Untitled Document
October 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வடக்கில் இன்று ஹர்த்தால்! - முடங்கியது இயல்புநிலை
[Friday 2017-10-13 09:00]

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, வடமாகாணத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. அத்துடன் இன்று காலை 9.30 மணியளவில் 19சமூக அமைப்புக்கள் இணைந்து இன்று ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.


மீனவர் பிரச்சினை குறித்து இந்தியா- இலங்கை இடையே புதுடெல்லியில் நாளை பேச்சு!
[Friday 2017-10-13 09:00]

எல்லைதாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சு நாளை இந்தியாவில் நடைபெறவுள்ளது. புதுடில்லியில் நடைபெறும் இந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான அதிகாரிகள் குழு கலந்து கொள்கிறது. இந்திய தரப்பில் கமநல மற்றும் விவசாயிகள் நலன்புரி அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறது.


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்! Top News
[Friday 2017-10-13 09:00]

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரான பப்லோ டி கிரீப் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை நேற்று சந்தித்தார். கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு வேண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மலேசிய கடவுச்சீட்டுகளுடன் இந்தோனேசியாவில் சிக்கிய இலங்கையர்கள்!
[Friday 2017-10-13 09:00]

மலேசிய கடவுச்சீட்டுக்களுடன் இந்தோனேசியாவில் கடந்த திங்கட்கிழமை பிடிபட்ட ஐந்து இலங்கையர்கள் தொடர்பாக, மலேசிய குடிவரவு திணைக்களம் இந்தோனேசியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஊடாக ஐரோப்பியாவுக்கு செல்வதற்காக இந்த கடவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவு திணைக்கள பணிப்பாளர் டட்டுக் சேரி மஸ்டாபர் தெரிவித்துள்ளார்.


சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என்பது நொண்டிச்சாட்டு! - விக்கி சாடல்
[Friday 2017-10-13 09:00]

ஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குடிகொண்டிருக்கும் நிலையில் அநுராதபுரத்திலுள்ள மூன்று அரசியல் கைதிகளுக்கு எதிரான அரச தரப்பு சாட்சிகள் அஞ்சுவதாகக் கூறி வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து, அநுராதபுரத்துக்கு மாற்றுவது நொண்டிச்சாட்டு என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


அரசியல் கைதிகளின் விடுதலையை இழுத்தடிக்க வேண்டாம்! - ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்
[Friday 2017-10-13 09:00]

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அரசாங்கம் மேலும் இழுத்தடிக்காது உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.


பூர்வீகமான கேப்பாபுலவு மண் எமக்கு வேண்டும்! - போராட்டம் நடத்தும் மக்கள் ஐ.நா நிபுணரிடம் தெரிவிப்பு
[Friday 2017-10-13 09:00]

எமது உயிரைவிட நாம் எமது சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்ற உரிமையே எமக்கு மேலானது என நேற்று கேப்பாபுலவுக்கு பயணம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஃபிடம், கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.


200 சபைகள் தம்வசமாகுமாம்!
[Friday 2017-10-13 09:00]

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் சுமார் 200 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்ற முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல அரசியல் கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சி மிகச் சிறந்த முறையில் வெற்றியீட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


அழுத்கமகே, வெல்கம பதவிகள் பறிப்பு - அத்தனகல அமைப்பாளராக சந்திரிகா!
[Friday 2017-10-13 09:00]

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து இரண்டு பேர் நேற்று மாலை முதல் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி மஹிந்தானந்த அளுத்கமகே, நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும், குமார வெல்கம மத்துகம தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாவகச்சேரியில் வாள்வெட்டுக்கு இருவர் காயம்!
[Friday 2017-10-13 08:00]

சாவகச்சேரி – நுணாவில் 190 ஆம் கட்டைப் பகுதியில், ஏ 9 வீதியிலுள்ள ஒட்டுத் தொழிலகம் ஒன்றினுள் நேற்றுக்காலை புகுந்த இனந்தெரியாத குழுவினர் கடை உரிமையாளரை வாளினால் வெட்டிக் காயப்படுத்தினர். இதன்போது, குறித்த கடையில் தொழில் புரிந்த இளைஞனையும் தாக்கியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த கடை உரிமையாளர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.


காணாமல் ஆக்கப்படுதல் குற்றமாக்கப்பட வேண்டும்! - ஐ.நா நிபுணரிடம் கோரிக்கை
[Thursday 2017-10-12 07:00]

லிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும் என்று ஐ.நாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஃபிடம், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரியுள்ளது.


ஐ.நா நிபுணர்களின் பரிந்துரைகளை கேட்க வேண்டிய அவசியம் இல்லை! - வெளிவிவகார அமைச்சு
[Thursday 2017-10-12 07:00]

ஐ.நா விசேட அறிக்கையாளரின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இல்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளரின் பயணம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.


காணிகள் விடுவிப்புக்கு 2 வருட காலஅவகாசம் கேட்கிறது இராணுவம்!
[Thursday 2017-10-12 07:00]

வடக்கில், இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க இன்னும் இரண்டு வருடங்களாகும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. இதில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


யோகேஸ்வரன் எம்.பியை தாக்க முயன்ற காணி அதிகாரி! - மெய்க்காவலர் காயம்
[Thursday 2017-10-12 07:00]

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்தார். நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணி உதவி ஆணையாளர் பாராளுமன்ற உறுப்பினர் தன்மீது அவதூறு தெரிவித்து வருவதாகவும் ஏன் அவ்வாறு தெரிவித்துவருகின்றீர்கள் என்றும் கேட்டுள்ளார்.


கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ள குருதிக் கொடை! Top News
[Thursday 2017-10-12 07:00]

கனடியத் தமிழர் தேசிய அவை முன்னெடுக்கும் குருதிக்கொடை நிகழ்வானது வருடாவருடம் இரண்டு தடவைகள் நடைபெறுகின்றது. தமிழினப்படுகொலை மாதமான May மாதத்திலும், மற்றும் மாவீரருக்கான தேசிய நினைவெழுச்சி காலமான November மாதத்திலும் இடம்பெறுகின்றது.


மனோ கணேசனுக்கு சுமந்திரன் பதிலடி!
[Thursday 2017-10-12 07:00]

வடக்கு - கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மத சார்பற்ற நாடு என்ற விடயத்தை அமைச்சர் மனோ கணேசன் ஆதரிக்கின்றார் என்பதை இப்போதே அறிந்து கொள்ள முடிந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


தண்டனைக்காலம் முடிந்தும் விடுவிக்கப்படாத அரசியல் கைதிகள்!
[Thursday 2017-10-12 07:00]

முல்­லைத்­தீ­வை சேர்ந்த மூன்று அர­சி­யல் கைதி­கள் 15 வருட சிறைத் தண்­ட­னைக் கா­லம் முடிந்த பின்னரும், விடு­விக்­கப்­ப­ட­ வில்லை. மாலை­தீவு அர­சால் 15 வருட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டு இலங்கை அர­சி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்­களே இவ்­வாறு இன்­ன­மும் விடு­விக்­கப்­ப­டா­மல் உள்­ள­னர். அவர்­களை விடு­விக்­கு­மாறு சிறைச்­சா­லை­கள் மறு­சீ­ர­மைப்பு மற்­றும் மீள்­கு­டி­ யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­த­னி­டம் கோரிக்கை விடுத்து 3 மாதங்­கள் கடந்­து­ விட்­டன. ஆனால் இன்­று­வரை அவர் பதி­ல­ளிக்­க­வில்லை என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்­டப் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இ.சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன் தெரி­வித்­தார்.


ஆள் இல்லாத படகில் 153 கிலோ கஞ்சா!
[Thursday 2017-10-12 07:00]

காங்­கே­சன்­துறைக்கு வட கிழக்­கே 8.5 கடல் மைல் தூரத்­தில் அநா­த­ர­வாக இருந்த பட­கி­லி­ருந்து 153 கிலோ கிராம் கேர­ள கஞ்சா நேற்­றுக் கைப்­பற்­றப்­பட்­டதாக கடற்­ப­டை­யி­னர் அறி­வித்­த­னர். கடற்­ப­டை­யி­னர் வழ­மை­யான சுற்­றுக் காவல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறை­யில் ஒரு பட­கின் நட­மாட்­டத்தை அவ­தா­னித்­த­னர்.


நாமலிடம் நலம் விசாரித்த எம்.பிக்கள்!
[Thursday 2017-10-12 07:00]

தங்காலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, நாமல் ராஜபக்ச உள்ளிட்டோரை கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நேற்று சந்தித்தனர். அம்பாந்தோட்டையில், நீதிமன்றத் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஆறு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


பற்றியெரிந்த குப்பை மேடு! - சுற்றுப் புறமெங்கும் சீர்கேடு
[Thursday 2017-10-12 07:00]

யாழ்ப்பாணம்- காக்கைதீவு குப்பை மேட்டிற்கு தீ மூட்பட்டுள்ளதால் அப் பகுதியில் பெரும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அக் குப்பை மேடு காணப்படும் வீதியின் ஊடான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீதியில் உள்ள குறித்த குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகின்றது.


திருகோணமலையில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்! Top News
[Wednesday 2017-10-11 18:00]

உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் பெப்லோ டி கிரீப், இன்று கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்துள்ளார். சிறப்பு அறிக்கையாளர் பெப்லோ டி கிரீப், இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகமவை சந்தித்தார்.திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


சட்டமா அதிபர் திணைக்களம் மீது பழிபோடுகிறது அரசாங்கம்!
[Wednesday 2017-10-11 18:00]

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளில் நிலவும் தாமதம் காரணமாகவே தமிழ் கைதிகளின் விடுதலையிலும் தாமதம் நிலவுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


ஆனையிறவில் பாலத்துடன் மோதிய சொகுசு பேருந்து! Top News
[Wednesday 2017-10-11 18:00]

ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் உள்ள பாலத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


மலேசியாவில் இலங்கையர் கொலை! Top News
[Wednesday 2017-10-11 18:00]

மலேசியா Jalan Gombak Lama மலைப் பகுதியில் இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் கால்கள் மற்றும் தலை சாக்கினால் மூடப்பட்ட நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்! - எச்சரிக்கிறார் கஜேந்திரன்
[Wednesday 2017-10-11 18:00]

அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு நாளை மறுதினத்துக்கு முன் தீர்வு கிடைக்க வேண்டும். இல்லையேல், எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிகழ்வை புறக்கணிக்குமாறு கோருவதுடன் எதிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எச்சரித்துள்ளார்.


அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பிரார்த்தனை! Top News
[Wednesday 2017-10-11 18:00]

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நல்லூரில் இன்று காலை விசேட வழிபாடு இடம்பெற்றது.
 அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்து விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.கை உயர்த்தும் எம்.பிக்களுக்கு 300 மில்லியன் ரூபா!
[Wednesday 2017-10-11 18:00]

புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு ஆத­ர­வாக கையு­யர்த்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு தலா 300 மில்­லி­யனை வழங்­கு­வ­தற்கு புலம்­பெயர் தமிழ் பிரி­வி­னை­வா­திகள் தீர்­மா­னித்­துள்­ள­தாக ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்துள்ளார்.


சனிக்கிழமை யாழ். செல்கிறார் ஜனாதிபதி!
[Wednesday 2017-10-11 18:00]

எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு, பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
 எதிர்வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு, விசேட விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ள ஜனாதிபதி, முதல் நிகழ்வாக, புத்தூர் நிலாவறை கமநலசேவை திணைக்களத்தில் நடைபெறும் தேசிய வேலைத் திட்டத்தின் அங்கமாக, விவசாயிகளுக்கு விதைப் பொருட்களை வழங்கவுள்ளார்.

Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா