Untitled Document
January 19, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
தகுதியற்ற 80 வேட்பாளர்கள் போட்டி!
[Thursday 2018-01-11 09:00]

தகுதியற்ற 80 வேட்பாளர்கள் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் நடத்திய சந்திப்பின் போது இந்த விடயம் தெரியவந்தது என, கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 44ஆவது நினைவு நிகழ்வு! Top News
[Wednesday 2018-01-10 18:00]

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 44ஆவது நினைவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றன. கடந்த 1974ஆம் ஆண்டு, நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், பரஞ்சோதி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


அதிகாரத்தின் உச்சாணியில் இருந்து ஊடகங்களை அச்சுறுத்துகிறார் சுமந்திரன்! - சுரேஸ் கண்டனம்
[Wednesday 2018-01-10 18:00]

அண்மையில் அரசியலுக்கு வந்த சுமந்திரன், ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் என்று மிரட்டுவதானது, அதிகாரத்தின் உச்சாணிக் கொப்பிலிருந்து அவர் பேசும் பேச்சாக இருக்கின்றது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இவர் யாருடைய ஆதரவின் பேரில் இத்தகைய மிரட்டல்களை விடுகிறார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.


ஜனாதிபதியின் பதவிக்காலத்தை தீர்மானிக்க 5 நீதியரசர்களைக் கொண்ட குழு நியமனம்!
[Wednesday 2018-01-10 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்பதை தீர்மானிப்பதற்காக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக அலுவிகார, கே.டீ.சித்ரசிறி, சிசிர அப்ரு ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.


கொக்காவில் விபத்தில் பலியான நால்வரும் யாழ். இளைஞர்கள்! - பெயர் விபரங்கள் வெளியாகின
[Wednesday 2018-01-10 18:00]

கொக்காவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் பெயர் விபரங்கள் வெளியாகி உள்ளன. யாழ் - அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த, 24 வயதான நவரத்தினம் அருண், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 36 வயதான சந்திரசேகரம் ஜெயசந்திரன், மாலு சந்தி பகுதியை சேர்ந்த 19 வயதான சிவசுப்பிரமணியம் சிந்துஜன் மற்றும் பருத்திதுறையை சேர்ந்த 19 வயதான சின்னத்துரை கிருஸ்ணரூபன் ஆகியோரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.


பாராளுமன்றத்தில் சண்டையிட்ட எம்.பிக்கள்! திருடன் திருடன் என கூச்சல் Top News
[Wednesday 2018-01-10 18:00]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது பொது எதிரணி மற்றும் ஆளுங்கட்சியினருக்கிடையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதங்களுக்காக விசேட பாராளுமன்ற அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.


நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்தார் ஐதேக எம்.பி !
[Wednesday 2018-01-10 18:00]

பிணைமுறி விவகார விசாரணை அறிக்கை தொடர்பில்நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விசேட அமர்வின் போது, சபையில் மயக்கமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அம்பியுலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


சங்கரியின் படத்துடன் பிரசாரம் செய்யும் துணிவு உள்ளதா? - சத்தியலிங்கம் கேள்வி
[Wednesday 2018-01-10 18:00]

தமது கட்சியின் பொதுச்செயலாளரின் படத்தைப் போட்டு பிரசாரம் செய்யத் திராணியற்றவர்கள் தான் மாற்றுத் தலைமை பற்றி பேசுகிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையில் பண்டாரிக்குளம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் க.சுமந்திரனின் அலுவலகத்தை திறந்து வைத்து இன்று உரையாற்றிய போதே சத்தியலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.


தபால் வாக்குச்சீட்டு விநியோகம் பிற்போடப்பட்டது!
[Wednesday 2018-01-10 18:00]

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில், தபால் மூல வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை, எதிர்வரும் 13ம் திகதி வரை பிற்போட, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


அமைச்சரானதும் பொலிஸ் பாதுகாப்பு குறைப்பு! - வடக்கு சுகாதார அமைச்சர் முறைப்பாடு
[Wednesday 2018-01-10 18:00]

தனக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை , மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குறைத்திருப்பதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் குற்றஞ்சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில், இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்-


கிளிநொச்சியில் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு! Top News
[Wednesday 2018-01-10 18:00]

பிறந்து சில மணி நேரங்களே ஆன, சிசு ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிசு, கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிசுவின் பெற்றோர் தொடர்பான விசாரணைகளை, கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மதுபான நிலையங்களில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
[Wednesday 2018-01-10 18:00]

மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவது மற்றும் பெண்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வது போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட தடையே நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.


5 ஆண்டு பதவிக்காலம் ஜனாதிபதிக்குப் பொருந்தாதாம்!
[Wednesday 2018-01-10 18:00]

ஐந்தாண்டு பதவிக் கால சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதிக்காது என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். “ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் பூர்த்தியாவது தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரியுள்ளார். இரண்டாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற காரணத்தினால் இவ்வாறு சட்ட விளக்கம் கோரியுள்ளார்.


கொக்காவிலில் நேற்றிரவு கோரம் - நான்கு இளைஞர்கள் விபத்தில் பலி! Top News
[Wednesday 2018-01-10 07:00]

ஏ-9 வீதியில், கொக்காவில் 18ஆம் மைல் கல் பகுதியில் நேற்றிரவு 8.35 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இன்று தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுதினம்!
[Wednesday 2018-01-10 07:00]

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று இடம்பெறவுள்ளது. 1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.


கொழும்பிலிருந்து எங்களை துடைத்தெறிவதாக சொல்லும் ரவி கருணாநாயக்கவை பார்த்தால் சிரிப்பு வருகிறது: - அமைச்சர் மனோ கணேசன்
[Wednesday 2018-01-10 07:00]

எங்கள் கட்சியை கொழும்பிலிருந்து துடைத்து எறியப்போவதாக, வடகொழும்பு புளுமெண்டால் வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூறியுள்ள ரவி கருணாநாயக்க எம்பியை பார்த்து எனக்கு சிரிப்பு வருகிறது. இந்த ரவி கருணாநாயக்க, இன்று அமைச்சரவையில் இருந்து துடைத்து எறியப்பட்டு விட்டார். இப்போது இவரது தன் சொந்த கட்சியில் இருந்தே படிப்படியாக துடைத்து எறியப்பட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் அரசாங்கத்திலிருந்து முழுமையாக தூக்கி எறியப்படும் சூழலையும் இவர் எதிர்நோக்குகிறார். இவை அனைத்தும் இவரே தேடிக்கொண்ட வினைகள் என்பது முழுநாடும் அறியும். உப்பை அள்ளி சாப்பிட்ட அவர் இன்று தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்கிறார். இவற்றுக்கு நான் காரணம் இல்லை.


தப்பியோடிப் பிடிபட்ட குற்றவாளிக்கு 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை!
[Wednesday 2018-01-10 07:00]

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2014ஆம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு நேற்று தண்டனைத் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று குற்றவாளிக்கான தீர்ப்பை வாசித்து தண்டனைத் தீர்ப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.


வடக்கு சுகாதார அமைச்சரின் வாயை அடைத்த ஆளுனர்!
[Wednesday 2018-01-10 07:00]

சொந்த மாகாணத்தில் கடமையாற்ற விரும்பாது வட மாகாண வைத்தியர்கள் வெளியேறும் போது வெளி மாகாண வைத்தியர்கள் இங்கு வந்து பணியாற்றுவார்களா என ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளாார்.


நீதி நிலைநாட்டப்படும் என்கிறார் பிரதமர்!
[Wednesday 2018-01-10 07:00]

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களும் கடந்து விட்டன. ராஜபக்‌ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசு இன்றுவரை அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


இரத்த வங்கியில் கடும் நெருக்கடி!
[Wednesday 2018-01-10 07:00]

இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டால் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் டெங்கு அல்லது அதற்கு நிகரான ஏதேனும் நோய் பரவினால் நிலைமை விபரீதமாகலாம் என, தேசிய இரத்த வங்கியின் இயக்குனர் டொக்டர் ருக்சன் பெல்லன தெரிவித்துள்ளார்.


பிணைமுறி விசாரணை அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை! - சரத் பொன்சேகா
[Wednesday 2018-01-10 07:00]

பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஹிம்பிடு​வெல்கொடவில் நடைபெற்ற நிகழ்​வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.


தயா மாஸ்டரைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்!
[Wednesday 2018-01-10 07:00]

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவை பிறப்பித்துள்ளார். 52 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வாக்களிப்பு நிலையத்தில் புர்காவுக்கு தடையில்லை!
[Wednesday 2018-01-10 07:00]

தேர்தலில் வாக்களிப்பதற்கு முழுமையாக முகத்தை மறைக்கும் புர்காவுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ளது. வாக்களிப்பதற்கு முன்னதாக வாக்களிப்பு நிலைய பெண் அதிகாரிக்கு தனது அடையாளத்தை உறுதி செய்வதற்கு மாத்திரம் முகத்தை காண்பித்தால் போதும் என மேலதிக தேர்தல்ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.


முழங்காவில் விபத்தில் மாணவன் பலி!
[Wednesday 2018-01-10 07:00]

முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் முழங்காவில் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு மாணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


வடக்கில் விசேட பொலிஸ் குழுவை உருவாக்குமாறு முதலமைச்சரிடம் மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை!
[Tuesday 2018-01-09 18:00]

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அடுத்தமாதம் கச்சதீவு அந்தோனியார் திருவிழா! - 10 ஆயிரம் பக்தர்களை வரவேற்க ஏற்பாடு Top News
[Tuesday 2018-01-09 18:00]

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இம்முறை இலங்கையில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என, யாழ். மாவட்ட ​செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். திருவிழாவுக்காக, 200 பொலிஸார் பாதுகாப்பு சேவையில் ஈடுபடவுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.


பதவிக்காலம் முடிவது எப்போது? - உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோருகிறார் மைத்திரி
[Tuesday 2018-01-09 18:00]

தனது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம்- அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. இது குறித்த விவாதம், நாளை மறு நாள் திறந்த நீதிமன்றில் நடைபெறவுள்ளது.


பிணைமுறி விசாரணை அறிக்கை நாளை எம்.பிக்களுக்கு! - ரணில் விசேட உரை
[Tuesday 2018-01-09 18:00]

பிணைமுறி விசாரணை அறிக்கை நாளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் குறித்த அறிக்கை மீதான விவாதம் நடைபெறும் என இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நாளை கூடினாலும் இதுவரை பிணை முறிகள் தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெறாமையால் விவாதத்தை நடத்துவது எவ்வாறு எனவும் கட்சித் தலைவர்கள் சபாநாகரிடம் கேட்டுள்ளனர்.

Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா