Untitled Document
April 19, 2024 [GMT]
கனடாவில் இருவருக்கு கத்திக்குத்து: போலீசார் தேடுதல் தீவிரம்!
[Tuesday 2022-04-26 16:00]

கனேடிய நகரமொன்றில், சிக்னலில் தனது காரை நிறுத்திய ஒருவர், தற்செயலாக சாலையோரம் ஒருவர் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kelownaவில் Harvey Avenue மற்றும் Gordon Drive என்னும் பகுதிகள் சந்திக்கும் இடத்தில் இந்த சம்பவம் நடக்க, Ashton Light என்னும் அந்த கனேடியர் உடனே காரை விட்டிறங்கி விழுந்து கிடந்தவருக்கு உதவ ஓடியிருக்கிறார். விழுந்து கிடந்த நபரின் கண்கள் மேலே சொருகியிருக்க, வெளிறிப்போய்க் கிடந்திருக்கிறார் அவர்.


பிரான்சில் பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்பு!
[Tuesday 2022-04-26 08:00]

பிரான்சில் மனைவியை கொன்ற பிரித்தானியர் ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்மேற்கு பிரான்சின் Occitanie மாநிலத்தில், Haute-Garonne பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 65 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரது 64 வயது கணவர் (பிரித்தானியரும் இறந்து கிடந்தார்.


லண்டனில் குத்தி கொல்லப்பட்ட நால்வரின் புகைப்படம் வெளியீடு!
[Tuesday 2022-04-26 08:00]

லண்டனில் உள்ள ஒரு வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய தலைநகர் லண்டனில், Bermondsey என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை 1.40 மணியளவில், சுமார் 5 நிமிடங்களுக்கு பெண் ஒருவர் பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டுள்ளது.


ஜேர்மனியை பழிக்குப்பழி வாங்கிய ரஷ்யா!
[Tuesday 2022-04-26 08:00]

பழிக்கு பழி வாங்கும் விதமாக 40 ஜேர்மன் தூதர்களை ரஷ்யா வெளியேற்றியது. உக்ரேனில் நடந்த மோதலில் ரஷ்ய தூதர்களை வெளியேற்ற பேர்லின் எடுத்த "நட்பற்ற முடிவுக்கு" பதிலடியாக 40 ஜேர்மன் தூதர்களை வெளியேற்றுவதாக மாஸ்கோ கூறியுள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், மாஸ்கோவில் உள்ள ஜேர்மனியின் தூதரை வரவழைத்து இது தொடர்பான குறிப்பை அவரிடம் கொடுத்ததாக அறிவித்தது.


வேறொரு நாட்டுக்கு புலம்பெயரும் ஜேர்மானியர்கள்: அதிரவைக்கும் காரணம்!
[Monday 2022-04-25 16:00]

பல நாடுகளிலிருந்து மக்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வரும் நிலையில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஜேர்மானியர்கள், பராகுவே நாட்டுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். அதற்காக அவர்கள் குறிப்பிடும் காரணம், ஜேர்மனியில் பெருமளவில் கட்டுப்பாடுகள் உள்ளன என்பது. குறிப்பாக, கொரோனா கட்டுப்பாடுகள்...


கனடாவில் இளம்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபர்!
[Monday 2022-04-25 16:00]

கனடாவில் இளம்பெண் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி மிரட்டி பணம் வாங்கிய நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. அதன்படி ஜான் என்ற நபர் கடந்த 19ஆம் திகதி இளம்பெண்ணொருவரை Greenwood and Danforth அவென்யூவில் சந்தித்தார்.


உக்ரைனுக்கு உதவவிருக்கும் அமெரிக்கா!
[Monday 2022-04-25 16:00]

உக்ரைனில் போரை தொடங்கியதற்கான நோக்கத்தில் ரஷ்யா தோல்வி அடைந்து விட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்ய போரானது முன்றாவது மாதத்தை தொட்டு இருக்கும் சூழ்நிலையில், போர் தொடங்கிய காலத்திற்கு பிறகு அமெரிக்க அரசு அதிகாரிகள் முதல் முறையாக உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்து இருந்தனர்.


சுவிஸில் இருந்து வெளியேறி தாயகம் திரும்பும் உக்ரைன் அகதிகள்: என்ன காரணம்?
[Monday 2022-04-25 16:00]

சுவிட்சர்லாந்துக்கு அகதிகளாக வந்துள்ள உக்ரைனியர்கள், மீண்டும் உக்ரைனுக்கே திரும்பத் துவங்கியுள்ளதாக சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலரான Christine Schraner தெரிவித்துள்ளார். இதுவரை சுவிட்சர்லாந்து சுமார் 40,000 உக்ரைன் அகதிகளுக்கு இடமளித்துள்ளது.


லண்டனில் பயங்கரம்: ஒரே வீட்டில் நால்வர் குத்தி கொலை!
[Monday 2022-04-25 16:00]

தென்கிழக்கு லண்டனில் இன்று அதிகாலை நான்கு பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்மண்ட்சேயில் உள்ள வீடு ஒன்றிலேயே இவ்வாறு மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் இறந்துள்ளதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 1.40 மணியளவில் பெர்மாண்ட்சேயின் டெலாஃபோர்ட் சாலையில் உள்ள வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.


61 முக்கிய கனேடியர்களுக்கு தடை விதித்த ரஷ்யா: வெளியான அதிர்ச்சி காரணம்!
[Monday 2022-04-25 08:00]

உக்ரேன் இராணுவத்திற்கு கனடா அளித்த பயிற்சியின் தாக்கம் காரணமாகவே, முக்கிய கனேடிய தளபதிகள் மீது ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேன் இராணுவத்தினருக்கு கனடாவின் 6 முன்னாள் தளபதிகள் குழு ஒன்று பயிற்சி அளித்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் 61 முக்கிய கனேடியர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அறிவிப்பு வெளியானது.


"பிரான்ஸ் மக்களை கைவிடமாட்டேன்" - லீ பென் சூளுரை!
[Monday 2022-04-25 08:00]

நடந்து முடிந்த பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரி ஆதரவு தலைவரான மரைன் லீ பென் தமது தோல்வியை ஒப்புக்கொள்வதாக அறிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களின் நம்பிக்கையை பெற தவறியுள்ளார் மரைன் லீ பென். ஜனாதிபதி மேக்ரானை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லீ பென் 41.8% வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.


பிரான்சில் மீண்டும் ஆட்சியை பிடித்த மேக்ரான்: முக்கிய நகரங்களில் வெடித்த கலவரம்!
[Monday 2022-04-25 08:00]

பிரான்ஸ் ஜனாதிபதியாக இமானுவல் மேக்ரான் மீண்டும் தெரிவான நிலையில் முக்கிய நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியாக மீண்டும் இமானுவல் மேக்ரான் தெரிவாகியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மரீன் லீ பென் 41.8% வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். இந்த நிலையில், மத்திய பாரிஸில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கலவரத் தடுப்புப் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


புடினை கடுமையாக எச்சரித்த ஜெலென்ஸ்கி!
[Sunday 2022-04-24 17:00]

மரியுபோல் நகரின் இரும்பு ஆலைக்குள் இருக்கும் ஒற்றை உக்ரைனியர் கொல்லப்பட்டாலும் ரஷ்யவுடனான அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஈடுபடாது என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதலானது 60வது நாளை தொட்டு இருக்கும் நிலையில், முதல்முறையாக அமெரிக்க அரசு அதிகாரிகளான அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் அகியோர் உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.


ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக கடத்தப்பட்ட உக்ரைனியர்கள்!
[Sunday 2022-04-24 17:00]

உக்ரைன் ரஷ்ய இடையேலான போர் 60வது நாள்களை கடந்து தீவிர கட்டத்தை அடைந்து இருக்கும் இந்த சூழ்நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான டான்பாஸில் ரஷ்ய இராணுவம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த இராணுவ நடவடிக்கையால் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு அண்டை நகரங்களில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது 1 மில்லியன் உக்ரைனிய மக்களை ரஷ்ய இராணுவம் அவர்களது நாட்டிற்கு வலுக்கட்டாயமாக கடத்தி சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


"பேச்சுவார்த்தைக்கு நான் தயார்" - புடினுக்கு மீண்டும் அழைப்பு விடுத்த ஜெலன்ஸ்கி!
[Sunday 2022-04-24 17:00]

போர் சண்டையை முடித்து கொள்ளலாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு நான் தயார் என்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்ய புடினுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி 2 மாதம் ஆகிவிட்டது. ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என உலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் அதை கண்டு கொள்ளாத ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.


கனடாவில் அடுக்குமாடி வீட்டில் சடலமாக கிடந்த நபர்!
[Sunday 2022-04-24 17:00]

கனடாவில் அடுக்குமாடி வீட்டில் உயிரிழந்து கிடந்த நபர் கொலை செய்யப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். வின்னிபெக்கில் உள்ள அடுக்குமாடி வீட்டில் கடந்த திங்கட்கிழமை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதலில் இது சந்தேகத்துக்குரிய மரணம் எனவும், கொலையாக இருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.


ஏவுகணைகளை ஏவிய ரஷ்யா: ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்!
[Sunday 2022-04-24 17:00]

ஒடேசா மீது ரஷ்யா ஏழு ஏவுகணைகளை நேற்று ஏவியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 60 நாளாக தொடர்ந்து போரை நடத்தி வருகின்றது. மேலும் இதற்கு உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது.


கனடா நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்த கைதி!
[Sunday 2022-04-24 06:00]

அமெரிக்காவின் Guantanamo Bay சிறைச்சாலையில் நீண்ட 14 ஆண்டுகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தியதற்கு எதிராக முன்னாள் கைதி ஒருவர் கனடா நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். கனடாவின் மாண்ட்ரீலில் பகுதியில் தங்கியிருந்தவர் Mohamedou Ould Slahi என்ற மொரிட்டானிய நாட்டவர். இவரை திடீரென்று ஒருநாள் கைது செய்த கனேடிய உளவுத்துறை, CN Tower மீது குண்டுவைக்க திட்டமிட்டதாக கூறி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளது.


பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: மக்களிடம் மேக்ரான் முன்வைத்துள்ள கோரிக்கை!
[Sunday 2022-04-24 06:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் இக்கட்டான நிலைக்கு ஆளாகாமல் இருக்க பிரெஞ்சு மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கோரிக்கை விடுத்துள்ளார். பிரான்சில் ஜனாதிபதி தேர்தலின் இறுதிச் சுற்று வாக்கெடுப்பானது ஏப்ரல் 24ம் திகதி ஞாயிறன்று முன்னெடுக்கப்படுகிறது. பிரான்சின் அதிகாரத்தின் கீழில் உள்ள பிரதேசங்களில் வாக்குப்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ளன.


ரஷ்யாவுக்கு உதவும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகள்?
[Sunday 2022-04-24 06:00]

உக்ரைன் படையெடுப்புக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படும் இராணுவ தளவாடங்களை பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்துள்ள பகீர் தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தரப்பு முன்னெடுத்த ஆய்வில் குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது. 2014ல் உக்ரைனின் கிரிமியா பகுதி மீது தாக்குதல் முன்னெடுத்து தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடும் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது.


"பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள்": கண்ணீர் மல்க உக்ரேனியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை!
[Saturday 2022-04-23 16:00]

59 நாளாக தொடரும் உக்ரைன் ரஷ்யா போர், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள் என மரியுபோலில் பதுங்கி இருக்கும் உக்ரைனியர்கள் கோரிக்கை, உணவு பொருள்கள் தீர்ந்து வருகிறது, நாங்கள் சூரிய ஒளியை பார்க்க வேண்டும் என உருக்கம், உணவு பொருள்கள் தீர்ந்து வருகிறது தயவுசெய்து எங்களை இங்கு இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள் என அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கி இருக்கும் உக்ரைனியர்கள் விடியோ வாயிலாக கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


உக்ரைன் - ரஷ்யா போரால் பிரித்தானிய மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!
[Saturday 2022-04-23 16:00]

உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பின் எதிரொலியால் பிரித்தானியாவில் சமையல் எண்ணெய் வாங்க சூப்பர்மார்க்கெட்டுகள் கட்டுப்பாடு விதித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் விநியோக சங்கிலி பிரச்சனைகள் காரணமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட கனேடிய புலம்பெயர்தல் துறை!
[Saturday 2022-04-23 16:00]

கனேடிய புலம்பெயர்தல் துறை, கனடாவில் வாழும் சர்வதேச மாணவர்கள் தங்கள் நிரந்தர வாழிட உரிம விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதற்காக காத்திருக்கும் காலகட்டத்தில் அவர்களுடைய பணி அனுமதிகள் காலாவதியாகும் நிலையில், அதை நீட்டிக்க உள்ளதுடன், ஜுலையில் தனது பெடரல் பொருளாதார புலம்பெயர்தல் திட்டங்களை மீண்டும் துவங்க உள்ளது.


கனேடிய கோடீஸ்வரர் திடீர் மரணம்!
[Saturday 2022-04-23 16:00]

கனடாவை சேர்ந்த ஹாக்கி விளையாட்டு ஜாம்பவானும், கோடீஸ்வரருமான Guy Lafleur உயிரிழந்துள்ளார். முன்னாள் ஹாக்கி வீரரான Guy Lafleur தனது துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். Lafleur இறக்கும் போது அவரின் நிகர சொத்து மதிப்பு $10 மில்லியனாக இருந்துந்துள்ளது.


ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர களமிறங்கும் முக்கிய நபர்!
[Saturday 2022-04-23 16:00]

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) ரஷ்யாவுக்கு வரும் 26 ஆம் திகதி செல்வுள்ளார். ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு அவர் உக்ரைன் அதிபரை 28 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது.


உண்மையை ஒப்புக்கொண்ட ரஷ்யா!
[Saturday 2022-04-23 08:00]

உக்ரேன் ஏவுகணை தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் தொடர்பில் ரஷ்யா தற்போது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவின் Moskva என்ற போர் கப்பல் கடந்த வாரம் உக்ரேன் துருப்புகளின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது. அதில் பயணித்த மொத்த குழுவினரும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.


கனடாவில் கொல்லப்பட்ட இந்திய மாணவர்: 7 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு!
[Saturday 2022-04-23 08:00]

கனடாவில் இந்திய வம்சாவளி பாடசாலை மாணவர் கத்திக்குத்து தாக்குதலில் மரணமடைந்த சம்பவத்தில் 7 இளைஞர்கள் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கனடாவின் எட்மண்டன் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 7 பேர் கொண்ட கும்பலால் 16 வயது மாணவர் கொடூரமாக தாக்கப்பட்டார். கத்தியால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட Karanveer Sahota என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.


ரஷ்ய தரப்பில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த தகவலை வெளியிட்ட உக்ரைன்!
[Saturday 2022-04-23 08:00]

உக்ரைன் மீது ரஷியா 59-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர். இதற்கிடையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள்முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. இந்நிலையில், போரில் எத்தனை ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா