Untitled Document
March 29, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: - 42 பேர் பலி
[Saturday 2017-02-25 17:00]

சிரியா நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசமுள்ள பல முக்கிய நகரங்களை அரசுப் படைகள் கைப்பற்றி விட்டன. சில இடங்களில் மட்டும் இழந்த இடத்தை மீட்கவும், இருக்கும் இடத்தை பறிகொடுக்காமல் இருக்கவும் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இங்குள்ள ஹோம்ஸ் நகரின் மையப்பகுதியில் இன்று நிகழ்ந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். ஹோம்ஸ் மாநிலத்தில் உள்ள ராணுவ உளவுத்துறை தலைமை அலுவலத்தின் மீது இரு பிரிவுகளாக பிரிந்து, மனித குண்டுகளாக வந்த ஆறுபேர் அடுத்தடுத்து நடத்திய இரட்டை தாக்குதலில் பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அமெரிக்காவில் குத்துச் சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மகன் கைது!
[Saturday 2017-02-25 17:00]

அமெரிக்க விமானநிலையத்தில் வைத்து மறைந்த குத்துச் சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்செய்தியை அவர்களின் நண்பரும், வழக்கறிஞருமான கிறிஸ் மேன்சினி தெரிவித்துள்ளார்.முகமது அலியின் முன்னாள் மனைவி கலிலா கமாச்சோ, 47 வயதான தனது மகன் முகமது அலி ஜூனியருடன் ஜமைக்காவிலிருந்து விமானம் மூலம் கடந்த 7-ம் திகதி புளோரிடா விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.அப்போது, விமானநிலையத்தில் வைத்து குடியுரிமைத்துறை அதிகாரிகள் முகமது அலி ஜூனியரை காவலில் எடுத்து இரண்டு மணி நேரம் விசாரித்துள்ளனர்.


மாலைத்தீவில் பாலியல் பொம்மைகளுக்கு தடை: - அதிரடி சட்டம் அமல்
[Saturday 2017-02-25 17:00]

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மாலைத்தீவு உலகிலேயே தட்டையான நாடு என்ற சாதனைக்குரிய நாடாகும்.முஸ்லிம் நாடான மாலைத்தீவில் சுற்றுலா பயணிகளுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் தங்களுடன் பாலியல் பொம்மைகள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதவிர ஆபாச பட டிவிடிக்கள் மற்றும் புத்தகங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.


அர்ஜென்டினாவில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 13 பேர் உயிரிழப்பு!
[Saturday 2017-02-25 11:00]

அர்ஜென்டினா நாட்டின் சான்ட்டா ஃபே மாகாணத்தில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மான்ட்டிகாஸ் நிறுவனத்தை சேர்ந்த அந்த பஸ்கள் துறைமுக நகரமான ரோஸாரியோ நகரில் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டதில் 13 பேர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் ஒரு விபத்தில்,


அமெரிக்காவில் குற்றவாளியின் தாயை தண்டித்த நீதிபதி!
[Saturday 2017-02-25 11:00]

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் சாலை விபத்து குறித்த வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அமெண்டா கோசல் என்ற பெண், இரவில் குடித்து விட்டு கார் ஓட்டியுள்ளார். எதிரே நடந்து வந்துகொண்டிருந்த தம்பதியை கார் இடித்ததில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த வழக்கை நீதிபதி விசாரணை செய்து கொண்டிருக்கும்போது இடையூறு செய்யும் வகையில் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த அமெண்டாவின் தாயார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர், வழக்கு தொடர்பாக விசாரிக்கப்படும் சாட்சிகளைக் கிண்டலடித்து நீதிமன்றத்தில் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.


திட்டமிட்டபடி மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும்: - டிரம்ப் உறுதி
[Saturday 2017-02-25 11:00]

அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் தினமும் புது அறிவிப்புகளை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து எல்லையில் தற்காலிக சுவர்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருந்தும் சுவர் கட்டுவதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார்.சன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை காங்கிரஸ் கூட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘எனக்கு முதலில் அமெரிக்க குடிமக்களின் நலன்தான் முக்கியம். எனவே மெக்சிகோ எல்லையில் மிகப்பெரிய சுவர் கட்டுவோம். திட்டமிட்டபடி சுவர் கட்டும் பணி விரைவில் தொடங்கும். கெட்ட மனிதர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்’ என்றார்.


முப்பது ஆண்டுகளாக தினமும் செல்பி எடுக்கும் அமெரிக்கர்!
[Saturday 2017-02-25 10:00]

சமீப காலமாக ‘செல்பி’ மோகம் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. மிகப்பெரிய தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைத்து தரப்பினரும் ‘செல்பி’ எடுத்து மகிழ்கின்றனர். தற்போதுதான் ‘செல்பி’ பிரபலமாகியுள்ளது. ஆனால் அமெரிக்கர் ஒருவர் பல ஆண்டுகளாக ‘செல்பி’ எடுத்து வருகிறார்.அவரது பெயர் கார்ல் பாடன் (64). அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் தங்கி உள்ளார். இவர் சமூக வலைதளமான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் செல்போன்கள் வருவதற்கு முன்பே ‘செல்பி’ எடுக்க தொடங்கினார்.


சீனாவில் பிரபல ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: - மூவர் பலி
[Saturday 2017-02-25 10:00]

சீனாவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள நங்சங் நகரத்தில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர். 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. கட்டடத்தின் பல தளங்களில் இருந்து அடர்த்தியான புகை வெளியே வந்துக் கொண்டிருகிறது. உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


வெடித்துச் சிதறிய புதிய ஐபோன் 7 பிளஸ்!
[Saturday 2017-02-25 10:00]

கடந்த ஆண்டு சாம்சங் சந்தித்த அதே பிரச்சனையில் ஆப்பிள் சந்தித்துள்ளது. முன்னதாக சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்து சிதறியதை போல் இம்முறை ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனும் வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆப்பிள் வாடிக்கையாளர் இந்த தகவலை ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் வெடித்த ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளது. பிரியானா ஒலிவாஸ் தனது ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன் சீராக இயங்கவில்லை என்பதால் ஆப்பிள் ஸ்டோரில் வழங்கியுள்ளார். இவரது ஐபோனினை சோதனை செய்த ஆப்பிள் ஸ்டோர் வல்லுநர்கள் ஸ்மார்ட்போனில் எவ்வித பிரச்சனையும் இல்லை என கூறி திரும்ப வழங்கிவிட்டதாக ஒலிவாஸ் தெரிவித்துள்ளார். ஒலிவாஸ் இந்த ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஜனவரி மாதம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.


சர்வதேச அளவில் தற்கொலையில் முதலிடத்தில் இந்தியா: - உலக சுகாதார அமைப்பு
[Saturday 2017-02-25 10:00]

சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா போல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகம் முழுவதும் சுமார் 32 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான பேர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்தியா, சீனா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது.


தென்சீனக் கடலில் ராணுவத் தளங்களை அதிகரிக்கும் முயற்சியில் சீனா
[Saturday 2017-02-25 09:00]

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல்பகுதிகளில் உள்ள தீவுகளில் ராணுவத் தளங்களை அமைத்து வரும் சீன அரசு, மேலும் சில ராணுவத் தளங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


சிங்கப்பூரில் திடீர் தீ விபத்து..
[Saturday 2017-02-25 09:00]

சிங்கப்பூரில் திடக்கழிவு மேலாண்மை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், பரபரப்பு ஏற்பட்டது. தெற்காசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில், கழிவுகளை சேமித்து வைக்கும் ஆலையில், நேற்று முன்தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள், சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பல வகைப்பட்ட கழிவுப் பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. இதனால், அப்பகுதியில், பெரும் புகைமூட்டம் காணப்பட்டது. இந்த தீ விபத்து, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.


பாகிஸ்தானில் 2 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
[Saturday 2017-02-25 09:00]

பாகிஸ்தானில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தானில் உள்ள செவான் நகரில் லால் ஷாபாஸ் கலந்தர் வழிபாட்டுதலத்தில் கடந்த 16-ந் தேதி நடந்த தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு படைகளுக்கு நவாஸ் ஷெரீப் அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ஏமனில் தற்கொலைப்படை தாக்குதல்: 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
[Saturday 2017-02-25 08:00]

ஏமன் நாட்டில் தெற்கு பகுதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வெடிக்க செய்ததில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். ஏமன் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.


கனடாவிற்குள் சட்டவிரோதமாக எல்லை கடக்கும் அகதிகளால் சிக்கல்: - ஆவன செய்யுமா ட்ரூடோ அரசு?
[Saturday 2017-02-25 08:00]

கனடாவிற்குள் சட்ட விரோதமாக ஏன் மக்கள் எல்லை கடந்து வருகின்றார்கள் என்பது குறித்த சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வாக்குறுதி அளிக்கப்பட்ட பயண தடை மற்றும் கடுமையான குடியேற்ற நடவடிக்கை அனைவரையும் வடக்கு நோக்கி நகர வைத்துள்ளது.இந்த வாரம் கனடாவிற்கான யுஎன் அகதிகள் நிறுவன பிரதிநிதி ஜீன்-நிக்கலஸ் பியுஸ் கியுபெக் எல்லைக்கு சென்றுள்ளார். அகதி கோரிக்கையாளர்களின் செயல்பாட்டினை கவனிக்கவும் அவர்களுடன் உரையாடவும் அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.அமெரிக்கா தங்களை வரவேற்கும் நிலையில் இல்லை என தாங்கள் உணர்வதாக அகதிகள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். அங்கு நியாயமான செயல்பாடுகள் இல்லை என உணர்வதாலும் கனடா வர தீர்மானித்ததாக அகதி கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளதாக அறியப்படுகின்றது.


வாகனத்தில் அனாதையாக கிடந்த பல மில்லியன் யூரோ!
[Friday 2017-02-24 18:00]

லண்டன் வாகனத்தில் அனாதையாக கிடந்த மில்லியன் யூரோவை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.கடந்த 2016ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட பணம் பற்றிய தகவல்களை குறித்து பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.சம்பவம் குறித்து ஸ்கொட்லாந்தை சேர்ந்த யார்ட் கூறியதாவது, சம்பவத்தன்று லண்டனில் கருப்பு நிற வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் பயணிகள் இருக்கையில் ஒரு பெரிய பெட்டி காணப்பட்டது. அந்த பெட்டி முழுவதும் பணம் மூலம் நிரப்பப்பட்டிருந்தது.


பிரான்சில் வேட்பாளர் கூட்டத்தில் நிர்வாணமாக நுழைந்த பெண்: - வெளியான படம்
[Friday 2017-02-24 18:00]

பிரான்சில் ஜனாதிபதி வேட்பாளர் கூட்டத்தின் போது பெண்ணியவாதி ஒருவர் நிர்வாணமாக நுழைந்து முழக்கங்களை எழுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாரிஸில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளரான பிரெஞ்சு தீவிர வலதுசாரி தலைவர் லி பென் கலந்துக்கொண்டு வெளியுறவுக் கொள்கை குறித்து பேசிக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென அரை நிர்வாணமாக நுழைந்த பெண்ணியவாதி ஒருவர் லி பென்னுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார். லி பென் ஒரு போலி பெண்ணியவாதி என குரல் எழுப்பினார்.அதே முழக்கத்தை அவர் தனது உடலிலும் எழுதியிருந்தார். உடனே கூட்டத்தில் இருந்து மூன்று பாதுகாவலர்கள் அவரை அதிரடியாக வெளியேற்றினார்கள். இதன் மூலம் லி பென்னின் பேச்சு பாதியிலேயே பாதிக்கப்பட்டது.


கனடாவில் பரவும் தட்டம்மை நோய்: - எச்சரிக்கை விடுத்த அரசு
[Friday 2017-02-24 18:00]

கனடாவில் தட்டம்மை நோய் தற்போது பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுள்ளது.கனடாவில் Ontario உட்பட சில மாகாணங்களில் தட்டம்மை நோய் தற்போது பரவி வருகிறது.Ontarioவில் மட்டும் 2017ல் இது வரை 19 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொற்று நோயான இது எச்சில், ஒருவரின் சுவாச மூச்சின் மூலமாக மற்றவர்களுக்கு அதிகம் பரவுகிறது.இந்த வருடம் இந்த நோய் தாக்கியவர்கள் எல்லோரும் 18லிருந்து 35 வரை உள்ள இளைஞர்களாகவே இருக்கிறார்கள் என்பது முக்கிய விடயமாகும்.


சுவிஸில் கடும் வெப்பம்!
[Friday 2017-02-24 18:00]

ஸ்விற்சர்லாந்து நாட்டில் பல இடங்களில் இதுவரையில்லாத அளவு பிப்ரவரி மாதத்தில் வெயில் அதிகரித்துள்ளது. ஸ்விற்சர்லாந்து நாட்டில் ஏப்ரல் மாதத்தில் இருப்பது போன்ற வெயில் அதிகம் கொண்ட வானிலை தற்போது நிலவி வருகிறது. Nyon, Sion, Aigle போன்ற சுவிஸின் பல நகரங்களில் இதுவரை பிப்ரவரி மாதங்களில் இல்லாத அளவு வெயில் இந்த பிப்ரவரியில் ஏற்பட்டுள்ளது.Sionல் 21.2 என்ற டிகிரி வெயில் உள்ளது. இதற்கு முன்னர் கடந்த 1998ல் 19.8 டிகிரி வெயில் தான் அதிகபட்சமாக இருந்தது.நாட்டில் பல இடங்களில் சராசரியாக 20 டிகிரி என்ற அளவில் வானிலை உள்ளது. ஸ்விஸின் மிக பெரிய நகரமான Zurichல் 19.5 டிகிரியும், சுவிஸின் தலைநகரான Bernல் 18.5 டிகிரியும் பதிவாகியுள்ளது.


என் தாயின் தற்கொலைக்கு ஏஞ்சலா மெர்க்கல் தான் காரணம்: - பரபரப்பு குற்றச்சாட்டு
[Friday 2017-02-24 18:00]

ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் தான் என் தாயின் மரணத்திற்கு காரணம் என முன்னாள் சான்சலரான Helmut Kohl-ன் மகன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.ஜேர்மன் சான்சலராக 1982ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் Helmut Kohl.இவரின் மனைவியான Hannelore மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக கடந்த 2001ல் தற்கொலை செய்து கொண்டார்.தற்போது 16 வருடங்கள் கழித்து Hannelore தற்கொலைக்கு ஏஞ்சலா மெர்க்கலும் ஒரு காரணம் என Hanneloreவின் மகன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.


அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய பொறியிலாளர்: - அதிர்ச்சி சம்பவம்
[Friday 2017-02-24 18:00]

அமெரிக்காவில் பொறியாளராக பணிபுரிந்து வரும் இந்தியர், அமெரிக்கர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கார்மின் நகரில் உள்ள விமான போக்குவரத்து துறையில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32).இந்தியரான இவர் தனது நண்பர் அலோக் (32) உடன் அங்குள்ள ஒரு மதுபான பாரில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த Adam Purinton (51) என்னும் அமெரிக்க நாட்டை சேர்ந்த நபர் ஸ்ரீநிவாஸ் மற்றும் அலோக் ஆகியோரிடம் வந்து எங்கள் நாட்டை விட்டு வெளியேறு என்று கத்தியபடி இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஒடியுள்ளார்.


பக்கவாத நோயாளிகளுக்கு உதவ மூளையில் நினைப்பதை டைப் செய்யும் கம்ப்யூட்டர்: - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
[Thursday 2017-02-23 18:00]

தீவிர பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை- கால்கள் செயலிழந்து விடும். அதேபோல் வாய் பேசவும் முடியாது. எனவே, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாது. அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு புரியாது. மேலும் அவர்களால் கைகளால் எழுதி தரவும் முடியாது.எனவே, அவர்கள் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாமல் தவிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ட் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். மூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்க அவர்கள் முயற்சித்தனர்.


ஊனமான அகதிக்கு கனடா பிரதமர் செய்த நெகிழ்ச்சி உதவி!
[Thursday 2017-02-23 14:00]

கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ ஊனமான ஒருவருக்கு பொதுவெளியில் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ அகதிகள் விடயத்தில் உலகமக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார்.ஒருபுறம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழையக்கூடாது என கறார் காட்டி வரும் நிலையில், ஜஸ்டின் அகதிகளை கனடாவுக்கு வரவேற்று வருகிறார்.இந்நிலையில், நேற்றுகனடாவின் மாண்ட்ரீல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் escalator படிக்கட்டுகள் வேலை செய்யவில்லை.


திருநங்கைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வரும் டிரம்ப்!
[Thursday 2017-02-23 14:00]

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் திருநங்கைகள், தங்கள் பிறப்பு சான்றிதழில் உள்ள பாலினத்தின்படி உள்ள கழிவறை மற்றும் உடை மாற்றும் அறைக்கு தான் செல்ல வேண்டும் என டிரம்ப் சட்டம் கொண்டுவரவுள்ளார்.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஒபாமா பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் திருநங்கைகள், உடை மாற்றும் அறை மற்றும் கழிவறை விடயத்தில் ஆண் அல்லது பெண் அறையை அவர்கள் விருப்பம் போல பயன்ப்படுத்தலாம் என சட்டம் கொண்டு வந்தார்.ஆனால் இந்த சட்டத்தை மாற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதன்படி பிறப்பு சான்றிதழில் உள்ள பாலினத்தின் படி தான் அவர்கள் அதற்கேற்ப அறைக்குள் போக வேண்டும் என கூறியுள்ளார்.


கால்பந்து வீரர் கற்பழித்ததாக பொய் புகார் அளித்த இளம் பெண்!
[Thursday 2017-02-23 14:00]

அமெரிக்காவில் இரண்டு பேர் தன்னை வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக பொய் புகார் கூறிய இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்தவர் Nikki Yovino (18). இளம் பெண்ணான இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.அதே கல்லூரியில் கால்பந்து அணியில் இடம்பெற்றிருக்கும் இரண்டு ஆண்கள் தன்னை குளியலறைக்கு இழுத்து சென்று கற்பழித்ததாக Nikki போன வருடம் அக்டோபர் மாதம் புகார் கூறியிருந்தார்.இதையடுத்து, இரண்டு நபர்களும், கால்பந்து அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது பொலிசார் வழக்கு பதிவும் செய்தனர்.


கால்களால் மெழுகுவர்த்திகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்த மெக்ஸிக்கோ பெண்!
[Thursday 2017-02-23 08:00]

இரண்டு கைகள் இல்லாவிட்டால் என்ன தன்னம்பிக்கை உள்ளது என்று நிரூபித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார் மெக்ஸிக்கோ நாட்டைச் சேர்ந்த அட்ரியானா ஐரீன் மாசியான ஹெர்னாண்டஸ் (Adriana Irene Macías Hernández). இவருக்கு பிறக்கும்போதே கைகள் இல்லை. ஆனாலும் தன் வேலைகலை கால்கள் மூலமாக செய்ய பழகிக்கொண்டார். சமீபத்தில் கின்னஸ் ரிக்கார்டு சாதனை நிகழ்சியில் கலந்துகொண்டு ஒரு நிமிடத்தில் 11 மெழுகுவர்த்திகளை தன் கால்களாலேயே பற்றவைத்து ரிக்கார்டு பிரேக் செய்துள்ளார்.


முதல் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!
[Thursday 2017-02-23 08:00]

வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் என்றே தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. இவற்றில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என மூத்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார்.


பத்து வயது சிறுவனின் மனதைப் பிசையும் புகைப்படத்தை வெளியிட்ட தாயார்!
[Thursday 2017-02-23 08:00]

அமெரிக்க தாயார் ஒருவர் புற்றுநோயால் அவதிப்படும் தமது 10 வயது மகனின் மனதைப் பிசையும் புகைப்படத்தை வெளியிட்டு, இதுதான் எனது உலகம் என குறிப்பிட்டு நெக்குருக வைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் குடியிருக்கும் தாயார் ஒருவர் தமது பேஸ்புக் பக்கத்தில் புற்றுநோயால் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கும் தமது 10 வயது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் அந்த புகைப்படத்துடன் இரத்தப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.’எப்போது நான் அவனை கருவுற்றதாக அறிந்தேனோ அந்த கணம் தொடங்கி எதிர்காலம் வரை எனது வாழ்க்கையின் அர்த்தம் அவந்தான். எனது புன்னகைக்கும், பாசத்திற்கும், இதயத்துடிப்பிற்கும் அவனே காரணம். அவந்தான் எனது கண்ணீருக்கும், வலிக்கும் துயரத்திற்கும் காரணம், அவனே எனது வாழ்க்கை.

Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா