Untitled Document
April 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்தது!
[Tuesday 2017-04-18 08:00]

புதுவருடத் தினத்தில் மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் ஐந்தாவது நாளாகவும் இன்றைய தினம் தொடர்கின்றன. எனினும் காணாமல் போயுள்ளதாக கணிக்கப்பட்டுள்ள 30 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.


இன்று அவசரமாக கொழும்பு திரும்புகிறார் பிரதமர் ரணில்!
[Tuesday 2017-04-18 08:00]

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அவசரமாக நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வியட்நாம் பிரதமர் குயென் சுயெனின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்றுக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 16ம் திகதி வியட்நாமிற்கு பயணம் மேற்கொண்டார். நாளை நள்ளிரவில் அவர் அங்கிருந்து நாடு திரும்புவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தார்.


பன்னங்கண்டி மக்களின் காணி பிரச்சினைக்கு அரச அதிகாரிகள் தீர்வு காண முடியாது! - பிரதேச செயலர்
[Tuesday 2017-04-18 08:00]

கிளிநொச்சி, பன்னங்கண்டி சரஸ்வதி கமம் பகுதியில் தங்கியுள்ள குடும்பங்களின் காணி பிரச்சினை தொடர்பாக, எந்தவித முடிவுகளையும் அரச அதிகாரிகள் மட்டத்தில் எடுக்க முடியாதுள்ளது என, கரைச்சிப்பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில், இரணைமடு திட்டத்தின் கீழ் பயிர்செய்கைக்காக ஏற்கெனவே பிறிதொரு நபருக்கு, வழங்கப்பட்ட நீர் வரிக்காணியில், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் குடியேறி வாழ்ந்து வரும் குடும்பங்கள், எந்தவித உதவித்திட்டங்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றன.


வவுனியாவில் யானையைச் சுட்டுக் கொன்ற வனவளத் திணைக்கள அதிகாரி! - விசாரணை ஆரம்பம் Top News
[Tuesday 2017-04-18 08:00]

வவுனியாவில் யானை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வவுனியா – ஓமந்தைப் பகுதியில் உள்ள கொம்புவைத்த குளத்துக்கு அருகில் நீர் நிரம்பியிருந்த பாரிய குழி ஒன்றில் நான்கு யானைகள் விழுந்து சிக்கியிருந்தன. அவற்றை மீட்ட போது, ஆண் யானை ஒன்று வனவளத்துறை அதிகாரிகளை தாக்க முற்பட்டது. இதன்போது வனவளத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், அந்த யானை உயிரிழந்தது.


ஜெயந்தன் படையணி போராளிகளைத் தேடி வேட்டை!
[Tuesday 2017-04-18 08:00]

விடுதலைப் புலிகளின், ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த போராளிகளை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் படையணியிலிருந்து தப்பிச்சென்று, தென்னிந்தியாவில் தலைமறைவாகி வாழ்ந்தவர்களில் சிலர் நாட்டுக்குள் மீண்டும் வந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்தே, இந்தத் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை! - கோத்தா
[Tuesday 2017-04-18 08:00]

புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை என்பது உண்மை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில், இறுதி யுத்தத்தின்போது பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை. அவருடைய சடலத்தை படையினர் அடையாளம் காணவுமில்லை.


கைதடி மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மகளீர் தின நிகழ்வு-2017 Top News
[Tuesday 2017-04-18 08:00]

யாழ். கைதடி மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மகளீர் தின நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் கைதடி மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது.


கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை அதிகரிக்க நடவடிக்கை! Top News
[Tuesday 2017-04-18 08:00]

கிளிநொச்சியில் முழுநேர மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க.திருலோகமூர்த்தி தெரிவித்துள்ளார்.


மக்களின் காணிகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது! - சம்பந்தன்
[Monday 2017-04-17 18:00]

எமது மக்களின் காணிகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


வட்டுவாகல் காணி உரிமையாளர்களும் போராட்டத்தில் குதிக்க முடிவு!
[Monday 2017-04-17 18:00]

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி, நாளை மறுதினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


போராட்ட வடிவத்தை மாற்றுவது குறித்து கிளிநொச்சியில் நாளை கலந்துரையாடல்!
[Monday 2017-04-17 18:00]

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி, பெப்ரவரி 20ஆம் திகதி முதல் கிளிநொச்சியில் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 57ஆவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், குறித்த போராட்டத்தின் வடிவத்தை மாற்றி வேறு வடிவத்தில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடல், கிளிநொச்சி கந்தசாமி கோவில் அன்னதான மண்டபத்தில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியா உதவியது! - மகிந்த ராஜபக்ச
[Monday 2017-04-17 18:00]

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா உதவிகளை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது, விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து இராணுவ ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. எனினும், இந்தியாவிடம் இருந்து எந்த உதவிகளையும் கேட்கவில்லை. இதன் போது இந்தியாவின் நிலைப்பாடு எப்படியிருந்தது" என கேள்வியெழுப்பப்பட்டது.


குப்பை மேடு சரிந்த விபத்தில் 28 பேர் பலி- 30 பேரைக் காணவில்லை!
[Monday 2017-04-17 18:00]

கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி சரிந்து விழுந்ததில், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, இன்று 28 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, மேலும் 30 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் 145 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஷிரந்தி ராஜபக்ச விரைவில் கைது?
[Monday 2017-04-17 18:00]

மிக முக்கிய பிரமுகரின் மனைவி விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்படவுள்ளவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலையுடன் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


பொட்டுஅம்மான் உயிருடன் இல்லை! - என்கிறார் மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரண
[Monday 2017-04-17 18:00]

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்பது 100 சதவீதம் உறுதி என்று முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தெரிவித்துள்ளார். “ போர் முடிவடைந்த பின்னர், பொட்டு அம்மான் மட்டுமன்றி பிரபாகரனும் உயிருடன் இருப்பதாக கதை கூறினார்கள். போர் முடிய முன்னதாகவே பிரபாகரன் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார் என சிலர் கூறினார்கள்.


மோதலை வேடிக்கை பார்த்தவரை பற்களால் பதம் பார்த்தார் ஒருவர்!
[Monday 2017-04-17 18:00]

இரு பகுதியினருக்கிடையில் ஏற்பட்ட மோதலை வேடிக்கை பார்த்த இளைஞன் பற்களால் கடித்துக் காயப்படுத்தப்பட்ட சம்பவம் சாவகச்சேரி - வரணி கரம்பைக்குறிச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கரம்பைக்குறிச்சியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே, கடிகாயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வான் புலிகளின் முக்கியஸ்தர் விடுவிப்பு!
[Monday 2017-04-17 18:00]

விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பிரிவின் பிரதித் தலைவர் மஹாதேவன் கிருபாகரன் எனப்படும் குசாந்தன் வழக்கு தொடுக்கப்படாமலேயே தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டு மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவின் தலைமையிலான குழுவினர், மலேசியாவில் வைத்து குசாந்தனை கைது செய்து கொழும்புக்கு அழைத்து வந்திருந்தனர்.


நயினாதீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி! Top News
[Monday 2017-04-17 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நயினாதீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். இருப்பினும் நயினாதீவு நாகவிகாரைக்கு இதுவரை விஜயம் மேற்கொள்ளவில்லை. நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க இன்றைய தினம் ஜனாதிபதி நைனாதீவு நாக விகாரைக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். அத்துடன், நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டார்.


ஆரையம்பதி கடலில் நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு! Top News
[Monday 2017-04-17 18:00]

மட்டக்களப்பு, ஆரையம்பதி கடலில் நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை கடலில் நீராடிக்கொண்டிருந்த போது, நீரில் மூழ்கிக் காணாமல்போன மாணவனின் சடலம் இன்று நண்பகல் காத்தான்குடி நதியா கடற்கரையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு!
[Monday 2017-04-17 18:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.


மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் 100 பேர் புதையுண்டனர்?
[Monday 2017-04-17 09:00]

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் 6 சிறு பிள்ளைகள் மற்றும் 9 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவத்தின் பின்னர் கிட்டத்தட்ட 45 பேர் தொடர்பில் தகவல் இல்லையென தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


முஸ்லிம்களின் கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
[Monday 2017-04-17 09:00]

அக்குரஸ்ஸ நகரிலுள்ள முஸ்லிம் கடைகள் மீது நேற்று பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத் தாக்குதலினால் ஐந்து கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், குண்டுச்சத்தம் கேட்டதை அடுத்து கடையின் பின்புறமாக இருந்தவர்கள் ஓடிவந்து கடையில் பற்றிய தீயை அணைத்ததால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பூநகரி விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்!
[Monday 2017-04-17 09:00]

கிளிநொச்சி பூநகரி 10- கட்டைப்பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள், சிறிய வாகனமொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.


மலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை - முதலமைச்சருக்கு சிறிதரன் கடிதம்!
[Monday 2017-04-17 09:00]

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார விழாவின் போது வெளியிடப்பட்ட, ‘கரை எழில் 2016’ என்ற நூல் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடிதம் அனுப்பி அனுப்பிவைத்துள்ளார்.


மீதொட்டமுல்லை அனர்த்தம் - சம்பந்தன் அனுதாபம்!
[Monday 2017-04-17 09:00]

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஏப்ரல் 14ஆம் திகதி இடம்பெற்ற துரதிர்ஷ்ட சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். அவரது அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது-


முக்கிய பிரமுகர்களின் வாகனங்களைத் தகர்க்கும் குண்டாம்!
[Monday 2017-04-17 09:00]

வவுனியா உக்குலான் குளம் பகுதியில் மீட்கப்பட்ட குண்டு, பிரமுகர்கள் பயணிக்கும் வாகனங்களைச் சிதறடிக்கும் அதிசக்திவாய்ந்தது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.


மீதொட்டமுல்லை விபத்தை முன்கூட்டியே அறிந்து தப்பியோடிய நாய்கள்!
[Monday 2017-04-17 09:00]

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து அனர்த்தம் ஏற்படவுள்ளதை, அந்தப் பிரதேசத்தில் இருந்த நாய்கள் முன்கூட்டியே அறிந்து அங்கிருந்து தப்பியோடி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அனர்த்தம் ஏற்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே அந்தப் பகுதியில் இருந்த நாய்கள் அதனை உணர்ந்து கொண்டதாக பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.


புத்தாண்டு விபத்துகளில் காயமடைந்த 665 பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதி!
[Monday 2017-04-17 09:00]

புத்தாண்டு காலத்தின் போது பல்வேறு விபத்துகளில் சிக்கி 665 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் நிறைவேற்று பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் விபத்துகளின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா