Untitled Document
January 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வரட்சியை சமாளிக்க 1500 குழாய் கிணறுகள்!
[Thursday 2017-01-19 06:00]

நாட்டில் நிலவும் கடும் வரட்சியால் மார்ச் மாதம் வரை பயன்படுத்தக் கூடிய நீர் மட்டமே உள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படும் பகுதிகளில் 1500ற்கும் அதிகமான குழாய் கிணறுகளை புனரமைத்து நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்தது.


பொலிஸாருக்கு ஹெலிகொப்டர்! - அரசாங்கம் புதிய திட்டம்
[Thursday 2017-01-19 06:00]

குற்றச் செயல்களை தடுக்க பொலிஸாருக்கு ஹெலிகொப்டர் வழங்கப்படவுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஹெலிகொப்டர் ஒன்றை பயன்படுத்தினால் இலகுவில் கொள்ளையர்களை பொலிஸாரினால் கைது செய்ய முடியும் என பொலிஸ் அதிகாரிகள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.


அமெரிக்காவுக்கு வழங்கிய காணியை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் முடிவு!
[Thursday 2017-01-19 06:00]

அமெரிக்க தூதுவராலயத்தின் கீழுள்ள இரணவில காணியை மீளவும் பெற்றுக் கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பு இரணவில பகுதியிலுள்ள 166.038 ஹெக்டேயர் காணி கடந்த 1991ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்க தூதுவராலயத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. "அமெரிக்காவின் குரல்" (Voice of America) வானொலி ஒலிபரப்பை இலங்கையில் நிறுவும் பொருட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கனடாவில் ஃபான் ஃஅம் மையத்தில் முதலமைச்சர் C-V-விக்கினேஸ்வரன் நிகழ்த்திய உரை: Top News
[Wednesday 2017-01-18 22:00]

ஜனவரி 15-01-2017 அன்று மாலை 6 மணி..

பெருந்திரளாக இஙகு கூடியிருக்கும் எனதினிய கனடா வாழ் தமிழ் உறவுகளே உங்கள் எல்லோருக்கும் முதற்கண் வட மாகாண சபை மற்றும் தாயக மக்களினதும் என்னுடையதுமான பொங்கல் வாழ்த்துக்களையும் புதுவருட வாழ்த்துக்களையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கின்றேன். எனது கனேடியப் பிரயாணம் அதன் நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. எனது கடமைகள் என்னை மீண்டுந் தாயகம் திரும்ப அழைக்கின்றன. இந்நிலையில் நாங்கள் இப்பயணத்தின் போது தொடக்கத்தில் எதிர்பார்த்தவைகளையுந் திரும்பும்போது எவ்வௌற்றை நாம் சாதித்துள்ளோம் எவற்றில் வெற்றி காணவில்லை என்பது பற்றியும் ஆராய்வது பொருத்தம் என நம்புகின்றேன்.


புதிய அரசியலமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவே முட்டுக்கட்டை - லகஷ்மன் கிரியெல்ல
[Wednesday 2017-01-18 20:00]

புதிய அரசியலமைப்புக்கும் 13 பிளஸிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முட்டுக்கட்டையாக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவே வடக்கு, கிழக்கு மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதரவு வழங்கியுள்ளனர்.பத்தரமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சபை முதல்வரும் அமைச்சருமான லகஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.


22ஆம் திகதி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கிறார் அனந்தி!
[Wednesday 2017-01-18 18:00]

யுத்த காலத்தில் காணாமல்போனவர்கள் குறித்து அரசாங்கம் உரிய பதிலளிக்காவிடில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22ம் திகதி முதல் தான் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருச்சியில் ஈழத் தமிழ் மக்களால் கொண்டாப்பட்டது!
[Wednesday 2017-01-18 18:00]

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாகத் திகழ்ந்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் திருச்சி வாழ் ஈழத் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.


ஜனவரி 28ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது எழுக தமிழ்! Top News
[Wednesday 2017-01-18 18:00]

மட்டக்களப்பில் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவையினால் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார். இந்த நிகழ்வை எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சர்வதேச பிரகடனங்களை அமுல்படுத்தினால் தான் ஜிஎஸ்பி பிளஸ்! - ஐரோப்பிய ஒன்றியம்
[Wednesday 2017-01-18 18:00]

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீள வழங்குவதற்கு 58 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட 27 சர்வதேச சாசனங்களும் அங்கீகரிக்கப்பட்டு, அமுல்படுத்துவதே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதற்கான ஒரே ஒரு தேவையாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.


படகுகள் தரிப்பதற்குப் பொருத்தமில்லாத இடமே ஊறணியில் விடுவிப்பு! - மீனவர்கள் விசனம்
[Wednesday 2017-01-18 18:00]

மயிலிட்டித் துறைமுகத்தை விடுவிக்கக் கூடாது என பலர் தடுக்கிறார்கள். இதனை யார் பின்புறத்திலிருந்து செயற்படுத்துகிறார்களோ தெரியவில்லை. மயிலிட்டித் துறைமுகத்தைப் புனரமைப்பதற்கு அரசாங்கம் குறிக்கப்பட்ட நிதியை ஒதுக்கியிருப்பதாகக் கூறுவது கண்துடைப்பு என மாதகல் மேற்கு கிராமிய கடற்தொழிலாளர் அமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


நந்திக்கடல் பகுதி விடுவிக்கப்படாது! - இராணுவம் அறிவிப்பு
[Wednesday 2017-01-18 18:00]

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதி இராணுவத் தேவைக்கு அவசியமானது என்றும், அந்தப் பகுதி விடுவிக்கப்பட மாட்டாதெனவும் இராணுவம் தெரிவித்துள்ளது. படைத் தேவைக்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்றும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.


மட்டக்களப்பில் 3 இலட்சம் பேர் வரட்சியால் பாதிப்பு!
[Wednesday 2017-01-18 18:00]

வரட்சி காரணமாக அதிகளவிலான பாதிப்பு கிழக்கு மாகாணத்திலேயே ஏற்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 ஆயிரத்து 401 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 2005 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


மட்டக்களப்பில் மழை வேண்டி 1008 பானைகளில் பொங்கல்! Top News
[Wednesday 2017-01-18 18:00]

தைப்பொங்கலை முன்னிட்டு மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செலகமும், பிரதேச மக்களும் இணைந்து, 1008 பானைகளில் பொங்கி மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இன்றையதினம் வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து 1008 பானைகளில் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


மஹிந்த மீது பாயவுள்ள தகவல் உரிமைச் சட்டம்!
[Wednesday 2017-01-18 18:00]

தகவல் அறியும் உரிமைச் சட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைமுறைக்கு வருமென அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த சட்டம் நடைமுறைக்கு வந்தபின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதலாவதாக சிக்குவாரென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


58 நிபந்தனைகளை விதிக்கவில்லை ஐரோப்பிய ஒன்றியம்! - ராஜித சேனாரத்ன
[Wednesday 2017-01-18 18:00]

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் 58 நிபந்தனைகளை விதித்திருந்ததாகவும் அதற்கு அரசாங்கமும் உடன்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை முற்றாக மறுத்துள்ளார்.


லீசிங்கில் வாகனம் கொள்வனவு செய்வோருக்கு அரசாங்கம் புதிய திட்டம்
[Wednesday 2017-01-18 18:00]

தவணைக் கட்டணம் முறையில் புதிதாக வாகனங்ளை கொள்வனை செய்தவற்கு ஆரம்ப தொகையில் அரசாங்கம் மாற்றத்கை மேற்கொண்டுள்ளது. இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சினால் முன்மொழியப்பட்ட விடயங்களுக்கு அமைய, முச்சக்கரவண்டி உட்பட அனைத்து வகையான வாகனங்களை தவணைக் கட்டணத்திற்கு கொள்வனவு செய்ய புதிய திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


மீண்டும் தவறு செய்யக் கூடாது! - சரத் பொன்சேகா
[Wednesday 2017-01-18 18:00]

13வது திருத்தச் சட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லத் தேவையான அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.


மகளைத் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்!
[Wednesday 2017-01-18 18:00]

கொடிகாமம் பகுதியில் தனது பதின்ம வயது மகளைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான தந்தையை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், உத்தரவிட்டார். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பிலேயே தந்தை, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் Top News
[Wednesday 2017-01-18 18:00]

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவின் தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மரபினைக் காக்க போராடும் தமிழக உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் இளைஞர்களின் கவனயீர்ப்பு என்ற தொனிப்பொருளில் இப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


கனடா நாட்டில் எழுச்சி! - ஏறு தழுவுதல் தமிழர் மரபுரிமை! Top News
[Wednesday 2017-01-18 14:00]

இடம்: இந்திய தூதரகத்துக்கு முன்னால் 365 Bloor St E, Toronto, ON M4W 3L4

காலம்: 21.01.2017 சனிக்கிழமை மதியம் 12 மணி.

தொடர்பு: திருமுருகவேந்தன் 416 893 9545

5000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழினம் போற்றி புகழ்ந்த போர்க்கலையின்வெ ளிப்பாடான' ஏறுதழுவுதல்' ஐ இந்திய ஏகாதிபத்திய அரசு தடை செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். அதற்கு ஆதரவாக போராட்ட களத்தில் நிற்க்கும் மக்களுக்கு ஆதரவாக கனடா நாட்டிலும் அடையாள போராட்டத்தை தமிழ்த்தாய் மன்றம் நடத்துகிறது. கலந்து கொண்டு சிற்பிப்பீர்!


ஓமந்தை இராணுவமுகாம் அகற்றப்படாது! - இராணுவப் பேச்சாளர்
[Wednesday 2017-01-18 07:00]

ஏ-9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடி முற்றாக அகற்றப்படாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.


யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்! Top News
[Wednesday 2017-01-18 07:00]

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம், ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையுமாக, மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலை விடுதி 22 இல் சத்திரசிகிச்சையின் மூலம் மூன்று குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டன. மகப்பேற்று நிபுணர் கே. சுரேஸ்குமார் குறித்த சத்திரசிகிச்சையினை மேற்கொண்டுள்ளார். ஊர்காவத்துறை பகுதியைச் சேர்ந்த வசீகரன் காயத்திரி தம்பதியினருக்கே இந்த மூன்று குழந்தைகளும் பிறந்துள்ளன.


ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு நிபந்தனைகளை ஜனாதிபதி நிராகரிப்பு!
[Wednesday 2017-01-18 07:00]

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள செயற்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 6.1.1 மற்றும் 6.1.8 ஆகிய இரண்டு பரிந்துரைகளுக்கும் எவ்வாறானதொரு சூழ்நிலையிலும் இணங்க முடியாதென உறுதியாக மறுப்புத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அவற்றை செயற்திட்டத்திலிருந்து நீக்கிவிடுவதற்கு தீர்மானித்துள்ளார்.


சந்திரசிறி அபகரித்த 110 மில்லியன் ரூபா வட மாகாணசபைக்கு மீளக் கிடைத்தது!
[Wednesday 2017-01-18 07:00]

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்னர், மாகாண அமைச்சுக்களிடமிருந்து அப்போதைய ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியினால் சட்டத்துக்கு முரணாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட 110 மில்லியன் ரூபா நிதி, வடக்கு மாகாண சபைக்கு மீளவும் கையளிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், மாகாண அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியை, அப்போதைய ஆளுநர் சந்திரசிறி, ஆளுநர் நிதியத்துக்கு மாற்றம் செய்திருந்தார்.


எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை கையளிப்பு! - 31 ஆம் திகதிக்குள் வர்த்தமானி அறிவிப்பு Top News
[Wednesday 2017-01-18 07:00]

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை சகல உறுப்பினர்களின் ஒப்பந்தத்துடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் நேற்று கையளிக்கப்பட்டது. மீளாய்வுக் குழுவின் தலைவர் அசோக பீரிஸ் இந்த அறிக்கையை அமைச்சரிடம் கையளித்தார்.


சிறைக்குள் இருந்து இரவிரவாக நூல் எழுதுகிறார் வீரவன்ச!
[Wednesday 2017-01-18 07:00]

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நூல் ஒன்றை எழுதி வருகின்றார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வாகன துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாள்தோறும் நள்ளிரவு 12.00 மணி வரையில் கண் விழித்து நூல் எழுதும் பணிகளில் விமல் வீரவன்ச ஈடுபட்டு வருகின்றார்.


ஓரினச்சேர்க்கையால் அமைச்சரவையில் சலசலப்பு!
[Wednesday 2017-01-18 07:00]

மனித உரிமைகள் தொடர்பிலான செயற்றிட்டத்தில் உள்ளக்கப்பட்டுள்ள ஓரினச்சேர்க்கை, குற்றமற்றது என்ற உறுப்புரை உள்ளிட்ட சர்சைக்குரிய உறுப்புரைகள் பலவற்றுக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குச் சென்றிருந்த அமைச்சர்களில் பலர் இந்த யோசனைக்கு, தங்களுடைய கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.


முச்சக்கர வண்டி விபத்தில் ஐந்து மாணவர்கள் காயம்!
[Wednesday 2017-01-18 07:00]

கிளிநொச்சி- கனகாம்பிகை குளம் பகுதியில், மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து, நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் சாரதி மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாந்தபுரம் பகுதியில் இருந்து கனகாம்பிகை குளத்துக்கு மாணவர்களை ஏற்றி வந்த முச்சக்கரவண்டியே விபத்துக்குள்ளானது.

Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
AIRCOMPLUS2014-02-10-14
NIRO-DANCE-100213
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<b> 15-01-2017 அன்று ஃபான் ஃஅம் மையத்தில்  நடைபெற்ற முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களது பொதுக் கூட்ட  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 15-01-2017 அன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா(Puthinamphotos.com)
<b> 14-01-2017 அன்று ரொரன்டோவில் கனேடிய தமிழர் பேரவை (CTC) நடாத்திய பொங்கல் விழா விருந்து நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா (Puthinamphotos.com)