Untitled Document
April 19, 2024 [GMT]
எந்தவொரு முன்னறிவிப்புமின்றி அத்தியாவசியமற்ற பயண ஆலோசனையை நீக்கியது கனேடிய அரசாங்கம்!
[Saturday 2021-10-23 08:00]

எந்த செய்தி அறிக்கையும் அல்லது ஊடக அறிவிப்பும் இல்லாமல், கனேடியர்களுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிரான ஆலோசனையை கனேடிய அரசாங்கம் அமைதியாக நீக்கியுள்ளது. கனடாவில் 2020 மார்ச் மாதம் முதல் COVID-19 தொற்றுநோய் அறிவிக்கப்பட்டதிலிருந்து அதன் Travel Advice and Advisory இணையதளத்தில் கனேடியர்களுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிரான ஆலோசனை இருந்தது.


பிரித்தானியாவில் தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பில் அமுலுக்கு வரவிருக்கும் புதிய விதிமுறை!
[Saturday 2021-10-23 08:00]

பிரித்தானியாவில் 'முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட' நபர்களுக்கான தடுப்பூசி கடவுச்சீட்டு (Vaccine Passport) விரைவில் மூன்று டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பிரித்தானியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஒரு நாளைக்கு 50,000-க்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது.


இத்தாலியில் பொதுவெளியில் உடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விமான பணிப்பெண்கள்!
[Saturday 2021-10-23 08:00]

இத்தாலியில் வேலை இழப்பு மற்றும் ஊதிய குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான பணிப்பெண்கள் பொது வெளியில் சீருடைகளை கழற்றிய போராட்டத்தல் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.


ஜேர்மனியில் கொரோனாவின் 4-வது அலை: எச்சரிக்கும் மருத்துவத்துறை நிபுணர்கள்!
[Friday 2021-10-22 16:00]

ஜேர்மனியில் கொரோனாவின் உண்மையான நான்காவது அலை துவங்கிவிட்டது என்று கூறும் மருத்துவத்துறை நிபுணர்கள், நிலைமை மேலும் மோசமாகும் என எச்சரிக்கிறார்கள். ஜேர்மனியில் கொரோனா தொற்று பயங்கரமாக அதிகரித்து வருகிறது. ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது என்ற கணக்கீட்டு எண் மே மாதத்திற்குப் பின் முதன்முறையாக 90ஐ தாண்டியுள்ளது.


கனடாவில் இந்திய பாடகர் மீது குவிந்துள்ள புகார்கள்: வெளியான காரணம்!
[Friday 2021-10-22 16:00]

பிரபல பஞ்சாபி பாடகர் ஒருவரது திருமணம் கனடாவில் வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், அது தங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்ததாக அயலகத்தார் சிலர் குற்றம் சாட்டியுள்ளார்கள். பர்மிஷ் வர்மா (Parmish Verma (35), பஞ்சாபி இசை மற்றும் திரைத்துறையுடன் தொடர்புடைய இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாடகர், இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார்.


ஐரோப்பிய நாடுகளை பகிரங்கமாக எச்சரித்த சீனா!
[Friday 2021-10-22 16:00]

தைவான் அமைச்சரின் வருகைக்கு பதிலடி கொடுப்பதாக ஐரோப்பிய நாடுகளான ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் இறையாண்மை மிக்க தனி நாடாக தன்னைக் கருதுகிறது. ஆனால் தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பிராந்தியமாக சீனா தைவானைப் பார்க்கிறது.


நள்ளிரவில் பிரிந்த கனேடிய பிரபலத்தின் உயிர்: சோகத்தில் பிரபலங்கள்!
[Friday 2021-10-22 16:00]

பெரும் புகழ்பெற்ற கனேடிய நடிகை Martha Henry தனது 83வது வயதில் காலமானார். அமெரிக்காவின் மிச்சிகனில் கடந்த 1938ஆம் ஆண்டு பிறந்த Martha அடுத்த 20 ஆண்டுகளில் கனடாவுக்கு குடிபெயர்ந்தார், கடந்த 1970ஆம் ஆண்டு கனடிய குடியுரிமை Marthaவுக்கு கிடைத்தது.


பொதுமக்களுக்கு கூகுள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!
[Friday 2021-10-22 16:00]

நமக்கு தெரியாத அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள கூகுள் சர்ச் என்ஜின் உதவுகிறது. உணவு, சமையல், ஆன்லைன் வங்கி சேவை, ஆன்லைன் ஷாப்பிங், திரைப்படங்கள், மருந்துகளை வாங்குவது போன்ற பல விடயங்களையும் கூகுளில் தேடுவோர் ஏராளம். கூகுளில் தேடவே கூடாத சில விஷயங்கள் உள்ளது. கூகுளில் நீங்கள் பார்க்கும் அனைத்து வலைத்தளங்களையும் கூகுள் உருவாக்கவில்லை.


சிரியாவில் காட்டுத்தீக்கு காரணமான 24 பேருக்கு தூக்கு!
[Friday 2021-10-22 08:00]

சிரியாவில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த ஆண்டு காட்டுத்தீ பரவியது. இந்த காட்டுத்தீ 3 மாகாணங்களுக்கு பரவியது. பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட 187 காட்டுத்தீ சம்பவத்தில் 280 நகரங்கள் மற்றும் கிராமங்கள் பாதிக்கப்பட்டன.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய மகாராணி: உடல்நிலை குறித்து வெளியான தகவல்!
[Friday 2021-10-22 08:00]

பிரித்தானியா மகாராணி வடக்கு அயர்லாந்தின் பயணத்தை ஒத்தி வைத்த நிலையில், அவர் மருத்துவமனையில் ஒரு இரவை கழித்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்(95) சமீபத்தில் வடக்கு அயர்லாந்துக்கான பயணத்தை திட்டமிட்டிருந்தார். ஆனால், இறுதியில் அவரது பயணம் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது.


கணவர் இறந்த நிலையில் இளைஞனுக்காக பணத்தை வாரி இறைக்கும் அமெரிக்க தாயார்!
[Friday 2021-10-22 08:00]

அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயது விதவைப் பெண் 29 வயது காதலனுக்காக இந்த வருடம் மட்டும் சுமார் 30,000 டொலர் செலவு செய்ததாக கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் Julie. 44 வயது மதிக்கத்தக்க இவருக்கு 18 மற்றும் 21 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருடைய கணவர் இறந்த நிலையில், Julie சமூகவலைத்தள ஆப் ஆன Bumble app-ல் 29 வயது மதிக்கத்தக்க Zach-ஐ சந்தித்துள்ளார்.


லண்டனில் மாயமான இளைஞரை தேடும்போது கிடைத்த சடலம்: குழப்பத்தில் போலீசார்!
[Thursday 2021-10-21 16:00]

லண்டனில் காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்ட நிலையில் தேம்ஸ் நதியில் இருந்து ஒரு சடலத்தை கண்டெடுத்துள்ளனர். Wandsworth-ஐ சேர்ந்த 27 வயதான இளைஞர் முசா முகமது சமீபத்தில் காணாமல் போனார்.


கோவிட் பாதிப்பு குறித்து இலங்கையரான கனேடிய மருத்துவர் கூறும் முக்கிய தகவல்!
[Thursday 2021-10-21 16:00]

கனடாவில் தொற்று நோயியல் நிபுணராக பணியாற்றும் இலங்கையரான மருத்துவர் ஒருவர், வெள்ளையரல்லாதவர்களும் ( people of colour), பூர்வக்குடியினரும்தான், எண்ணிக்கை மற்றும் நோயின் தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


பிரித்தானியாவில் 60 வயது முதியவரை மிருகத்தனமாக தாக்கிய பொலிஸார்!
[Thursday 2021-10-21 16:00]

பிரித்தானியாவில் திருடன் என சந்தேகிக்கப்படும் 60 வயது நபரை பொலிஸார், இரத்தம் வரும் அளவிற்கு பொது இடத்தில் பயங்கரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் செவ்வாக்கிழமை மதியம் 3 மணியளவில், ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஸ்டீவனேஜ் சிட்டி சென்டரில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நீர்வாழ் உயிரினம் கண்டுபிடிப்பு! Top News
[Thursday 2021-10-21 16:00]

டைனோசர்களுக்கு மத்தியில் வாழ்ந்த உலகின் மிகப் பழமையான நீர்வாழ் விலங்கு ஒன்று, 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பர் கல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல்லிகள், பூச்சிகள், சிலந்திகள் மற்றும் டைனோசர்களை சிக்க வைக்கும் புதைபடிவங்கள் பற்றிய அற்புதமான விவரங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


அமெரிக்க தொலைக்காட்சியில் வானிலை அறிக்கையின்போது ஒளிபரப்பான ஆபாச வீடியோ!
[Thursday 2021-10-21 16:00]

அமெரிக்காவில் டிவி சேனல் ஒன்றில் வானிலை அறிக்கையின் போது ஆபாச வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள தனியார் டிவி சேனல் ஒன்றில் செய்தியாளர் வானிலை அறிக்கையை படித்து கொண்டிருக்கும் போது ஆபாச வீடியோ ஒளிபரப்பானது.


தனக்கென சொந்தமாக புதிய சமூக வலைதளத்தை தொடங்கிய டிரம்ப்!
[Thursday 2021-10-21 08:00]

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கினார். தனது டிரம்ப் மீடியா& டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் “ ட்ரூத் சோஷியல்” என்ற வலைதளத்தை டிரம்ப் இன்று தொடங்கியுள்ளார். இந்த சமூக வலைதளத்திற்கு “ட்ரூத் சோஷியல்” என பெயரிடப்பட்டுள்ளது.


ஒன்ராறியோவில் இந்திய வம்சாவளி நபரால் கொடூரமாக கொல்லப்பட்ட இரு பெண்கள்!
[Thursday 2021-10-21 08:00]

ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் மனைவி மற்றும் மாமியாரை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய சம்பவமானது 2018 ஜனவரி மாதம் 12ம் திகதி இரவு 10.45 மணிக்கு நடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற பொலிசார், குடியிருப்பினுள் கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் இரு சடலங்களை மீட்டுள்ளனர்.


பிரித்தானிய எம்.பி கொல்லப்பட்டது ஏன்? - கொலையாளி சொன்ன தகவல்!
[Thursday 2021-10-21 08:00]

பிரித்தானியா எம்.பி கொலை செய்யப்பட்டதற்கு அவர் கத்தார் நாட்டு உடன் தொடர்பில் இருந்ததாக கூட இருக்கலாம் என்று கொலையாளி என்று சந்தேகப்படும் அலி ஹர்பி அலியின் மாமா கூறியுள்ளார். பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினரான Sir David Amess கடந்த வெள்ளிக்கிழமை Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் நடந்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.


பிரித்தானிய பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி!
[Wednesday 2021-10-20 17:00]

நெட்ப்ளிக்ஸில் வெளியான ஸ்குவிட் கேம் என்ற வெப் தொடரை குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று பிரித்தானியாவை சேர்ந்த பள்ளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நவீன காலத்தில் குழந்தைகள் எப்போதும் போனும் கையுமாக சுற்றி வருகிறார்கள். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.


அமெரிக்காவில் மருத்துவமனை நோயாளிகளை கொன்றுவிட்டு, அதனை ரசித்து வந்த செவிலியர்!
[Wednesday 2021-10-20 17:00]

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மருத்துவமனை நோயாளிகள் நால்வரை வேண்டுமென்றே கொலை செய்த வழக்கில் நர்ஸ் ஒருவர் மரண தண்டனையை எதிர்கொண்டு வருகிறார். டெக்சாஸ் மாகாணத்தில் Hallsville பகுதியை சேர்ந்த 37 வயது வில்லியம் டேவிஸ் என்பவரே கொலை வழக்கில் சிக்கியவர். கொலை செய்யப்பட்ட அனைவரும் ஜூன் 2017 மற்றும் ஜனவரி 2018 க்கு இடையில் இதய அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


சிரியாவில் திடீரென வெடித்து சிதறிய பேருந்து: 13 பேர் உடல் சிதறி பலி!
[Wednesday 2021-10-20 17:00]

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 குண்டுகள் வெடித்ததில் இராணுவ பேருந்து ஒன்று சிக்கி, குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


பெயரை மாற்றிக்கொள்ளும் பேஸ்புக்: வெளியான காரணம்!
[Wednesday 2021-10-20 17:00]

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் (முகநூல்) பெயர் மாற்றப்படவுள்ளதாக தி வேர்ஜ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தலிபான்களின் வெறிச்செயல்: பிரபல விளையாட்டு வீராங்கனையின் தலை துண்டித்து கொலை!
[Wednesday 2021-10-20 17:00]

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் கஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து ஆட்சி அதிகாரம் தங்கள் வசமனதாக அறிவித்த தலீபான்கள் புதிய அரசையும் அமைத்து உள்ளனர்.


கனடாவின் இளம் வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த பைஸர் நிறுவனம் கோரிக்கை!
[Wednesday 2021-10-20 08:00]

கனடாவில் ஐந்து முதல் 11 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வேண்டுகோளை பைஸர் நிறுவனம் அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் கனடாவில் மெல்ல, மெல்ல குறைந்து வரும் நிலையில், அங்கிருக்கும் குறைந்த வயது கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு தரும் கோவிட் தடுப்பூசி: அமெரிக்க ஆய்வில் தகவல்!
[Wednesday 2021-10-20 08:00]

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பற்றி அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘ஜர்னல் ஆப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேசன்’ என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.


மலேசியாவில் உயிர் பிச்சை கேட்டு கதறி அழுத மரண தண்டனை குற்றவாளி: அப்படி என்ன செய்தார்?
[Wednesday 2021-10-20 08:00]

மலேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் உயிர் பிச்சைக் கேட்டு கதறி அழுத வீடியோ காட்சி பார்ப்போர் பலரையும் கலங்க வைக்கிறது. மலேசியாவின் Tawau நகரின் Kampung Pangkalan Wakuba பகுதியில் வசித்து வருபவர் Hairun Jalmani. மீன்வியாபாரியான இவரது வீட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு, சுமார் 113 கிராமுக்கு மேல் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


புலம்பெயர்வோரை கடுமையாக விமர்சித்த டக் போர்டு: வலுக்கும் கண்டனம்!
[Tuesday 2021-10-19 15:00]

புலம்பெயர்வோரை கடுமையாக விமர்சித்த ஒன்ராறியோ பிரீமியர் மீது கண்டனங்கள் குவிகின்றன. புதிய மருத்துவமனை ஒன்றைக் கட்டுவதற்கான நிதியுதவி குறித்த அறிவிப்பு ஒன்றைச் செய்வதற்காக Tecumseh என்ற இடத்திற்கு வந்திருந்த ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford, ஒன்ராறியோவின் பெரிய பிரச்சினையே பணியாட்கள் பற்றாக்குறைதான் என்றார்.

NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா