Untitled Document
April 19, 2024 [GMT]
ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட 61 வயதுடைய ஈரானிய பெண் அகதி!
[Thursday 2021-12-30 21:00]

ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் சிறை வைக்கப்பட்டிருந்த 61 வயது ஈரானிய பெண் அகதிக்கு 3 ஆண்டு தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கி அவரை ஆஸ்திரேலிய அரசு விடுவித்துள்ளது. Masoumeh Torkpour எனும் ஈரானிய அகதி 2011ம் ஆண்டு ஈரானிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்ததிலிருந்து தடுப்பில் இருந்திருக்கிறார். பின்னர் 2018ம் ஆண்டு அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அவரது மன நலச் சிக்கல்களை கருத்தில் கொண்டு அவருக்கு தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கப்பட வேண்டும் என அகதிகள் தீர்ப்பாயம் கூறியிருந்தது.


கனடாவில் பட்டப்பகலில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
[Thursday 2021-12-30 17:00]

கனடாவில் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 10 வயது சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஒட்டாவாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதன்படி கடந்த திங்களன்று Mooney’s Bay பூங்காவில் உள்ள மலையில் பனிச்சறுக்கில் 10 வயது சிறுமி ஈடுபட்ட நிலையில் விபத்தில் சிக்கினார்.


அமெரிக்காவில் கொட்டும் மழையில் குவிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளின் சடலங்கள்!
[Thursday 2021-12-30 17:00]

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மருத்துவமனை ஒன்றின் வெளியே, மழையில் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் குவிக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள Gardena மருத்துவமனையிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சுமார் 20 சடலங்கள் வரையில் மருத்துவமனைக்கு வெளியே கொட்டும் மழையில் குவிக்கப்பட்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


ஒமிக்ரான் அச்சம்: கனேடிய மாகாணமொன்றில் பொது வருகைகள் நிறுத்தம்!
[Thursday 2021-12-30 17:00]

கனடா - ஒன்றாரியோவின் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில், கொரோனாவின் திரிபான ஒமிக்ரோன் அச்சம் காரணமாக, பொது வருகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் பரவும் ஒமிக்ரோன் வைஸசால் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களை வெளிப்படுத்தும் அபாயத்தைக் குறைக்க இந்த கொள்கை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.


ஜேர்மனியில் சொந்த அக்காவை தொண்டையை அறுத்து கொடூரமாக கொன்ற தம்பிகள்!
[Thursday 2021-12-30 17:00]

ஜேர்மனியில் தங்கள் சொந்த அக்காவையே கொடூரமாக கொலை செய்துள்ளார்கள், அவரது தம்பிகள். அதற்கு காரணம்? ஜேர்மனியில் வாழும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 34 வயதான இளம்பெண் ஒருவருக்கு 16 வயதில் திருமணமான நிலையில், கணவரது வன்முறை காரணமாக கணவரைப் பிரிந்த அந்த இளம்பெண், வேறு ஒருவருடன் பழகத் தொடங்கியுள்ளார்.


பள்ளிகளை திறக்குமாறு ஒன்ராறியோ அரசாங்கத்திடம் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கோரிக்கை!
[Thursday 2021-12-30 17:00]

கொரோனா ஓமிக்ரான் மாறுபாடு வேகமாகப் பரவிவரும் நிலையிலும் பள்ளிகளைத் திறந்து வைக்குமாறு 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒன்ராறியோ அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர். குறித்த மருத்துவர்கள், முதல்வர் டக் ஃபோர்டு , கல்வி அமைச்சர் மற்றும் மாநிலத்தின் முதன்மை மருத்துவர் ஆகியோருக்கு திறந்த மடல் ஒன்றை இது தொடர்பில் எழுதியுள்ளனர்.


உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருளை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானிகள்!
[Thursday 2021-12-30 08:00]

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், 1 மாத காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கடந்த 2-ந் தேதி நுழைந்து வேகமாக பல மாநிலங்களிலும் கால் பதித்து வருகிறது.


சுவிஸில் புத்தாண்டின்போது பட்டாசு விற்பனைக்கு தடை!
[Thursday 2021-12-30 08:00]

சுவிட்சர்லாந்தில் பல மாநிலங்களில் கோவிட் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பட்டாசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, கோவிட்-19 காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு தடையாகவே அமைந்துவருகிறது.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 28.48 கோடியாக உயர்வு!
[Thursday 2021-12-30 08:00]

தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.


2022 ஆம் ஆண்டிலிருந்து உணவுப் பழக்கத்தை மாற்றவிருக்கும் கனேடியர்கள்!
[Wednesday 2021-12-29 16:00]

பெரும்பாலான கனேடிய மக்கள் பிறக்கவிருக்கும் புத்தாண்டில் தங்கள் உணவுப்பழக்கத்தை முழுமையாக மாற்றவிருப்பதாக ஆய்வு ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளனர். கொரோனா பரவல் மற்றும் விலையுயர்வு காரணமாக பெரும்பாலான கனேடிய மக்கள் 2022ல் தங்கள் உணவுப்பழக்கம் மட்டுமின்றி உணவு வாங்கும் முறையையும் மொத்தமாக மாற்ற உள்ளனர்.


அதிகரிக்கும் கொரோனா: புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்திய சவுதி!
[Wednesday 2021-12-29 16:00]

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசாங்கம் மீண்டும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. டிசம்பர் 30ம் திகதி வியாழக்கிழமை முதல் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் நடக்கும் நிகழ்வுகளில் சமூக இடைவெளி வழிகாட்டுதல்கள் கடைபிடிப்பது மற்றும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


வேகமெடுக்கும் ஒமைக்ரான்: கியூபெக்கில் அத்தியாவசிய சுகாதார தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை!
[Wednesday 2021-12-29 16:00]

கனடாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான கியூபெக்கில் கொரோனா தொற்றுக்குள்ளான சில அத்தியாவசிய சுகாதார பணியாளர்கள் தொற்றுடன் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டியூப் (Christian dube) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


இஸ்ரேலுக்கு வந்துள்ள அச்சுறுத்தல்: திடீரென சுருண்டு விழுந்து இறந்த 5000 பறவைகள்!
[Wednesday 2021-12-29 16:00]

வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு பறவைகள் காப்பகத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான கொக்குகள் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் மிகக் கடுமையான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல் பரவல் என்பது, நாட்டின் வரலாற்றில் மிக மோசமான வனவிலங்கு பேரழிவு என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.


கனடாவில் பரபரப்பு: 2 மாத பிஞ்சு குழந்தையை தெருவில் கைவிட்டு தப்பி ஓடிய பெண்!
[Wednesday 2021-12-29 16:00]

ஒன்ராறியோ மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தெருவில் கைவிட்டு தப்ப முயன்ற பெண் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர். ஒன்ராறியோவின் Kitchener நகரத்திலேயே குறித்த சம்பவம் திங்களன்று அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், திங்களன்று பகல் சுமார் 11.10 மணியளவில் பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


தான் கோடீஸ்வரர் ஆனது தெரியாமல் மாதக்கணக்கில் இருந்த கனேடியர்: இறுதியில் நடந்த சுவாரசியம்!
[Wednesday 2021-12-29 07:00]

கனடாவில் $10 மில்லியன் பரிசு லொட்டரியில் விழுந்ததை கவனிக்காமல் இருந்த நபர் ஒருவழியாக தனக்கு பரிசு விழுந்தது என்பதை உணர்ந்து பணத்தை பெற்று கொண்டுள்ளார். மணிடோபாவை சேர்ந்தவர் ஜெப் மோர்டன் (64). இவருக்கு தான் லொட்டரியில் $10 மில்லியன் பரிசு விழுந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதமே அவருக்கு இந்த பரிசு விழுந்துள்ளது, ஆனால் அந்த கோடிக்கணக்கான பரிசு கிடைக்க காரணமான டிக்கெட் அவர் வீட்டு அலமாரியில் இருந்தும் அவர் பல மாதங்களாக கவனிக்காமல் இருந்துள்ளார்.


ஒரே நாளில் 10,000 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: ஸ்தம்பித்த ஜேர்மனி!
[Wednesday 2021-12-29 07:00]

ஜேர்மனியில் ஒமிக்ரான் பரவல் அதிகமாகியுள்ள நிலையில் அந்நாடு Pfizer கோவிட் மாத்திரைகளை வாங்கியுள்ளது. நாட்டின் சுகாதார அதிகாரிகள், செவ்வாய்கிழமை நிலவரப்படி மொத்தம் 10,443 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது, இது முந்தைய நாளை விட 43% உயர்வு என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.


பிரித்தானிய மகாராணி மறைவிற்கு பிறகு பணத்தாள்களில் வரும் மாற்றங்கள் குறித்து வெளியான தகவல்!
[Wednesday 2021-12-29 07:00]

பிரித்தானிய மகாராணி மறைவிற்கு பின்னர் நாட்டின் பணத்தாள்களில் (பவுண்டுகள்) என்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என்பது குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி மகாராணி எலிசபெத் மறைவிற்கு பிறகு அவரது மகன் சார்லஸ் அரச பொறுப்புக்கு வருவார் என்றே அரண்மணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடக்கும் பட்சத்தில் நாட்டில் பயன்படுத்தப்படும் பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் மாற்றப்பட வேண்டியிருக்கும்.


கனடாவில் பயங்கரம்: 84 வயதான மூதாட்டியை துஸ்பிரயோகம் செய்த தமிழர்!
[Tuesday 2021-12-28 16:00]

மூதாட்டி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் பொதி விநியோக சேவையில் ஈடுபடும் சாரதியான தமிழர் ஒருவரை ரொறொன்ரோ பொலிசார் கைது செய்துள்ளனர். டிசம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவு 12:53 மணியளவில் ஸ்கார்பரோவின் கோல்ஃப்டேல் கார்டன் பகுதியில் உள்ள கிரீன்ஹோல்ம் சேர்க்யூட் மற்றும் லோரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் பாலியல் வன்கொடுமை சம்பவம் பதிவாகியுள்ளது.


கருப்பையிலேயே கல்லாக மாறிய குழந்தை: அதிர்ந்துபோன மருத்துவர்கள்!
[Tuesday 2021-12-28 16:00]

73 வயது மூதாட்டி ஒருவரின் வயிற்றில் இருந்து 7 மாத குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஜிரியாவில் உள்ள Skikda நகரில் 73 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.


கடும் குளிரால் திண்டாடும் மேற்கு கனடா: வெளியான எச்சரிக்கை!
[Tuesday 2021-12-28 16:00]

மேற்கு கனடாவின் பல மாநிலங்களில் வெப்பநிலை கடும் சரிவைக் கண்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆய்வு மையம் திங்களன்று வெளியிட்ட தகவலில், ஆல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியாவின் குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் Saskatchewan ஆகிய மாகாணங்களில் கடும் குளிருக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர்.


அமெரிக்காவில் பயங்கரம்: இரு பெண்கள் உட்பட நால்வரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர்!
[Tuesday 2021-12-28 16:00]

அமெரிக்காவின் டென்வர் நகரில் இரு பெண்கள் உட்பட நால்வரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபரை பொலிசார் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. டென்வர் நகரில் திங்கட்கிழமை சுமார் 5 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் தொடர்பில் பொலிசார் தகவல் ஏதும் வெளியிட மறுத்துள்ளதுடன், அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக மட்டுமே தெரிவித்துள்ளனர்.


சுமார் 25,000 புலம்பெயர்வோரை வரவேற்க தயாராகும் கனேடிய மாகாணம்!
[Tuesday 2021-12-28 16:00]

சில நாடுகள் புலம்பெயர்வோரை தொல்லையாக கருதும் நிலையில், கனடாவோ பல்வேறு சந்தர்ப்பங்களில் புலம்பெயர்வோர் குறித்து நல்ல கருத்துக்களையே தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோரால் தொழிலாளர் துறையில் ஏற்பட்டுள்ள காலியிடம் நிரப்பப்பட்டுள்ளது, நாட்டின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது என்பது போன்ற கருத்துக்களை கனடா தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.


பிரான்சில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்!
[Tuesday 2021-12-28 08:00]

Omicron மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது. ஜனவரி 3 முதல், Work From Home கட்டாயமாக்கப்படும், மேலும் பொதுக் கூட்டங்களில் உள்ளரங்க நிகழ்வுகளுக்கு 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும். பிரான்சில் சனிக்கிழமையன்று 100,000-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை பதிவு செய்யப்பட்டதால் இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்க்கப்பட்டுள்ளன. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பிரான்சில் முதல் முறையாக இந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகியுள்ளது.


அவுஸ்திரேலியாவில் ஒமைக்ரானுக்கு பலியான முதல் நபர்!
[Tuesday 2021-12-28 08:00]

அவுஸ்திரேலியாவில் புதிய Omicron வகை கொரோனா வைரசால் பாதிப்புக்கு உள்ளான முதல் மரணம் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியா அதன் மிகப்பெரிய தினசரி நோய்த்தொற்றுகளுக்கு மத்தியில், தனது முதல் உறுதிப்படுத்தப்பட்ட Omicron மரணத்தை திங்களன்று அறிவித்தது. ஆனால் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் குறைவாக இருப்பதால் அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை.


கொரோனாவுக்கான புதிய சிகிச்சை முறையை அங்கீகரித்த சுவிஸ்!
[Tuesday 2021-12-28 08:00]

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய ஆன்டிபாடி சிகிச்சைக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரோச் (Roche) மற்றும் Regeneron (REGN.O) இணைந்து உருவாக்கிய ஆன்டிபாடி சிகிச்சையான Ronapreve-ஐ அங்கீகரித்ததாக சுவிஸ் மருந்து கட்டுப்பாட்டாளர் Swissmedic திங்களன்று தெரிவித்துள்ளது.


புத்தாண்டை முன்னிட்டு ஜேர்மனியில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்!
[Monday 2021-12-27 16:00]

ஜேர்மனியில் பல மாநில அரசாகங்கள் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன. ஒமிக்ரான் மாறுபாடு பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்த அவசர திட்டத்தின் கீழ், திங்கட்கிழமை முதல் சில மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகின்றன.


வேகமெடுக்கும் ஒமைக்ரான்: உலகம் முழுவதும் 6000 விமானங்கள் ரத்து!
[Monday 2021-12-27 16:00]

கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை Omicron வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் சுமார் 6000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை. அவ்வப்போது கொரோனாவில் இருந்து புதிய மாறுபாடுகள் உருமாறி வருகின்றது.


கனடாவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் ஊதியம்!
[Monday 2021-12-27 16:00]

புலம்பெயர்ந்தோரின் ஊதியம் சமீப காலமாக உயர்ந்து வருவதாக கனேடிய ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் கனடாவில் நிரந்தர வாழிடம் பெற்ற புலம்பெயர்ந்தோர் சராசரியாக 31,900 டொலர்கள் ஊதியம் பெற்றதாக (median wage) அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா