Untitled Document
May 30, 2016 [GMT]
 • Welcome
 • Welcome
புத்த கோவிலாக மாறிய புலி கோவில்!
[Monday 2016-05-30 19:00]

தாய்லாந்தின் கான்சானபுரி மாகாணத்திலுள்ள சர்ச்சைக்குரிய புத்த கோவிலிருந்து 137 புலிகளை அகற்றிவிட டஜன்கணக்கான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த புலி கோவிலிலுள்ள புலிகளை பிடிப்பதற்கு மயக்க ஊசிகளை துப்பாக்கியில் வைத்து பயன்படுத்த கால்நடை மருத்துவர்கள் தயாராகி வருகிறார்கள்.அவற்றை பிடித்து அருகிலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் விடவுள்ளனர்.கூண்டிலிருக்கும் புலிகளோடு புகைப்பட எடுத்துக்கொள்ளவும், அவைகளைக் கயிற்றால் கட்டி அவைகளுடன் சுற்றுலாப் பயணிகள் நடக்கவும் அனுமதித்ததன் மூலம் ஆண்டுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலான வருமானத்தை இந்த கோவில் ஈட்டி வந்தது.


சிரியாவில் பணயக் கைதியாக இருக்கும் ஜப்பான் பத்திரிகையாளரை காப்பாற்ற வேண்டுகோள்!
[Monday 2016-05-30 19:00]

சுமார் ஓராண்டுகாலமாக சிரியாவில் பணயக் கைதியாக உள்ள ஜப்பானிய பத்திரிகையாளர் என கருதப்படும் ஒருவரின் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.தேதி குறிப்பிடாத அந்த புகைப்படத்தில் காணப்படும் நீண்ட தாடி வைத்துள்ள ஒருவர் “தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இது எனக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு” என்று ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட அட்டையை வைத்துள்ளார்.ஜூம்பெய் யாசுடா என்ற இவர் அல்-கைய்தாவோடு தொடர்புடைய ஒரு குழுவால் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.


அமெரிக்க விமானப்படை தளத்தை வானத்தில் வட்டமிட்ட மர்மப்பொருள்!
[Monday 2016-05-30 14:00]

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் அந்நாட்டின் மிகப்பெரிய விமானப்படை தளம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகாமையில் சுமார் பத்துமைல் தொலைவில் உள்ள டேட்டன் நகரில் வசிக்கும் தம்பதியினர் கடந்த 25-ம் தேதி மாலைநேரத்தில் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தபடி, சூரியன் மறையும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது, விமானப்படைத்தளத்தின் மேல்பகுதியில் வானத்தில் ஒரு மர்மப்பொருள் வட்டமிட்டபடி மிதந்து கொண்டிருந்ததை கண்டு அவர்கள் வியந்தனர். அந்த காட்சியை மிக நெருக்கமாக வீடியோவாக பதிவு செய்துள்ள அவர்கள்,


ஜப்பானில் பெற்றோரால் காட்டில் தனித்து விடப்பட்ட சிறுவன்!
[Monday 2016-05-30 07:00]

வடக்கு ஜப்பானின் மலைபகுதியில் காணாமல் போன சிறுவனின் பெற்றோர், அவனை தண்டிப்பதற்காக, காட்டில் அவனை தனியாக விட்டு வந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.வனக் கரடிகளின் இருப்பிடமாக கருதப்படும் வடக்கு ஒகாய்டோவில் அச்சிறுவனின் பெற்றோர் அவனை தனித்து விடப்பட்ட நாளிலிருந்து இரண்டு நாட்களாக அவனை காணவில்லை.


ஈரான் மக்களை ஹஜ் வழிபாட்டிற்காக சவுதிக்கு அனுப்ப மாட்டோம்: - பண்பாட்டு துறை அமைச்சர் அறிவிப்பு
[Monday 2016-05-30 07:00]

இந்த வருடம் இரான் அதன் குடிமக்களை ஹஜ் வழிபாட்டிற்காக சவுதி அரேபியாவிற்கு அனுப்பாது என இரானின் பண்பாட்டு துறை அமைச்சர் அலி ஜன்னடி தெரிவித்துள்ளார்.சவுதி அதிகாரிகள் இரானிய புனித யாத்ரிகர்களின் பங்களிப்பிற்கு இடையூறு விளைவிப்பதால் அது சாத்தியமற்றது என அவர் கூறியுள்ளார். கடந்த வருடம் ஹஜ் பயணத்தின்போது, இரானியர்கள் பலர் உள்ளிட்ட , ஆயிரக்கணக்கான புனித யாத்திரிகர்கள் மோசமான கூட்ட நெரிசலில் சிக்கி கொல்லப்பட்டனர் .இச்சம்பவத்திற்கு இரான் சவுதி அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.


அமெரிக்க உயிரியல் பூங்காவில் சிறுவனைக் காப்பாற்ற சுட்டு வீழ்த்தப்பட்ட கொரில்லா!
[Monday 2016-05-30 07:00]

அமெரிக்காவின் உயிரியல் பூங்கா ஒன்றில் கொரில்லாவின் இருப்பிடத்திற்குள் நுழைந்த சிறுவனை காப்பாற்ற பூங்கா ஊழியர் கொரில்லாவை சுட்டு வீழ்த்தினார்.உயிருக்கு ஆபத்தான சூழலாக கருதப்பட்டமையால் அந்த 180 கிலோ எடையுள்ள கொரில்லா கொல்லப்பட்டதாக உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்சின்சினாட்டி உயிரியல் பூங்காவின் இயக்குனர் தானெ மெய்நார்ட் கூறுகையில், அந்த நான்கு வயது சிறுவன் தடுப்பு வேலியை தாண்டி அகழிக்குள் விழுந்துவிட்டான் எனவும் அகழிக்குள் விழுந்த அச்சிறுவனை ஹரம்பே என்ற அந்த கொரில்லா பிடித்து தன் பக்கமாக இழுத்துக்கொண்டது என்றும் தெரிவித்தார்.


ஐ.எஸ் தாக்குதல்: - காரணமாக ஹீட் நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்
[Monday 2016-05-30 07:00]

பலூஜா நகரை மீண்டும் கைப்பற்ற இராக் அரசு படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,. ஐ.எஸ் தீவிரவாதிகள் யூப்ரடெஸ் நதிக்கரையில் இன்னும் வடக்கே அமைந்துள்ள மற்றொரு நகர் மீது பெரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறார்கள்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தற்கொலை தாக்குதல்காரர்கள் ஹீட் நகருக்குள் ராக்கெட் தாக்குதல்களை தொடுத்த பின்னர் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கடந்த மூன்று நாட்களில் 700க்கு மேற்பட்ட குடியேறிகள் உயிரிழப்பு: - ஐக்கிய நாடுகள் சபை
[Monday 2016-05-30 07:00]

கடந்த மூன்று நாட்களில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் மற்றும் அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனத்தின் பேச்சாளர் கார்லோட்டா சமி, கடந்த வாரத்தின் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குடியேறிகள் ஐரோப்பாவை அடையும் முயற்சியில் கடலில் பயணிக்க பொருத்தமற்ற படகுகளில் பயணித்ததால் இத்தாலியின் தெற்கு பகுதியில் படகுகள் மூழ்கியுள்ளன என தெரிவித்துள்ளார்.


ஊழியர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க 200 நாள் பிரச்சார திட்டத்தை தொடங்கிய வட கொரியா!
[Monday 2016-05-30 07:00]

ஊழியர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் விதமாக 200 நாள் பிரச்சார திட்டம் ஒன்றை வட கொரியா அறிவித்துள்ளது. புதிய ஐந்தாண்டு பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விசுவாசத் திட்டம் என்றழைக்கப்படும் இத்திட்டத்தை வட கொரியா அறிவித்துள்ளதாக நாட்டின் அதிகார்வபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதேபோன்று இந்த மாதம் முன்னதாக நிறைவடைந்த 70 நாள் வேலை திட்டத்தின் போது, அதிகரிக்கப்பட்ட செயல் திறன் இலக்குகளை அடையும் முயற்சிகளில், பணியாளர்கள் தங்களது தொழிற்சாலைகளிலும், பண்ணைகளிலிலேயே உறங்கி எழுந்து பணி செய்தது குறிப்பிடத்தக்கது.


வயிற்றுக்குள் சகோதரனை சுமந்தபடி 15 ஆண்டுகளாக வாழ்ந்த சிறுவன்: -மலேசியாவில் விநோதம்
[Sunday 2016-05-29 08:00]

மலேசியா நாட்டில் உள்ள கேடா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஜூல் ஷஹ்ரில் சைதீன் (15) இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது வயிற்றுக்குள் இறந்துப்போன கரு இருப்பது கண்டறியப்பட்டது, அதாவது, இவரது தாய் கர்ப்பம் தரித்தபோது இரட்டை கருக்கள் உருவாகியுள்ளன,அதில், ஒரு கருவானது ஜூலின் தொப்புள் கொடி வழியாக அவரது வயிற்றுக்குள் சென்று தங்கிவிட்டுள்ளது.இதைஅறியாத அவரது தாயார், தனக்கு ஒரு குழந்தைதான் பிறந்துள்ளது என நினைத்து ஜூலுவை வளர்த்து வந்துள்ளார், இந்நிலையில், ஜூலு வயிற்றுக்கள் இருந்த கருவின் கை, கால்கள், தலைமுடி மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்பு போன்றவை வளர்ச்சியடைந்துள்ளது.


அல்கொய்தாவுக்கு பொருளுதவி: - இங்கிலாந்து வாலிபருக்கு 40 ஆண்டு சிறை
[Sunday 2016-05-29 08:00]

வியட்னாம் வம்சாவளி வாலிபரான மின் குவாங் பாம் (வயது 33) இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தார். அரேபிய தீபகற்பத்தில் இயங்கி வரும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு நியூயார்க் நகர நீதிமன்றத்தில் இவர் மீதான வழக்கு விசாரணை நடந்தது.ஏமனில் பல மாதங்கள் பயிற்சி பெற்ற மின் குவாங், அல்கொய்தா தலைவர் அன்வர் அல்-அவ்லக்கியின் உத்தரவின் பேரில் ஹீத்ரூ விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.


அணுசக்தி நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைக்கும் விவகாரம்: பாகிஸ்தான் எதிர்ப்பதற்கு அமெரிக்கா கண்டிப்பு
[Sunday 2016-05-29 08:00]

அணுசக்தி நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்ப்பதற்கு பாகிஸ்தான் தெரிவித்த எதிர்ப்பை அமெரிக்கா கண்டித்தது. அணுசக்தி வளத்தை கொண்டுள்ள நாடுகள் ‘என்.எஸ்.ஜி’ நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலக நாடுகளுக்கு அணுமூலப் பொருட்களை வினியோகம் செய்தும் வருகின்றன. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினர் ஆவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் பாகிஸ்தான் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


நைஜீரியாவில் எண்ணெய் குழாய் பாதையை தாக்கிய தீவிரவாதிகள்!
[Saturday 2016-05-28 20:00]

நைஜீரியாவின் எண்ணெய் உற்பத்தி பகுதியான நைஜர் டெல்டாவிலுள்ள எண்ணெய் குழாய் பாதையை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்.எண்ணெய் கட்டமைப்பு வசதிகளில் பல தாக்குதல்களை இந்த ஆண்டு நடத்தியுள்ள நைஜர் டெல்டா அவஞ்சர்ஸ் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது.


இஸ்ரேல் நாட்டில் முதன் முறையாக நடைபெற்ற திருநங்கையர் அழகிப்போட்டி: - 21 வயது தலீன் அபு ஹன்னா முதலிடம்
[Saturday 2016-05-28 20:00]

கட்டுப்பெட்டித்தனமான கிறிஸ்தவ மத ஒழுக்கங்களின் அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுவரும் இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக நடைபெற்ற திருநங்கையர் அழகிப்போட்டியில் 21 வயது தலீன் அபு ஹன்னா முதலிடத்துக்கு தேர்வாகியுள்ளார்.இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் நேற்று அந்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக தேசிய திருநங்கையர் அழகிப்போட்டி நடைபெற்றது. இறுதிச்சுற்றில் மொத்தம் 12 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் 21 வயது தலீன் அபு ஹன்னா முதலிடத்துக்கு தேர்வானார்.


பிரேசிலில் சிகா வைரஸ் பரவும் அபாயம்: - மருத்துவ நிபுணர்களின் கோரிக்கை நிராகரிப்பு
[Saturday 2016-05-28 19:00]

பிரேசிலில் சிகா வைரஸ் பரவுகின்ற ஆபத்து காரணமாக ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றி வைப்பதை அல்லது ஒத்திவைப்பதை பரிசீலிக்க வேண்டும் என்ற மருத்துவ நிபுணர்களின் கோரிக்கையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்துள்ளது.ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்துவதால் அல்லது இடம் மாற்றுவதால் சிகா வைரஸ் பரவுதலில் பெரிய மாற்றம் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதுஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நிறுத்திவிடுவதால் அல்லது இடத்தை மாற்றுவதால் சிகா வைரஸ் பரவுவதில் கணிசமான மாற்றம் எதுவும் உருவாக போவதில்லை என்று இது தெரிவித்துள்ளது.


பாகிஸ்தானில் கருத்தடை சாதனங்கள் மற்றும் குடும்பக் கட்டுபாட்டு பொருட்களின் விளம்பரத்திற்கு தடை!
[Saturday 2016-05-28 17:00]

கருத்தடை சாதனங்கள், குடும்பக் கட்டுபாட்டு பொருட்கள் ஆகியவற்றை விளம்பரம் செய்யும் அனைத்து ஒளி மற்றும் ஒலிபரப்புக்களை பாகிஸ்தான் அதிகாரிகள் தடைசெய்துள்ளனர். இத்தகைய வணிகப் பொருட்களின் விளம்பரங்கள் மாசில்லா குழந்தைகளின் மனதில் ஆர்வத்தை தூண்டுகின்றன என்று பொது மக்கள் புகார் தெரிவிப்பதால், அவற்றின் ஒளி மற்றும் ஒலிபரப்புகளை உடினடியாக நிறுத்த வேண்டும் என்று தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒழுங்காற்று அமைப்பு கூறியுள்ளது.ஆனால், சமூக அளவில் பிற்போக்கான நாட்டில் கருத்தடை சாதனங்களின் வணிகம் என்பது அரிதானது.


தென் பகுதியிலிருந்து நுழையும் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்படும்: - வட கொரியா எச்சரிக்கை
[Saturday 2016-05-28 16:00]

தென் கொரியா - வட கொரியா இடையே உள்ள சர்ச்சைக்குரிய கடல் எல்லையில், தென் பகுதியிலிருந்து நுழையும் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்படும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரிய கடற்படை தங்கள் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இரு கப்பல்களை நோக்கி எச்சரிக்கை குண்டுகளை சுட்ட சம்பவத்திற்குப் பிறகு வட கொரியாவின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.இந்த சம்பவத்தை பதற்றத்தை அதிகரிக்கும் முயற்சியிலான இராணுவ ஆக்கிரமித்தல் என்று வட கொரியா வர்ணித்துள்ளது.


நாய்க் கறித் திருவிழாவுக்கு சீன அரசு தடை விதிக்க வேண்டும்: - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!
[Saturday 2016-05-28 09:00]

சீனாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நாய்க் கறித் திருவிழாவுக்குத் தடை விதிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சீனாவின் குவாங்ஸி மாகாணம், யூலின் நகரில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் வருடாந்திர நாய்க் கறித் திருவிழா கொண்டாடப்படுகிறது.தொடர்ந்து 10 நாள்களுக்குக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கூண்டுகளில் அடைத்துக் கொண்டு வரப்படும் நாய்கள் குரூரமான முறையில் கொல்லப்பட்டு, அவற்றின் மாமிசமும், அந்த மாமிசத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் நகரம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.


புதிய தலிபான் தலைவரை குறி வைத்துத் தாக்குவோம்: - அமெரிக்கா எச்சரிக்கை
[Saturday 2016-05-28 08:00]

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படையினரின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவைப்பட்டால், புதிய தலிபான் தலைவர் முல்லா ஹைபதுல்லா அகுந்த்ஜாதாவைக் குறிவைத்துத் தாக்குவோம் என்று அமெரிக்கா சூசகமாகத் தெரிவித்தது. அமெரிக்கப் படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த முல்லா முன்சூர் அக்தரைக் குறி வைத்துத் தாக்கிக் கொன்றதைப் போல, புதிய தலைவர் முல்லா ஹைபதுல்லா அகுந்த்ஜாதா மீதும் தாக்குதல் நிகழ்த்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


சிகா வைரஸ் எதிரொலி: - ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க கோரிக்கை
[Saturday 2016-05-28 08:00]

சிகா வைரஸ் பரவும் ஆபத்துக் காரணமாக பிரேசிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளி வைக்கவேண்டுமா அல்லது ரியோ டி ஜெனெரோ நகரில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமா என்பதை உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்க வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கூட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த நிபுணர்கள் சிகா வைரஸ் மூலம் உலக பொது சுகாதாரத்துக்கு தெளிவான ஆபத்து ஏற்பட்டிருப்பதாக எச்சரித்துள்ளனர்.


ஈரானில் விருந்தில் பங்கேற்ற 30 மாணவர்களுக்கு சாட்டையடி!
[Saturday 2016-05-28 08:00]

ஒரு விருந்தில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட இரான் மாணவர்கள் அறநெறி பாதுகாவல் போலீசாரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் ஒவ்வொருவருக்கும் 99 சாட்டையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன.அதிக எண்ணிக்கையிலான மாணவர்களும், மாணவிகளும் மது அருந்தியிருந்தார்கள். அவர்கள் அநாகரீகமான நடத்தையில் ஈடுப்பட்டிருந்தனர் என்று காஸ்வின் நகரை சேர்ந்த அரச வழங்கறிஞர் கூறியதாக மேற்கோள்காட்டப்படுகிறார். மது குடிப்பதும், ஆண்-பெண் இணைந்து நடனமாடுவதும் இஸ்லாமிய குடியரசான இரானில் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிடிபடுவோர் தண்டிக்கப்படுவது பொதுவானதே என்றாலும் ஒரு வழக்கில் 30 பேர் தண்டிக்கப்படுவது வழக்கத்திற்கு சற்று மாறானது.


ஏழை நாடுகளில் உள்ள மக்களின் வறுமையைப் போக்க பணக்கார நாடுகள் முன் வர வேண்டும்: - ஐ.நா.
[Friday 2016-05-27 18:00]

ஏழை நாடுகளில் உள்ள மக்களின் வறுமையைப் போக்க, பணக்கார நாடுகள் ஏற்கெனவே அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஐ.நா. சபையின் மூத்த அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதன்படி, குறைந்தபட்ச வளர்ச்சியைக் கண்டுள்ள 48 நாடுகளில், வறுமையில் தவிக்கும் மக்களை அதிலிருந்து மீட்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐ.நாவின் துணை தலைமை செயலரான கயன் சந்திர ஆச்சார்யா, துருக்கியில் தொடங்கிய குறைந்தபட்ச வளர்ச்சியை கண்டுள்ள நாடுகளுக்கான கருத்தரங்கத்தின் போது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.


சீனாவில் இனவாத சர்ச்சையில் சிக்கிய சலவை பவுடர் விளம்பரம்!
[Friday 2016-05-27 18:00]

சலவை பவுடர் விளம்பரம் ஒன்றிற்காக சீன விளம்பர நிறுவனம் ஒன்று தயாரித்த விளம்பரம் இனவாதத்தை வெளிக்காட்டுவதாக சர்ச்சை வெடித்துள்ளது.அந்த விளம்பரத்தில் ஒரு சீனப் பெண், கறுப்பு இன ஆண் ஒருவரை வாஷிங் மெஷினுக்குள் தள்ளிவிடுகிறார். அதில், ஏற்கனவே விளம்பரத்தில் சொல்லப்படும் சலவை பவுடர் கலக்கப்பட்டுள்ளது.வாஷின் மெஷின் சில சுழற்சிகள் சுழன்ற பிறகு, அந்த பெண் வாஷின் மெஷினின் கதவுகளை திறக்கிறார்.


நான்ஜிங் நகரத்தில் ஜப்பான் நடத்திய தாக்குதல் ஹிரோஷிமாவை விட அதிகமாக நினைவு கூரத்தக்கது: - சீனா
[Friday 2016-05-27 18:00]

சீனாவின் நான்ஜிங் நகரத்தில் ஜப்பான் நடத்திய தாக்குதல் ஹிரோஷிமாவை விட அதிகமான நினைவுகூரத்தக்க மதிப்பு பெற்றுள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்துக்கு அமெரிக்க அதிபர் வருகை புரிந்ததற்கு சீனா இந்த பதிலை வழங்கியுள்ளது.நான்ஜிங் படுகொலைக்கு காரணமானோர் அதற்கான பொறுப்பை ஒருபோதும் தட்டிக் கழிக்க கூடாது என்று சீன வெறியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளார்.


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழத் தகுதியுள்ள கிரகமாக விளங்கிய செவ்வாய்: - ஆய்வில் தகவல்
[Friday 2016-05-27 16:00]

செவ்வாய் கிரகத்தில் தற்போது கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவன பகுதிகளும், பாறைப்படிவங்களும் உள்ளன. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது வாழத்தகுதியுள்ள கிரகமாக இருந்தது. அங்கு திரவநிலையில் தண்ணீர் இருந்துள்ளது.அங்கு இரும்பு மற்றும் கால்சியமும் அத்துடன் கார்பனேட்ஸ் எனப்படும் கார்பன் படிமங்களும் புதைந்து கிடக்கின்றன. அதுவே தண்ணீர் இருந்ததற்காக அடையாளமாக கருதப்படுகிறது.


ஹிரோஷிமாவில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய ஒபாமா!
[Friday 2016-05-27 16:00]

அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சென்றிருக்கிறார்.உலகிலேயே முதல்முறையாக அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமாவை சந்திக்கின்ற முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த நகருக்குச் செல்லும் முதல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாதான். வருத்தத்துடன் தோன்றிய ஒபாமா 1945 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அமெரிக்க தாக்குதலின் நினைவுச் சின்னத்திற்கு வெள்ளை மலர்களால் செய்யப்பட்ட மலர்வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.


பிரேசிலில் 30 ஆண்களால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி!
[Friday 2016-05-27 16:00]

ரியோ டி ஜெனிரோவில் ஒரு பதின்ம வயது சிறுமியை பாலியல் கூட்டாக வல்லுறவுக்கு உள்ளாக்கி, அந்த சம்பவம் குறித்த வீடியோவை இணையத்தில் பிரசுரித்த 30 ஆண்களை பிரேசில் போலிஸார் தேடிவருகின்றனர்.சனிக்கிழமையன்று தனது ஆண் நண்பனை பார்க்க சென்ற அந்த்க பெண் மயக்கமான நிலையில், ஆண்கள் சூழ இருக்க மீட்கப்பட்டுள்ளார்.


அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள நோய்க் கிருமி: - மருந்துகளை எதிர்க்கும் திறன் கொண்டது! !
[Friday 2016-05-27 16:00]

அனைத்து வகையான ஆன்டிபயாடிக் மருந்துகளையும் எதிர்க்கும் திறன் கொண்ட நோய்க் கிருமி ஒன்று அமெரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அதிகபட்ச திறன் கொண்ட கொலிஸ்டின் என்ற ஆன்டிபயாடிக் மருந்தை எதிர்க்கும் திறன் கொண்ட இ-கொலி கிருமி, நடுத்தர வயதுப் பெண் ஒருவரைத் தாக்கியிருக்கிறது. அதன் மூலமாகத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Easankulasekaram-Remax-011214
Tamilfoods-120116
NIRO-DANCE-100213
AIRCOMPLUS2014-02-10-14
Mahesan-Remax-169515-Seithy
<b> 28-05-16 அன்று ரொறன்ரோவில் நடைபெற்ற MAHAJANAN AWARDS 2016 நிகழ்வின் படத்தொகுப்பு. </b> (Mahajana College Old Students Association - Canada)
<b> 23-05-16 அன்று ரொறன்ரோவில் நடைபெற்ற பைரவி நுண்கலைக்கூட ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> ANNUAL PROGRAM 2016
<b> 22-05-16 அன்று ரொறன்ரோவில் நடைபெற்ற TCBF பரிசளிப்பு நிகழ்வின் படத்தொகுப்பு. </b>