Untitled Document
April 23, 2024 [GMT]
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின்(ECDO) நிதி அனுசரணையில் விதை கச்சான்கள் துணுக்காயில் வழங்கி வைப்பு! Top News
[Thursday 2023-03-09 21:00]

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிதி அனுசரணையில் பெண்கள் அபிருத்தி நிலையத்தின் ஒழுங்குபடுத்தலுக்கமைய விதை கச்சான்கள் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காயில் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டு அவர்களுடைய வாழ்வாதாரங்களை மேம்ப்டுத்தும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் EDCO நிறுவனத்தால் முன்னெடுக்கப்டிருந்தது.


வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி! Top News
[Thursday 2023-03-09 21:00]

116ஆவது "வடக்கின் போர்" துடுப்பாட்ட போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் பரியோவான் கல்லூரி முதலில் களத்தெடுப்பை தெரிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது முதல் இனிங்ஸில் 66 ஓவர்கள் வரை வரை துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி! Top News
[Thursday 2023-03-09 21:00]

யாழ். அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் பாடசாலையின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விருந்தினர்கள் மாலை அணிவித்து பான்ட் இசையுடன் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றி வைத்து நிகழ்வு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டு, மாணவர்களின் போட்டிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் 31வது பிறந்த நாள் கொண்டாட்டம்! Top News
[Wednesday 2023-03-08 20:00]

2016 ம் ஆண்டு பொலிஸாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்பல்கலைக்கழக மாணவர் சுலக்சனின் 31 வது பிறந்தநாள் நினைவு இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு 10 ம் மாதம் 21 ம் திகதி இரவு வேளை வீடு திரும்பிக்கொண்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்சன், ந.கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.


தெற்கு வான் கூவர்தீவுகளில் உள்ள பறவையினங்கள் யாழிலும்! Top News
[Wednesday 2023-03-08 06:00]

காலநிலை மாற்றம் காரணமாக புலம்பெயர்ந்து இருக்கும் தெற்கு வான் கூவர்தீவுகளில் உள்ள பறவையினங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தீவக கடற்கரையிலும் அதிகமாக வருகின்றன. அந்த வகையில் யாழ். அராலி மற்றும் மண்கும்பான், ஊர்காவற்துறையில் உள்ள கடற்கரைகளிலும் இவ் பறவையினம் வந்து வருவதை காணமுடிகின்றது.


பொன் அணிகளின் போர் 20:20 போட்டிகளில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி! Top News
[Wednesday 2023-03-08 06:00]

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். புனித பத்திரிசிரியார் அணிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தின் தொடர்ச்சியாக 20:20 போட்டிகள் நேற்று மாலை யாழ். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணக்கல்லூரி அணி துடுப்பாட்டத்தினை முதலில் தெரிவுசெய்தனர்.


இளையவர்களுக்கான பயிற்சி பாசறை! Top News
[Monday 2023-03-06 21:00]

யாழ்ப்பாணம் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினால், யாழ். வலயக்கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன், யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு Change To The Life எனும் பயிற்சி பாசறை அண்மையில் இடம்பெற்றது.


மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்! Top News
[Monday 2023-03-06 21:00]

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (06) வடமராட்சி, கரவெட்டி தெற்கு,மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடரினை மாமனிதர் கிட்ணன் சிவனேசன் அவர்களுடைய புதல்வி தாட்சாயினி சிவனேசன் ஏற்றியதை தொடர்ந்து அவரது திரு உருவ படத்திற்க்கு மாமனிதர் அவர்களது புதல்விகள் மலர்மாலை அணிவித்தார். பின்னர் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க.சுகாஸ், மற்றும் உறவுகள் ஆதரவாளர்கள், உட்பட பலரும் அணிவித்ததுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் 36 இலட்சம் செலவில் சிறுநீராக சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு! Top News
[Monday 2023-03-06 21:00]

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்காக குருதிமாற்றும் சிகிச்சை நிலையம் கனடாவில் வசிக்கும் செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஊடாக 36 இலட்சம் ரூபாசெலவில் அமைக்கப்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலைய திறப்பு நிகழ்வு முல்லைத்தீவு பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் உமாசங்கர் தலைமையில் நடைபெற்றுள்ளது .


ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த 75 வயது பாட்டி! Top News
[Sunday 2023-03-05 21:00]

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான விக்ரோறியா கல்லூரியில் கடந்த 03.03.2023 வெள்ளிக்கிழமை அன்று இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி.எஸ். சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.


படைப்பாளுமை தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம்) கௌரவிப்பு நிகழ்வு! Top News
[Sunday 2023-03-05 21:00]

படைப்பாளுமை தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம் - சங்கானை பிரதேச செயலர்) அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் தொல்புரம் மேற்கு சுழிபுரம் சத்தியமனை நூலகத்தில் நடைபெற்றது.


உலக உடற் பருமன் எதிர்ப்பு தினம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்! Top News
[Sunday 2023-03-05 21:00]

உலக உடற் பருமன் எதிர்ப்பு தினம் மார்ச் 04ஆம் திகதி தொடக்கம் மார்ச் 10ஆம் திகதி வரை சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் இன்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலும் உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி வரை தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது! Top News
[Sunday 2023-03-05 21:00]

கனடா நாட்டைச் சேர்ந்த நேயம் பவுண்டேஷனின் நிதி உதவியில் மருந்து பொருட்கள் இன்று சனிக்கிழமை (04) காலை 10 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் எஸ்.நித்தியானந்தா மற்றும் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர் எம்.அரவிந்தன் ஆகியோரிடம் யாழ். நீரிழிவு கழகத்தினரால் மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.


கச்சதீவு திருவிழா! Top News
[Sunday 2023-03-05 21:00]

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது. தொடர்ந்து நேற்று இரவு விசேட ஆராதனை இடம்பெற்று சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது. திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று காலை 6 மணிக்கு திருச்செபமாலை இடம்பெற்று, 6.30 ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் வரவேற்கப்பட்டு 7 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


உலக பாடசாலைகள் சதுரங்க போட்டி - 2023 இலங்கை சார்பாக விளையாட தெரிவாகி யாழிற்கு பெருமை சேர்ந்த 6 மாணவர்கள்! Top News
[Sunday 2023-03-05 21:00]

யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளனர். இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய மட்டப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.


றைட் 4 சிலோன் சைக்கிள் சவாரி யாழ். மானிப்பாய் கிறீன் மருத்துவதனையில் இன்று மதியம் நிறைவுபெற்றது! Top News
[Sunday 2023-03-05 21:00]

இந்த பயணம் கடந்த 1ம் திகதி மட்டக்களப்பு அறுகம் குடாவில் ஆரம்பித்து, அடுத்த நாள் திருகோணமலையை சென்றடைந்து, 3ம் திகதி முல்லைத்தீவினை வந்தடைந்து, இன்றையதினம் யாழ்ப்பாணம் - கிறீன் மருத்துவமனையை வந்தடைந்தது. மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையினை தரமுயர்த்தும் நோக்குடன் றைட் 4 சிலோன் சைக்கிள் சவாரி கடந்த ஒன்பது ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது.


கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி! Top News
[Sunday 2023-03-05 21:00]

யாழ். கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி 3-3-2023 அன்று பாடசாலை முதல்வர் திரு க.தவசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தனராக பிரபல தொழிலதிபரும்,சமூக சேவகரும் கோண்டாவில் இராஜேஸ்வரி திருமண மண்டப உரிமையாளருமான திரு.செ.திருமாறன் கலந்து சிறப்பித்திருந்தார்.


யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி! Top News
[Sunday 2023-03-05 07:00]

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது. மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. கல்லூரியின் பதில் அதிபர் திருமதி தி.வதனி அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலி. மேற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு பிராந்திய தொற்றுநோய் தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் வி. விஜிதரன் (பழைய மாணவன்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை கணித ஆசிரியர் செல்வி சி.மார்க்கண்டு, பழைய மாணவன் செ.சுகுமாரன் அவர்களும் கலந்துகொண்டனர்.


கச்சதீவை நோக்கி படையெடுக்கும் மக்கள்! Top News
[Sunday 2023-03-05 07:00]

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சத்தீவு அந்தோணியார் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது. (03.03.2023) அன்றைய தினம் மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


13 நாளாக (01/03/2023) தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினுள் பயணிக்கின்றது! Top News
[Friday 2023-03-03 06:00]

கடந்த 17/02/2023 பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்தின் முன் ஆரம்பித்த ஈருருளிப் பயணம் நெதர்லாந்தில் அமைந்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திலும் சந்திப்புக்களை மேற்கொண்டு எமது கோரிக்கை அடங்கிய மனுக்களைக் கையளித்திருந்தது. சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ தனி அரசே நிரந்தர தீர்வு என்பதனையும் கோரிக்கைகளாக முன்னிறுத்தியவாறு தொடருகின்ற இப்போராட்டம் பிரித்தானியா, நெதர்லாந்து,பெல்சியம், லக்சாம்பூர்க் , யேர்மனி , பிரான்சு ஆகிய நாடுகளில் பல முக்கிய அரசியற் சந்திப்புக்களை நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.


சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் சங்க மீனவர்களின் வலைகளை நாசம் செய்த இந்திய இழுவைப் படகுகள்! Top News
[Friday 2023-03-03 06:00]

யாழ்ப்பாணம் - சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் சங்கத்தின் மூன்று மீனவர்களின் வலைகளை இந்திய இழுவைப் படகுகள் நாசம் செய்துள்ளனர். மூவருக்கு சொந்தமான 12 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளன.


நயினாதீவு ஆலய திருவிழா! Top News
[Friday 2023-03-03 06:00]

யாழ். நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப்பெருமான் ஆலய மகோற்சவத்தின் பூந்தொட்டித் திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது. இவ் ஆலயத்தில் வீரபத்திரப்பெருமானின் கொடியேற்ற மகோற்சவம் 26.02.2023 அன்று மிக பக்திபூர்வமாக ஆரம்பமாகியது.


சர்வதேச கடற்புல்தின நிகழ்வு! Top News
[Thursday 2023-03-02 06:00]

மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் வலிகாமம் கல்வி வலயத்தில் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல் பாடம் கற்கும் மாணவரிடையே கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசில்கழும், சான்றிதழும் சர்வதேச கடற்புல் தினமாகிய நேற்று வழங்கப்பட்டது.


யேர்மனியில் தன்னிகரில்லாத் தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்! Top News
[Wednesday 2023-03-01 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுப் பாதையில் கடந்த 29ஆண்டுகள் தன்னிகரில்லாச் சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. இப்போட்டி தமிழாலயங்களில் தமிழ்மொழியைக் கற்றுவரும் மாணவர்களின் மொழிவளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டு வருகிறது.


11 நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை அண்மிக்கின்றது! Top News
[Wednesday 2023-03-01 06:00]

27/02/2023 அன்று காலை எர்ச்தைன் நகரசபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த மனிதநேய அறவழிப் போராட்டம் பிரான்சுக் காவல் துறையின் வழிகாட்டலுடன் ஏர்செய்ன், பேன்பெட், கொல்மார் போன்ற மாநகரசபைகளிலும் முக்கிய அரசியற் சந்திப்புக்கள் மேற்கொண்டு தொடர்ந்து முலூசு மாநகரை நோக்கி பயணிக்கிறது.


வடக்கு மாகாண ரீதியாக இடம்பெற்ற உள்ளூர் உற்பத்திகளின் விற்பனை கண்காட்சி! Top News
[Wednesday 2023-03-01 06:00]

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆளுநர் செயலக வழிகாட்டலில் உள்ளூர் உற்பத்திகளின் விற்பனைக் கண்காட்சி நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதன்போது வடக்கின் 5 மாவட்டங்களில் உள்ள சிறு முயற்சியாளர்களின் உற்பத்திகள் விற்பனை மற்றும் கண்காட்சி என்பன இடம்பெற்றிருந்தன.


அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி! Top News
[Wednesday 2023-03-01 06:00]

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் எஸ்.ஜே.அனுரா அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் இளைப்பாறிய அதிபர் சபாரத்தினசிங்கி அவர்கள் பிரதம அதிதியாகவும், கௌரவ விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவர் திரவகயராசா அவர்களும் கலந்துகொண்டனர்.


சிறப்புற இடம்பெற்ற மல்லாவி மத்தியகல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள்! Top News
[Monday 2023-02-27 21:00]

மல்லாவி மத்திய கல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் மிக விமரிசையாக இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மத்தியகல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் பாடசாலை அதிபர் ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்றது.

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா