Untitled Document
April 18, 2024 [GMT]
கனடாவில் பரபரப்பு: ரத்த வெள்ளத்தில் தேநீர் கடைக்குள் நுழைந்த நபர்!
[Sunday 2021-11-21 17:00]

வான்கூவரில் உள்ள நியூ வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் காபி கடை ஒன்றில் இரத்தம் வழிய நுழைந்த நபர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தற்போது இருவரை கைது செய்துள்ளதுடன், 31 வயதான ரியான் கிராஸ்லி என்பவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் காற்றில் பறந்த பணம்: அள்ளிக்கொண்டு ஓடிய பொதுமக்கள்!
[Sunday 2021-11-21 08:00]

அமெரிக்காவில் பணம் கொண்டு சென்ற டிரக் லொரியில் இருந்து பணம் பறந்ததால், சாலையில் கிடந்த பணத்தை மக்கள் அள்ளிக் கொண்டு ஓடிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில நெடுஞ்சாலை San Diego-விற்கு அருகிலுள்ள Interstate 5-ன் வடக்கு பகுதியில் பணத்தினை டெபாசிட் செய்வதற்காக Federal Reserve வங்கியை நோக்கி, கடந்த திங்கட் கிழமை காலை டிரக் சென்றுள்ளது.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 25.74 கோடியாக உயர்வு!
[Sunday 2021-11-21 08:00]

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.


நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: வன்முறையாக மாறிய போராட்டம்!
[Sunday 2021-11-21 08:00]

நெதர்லாந்து நாட்டில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தியவர்கள் அல்லது அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.


அர்ஜென்டினாவில் மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'எச் ஐ வி' நோயால் பாதிக்கப்பட்ட பெண்!
[Saturday 2021-11-20 16:00]

அர்ஜென்டினா நாட்டில் HIV நோயால் பாதிக்கப்பட்ட பெண் தானாகவே குணமடைந்த நிகழ்வு மருத்தவ குழுவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரை எந்த நாட்டிலும் HIV நோய்க்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் அர்ஜென்டினா நாட்டில் ஒரு அதிசிய நிகழ்வு நடந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு HIV நோயால் பாதிக்கப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவர் எந்த வித சிகிச்சையும் பெறாமல் முழுமையாக நோயில் இருந்து தானாகவே குணமடைந்துள்ளார்.


தன்னை ஆணைப்போல் சித்தரித்துக்கொண்டு பல பெண்களிடம் மில்லியன் கணக்கில் மோசடி செய்த கனேடிய பெண்!
[Saturday 2021-11-20 16:00]

கனடாவில் தன்னை ஆண் போல காட்டி கொண்டு இணையதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றி மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரொறன்ரோவை சேர்ந்த Aleth Duell என்ற 69 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


சுவிஸில் அதிகரிக்கும் இணையவழி துன்புறுத்தல்கள்: அதிச்சியூட்டும் ஆய்வு தகவல்!
[Saturday 2021-11-20 16:00]

சுவிட்சர்லாந்தில் ஓன்லைன் துன்புறுத்தல் மற்றும் சைபர் ஸ்டால்கிங் அதிகளவில் பரவி வருவதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 2021 ஆகஸ்ட் 2 முதல் 11 வரை ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் ஜேர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் உள்ள 18-65 வயதுடைய 4,000 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.


கமலா ஹாரிஸை அமெரிக்க அதிபராக்கிய பிடன்: வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
[Saturday 2021-11-20 16:00]

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு தற்காலிகமாக அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ஜோ பைடன் மருத்துவ பரிசோதனைக்காக வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சிறார்களுக்கான ஃபைஸர் கொரோனா தடுப்பூசிக்கு கனடா அங்கீகாரம்!
[Saturday 2021-11-20 16:00]

5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஃபைஸர் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம் அளித்துள்ளது. 16 முதல் 25 வயதுடையவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பதிவுசெய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயற்திறன் 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கும் இருக்கும் என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


லண்டன் தீ விபத்து: பலியானவர்கள் குறித்து வெளியான தகவல்!
[Saturday 2021-11-20 08:00]

பிரித்தானியாவில் தீ விபத்தில் இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bexleyheath-ல் உள்ள குடியிருப்பு ஒன்றில், கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது.


மெக்ஸிக்கோவில் பயங்கரம்: பாலத்தில் தொங்கவிடப்பட்ட மனித சடலங்கள்!
[Saturday 2021-11-20 08:00]

மெக்ஸிக்கோவில் பாலத்தில் சுமார் 9 மனித சடலங்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிக்கோவில் உள்ள Zacatecas மாநிலத்தில் இருக்கும் பாலம் ஒன்றில், கடந்த வியாழக்கிழமை காலை சுமார் ஒன்பது மனித உடல்கள் கயிற்றால் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளது.


பிரேசிலில் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டெடுப்பு!
[Saturday 2021-11-20 08:00]

பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பரானா மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்போது, சுமார் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.


லண்டனில் பற்றி எரிந்த வீடு: குழந்தைகள் உட்பட 4 பேர் தீயில் கருகி பலி!
[Friday 2021-11-19 17:00]

தென்கிழக்கு லண்டனில் உள்ள வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். வியாழக்கிழமை இரவு பெக்ஸ்லிஹீத்தில் உள்ள ஹாமில்டன் சாலையில் உள்ள வீட்டில் இந்த பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது.


இடிக்கப்படும் அபாயத்தில் பல வீடுகள்: கனேடிய நகர மேயர் பரபரப்பு தகவல்!
[Friday 2021-11-19 16:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவில் Sumas Prairie பகுதி விளைநிலங்களை காப்பாற்ற அணையை பலப்படுத்த வேண்டும் என நகர மேயர் தெரிவித்துள்ளார். Sumas Prairie பகுதி மீண்டும் ஏரியாக மாறாமல் இருக்க, பல வீடுகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஊதா நிறத்தில் மாறிய பிரித்தானிய ராணியாரின் கைகள்: மருத்துவர்கள் விளக்கம்!
[Friday 2021-11-19 16:00]

பிரித்தானிய ராணியார் ஓய்வில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது உடல் நலம் தொடர்பில் பலவேறு வதந்திகள் வெளியானது. லண்டனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பிரித்தானிய ராணியார் கலந்து கொள்ளாத நிலையில், இளவரசர் வில்லியம் மனைவி கேட் மிடில்டன் உரிய மரியாதை செலுத்தினார்.


கனேடிய மாகாணத்தை புரட்டிப்போட்ட பேரழிவு: பேராபத்தில் 18,000 பேர்!
[Friday 2021-11-19 16:00]

கனடாவின் மேற்கு மாகாணத்தை தடம் புரட்டி போட்டுள்ள வெள்ளப் பேரழிவினால், சுமார் 18,000பேர் வெள்ள நீரில் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்சரிவுகள், வீதிகள், வீடுகள், பாலங்கள் மற்றும் பிற முக்கிய உட்கட்டமைப்புகளை அழித்த இந்த பேரழிவு, நாட்டின் விலையுயர்ந்த இயற்கை பேரழிவு என விபரிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேராபத்து: பிரபல நோயெதிர்ப்பு நிபுணர் எச்சரிக்கை!
[Friday 2021-11-19 16:00]

2022-ஆம் ஆண்டில் தடுப்பூசி-எதிர்ப்புத் தன்மை கொண்ட கோவிட்-19 விகாரம் வெளிவரக்கூடும் என்று பிரபல அமெரிக்க நோயெதிர்ப்பு நிபுணர் எச்சரித்துள்ளார். பிரபல அமெரிக்க நோயெதிர்ப்பு நிபுணரான மருத்துவர் மார்க் டைபுல் (Mark Dybul), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் எதிர்காலம் குறித்து ஆபத்தான கணிப்பு ஒன்றைச் செய்துள்ளார்.


கனடாவில் கொடூரமாக கொல்லப்பட்ட 17 வயது சிறுமி!
[Friday 2021-11-19 16:00]

கனடாவில் 17 வயது சிறுமி மீது கார் ஏற்றி கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. North Yorkல் கடந்தாண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி காலையில் ஒலிவியா (17) மற்றும் அவர் சகோதரி ஜூலியா ஆகியோர் அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது காரில் வேகமாக வந்த ஷான் ராம்சே அவர்கள் மீது மோதினார்.


அமெரிக்கரிடம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கனேடிய இளைஞர்: அம்பலமான மோசடி!
[Thursday 2021-11-18 16:00]

கனேடிய இளைஞர் ஒருவர் ரூ 930 கோடி மதிப்புள்ள cryptocurrency-ஐ அமெரிக்காரிடம் இருந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளையடித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவிற்கு அருகிலுள்ள ஹாமில்டன் நகர காவல்துறையின் கூற்றுப்படி, ஒரு நபரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோ பணம் இது தான் என தெரியவந்துள்ளது.


புலம்பெயர்வோரை சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்கு கடத்த முயன்ற நபர் கைது!
[Thursday 2021-11-18 16:00]

மோசமான நிலையிலிருந்த படகு ஒன்றில் 69 புலம்பெயர்வோரை சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குக் கடத்த முயன்ற சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். Arturas Jusas (35) என்ற லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த அந்த குற்றவாளி, லண்டனிலுள்ள தனதுவீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.


புலம்பெயர்வோருக்கு வேலைவாய்ப்பளிக்கும் கனேடிய மாகாணம்!
[Thursday 2021-11-18 16:00]

கொரோனாவால் உணவகத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனடாவில் உணவகத் துறையில் தொழிலாளர் பற்றாக்குறை காணப்படுகிறது, நோவா ஸ்கோஷாவும் (Nova Scotia) அதற்கு விதிவிலக்கல்ல... இந்த பற்றாக்குறையை சரி செய்வதற்காக, நோவா ஸ்கோஷா மாகாணம் அதிகத் தேவையிலிருக்கும் தொழில்கள் புலம்பெயர்தல் திட்டத்தின் கீழ் (Occupations in Demand immigration stream) மூன்று தொழில்களை சேர்த்துள்ளது.


ஜேர்மனியில் வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்ட கொரோனா!
[Thursday 2021-11-18 16:00]

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 65,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன் ஒரே நாளில் 50,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட விடயம் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்வு என கருதப்பட்ட நிலையில், இன்றைய நிலவரப்படி, ஒரே நாளில் 65,000 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


கனேடிய மாகாணத்தை புரட்டியெடுத்த பாரிய வெள்ளம்: பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்!
[Thursday 2021-11-18 16:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளை அழித்த பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், பசிபிக் கடற்கரை மாகாணத்தில் சுமார் 18,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்துள்ளார்.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 25.50 கோடியை தாண்டியது!
[Thursday 2021-11-18 08:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இங்கிலாந்தில் தொடர் கற்பழிப்பு குற்றவாளியின் உயிரை பறித்த கொரோனா!
[Thursday 2021-11-18 08:00]

இங்கிலாந்து நாட்டின் ஹிண்ட்லி நகரை சேர்ந்தவர் டென்னிஸ் ஸ்மலி. 70 வயதான இவர் 1970-ம் ஆண்டு முதல் சுமார் 45 ஆண்டுகள் தொடர் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், தொடர்ந்து பல பெண்களையும் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்துள்ளார்.


சுவிஸில் இனி இதற்கு அனுமதி!
[Thursday 2021-11-18 08:00]

சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் "அனைவருக்கும் திருமணம்" (Marriage for All) என்ற முயற்சிக்கு வாக்காளர்கள் ஒப்புதல் அளித்தனர்.


கனடாவில் இராணுவ வீரர்களுக்கு கஞ்சா கலந்த கேக் கொடுத்த இராணுவ வீராங்கனை!
[Wednesday 2021-11-17 16:00]

கனடாவில், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களுக்கு கஞ்சா கலந்த கேக் தயாரித்து வழங்கியதாக இராணுவ வீராங்கனை ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. New Brunswick ஐச் சேர்ந்த இராணுவ வீராங்கனையான Chelsea Cogswell, இராணுவ கேன்டீனுக்கு பொறுப்பாளராக இருந்திருக்கிறார். ஒருநாள், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு கேக் தயாரித்துக் கொடுத்திருக்கிறார் Chelsea.


மருத்துவமனையில் குவியும் சடலங்கள்: ஸ்தம்பித்த ஆஸ்திரியா!
[Wednesday 2021-11-17 16:00]

கொரோனா பாதிப்பால் ஆஸ்திரியா நாட்டில் நிலைமை மிக மோசமாக மாறியுள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் சடலங்களை பாதுகாக்க முடியாமல் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதேவேளை மருத்துவர்களும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா