Untitled Document
April 19, 2024 [GMT]
வடக்கில் போருக்குப் பின் முளைத்த 131 விகாரைகள்!
[Thursday 2018-06-07 08:00]

வடக்கு மாகாணத்தில், 2009ஆம் ஆண்டு போர் முடிந்த பின்னர், 131 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மகிந்தவிடம் விசாரணைக்குத் தயாராகிறது சிஐடி!
[Thursday 2018-06-07 08:00]

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கூட்டமைப்பில் போட்டியா? - விரைவில் அறிவிப்பேன் என்கிறார் விக்னேஸ்வரன்
[Thursday 2018-06-07 08:00]

புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக, பொறுத்திருந்து பார்ப்போம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,


யாழ்ப்பாணத்தில் மற்றொரு அரசியல் அதிகாரம் உருவாவதை தடுக்கவே அங்கஜனை எதிர்த்ததாம் கூட்டமைப்பு!
[Thursday 2018-06-07 08:00]

யாழ்ப்பாணத்தில் மற்றொரு அரசியல் அதிகாரம் உருவாகிவிடக் கூடாது என்பதனாலேயே அங்கஜன் இராமநாதனை பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைத்த போது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எதிர்த்தார் என்று கூட்டு எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.


அர்ஜுன , உதயங்க , சாலியவை கொழும்புக்கு கொண்டு வர மகிந்தவும், ரணிலும் உதவ வேண்டும்! - அநுரகுமார திஸாநாயக்க
[Thursday 2018-06-07 08:00]

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள அர்ஜுனா மகேந்திரன், உதயங்க வீரதுங்க, சாலிய விக்கிரமசூரிய ஆகிய மூவரையும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தனிப்பட்ட ரீதியில் தலையீடு செய்ய வேண்டுமென்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. வலியுறுத்தினார்.


தெற்காசியாவின் உயரமான கட்டடம்! - கொழும்பில் கட்டப்படுகிறது
[Thursday 2018-06-07 08:00]

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை சீன நிறுவனம் ஒன்று கொழும்பில் அமைக்கவுள்ளது. இந்தக் கட்டடத்தை அமைக்கும் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்டதாக இந்தக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஈரல் மாற்று சிகிச்சைக்கு நடவடிக்கை!
[Thursday 2018-06-07 08:00]

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஈரல் மாற்று சிகிச்சை மேற்கொள்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சத்திரசிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கவே இவ்வாறான நடிவடிக்கை மேற்கெள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


சரணடைந்தோர் பட்டியலை வெளியிடுவதாக கூறவில்லை! - கைவிரித்தது காணாமல் போனோருக்கான அலுவலகம்
[Wednesday 2018-06-06 19:00]

இறுதிக்கட்ட போரில் காணாமல் போனோர் மற்றும், ஆயுதப்படைகளிடம் சரணடைந்தோரின் பெயர்ப் பட்டியலை தாம் வெளியிடத்த தயார் என வெளியாகிய செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.


தேசியக் கொடியை ஏற்ற மறுத்த வடக்கு கல்வி அமைச்சருக்கு ரிஐடி அழைப்பாணை!
[Wednesday 2018-06-06 19:00]

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனை பயங்கரவாத தடுப்புப்பிரிவு, விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஆண்டு வவுனியா- ஈரப்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் இலங்கை தேசியக் கொடியை ஏற்றாமை தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


விக்கியும், சிவாஜியும் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானவர்களாம்! - ராஜித கூறுகிறார்.
[Wednesday 2018-06-06 19:00]

இனவாதக் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


சரியான நேரத்தில் முடிவெடுப்போம்! - சம்பந்தன்
[Wednesday 2018-06-06 19:00]

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப் பணிக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அனைவரதும் கடமை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்டசித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


மருதன்கேணியில் மீனவர்கள் போராட்டம்! Top News
[Wednesday 2018-06-06 19:00]

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வேறு மாவட்ட மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி அப்பகுதி மீனவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மருதன்கேணி பகுதியில்,அப்பகுதியை சாராத வேறு மாவட்ட மீனவர்கள் சிலர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடலட்டை தொழிலில் ஈடுபடுவதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள்! Top News
[Wednesday 2018-06-06 19:00]

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ச.தொ.ச விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியை மேற்கொள்ளும் பணியில் இன்று யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைந்து கொண்டனர்.


வீட்டுக்குள் புகுந்தது கார் - இராஜாங்க அமைச்சர் பாலிதவின் மகன் படுகாயம்! Top News
[Wednesday 2018-06-06 19:00]

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்​கே பண்டாரவின் மகன் யசோதா ரங்கே பண்டார (வயது 25), விபத்தொன்றில் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலாபம்-புத்தளம் வீதியில் பங்கதெனிய-கொட்டபிட்டிய சந்தியில் இன்று அதிகாலை 12:50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர் எழுச்சி நாள்! Top News
[Wednesday 2018-06-06 19:00]

'மாணவர் எழுச்சி நாள்- ஜூன்- 6' நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.நிகழ்வில் தமி


பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதை தடை செய்ய வேண்டும்! - என்கிறார் சம்பிக்க
[Wednesday 2018-06-06 19:00]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை உச்சரிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கு ஜேர்மனியை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும் என்று அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க, தெரிவித்துள்ளார்.


கட்டாய பாடமாகிறது சுகாதாரம்!
[Wednesday 2018-06-06 19:00]

சுகாதார பாடத்தை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடய பரப்பில் கட்டாய பாடமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


சுவிசில் தமிழர்களின் இறுதிச் சடங்கிற்குத் தடை!
[Wednesday 2018-06-06 19:00]

சுவிட்ஸர்லாந்து - Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கை கொண்ட தமிழர்களுக்கு குறித்த கல்லறை வளாகத்தில் அவர்களின் உறவினர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதை அனுமதிக்க முடியாது என Burgdorf நகர குடியிருப்பாளர்கள் நகர நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.


சுதந்திரக் கட்சியின் புதிய செயற்குழு நாளை கூடுகிறது!
[Wednesday 2018-06-06 19:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய கட்சியின் மத்திய மற்றும் செயற்குழுக்களின் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த​லைமையில் நாளை மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.


திருகோணமலையில் ஆலயத் திருவிழாவில் வாள்வெட்டு! - 6 இளைஞர்கள் படுகாயம்
[Wednesday 2018-06-06 08:00]

திருகோணமலை - சல்லியில் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு சென்ற இரு குழுக்களுக்கிடையே நேற்றிரவு 8.10 மணியளவில் இடம் பெற்ற மோதலில் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில் ஆறு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு மழுப்பிய முதலமைச்சர்!
[Wednesday 2018-06-06 08:00]

எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மழுப்பலான பதில்களை வழங்கிச் சமாளித்தார்.


ராஜ் ராஜரட்ணத்தின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்!
[Wednesday 2018-06-06 08:00]

அமெரிக்காவில் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட ராஜ் ராஜரட்ணத்தின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த 2011ம் ஆண்டு ராஜ் ராஜரட்ணத்துக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது.


பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வி! - சுதர்ஷினி வருத்தம்
[Wednesday 2018-06-06 08:00]

பிரதி சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி தனக்கான தோல்வி அல்ல என்றும் அது பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.


சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த ரணில்!
[Wednesday 2018-06-06 08:00]

பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்ட ஆளும் தரப்பைச் சேர்ந்த சுதந்திரக் கட்சி பின்வரிசை உறுப்பினரின் பெயர் வாபஸ் பெறப்பட்டதாலேயே ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழிந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


50 நாடுகளின் பட்டியலில் இலங்கை! - பாராட்டும் ஐ.நா
[Wednesday 2018-06-06 08:00]

பிளாஸ்டிக் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் 50 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றிலேயே மேற்படி விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பொலித்தீன் பைகள் மற்றும் உணவு பொதியிடும் பொலித்தீன் பெட்டிகள் என்பவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இது போன்ற விடயங்களை தாம் எதிர் பார்ப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.


காலை வாரிய கூட்டமைப்பு! - அங்கஜன் அதிருப்தி
[Wednesday 2018-06-06 08:00]

பிரதி சபாநாயகர் பதவி தெரிவின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு குறித்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்-


அமெரிக்காவின் கூட்டுப் பயிற்சிக்கு 25 மரைன் கொமாண்டோக்களை அனுப்பியது இலங்கை!
[Wednesday 2018-06-06 08:00]

அமெ


மைத்திரியை மீண்டும் அரியணையில் ஏற்றுவதே இலக்கு! - என்கிறார் துமிந்த திஸாநாயக்க
[Wednesday 2018-06-06 08:00]

2020இல் நடைபெறும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரியணையேற வேண்டும் என்பதே எமது இலக்காகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா