Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
காதலன் தற்கொலை செய்ய குறுஞ்செய்தி அனுப்பிய காதலிக்கு சிறை!
[Sunday 2017-06-18 09:00]

தன்னுடைய காதலன் தற்கொலை செய்ய ஊக்கமூட்டி டஜன்கணக்கான குறுஞ்செய்திகளை அனுப்பிய பெண்ணொருவர், காதலன் இறப்புக்கு காரணமாக இருந்ததாக மாசசூசெட்ஸ் நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்திருக்கிறார்.மிஷேல் கார்ட்டர் "தற்செயலான கொலை குற்றம்" இழைத்துள்ளதற்கு தண்டனை பெற்றுள்ளார் இப்போது 20 வயதாகும் மிஷேல் கார்ட்டர், அனுப்பிய குறுஞ்செய்திகளால் 18 வயதான கோன்ராடு ராய் உயிரையே மாய்த்து கொள்ள தூண்டப்பட்டார். எனவே, கார்ட்டர் "தற்செயலான கொலை குற்றம்" இழைத்துள்ளதாக தண்டிக்கப்பட்டுள்ளார்.


மூன்று ஆண்களின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளித்த கொலம்பியா நீதிமன்றம்!
[Sunday 2017-06-18 09:00]

அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் கடந்த ஆண்டு 2016 ஏப்ரல் மாதம் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பல ஓரினச் சேர்க்கையாளர்கள், தங்களின் விருப்ப துணையை திருமணம் செய்து கொண்டனர். அந்த வகையில் தற்போது கொலம்பியாவின் பிரபல நடிகரான விக்டர் ஹீகோ பிராடா மற்றும் அவரது நண்பர்கள் விளையாட்டு ஆர்வலர் ஜான் அலிஜான்ட்ரோ ரோட்ரிகுஸ் மற்றும் பத்திரிக்கையாளர் மனுவல் ஜோஸ் பெர்முடெஸ் 3 பேரும் ஓரினச் சேர்க்கை செய்யும் ஒரே குடும்பம் என்ற அந்தஸ்தை பெற சட்ட அங்கீகாரம் கேட்டு கொலம்பியா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.


அமெரிக்க போர்க்கப்பல் மீது மோதிய பிலிப்பைன்ஸ் நாட்டு சரக்கு கப்பல்!
[Sunday 2017-06-18 09:00]

ஜப்பான் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு சரக்கு கப்பலும் அமெரிக்க போர்க்கப்பலும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் போர்க் கப்பலின் வலது புறத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் புகுந்தது. இந்த விபத்தில் மாயமான 7 கடற்படை வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்யோவுக்கு தென்மேற்கே இசு தீபகற்ப பகுதியில் ஏசிஎக்ஸ் கிறிஸ்டல் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.


பயிற்சியாளரின் தலையைக் கவ்விய முதலை.
[Saturday 2017-06-17 20:00]

தாய்லாந்து நாட்டில் பயிற்சியாளரின் தலையை முதலை ஒன்று கடித்து குதற முயன்ற காட்சி அடங்கிய வீடியோ காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தின் புகழ்பெற்ற முதலை கண்காட்சியில் பயிற்சியாளரின் தலையை பிடித்து முதலை அசுர வேகத்தில் கடித்துக் குதற முயன்றது. இதனால் நிலைகுலைந்துப் போன பயிற்சியாளர் எழுந்து நிற்க கூட முடியாத நிலையில் தரையிலேயே சாய்ந்தபடி வலியால் துடித்தார். இதனைக்கண்ட சுற்றுலாவாசிகள் அதிர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.


"இமயமலை உயரம் குறைந்துவிட்டதா .."
[Saturday 2017-06-17 20:00]

2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக இமயமலையின் உயரம் மற்றும் இருப்பிடமும் மாறியிருக்கலாம் என நேபாள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த மாற்றம் தொடர்பாக புள்ளிவிவரங்களை சேகரிக்க விரைவில் இமயமலையின் உயரம் மற்றும் இருப்பிடத்தை ஆராய உள்ளதாக நேபாள கணக்கெடுப்புத்துறை முடிவெடுத்துள்ளது. இதற்கு சுமார் 75கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், மலையின் உச்சியில் மூன்று இடங்களிலிருந்து மலையின் உயரத்தை அளக்கும் பணி நடைபெறும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் கடந்த 3 மாதங்களில் 700 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி!
[Saturday 2017-06-17 17:00]

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 மாதங்களில் 700 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், எகிப்து என தொடர் தாக்குதலை ஐ.எஸ் இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர். இதையடுத்து இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.


மரண பயத்தில் வாழும் வடகொரியா ஜனாதிபதி!
[Saturday 2017-06-17 17:00]

வடகொரியா சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் ஒவ்வொரு நாளும் தான் கொல்லப்படுவோம் என்ற மரண பயத்துடன் வாழ்ந்து வருவதாக தென் கொரியா அரசு தெரிவித்துள்ளது.தென் கொரியா பாராளுமன்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது, ‘அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து ஒரு சிறப்பு படை ஒன்றை உருவாக்கியுள்ளது.


சுவிஸில் மனைவியை 60 இடங்களில் குத்திக் கொலை செய்த கணவன்: -அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்
[Saturday 2017-06-17 17:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியை 60 இடங்களில் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள லூட்ரி நகரில் ஐயர்லாந்து நாட்டை சேர்ந்த 50 வயதான கணவர், ரஷ்யாவை சேர்ந்த 46 வயதான மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.


சாதிக்க விரும்பியவர் பரிதாப பலி!
[Saturday 2017-06-17 16:00]

நயாகரா அருவியில் எந்தவித பாதுகாப்புமின்றி குதித்து உயிர்பிழைத்த நபர், மற்றுமொரு சாதனை முயற்சியின் போது உயிரிழந்தார்.கடந்த 2004 அம் ஆண்டு நயாகரா அருவியில் முதல் முறையாக உரிய பாதுகாப்பு உபகரணமின்றி குதித்து, காயங்களோடு உயிர்பிழைத்தவர் அமெரிக்காவை சேர்ந்த கிர்க் ஜோன்ஸ். 53வயது நிரம்பிய இவர், மற்றுமொரு சாதனை படைக்க விரும்பி, எந்தவித பாதுகாப்பு உபகரணமும்இன்றி, ஏப்ரல் 19ஆம் தேதி நயாகரா அருவியின் மேற்பகுதியிலிருந்து, இன்பிஃளேட்டபில் பந்திலிருந்து குதித்துள்ளார்.


மீண்டும் அமெரிக்கா-கியூபா இடையே பனிப்போர் மூளுமா? - அதிரடி நடவடிக்கை எடுத்த ட்ரம்ப்
[Saturday 2017-06-17 08:00]

கியூபா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்கா - கியூபா இடையில் பல ஆண்டுகளாகப் பனிப் போர் நீடித்து வந்த நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, கடந்த 2014-ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைக்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார். அதன் மூலம், கியூபாவில் அமெரிக்கத் தூதரகம் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ட்ரம்ப் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.


ட்விட்டரில் ஐடியா கேட்ட அமேசான் சிஇஓ
[Saturday 2017-06-17 07:00]

உலகின் பணக்கார மனிதர்களுள் ஒருவராகக் கருதப்படும் அமேசான் நிறுவன தலைமை செயலதிகாரி ஜெஃப் பேசோஸ், தனது சொத்தின் ஒரு பகுதியை நன்கொடையாக அளிக்க விரும்புவதாகக் கூறி, அதற்கான பரிந்துரைகளை ட்விட்டரில் கேட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ஜெஃப் பேசோஸ் இட்டுள்ள பதிவில், ‘தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்புகிறேன். உதவி தேவைப்படும் மக்களுக்கு அந்த உபயோகமாக அது இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். உங்களிடம் அதற்கான ஐடியாக்கள் இருந்தால் இந்த ட்வீட்டுக்கான பதிலில் அதைத் தெரிவிக்கவும்’ என்று அவர் பதிவிட்டிருந்தார்.


செவ்வாய் கிரகத்தில் குடியேறும் மனிதன்: - விண்வெளி ஆய்வு நிறுவன செயல் தலைவர்
[Saturday 2017-06-17 07:00]

பூமியை விட்டுவிட்டு மனிதன் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக SpaceX விண்வெளி ஆய்வு நிறுவன செயல் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும் பூமி தோன்றிய நாளிலிருந்து குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஏதாவது ஒரு பேரிடரினால் உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்து போவது போல், நமது தலைமுறையிலும் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், அதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழி வேறு கிரகங்களில் குடியேறுவதுதான் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீடு இருக்கக் கூடாது: - ரஷ்ய அதிபர்
[Saturday 2017-06-17 07:00]

இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சினையில் மூன்றாவது நாடு தலையிடக்கூடாது என்றும், இரு நாடுகளுமே பேசித் தீர்க்க வேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. எல்லைப் பிரச்சினை உள்பட இந்தியாவுடன் உள்ள பிரச்சினைகளை தீர்க்க மூன்றாவது நாட்டின் தலையீட்டை பாகிஸ்தான் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியா இதனை நிராகரித்து வருகிறது.


மருத்துவர் மீது விழுந்த நர்ஸ் பிழைத்தார் , மாண்டார் மருத்துவர்
[Friday 2017-06-16 20:00]

கொலம்பியாவில் காலீ நகரில் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒரு செவிலியர் மாணவி ஒரு மருத்துவரின் மீது விழுந்ததால் உயிர் பிழைத்துள்ளார். ஆனால், அந்த மருத்துவர் இறந்துவிட்டார்.டெல் வேல் பல்கலைக்கழக மருத்துவமனையில் படித்து வந்த மருத்துவர் இசபெல் முனொஸ் பலத்த காயமடைந்ததால் உயிரிழந்தார்செவிலியர் மரியா இசபெல் கோன்சேலசுக்கு பல எலும்பு முறிவுகள் இருந்தாலும் அவர் தற்போது நிலையான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. என்ன காரணத்திற்காக இந்தச் சம்பவம் நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


சிங்கத்துடன்: தொழிலதிபர் கைது!
[Friday 2017-06-16 20:00]

திறந்தவெளி காரில் சிங்கத்தை ஏற்றி, மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் சென்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் கராச்சி நகரைச் சேர்ந்தவர் சக்லைன் ஜாவித். தொழிலதிபரான இவர், மிருகக் காட்சி சாலை நடத்தி வருகிறார். இங்குள்ள சிங்கம் ஒன்றை தனது காரின் பின் பகுதியில் அமர வைத்து, கராச்சி நகரில் உலா வந்தார். காரில் சிங்கத்தைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். சாலையில் ஆட்டோ, டூவிலர், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் பீதியடைந்தனர். சிங்கம் பாய்ந்து வந்துவிடுமோ என்கிற பயத்திலேயே சாலையில் பயணித்தனர்.


இங்கிலாந்து பாராளுமன்றம் திடீர் மூடல்: - கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு
[Friday 2017-06-16 17:00]

பிரித்தானியா தலைநகர் லண்டனில் அமைந்திருக்கும் பாராளுமன்ற கட்டிடத்தின் வாசலில் நபர் ஒருவர் கத்தியுடன் வந்ததையடுத்து பொலிசார் அவரை கைது செய்தார்கள். பிரித்தானியாவின் லண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை அமைந்துள்ளது, இது பாராளுமன்றமாகவும் செயல்படுகிறது. இதன் வாயிலில் சாம்பல் நிற சட்டை அணிந்திருந்த நபர் ஒருவர் கையில் கத்தியுடன் இன்று காலை சுற்றி திரிந்துள்ளார்.


அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 100 பேர் பலி? - பிரித்தானிய பொலிசார் அதிர்ச்சி தகவல்
[Friday 2017-06-16 17:00]

லண்டன் தீ விபத்தில் 17 பேர் பலியாகியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 100 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பிரித்தானிய பொலிசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள Grenfell Tower என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு தினங்களுக்கு முன்னர் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.இத்தீவிபத்தில் சில பலர் பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.


ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை: - ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
[Friday 2017-06-16 17:00]

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரான Abu Bakr al-Baghdadi என்பவர் ரஷ்ய வான்வழி தாக்குதலில் பலியாகியிருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அல்-பாக்தாதி தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான யுத்தத்தில் உயிரிழந்து விட்டதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. எனினும், இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.


கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட பிரதமரின் மனைவி - லெசோதோ நாட்டில் சம்பவம்
[Friday 2017-06-16 17:00]

லெசோதோ நாட்டில் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட பிரதமரின் மனைவி மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லெசோதோ நகரில் இம்மாத தொடக்கத்தில் பிரதமர் தேர்தல் நடைபெற்றுள்ளது.லெசோதோ நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற அடிக்கடி கலவரம் நடைபெற்று வருவதால் தேர்தல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.


ஒசாமாவின் கோட்டையை கைப்பற்றிய ஐஎஸ் தீவிரவாதிகள்
[Friday 2017-06-16 11:00]

ஆப்கானிஸ்தானில் அல்கய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்த ‘தோரா போரா’ மலைப் பகுதியை கைப்பற்றியுள்ளதாக ஐஎஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐஎஸ் இயக்கம் புதன்கிழமை வெளியிட்ட ஆடியோ பதிவில், "ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்த ‘தோரா போரா’ மலைப்பகுதியில் ஐஎஸ் கொடி பறக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானிலுள்ள பல மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், கிராமவாசிகளை அவர்களது இல்லத்திலேயே இருக்குமாறும் ஐஎஸ் இயக்கம் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.


ஒட்டி பிறந்த இரட்டையர்கள் பிரிந்தனர்!
[Friday 2017-06-16 11:00]

அமெரிக்காவில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் இரு தலைகளும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ஹெதர் மற்றும் ரைலி ஆகியோருக்கு கடந்த 2016-ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. எரின் டெலானி மற்றும் அப்பி டெலானே எனப் பெயரிடப்பட்ட இந்தக் குழந்தைகளின் தலையின் மேல் பகுதி ஒட்டியப்படி இருந்தது. இந்நிலையில், இந்தக் குழந்தைகளை பிரிக்க அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.


சூரிய ஒளியில் சூப்பர் சிக்கன்
[Friday 2017-06-16 11:00]

தாய்லாந்து நாட்டில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி கோழி இறைச்சியை மிக சுவையாக சமைக்கிறார் சிலா சுதாரத் என்ற சமையல் கலைஞர். இதை அந்த நாட்டில் உள்ள பலரும் விரும்பி உண்ணுகின்றனர்.தாய்லாந்தைச் சேர்ந்த சிலா சுதாரத் சூரிய வெப்பத்தில் சிக்கன் சமைக்கிறார். ஆயிரம் சிறிய கண்ணாடிகளை உலோகக் கம்பிகளில் இணைத்து, அதன் மூலம் சூரிய சக்தியை இறைச்சி மீது குவித்து, வேக வைக்கிறார். “1997 ஆம் ஆண்டு பேருந்து கண்ணாடி மூலம் சூரிய வெப்பம் என்னை சுருக்கென்று தாக்கியது. அப்போதுதான் இந்த வெப்பத்தில் ஏன் இறைச்சியை சமைக்கக் கூடாது என்று யோசித்தேன்.


என்னா உடம்பு... 81 வயது பேஷன் மாடல்!
[Friday 2017-06-16 11:00]

சீனாவில் வசிக்கும் 81 வயது வாங் டேஷன், விளம்பரங்கள், ஃபேஷன் ஷோக்கள், திரைப்படங்கள் என்று சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். சீனாவின் ‘ஹாட்டஸ்ட் கிரான்ட்பா’ என்று அழைக்கப்படும் இவர், முதியவர்களின் பார்வையையும் மாற்றியுள்ளார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை சாதாரண மனிதராகத்தான் வாங் வாழ்க்கை நடத்தி வந்தார். திடீரென்று ஒரு ஃபேஷன் டிசைனரிடமிருந்து வாங் டேஷனின் மகள் மூலம் அழைப்பு வந்தது. வெண் தாடி, நீளமான தலைமுடியுடன் சட்டை அணியாமல் சில நிமிடங்கள் மாடல்கள் சூழ ஃபேஷன் ஷோவில் நடந்து வந்தார்.


மோதலில் ஈடுபட்ட தமிழர்களுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை
[Thursday 2017-06-15 21:00]

லண்டனில் இரண்டு தமிழ் கோஷ்டிகளுக்கிடையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த மோதலில், எதிர் கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொலை செய்தார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.தென்-மேற்கு லண்டனில் மிட்ச்சம் பகுதியில் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி நடந்த இந்த கோஷ்டி மோதலில், 26 வயதான நீல் குரூஸ் என்பவரை கோடாறியால் அடித்துக்கொலை செய்த குற்றத்திற்காக, 29 வயதான பிரசாத் சோதிலிங்கம் என்பவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.


லண்டன் தீ: உலகுக்கு எச்சரிக்கை?
[Thursday 2017-06-15 21:00]

எரிந்துபோன லண்டன் அடுக்குமாடிக்கட்டிடத்தில் எஞ்சியுள்ள உயர் மாடிகளில் தீயணைப்பு படையினர் சென்று சடலங்களை தேடுவதை தொடர்வது பாதுகாப்பானதா என்பதற்கான கட்டுமான பரிசோதனைகள் நடக்கின்றன.இதுவரை பதினேழு பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்பது பேர் சிகிச்சை பெறுகிறார்கள். பதினெட்டுப்பேரின் நிலைமை கவலைக்கிடம்.


அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் கத்தார்
[Thursday 2017-06-15 21:00]

அமெரிக்காவிடமிருந்து எஃப் - 15 ஜெட் ரக போர் விமானங்களை வாங்க சுமார் 12 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றில் கத்தார் கையெழுத்திட்டுள்ளது.வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைவர் ஜிம் மேட்டிஸ் மற்றும் கத்தார் பாதுகாப்புத்துறை தலைவர் இடையே நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.அமெரிக்காவின் பெரிய நட்பு நாடான கத்தார் மீது சில தினங்களுக்குமுன் அதிபர் டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய அளவில் கத்தார் நிதியுதவி அளிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு சில தினங்களுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.


திருமணம் செய்து கொண்ட 'மூன்று ஆண்கள்': கொலம்பியாவில் புதுமை!
[Thursday 2017-06-15 21:00]

ஓரே பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதையும், இணைந்து வாழ்வதையும் அறிந்திருப்போம். ஆனால் மூன்று ஆண்கள் சேர்ந்து திருமணம் செய்துகொண்ட புதுமையான சம்பவம் கொலம்பியாவில் நடந்துள்ளது.ஒரு பாலினத் திருமணத்துக்கு‌ அண்மைக் காலமாக பல நாடுகள் சட்டப் பூர்வமான அங்கீகாரத்தை அளித்து வருகின்றன. தென் அமெரிக்க நாடான கொலம்பியா‌ இன்னொருபடி மேலே சென்று, மூன்று ஆண்கள் செய்து கொண்ட மிகவும் மாறுபட்ட திருமணத்தை அங்கீகரித்திருக்கிறது.


அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுடப்பட்டு மரணம்
[Thursday 2017-06-15 14:00]

வாஷிங்டனின் புறநகர்ப் பகுதியில் பேஸ்பால் பயிற்சியின்போது குடியரசு கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் இறந்து விட்டதாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வர்ஜினியா மாகாணத்தில், அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள ஒரு பூங்காவில் பதுங்கி இருந்து, அதிகாலையில் நிகழ்ந்தப்பட்ட அத்தாக்குதலில் காயமடைந்த ஐவரில், பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியின் கொறடா ஸ்டீவ் ஸ்கெலிசும் ஒருவராவார்.

Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா