Untitled Document
January 17, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
கிளிநொச்சியில் இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம்!
[Monday 2018-01-15 19:00]

கிளிநொச்சியில் அழகு நிலைய உரிமையாளர் ஒருவரிடமிருந்து 5000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய கரைச்சி பிரதேச சபை அதிகாரியொருவருக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா 30,000 ரூபா அபராதம் விதித்தார்.


இரணைமடுவில் 98 பானைகளில் பொங்கல்! Top News
[Monday 2018-01-15 19:00]

கிளிநொச்சி- இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்டு நீர்பாசனத்துக்காக நீர் திறந்து விடப்பட்டு 98 ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் இன்று இடம்பெற்றன. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற இவ்விசேட வழிபாட்டில், இரணைமடுகுளத்தின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுப்படுகின்ற கமக்கார அமைப்புக்கள் 98 பானைகளில் பொங்கி விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டனர்.


மாட்டுப் பட்டியில் இளைஞனின் சடலம் மீட்பு!
[Monday 2018-01-15 19:00]

மட்டக்களப்ப - கரடியனாறு பொலிஸ் பிரிவின் காரைக்கட்டு பகுதியில் மாடுகளைப் பராமரிக்கும் இளைஞன் ஒருவரின் சடலத்தை, இன்று காலை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர், காரைக்கட்டு பகுதியைச் சேர்ந்த அழகையா அற்புதன் (வயது 20) என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


19 வேட்பாளர்கள் கைது!
[Monday 2018-01-15 19:00]

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக இதுவரையும் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 19 வேட்பாளர்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவர்கள் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் முறைபாடுகள் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.


சர்வதேச இந்து இளைஞர் பேரவையினால் 180 குடும்பத்தினருக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு! Top News
[Monday 2018-01-15 19:00]

பொங்கல் பண்டிகையினை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊருராகச் சென்று மக்களுக்கு தம் உதவிகளைச் செய்தனர் சர்வதேச இந்துஇளைஞர் பேரவையினர். 180 பேருக்கான பொங்கலுக்கு தேவையான அனைத்து பொதிகளுடனும் அவரவர் ஊர்தேடிச் சென்று வழங்கப்பட்டது.


வவுனியா- குருமன்காடு பிள்ளையார் கோவிலில் கொள்ளை!
[Monday 2018-01-15 19:00]

வவுனியா குருமன்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகை என்பன இன்று அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸாரிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை.


யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்கு தேர்தல் திணைக்களம் தடை!
[Monday 2018-01-15 09:00]

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில், 'இடைக்கால அறிக்கையின் மாயைகளை களைதல் மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் கேடயமாக சர்வதேச சட்டங்கள்' எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தில் , இரண்டு கல்வியியலாளர்கள் கருத்துரை வழங்கவிருந்த கலந்துரையாடலுக்குத் தேர்தல் திணைக்களம் தடைவிதித்துள்ளது.


ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே! - உச்சநீதிமன்றம்
[Monday 2018-01-15 08:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே என்று உச்சநீதிமன்றம், ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்திருப்பதாக, தெரிவிக்கப்படுகிறது. தமது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா அல்லது ஆறு ஆண்டுகளா என்பதை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.


வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா! Top News
[Monday 2018-01-15 08:00]

வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டித் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் ”பட்டப்போட்டித் திருவிழா 2018” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பட்டப்போட்டித் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.


வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான ஒழுக்க விதி சுற்றறிக்கை!
[Monday 2018-01-15 08:00]

வட மாகாண கல்வி அமைச்சால், வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான ஒழுக்க விதி தொடர்பான சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


புதிதாகப் பதவியேற்ற இராஜாங்க அமைச்சர் விபத்தில் படுகாயம்!
[Monday 2018-01-15 08:00]

அண்மையில் மகிந்த அணியில் இருந்து அரசதரப்புக்குத் தாவி, இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்ற ஸ்ரியானி விஜே விக்ரம பயணித்த வாகனம் இன்று காலை கடுகன்னாவை பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் காயங்களுக்குள்ளான அமைச்சர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் அமைச்சருக்கு தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரவிக்கின்றன.


புலிகளின் பாடல்களை ஒலிக்கவிட்டது ஏன்? - அங்கஜன்
[Monday 2018-01-15 08:00]

தமிழ் தலைமைகள் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருவதனால் தான் நித்திரையா தமிழா எழுந்து வாடா .. ” எனும் பாடலை ஒலிக்க விட்டோம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுகமும் , தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதன் போது ஆரம்பத்தில் ” நித்திரையா தமிழா எழுந்து பாரடா … ” எனும் பாடல் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட எழுச்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன.


குரும்பசிட்டி, வயாவிளான் பகுதிகளில் பொலிஸ் சோதனைகள் அதிகரிப்பு!
[Monday 2018-01-15 08:00]

அண்மையில் விடுவிக்கப்பட்ட குரும்பசிட்டி மற்றும் வயாவிளான் பகுதிகள் ஊடாக இடம்பெற்று வந்த மரக்கடத்தல் மற்றும் சுண்னாம்புகல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவதில், பலாலி பொலிஸார் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.இப்பகுதிகளில், இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


பயணிகளின் பொழுது போக்கிற்காக பேருந்துக்குள் நூலகம்! Top News
[Monday 2018-01-15 08:00]

இலங்கையில் பேருந்து ஒன்றில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.நாளாந்தம் மக்கள் அதிகமாக போக்குவரத்தை அரச மற்றும் தனியார் பேருந்துகளில் மேற்கொண்டு வருகின்றனர். பேருந்துகளில் இசை மற்றும் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம். இது பணிகளுக்கு மகிழ்ச்சியை அல்லது வெறுப்பை தரக்கூடியதாக அமையும். ஆனால், மக்களின் பாராட்டை பெற்றுக் கொள்ளும் வகையில் தனியார் பேருந்து ஒன்றில் சிறிய நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


துப்பாக்கிகளுடன் புலிகளின் விளக்கப் புத்தகமும் கைப்பற்றப்பட்டது!
[Monday 2018-01-15 08:00]

இரண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், இரண்டு உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 148 ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காலி, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடைப்படையின், திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று அதிகாலை 4.00 மணியளவில் , குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தமிழர்களின் நிலங்களில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பது ஆபத்தானது! - ஆனந்தசங்கரி
[Monday 2018-01-15 08:00]

தமிழர்களின் நிலங்களில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு ஆபத்தானது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட ஆனந்த சங்கரி, அதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


தமிழர் பிரதிநிதிகள் அரசுக்கு ஆமைஓடுகள்....!
[Monday 2018-01-15 01:00]
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என எதிர்பார்த்த அரசியல் தலைமைகள், அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மகிந்ததான் கள்ளன் என்கிறார் சந்திரிக்கா....!
[Sunday 2018-01-14 23:00]
சர்சைக்குரிய பிணைமுறி சம்பவத்தில் தவறு இடம்பெற்றிருக்குமாயின் அதன்பொருட்டு தற்போது தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார். வெயங்கோட பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

துஸ்பிரயோகத்தால் விண்ணுலகம் சென்ற மாணவி!
[Sunday 2018-01-14 22:00]
ஹம்பாந்தோட்டை திஸ்சமாறம பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 14 வயதான மாணவி, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.   ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்தார்.

கனடாவில் இருந்து சென்றவரை குடும்பத்துடன் நாடு கடத்தியது இலங்கை அரசு!
[Sunday 2018-01-14 19:00]

கனடாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், நாடு கடத்தப்பட்டுள்ளனர். கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் நேற்றுக்காலை நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சியில் வெளியிடப்பட்ட தமிழ் நாட்காட்டி! Top News
[Sunday 2018-01-14 19:00]

தமிழரின் பண்டைய நாட்காட்டிக் கணிப்பின்படி புதிய தமிழ் ஆண்டு பிறந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொன்மத் தமிழ்க் குடிகளால் கையாளப்பட்டு வந்த தமிழ் நாட்காட்டியை தற்காலத்திற்கேற்ப வடிவமைத்து வெளியிட்டிருக்கின்றார் கிளிநொச்சியைச் சேர்ந்த மின் பொறியியலாளரான மகேந்திரராசா.


ஜனாதிபதிக்கு சவால் விடும் சுஜீவ சேனசிங்க!
[Sunday 2018-01-14 19:00]

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நடந்த மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பான சகல தகவல்களையும் வெளியிடப் போவதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் நடந்த பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மறைத்து வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


மதுபானங்கள் தொடர்பான மங்களவின் உத்தரவை ரத்துச் செய்தார் ஜனாதிபதி!
[Sunday 2018-01-14 19:00]

மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட திருத்தங்களை ரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் வௌிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை வர்த்தகத்திற்காக திறந்து வைக்கும் காலம் கடந்த வியாழக்கிழமை முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியது.


யானை தாக்கி விவசாயி பலி!
[Sunday 2018-01-14 19:00]

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கற்கிளாச்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சித்தாண்டி பிரதான வீதியை அண்டி வாழும் தம்பிமுத்து கந்தசாமி (வயது 57) என்ற விவசாயியே உயிழந்துள்ளார்.


மங்கள- சுஸ்மா சந்திப்பு!
[Sunday 2018-01-14 19:00]

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் மங்கள சமர வீர இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் விரிவான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மன்னாரில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Sunday 2018-01-14 19:00]

மன்னார்- எருக்கலம்பிட்டி பஸ் தரிப்பிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான 2 கிலோ கேரள கஞ்சா பொதியுடன்அநுராதபுரம் தமுத்தே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னாரில் இருந்து அநுராதபுரம் தலாவ என்னும் பிரதேசத்திற்கு கொண்டு செல்ல இருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.


இரண்டாவது கட்ட கொடுப்பனவை வழங்கியது சீனா!
[Sunday 2018-01-14 19:00]

சீனாவின் மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து 97.365 மில்லியன் அமெரிக்க டொலர்களை இரண்டாவது கட்டமாக பெற்றுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை. இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சீனா மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனி லிமிட்டெட் ஆகியவற்றிற்கு இடையில் கடந்த டிசம்பர் 09 ம் திகதி கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கையின் படியே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.


500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோருகிறார் முதலமைச்சர்!
[Sunday 2018-01-14 19:00]

பதுளையிலுள்ள தமிழ் பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபரை, முழந்தாழிட வைத்ததாக, ஊவா மாகாண மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன கூறிய கருத்தின் காரணமாக தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா