Untitled Document
April 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கிளிநொச்சியில் அன்னை பூபதி நினைவு தினம் அனுஷ்டிப்பு! Top News
[Wednesday 2017-04-19 17:00]

தமிழர் தாயகப்பகுதியில் இருந்து இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று காலை 9-30 மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது.


மோடியின் இலங்கைப் பயணம் உறுதியானது!
[Wednesday 2017-04-19 17:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோ​டியின் இலங்கைப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் கொண்டாடப்படவுள்ள ஐக்கிய நாடுகளின் வெசாக் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளார். மே மாதம் 12 - 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த வெசாக் நிகழ்வில் தமது பங்கேற்பை மோடி உறுதி செய்துள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஷ, மேலும் கூறியுள்ளார்.


காணி விடுவிப்பு தொடர்பாக முல்லைத்தீவில் கூட்டம்! Top News
[Wednesday 2017-04-19 17:00]

படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இன்று முல்லைத்தீவில் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தையும் விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.


சீனாவின் புலமைப்பரிசில்- நிராகரிக்கிறார் கோத்தா!
[Wednesday 2017-04-19 17:00]

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சீனாவின் புலமைப் பரிசிலை நிராகரிக்கக்கூடிய சாத்தியம் அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீன புலமைப் பரிசிலை பெற்றுக் கொண்டு சீனாவில் சென்று கல்வி கற்பதா இல்லையா என்பதனை இன்னும் கோத்தபாய ராஜபக்ஸ தீர்மானிக்கவில்லை என கூறப்படுகிறது.


பிரித்தானிய அமைச்சரின் பயணம் ரத்து!
[Wednesday 2017-04-19 17:00]

பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா நாளை இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்து செய்துள்ளார். ஜூன் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவரது இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பல முக்கிய பிரதிநிதிகளுடன் அவர் பேச்சு நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மலையகத் தமிழர் பற்றிய சர்ச்சைக்குரிய கட்டுரையை மீளப் பெற்றார் தமிழ்க்கவி!
[Wednesday 2017-04-19 17:00]

கரைச்சி கலாசார விழாவில் வெளியிடப்பட்ட 'கரை எழில் 2016' நூலில், தான் எழுதிய “கிளிநொச்சியும் மலையகத் தழிழர்களும்” எனும் சர்ச்சைக்குரிய கட்டுரையை தான் மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அந்தக் கட்டுரை தொடர்பாக மனம் வருந்துவதாகவும் தமிழ்க் கவி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.


மருதங்கேணி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் நிறுத்தம்!
[Wednesday 2017-04-19 09:00]

மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மேற்படி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பான சாத்திய ஆய்வு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


ஜி.எஸ்.பி பிளஸ் குறித்து பெல்ஜியத்தில் இன்று முக்கிய கூட்டம்!
[Wednesday 2017-04-19 09:00]

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜீ.எஸ்.பி வரிச் சலு­கையை இலங்கை மீண்டும் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பான முக்­கி­ய­மான கூட்­டத்­தொடர் இன்று பிரசெல்ஸ் நகரில் ஆரம்­ப­மா­கின்­றது. இதன் போது இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உயர் மட்ட குழுவின் மதிப்­பீட்டு அறிக்கை பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.


காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டம் - ஜனாதிபதியே முடிவெடுப்பாராம்!
[Wednesday 2017-04-19 09:00]

காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் முடிவெடுப்பார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். “காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டம் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில், குறிப்பாக இராணுவ முகாம்களுக்குள் தேடுதல் நடத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, பாதுகாப்புத் தரப்பினர் ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தனர்.


இராணுவத் தளபதி ஓய்வு பெறுவதற்கு திட்டம்!
[Wednesday 2017-04-19 09:00]

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது சேவை நீடிப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே அவர் ஓய்வு பெற தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.


மின்னஞ்சல் மூலம் பரவும் புதிய கணினி வைரஸ்! - இலங்கை அதிகாரிகள் எச்சரிக்கை
[Wednesday 2017-04-19 09:00]

மின்னஞ்சல் வடிவத்தில் புதிய கணினி வைரஸ் இணையத்தளங்களில் பரவி வருவதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கைச் செயலணி அறிவித்துள்ளது. ஆகையால், மின்னஞ்சலுக்கு வரும், சந்தேகத்துக்கு இடமான மின்னஞ்சலைத் திறக்க வேண்டாம் என்றும் அவ்வாறு இருத்தலே, பாதுகாப்பானதாகும் என்றும் அந்த செயலணியின் தலைமை தகவல் பொறியியலாளர் ரொஷான் சந்திராகுப்தா தெரிவித்தார்.


குப்பை மேட்டுக்குள் தொடர்கிறது மீட்புப்பணி! - இதுவரை 32 பேர் பலி
[Wednesday 2017-04-19 09:00]

கொலன்னாவை, மீதொட்டமுல்லயில், நேற்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த மீட்பு நடவடிக்கைகளில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. குப்பைமலை, கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் சரிந்து விழுந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் நேற்றும் தொடர்ந்தன. எனினும், குப்பை மலைக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்து சமய பாட புத்தங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய இந்துசமய பாட நிபுணத்துவக்குழு அமைக்க முடிவு! Top News
[Wednesday 2017-04-19 09:00]

இந்து சமயப் பாடக் கலைத்திட்டத்தில் காணப்படுகின்ற அல்லது சுட்டிக்காட்டப்படுகின்ற விடயங்களை ஆராய்ந்து அவற்றை மாணவர்கள் விரும்பிக் கற்கும் விதத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான ஒரு இந்து சமய பாட நிபுணத்துவக்குழு உருவாக்கப்பட உள்ளது.


ஜனாதிபதி செயலக பதிவுப் புத்தகத்தில் காணாமல்போன பக்கங்கள்! - பாதுகாப்பு அதிகாரிகள் இருவரிடம் விசாரணை
[Wednesday 2017-04-19 09:00]

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்த பதிவுப் புத்தகத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் இருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில், நேற்று அறிவித்தனர்.


தர்சினி சிவலிங்கம் அவுஸ்ரேலிய அணியில் விளையாட வாய்ப்பு!
[Wednesday 2017-04-19 09:00]

ஆசியாவில் உயரம் கூடிய வலைப்பந்தாட்ட வீராங்கனையான இலங்கையைச் சேர்ந்த தர்சினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட குழுவில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட அணியில் மாத்திரமன்றி சர்வதேச அணி ஒன்றில் விளையாடுவதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.


மயிலிட்டியில் ஆயுதக் கிடங்கே இல்லை! - இராணுவத் தளபதி
[Wednesday 2017-04-19 09:00]

மயிலிட்டியில் ஆயுதக்கிடங்கு இருப்பதாக சொல்லப்படுவது முற்றிலும் பொய்யான தகவல் என இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பாதுகாப்பு அமைச்சில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இரண்டாவது மாதத்தை நோக்கி நகரும் போராட்டங்கள்!
[Tuesday 2017-04-18 18:00]

கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்கள், இரண்டாவது மாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன


கொக்கிளாயில் தமிழ்- சிங்கள மீனவர்களுக்கிடையில் முறுகல்! Top News
[Tuesday 2017-04-18 18:00]

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் இன்று காலை முறுகல் நிலை ஏற்பட்டது. முகத்துவாரம் பகுதியை அண்டிய கடலில் மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பான அளவீட்டின் போதே, இந்த அமைதியின்மை ஏற்பட்டது.


வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முடிவு! - சுமந்திரன்
[Tuesday 2017-04-18 18:00]

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், பட்டதாரிகளின் விபரங்கள் முகாமைத்துவ திணைக்களத்திற்கு அனுப்பி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர் அதற்கான விண்ணப்பக் கோரல்கள் இடம்பெறும்.


விக்னேஸ்வரன் மன்னிப்புக் கோர வேண்டும்! - கத்தோலிக்க திருச்சபை போர்க்கொடி
[Tuesday 2017-04-18 18:00]

கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் இயேசு கிறிஸ்துவை, 9 சிறுமிகளை கற்பழித்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட பிறேமானந்தாவுடன் ஒப்பிட்டு, ஊடகம் ஒன்றுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.


அன்னை பூபதி நினைவு நாள் - மட்டக்களப்பில் நிகழ்வுக்கு ஏற்பாடு! Top News
[Tuesday 2017-04-18 18:00]

தியாக தீபம் அன்னை பூபதியின் 29 ஆவது நினைவு தினம் ஜனநாயகப் பேராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மக்களும் கலந்துகொள்ளுமாறும் இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனநாய போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.


சிறுமியை மூன்றாம் தாரமாக்க முயன்றவருக்கு விளக்கமறியல்!
[Tuesday 2017-04-18 18:00]

கிளிநொச்சி பகுதியில் மூன்றாவது தாரமாக, சிறுமி ஒருவரை திருமணம் செய்ய முற்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட சந்தேக நபரை, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா நேற்று உத்தரவிட்டுள்ளார்.


போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு நீதிபதிகளே விசாரணை! - சுவாமிநாதன்
[Tuesday 2017-04-18 18:00]

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளை கொண்ட குழுவினராலேயே முன்னெடுக்கப்படும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சிதம்பரம் ஆலயத்தில் வழிபாடு செய்த அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அக்கரைப்பற்று விபத்தில் இருவர் பலி! Top News
[Tuesday 2017-04-18 18:00]

அக்கரைப்பற்று பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் பயணித்த மோட்டார் ​சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி சுவரொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக, பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


முன்னாள் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மூவரிடம் இன்று விசாரணை!
[Tuesday 2017-04-18 18:00]

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாதுகாப்பு உயரதிகாரிகள் 3 பேர், இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். முன்னாள் முப்படைகளின் பிரதானி ஏயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, மேஜர் ​ஜெனரல் மனோ பெரேரா மற்றும் மேஜர் ​ஜெனரல் குமார ஹேரத் ஆகியோரே இன்று விழசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.


கோத்தாவுடன் எந்த மோதலும் இல்லை! - என்கிறார் மஹிந்த
[Tuesday 2017-04-18 18:00]

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமக்கும் தமது சகோதரரான கோத்தபாய ராஜக்ஸவிற்கும் இடையில் முரண்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த காலத்திலோ நிகழ் காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ முரண்பாடுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களம் நடத்தும் கண்காட்சி! Top News
[Tuesday 2017-04-18 18:00]

வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், “கிராமிய வளர்ச்சியே உயர்ச்சி” எனும் கருப்பொருளிலான கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு இன்று யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.


புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து மகிந்த, மைத்திரியுடன் பேச கூட்டமைப்பு முடிவு!
[Tuesday 2017-04-18 08:00]

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியுடனும் பேச்சு நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இந்த சந்திப்புக்களை விரைவில் நடத்துவதற்கு கூட்டமைப்பின் உயர்பீடம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா