Untitled Document
February 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ரயில் பெட்டிகளில் சித்திரம் வரைந்த பிரான்ஸ் ஜோடிக்கு விளக்கமறியல்! Top News
[Sunday 2017-02-12 19:00]

காலி ரயில் நிலையத்துக்குள் நுழைந்து, ரயில் பெட்டிகளில் சித்திரம் வரைந்த பிரான்ஸ் நாட்டு ஜோடியை, விளக்கமறியலில் வைக்குமாறு, காலி பிரதான நீதவான், நேற்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பெட்டிகளில் வரைந்ததன் காரணத்தினால், ரயில்வே திணைக்களத்துக்கு 64,440 ‌ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, நீதிவானிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை! - ஏப்ரல் 26 வரை காலக்கெடு
[Sunday 2017-02-12 09:00]

இலங்கை அரசாங்கத்துக்கு வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியம் காலக்கெடு விதித்துள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு 11 நிபந்தனைகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தன. ஏப்ரல் 26ஆம் திகதிக்கு முன்னதாக, இந்த நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்க நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.


புதுக்குடியிருப்பில் இன்று 10 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்! Top News
[Sunday 2017-02-12 09:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி இன்று 10 ஆவது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுகுடியிருப்பு பிரதேச செயலகத்தின் நுழைவாயிலை அடைத்து கடந்த 3ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


ஐ.நாவில் இந்தியா, அமெரிக்காவின் ஆதரவைக் கோருகிறது இலங்கை!
[Sunday 2017-02-12 09:00]

பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது.


நிதியமைச்சை பொறுப்பேற்கவுள்ளார் ரணில்!
[Sunday 2017-02-12 09:00]

வரும் மார்ச்மாதம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு துறைமுகங்கள் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், நிதியமைச்சை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்வசம் எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அர்ஜூன ரணதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜேதாச ராஜபக்ச, சந்திம வீரக்கொடி உள்ளிட்டவர்களின் அமைச்சுப் பொறுப்புகளிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது.


குற்றச்சாட்டுகளில் சிக்கிய படையினரை கைது செய்ய தடை! - சிங்கள ஊடகம் தகவல்
[Sunday 2017-02-12 09:00]

ஆட்கடத்தல், கப்பம் பெறுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள படையினரைக் கைது செய்ய வேண்டாம் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இராணுவ, கடற்படை தளபதிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே, இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


விமல் வீரவன்சவை விடுவிக்கக் கோரி இன்று தொடக்கம் போராட்டம்!
[Sunday 2017-02-12 09:00]

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதுாக கூட்டு எதிரணி அறிவித்துள்ளது. இன்று தொடக்கம் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. இன்று கட்டுநாயக்கவிலும், நாளை நுவரெலியாவிலும் அடுத்து அனுராதபுரவிலும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.


தீர்வுத் திட்ட அரசியல் முடிவுக் கட்டத்தில்! - சுமந்திரன்
[Sunday 2017-02-12 09:00]

எமது மக்களின் அபிலாசைகள் மற்றும் புரிந்துணர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில் இருக்கின்றது. அது பலராலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வாக அமையும் என்பது எல்லோரினது எதிர்ப்பார்ப்பாக இருப்பதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் ரீதியான சட்டசபையின் உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள், நாட்டுக்கு எதிரானவர்கள்! - ஜனாதிபதி
[Sunday 2017-02-12 09:00]

நாட்டின் நல்லிணக்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


ரணிலின் பயணத்தில் சீனாவுடனான உடன்பாடு குறித்து முடிவு!
[Sunday 2017-02-12 08:00]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீன பயணத்தின்போது சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, இறுதிப்படுத்தப்படும் என்று சீனாவுக்காக தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார். பீஜிங்கில் வைத்து செய்தியாளர்களிடம் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.


குமாரபுரம் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு! Top News
[Saturday 2017-02-11 18:00]

குமாரபுரம் படுகொலைகள் எமக்கு நன்கு தெரிந்த இராணுவத்தினரால் தான் நிகழ்த்தப்பட்டது என்று குமாரபுரம் கிராம மக்கள் தெரிவித்தனர். திருகோணமலை - குமாரபுரம் படுகொலையின் 21ஆவது நினைவஞ்சலி நிகழ்வு, இன்று குமாரபுரத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட 26 பேருடைய புகைப்படங்கள் அஞ்சலிக்காக வைத்து நினைவுத்தீபம் ஏற்றி பூக்கள் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


இன்று 12 ஆவது நாளில் பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம்! Top News
[Saturday 2017-02-11 18:00]

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி விமானப்படை முகாம் முன்பாக அப்பகுதி மக்கள் இன்று பன்னிரெண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.


ஒன்பதாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபடும் புதுக்குடியிருப்பு மக்கள்!
[Saturday 2017-02-11 18:00]

தொடர்ந்து தம்மை கஷ்டத்திற்குள் தள்ளாது தமது சொந்த காணிகளை மீள கையளிக்குமாறு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி முன்னெடுத்த போராட்டம் ஒன்பதாவது நாளாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.


எழுக தமிழ் பேரணி நியாயமானதே! - மனோ கணேசன்
[Saturday 2017-02-11 18:00]

வடக்கு- கிழக்கு மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, உரிமைக்காக குரலெழுப்பும் வகையில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி தொடர்பில் விமர்சிக்கவோ, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ முடியாது என தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! Top News
[Saturday 2017-02-11 18:00]

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் மண்மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் இன்று காலை யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை சமூக வலைத்தளங்களுக்கூடாக இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


வவுனியாவில் பேருந்து மீது பின்புறமாக மோதியது டிப்பர்! - இருவர் படுகாயம்
[Saturday 2017-02-11 18:00]

வவுனியா தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்து தாண்டிக்குளம் பகுதியில் நின்ற போது, பின்னால் வந்த டிப்பர் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துடன் மோதியுள்ளது.


தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி - புதிய கட்சியைத் தொடங்கினார் கருணா! Top News
[Saturday 2017-02-11 18:00]

வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்த புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது.


தொண்டைமானாறில் 120 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது! Top News
[Saturday 2017-02-11 18:00]

தொண்டைமானாறு பகுதியில் கஞ்சா வைத்திருந்த மூவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டிதுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த 35, 25 மற்றும் 27 வயதுடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 120 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.


கிழக்கிலும் வடக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் எப்போதும் ஒரே குரலில் தான் கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளீர்கள்! -த.சித்தார்த்தன் Top News
[Saturday 2017-02-11 18:00]

கிழக்கிலும் வடக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் எப்போதும் ஒரே குரலில்தான் பேசுவார்கள். எப்போதும் ஒரே குரலில் தான் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று நீங்கள் உலகிற்கு ஒரு செய்தியைச் சொல்லியுள்ளீர்கள் என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.


அனைத்து மகாநாயகர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவோம்! - பிக்குகள் எச்சரிக்கை
[Saturday 2017-02-11 18:00]

சமஷ்டி என்ற போர்வையில் நாட்டைப் பிரிக்கும் முயற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் நிலைமை பயங்கரமாகிவிடும் என்று பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு நாட்டைப் பிரிப்பதாயின் தங்களது உயிர் பிரிந்த பின்னரே நிகழும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


ஜனாதிபதியின் வதிவிடத்துக்குள் அத்துமீறியவர் கைது!
[Saturday 2017-02-11 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் அனுமதியின்றி பிரவேசிக்க முயற்சித்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் வாசஸ்தலப் பாதுகாவலர்களால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


மன்னாரில் 110 கிலோ கஞ்சா சிக்கியது!
[Saturday 2017-02-11 18:00]

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை வைத்திருந்த இருவரை, மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார், இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். தலைமன்னாரில் இருந்து தென் பகுதிக்குக் கொண்டு செல்லும் வகையில் ஹயஸ் ரக வாகனத்தில் பதுக்கிக்கொண்டு செல்லப்பட்ட சுமார் 110 கிலோகிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.


வடக்கு- கிழக்கு இணைப்பு குறித்து கிழக்கு முதல்வருடன் பேசத் தயார்! - விக்னேஸ்வரன்
[Saturday 2017-02-11 09:00]

வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பாக பேசுவதற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வந்தால் அவருடன் பேச்சு நடத்த தயார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவைக்கும் முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது.


சொந்தக்காணியில் குடியமர்த்தப்படும் வரை போராட்டம் தொடரும்! - கேப்பாப்பிலவு மக்கள்
[Saturday 2017-02-11 09:00]

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு- பிலவுக்குடியிருப்பு மக்கள் இன்று 12ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். சொந்த காணிகளில் குடியமர்த்தப்படும்வரை தமது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


நாடளாவிய போராட்டம் வெடிக்கும்! - எச்சரிக்கிறார் மஹிந்த
[Saturday 2017-02-11 09:00]

உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், அதனை எதிர்த்து நாடளாவிய ரீதியில் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிக்க நிபந்தனையுடன் உதவிய அமெரிக்கா!
[Saturday 2017-02-11 08:00]

இலங்கை கடற்படையினர் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு அமெரிக்கா எவ்வாறு உதவியது என்பது தொடர்பான தகவல்களை இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வெளியிட்டுள்ளார். கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே அண்மையில் வெளியிட்ட நூல் ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


போராட்டத்துக்குத் தயாராகும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்!
[Saturday 2017-02-11 08:00]

உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடலொன்று நாளை நல்லூர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. இதன்போது, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் தலைவர் துஷாந்தன் தெரிவித்துள்ளார்.


சுமந்திரனுக்கான அச்சுறுத்தலின் பின்னணியில் யார்? - விக்னேஸ்வரன் கேள்வி
[Saturday 2017-02-11 08:00]

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் பின்னணியில் முன்னாள் போராளிகளா, இராணுவத்தினால் ஏவப்பட்டுள்ள கைக்கூலிகளா, அல்லது வேறு யாராவது இருக்கின்றார்களா? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு அறியத்தர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
AIRCOMPLUS2014-02-10-14
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<b>02-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ideal Entertainment நிறுவன அறிமுக விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>29-01-2017 அன்று ரொரன்டோவில் தமிழ்நாடு சமூக மன்றம்  நடாத்திய தைப்பொங்கல் விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>28-01-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற கனடா தமிழர் மரபு மாநாட்டு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா