை மேற்கோள் காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதில் இருந்து ஏற்படுகின்ற கசிவின் காரணமாக, புற்றுநோய் போன்ற நீண்டகால நோய்கள் ஏற்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அணுக் கசிவுகள் உணவுப் பொருட்களில் பரவுவதால் இந்த நிலை ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


சபையில் கூட்டமைப்பை வாய்க்களமாடிய கருணா: ஆளும் தரப்பினர் கைதட்டி ஆரவாரம்!
[Saturday 2012-11-24 20:00]

அன்று 13வது திருத்தச் சட்டத்தை தூக்கியெறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று 13வது திருத்தம் பற்றி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசுவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். நிதி அமைச்சுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி அவர் மேலும் கூறியதாவது; வடக்கு கிழக்கில் இன்று பாரிய அபிவிருத்தி நடைபெறுகிறது. உங்களை விட வடக்கு கிழக்கு பகுதிக்கு அதிகம் விஜயம் செய்தவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்கிறார். நீங்கள் கொழும்பில் இருப்பதால் அங்கு நடப்பது ஒன்றும் தெரியாது.


யாழ்ப்பாணத்தில் படையினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும்! - மகிந்த ஹத்துருசிங்க
[Saturday 2012-11-24 12:00]

யாழ்ப்பாணத்தில் பரவலாக நிலை கொண்டுள்ள படையினரின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்கப்படும் என யாழ். கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த செக் குடியரசு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட உள்ளக அறிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது: - இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
[Saturday 2012-11-24 12:00]

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட உள்ளக அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிக்கை பக்கச்சார்பான முறையிலும் பிழையான தகவல்களை கொண்டும் தயார் செய்யப்பட்டுள்ளதென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தாருஸ்மன், உள்ளக அறிக்கைகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கசிந்தமையை இலங்கை ஆட்சேபித்துள்ளது.


நவ்று தீவு முகாம் தரக்குறைவானதுதான் - அம்னஸ்டியும் குறைகூறியுள்ளது.
[Saturday 2012-11-24 12:00]

நவ்று தீவில் புகழிடக் கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாமில் ஆட்களால் நிரம்பிவழிகின்றன. வெப்பத்திற்கும் மழைக்கும் தாக்கப்பிடிக்காத இந்தக் கூடாரங்களில் எவருக்கும் தனிப்பட்ட அந்தரங்கத்துக்கான சுதந்திரமே இல்லை. முகாமில் நிலைமைகள் மிக 'கொடூரமாகவும் தரக்குறைவாகவும்' காணப்படுவதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம்பெறும் நோக்குடன் படகுகள் மூலம் வந்தவர்களில் 386 ஆண்கள், அவர்களது தஞ்சக்கோரிக்கை பரிசீலனை முடியும் வரை இந்த நவ்றூ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


சென்னையில் தலைவர் பிரபாகரனுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது!
[Saturday 2012-11-24 12:00]

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கை கைவிடுவதற்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது. 1982ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி தமிழகத்தின் பாண்டி பசாரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பிரபாகரன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் நந்திக்கடல் பகுதியில் பிரபாகரனின் சடலம் கடந்த 2009ம் ஆண்டு மீட்கப்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு இந்திய குற்றப் புலனாய்வுத் தரப்பினர் நேற்று(23.11.2012) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.


யாழில் நள்ளிரவில் ஒட்டப்படும் மாவீரர்தினம் பற்றிய சுவரொட்டிகளை அதிகாலையில் அகற்றும் படையினர்:
[Saturday 2012-11-24 11:00]

தமிழீழத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோண்டாவில் பகுதியில் மாவீரர் தினத்தை நினைவு கூறும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. யாழ்.கோண்டாவில் ஸ்ரேசன் வீதி, கோண்டாவில் சி.சி.தமிழ் கலவன் பாடசாலை, கோண்டாவில் டிப்போ பகுதகளிலேயே கடந்த புதன்கிழமை இரவு முதல் இவை ஒட்டப்பட்டுள்ளன.

SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா