Untitled Document
April 25, 2024 [GMT]
பிரித்தானியாவில் அமுலுக்கு வரவிருக்கும் புதிய சட்டம்: மீறினால் இதுதான் கதி!
[Monday 2021-08-09 06:00]

பிரித்தானியாவில் செல்லப்பிராணிகள் திருட்டை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக புதிய கிரிமினல் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பிரித்தானியாவில் செல்லப் பிராணிகளைத் திருடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படவுள்ளது.


டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி , இருவர் கவலைக்கிடம்!
[Sunday 2021-08-08 17:00]

கனடாவின் டொராண்டோ நகரில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோவின் கென்சிங்டன் மார்க்கெட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.


கொரோனாவால் ஞாபக சக்தியை இழந்த சுவிஸ் பெண்மணி: அதிர்ச்சி சம்பவம்!
[Sunday 2021-08-08 17:00]

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பின்னர் மறதி நோயால் அவதிப்பட்டதாகவும், அதனால் வேலையை இழந்ததாகவும் சுவிஸ் பெண் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாநிலத்தில் Lenzburg பகுதியை சேர்ந்த 33 வயதான பீட்ரைஸ் என்பவரே கொரோனா பாதிப்புக்கு பின்னர் தாம் அனுபவித்த இன்னல்களை வெளிப்படுத்தியுள்ளார்.


மாயமான நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர்: மாபெரும் சிக்கலில் பிரித்தானியா!
[Sunday 2021-08-08 17:00]

பிரித்தானியாவிற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர் என்று பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிற்குள் படகு மூலம் நுழைந்த மொத்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஏற்கனவே 10,500-ஐ கடந்துவிட்டது.


குறைந்துவரும் பறைவைகளின் எண்ணிக்கை: பிரான்ஸ் எடுத்த அதிரடி முடிவு!
[Sunday 2021-08-08 17:00]

சர்ச்சைக்குரிய வேட்டை நுட்பங்களை பயன்படுத்தி பறவைகளை வேட்டையாட பிரான்ஸ் தடை விதித்துள்ளது. பிரான்சின் பாரம்பரிய பறவை வேட்டை நுட்பங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. ஜூன் மாதத்தில் இதேபோன்ற பசை பொறி வேட்டைக்கு தடை விதிக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.


தடுப்பூசி தொடர்பில் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட பிரித்தானியா!
[Sunday 2021-08-08 17:00]

பிரித்தானியாவில் கோவிட்-19 தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸுக்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கும் பிரித்தானிய இளைஞர்கள் தங்களுக்கான இடண்டாவது டோஸ் தடுப்பூசியை 6 வாரங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


"இந்தியாவுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் போதாது" - அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி!
[Sunday 2021-08-08 06:00]

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அமெரிக்க அரசு சார்பில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதன்படி பல்வேறு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நாடுகளுக்கு இதுவரை அமெரிக்க அரசு சார்பில் சுமார் 8 கோடிக்கும் அதிமான தடுப்பூசி டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


கோவிட்-19: இங்கிலாந்தில் ஒரே நாளில் 28,612 பேர் பாதிப்பு!
[Sunday 2021-08-08 06:00]

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,612- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 103 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.


நேரத்தை கழிக்க அமெரிக்க பெண் செய்த காரியம்: பின்னர் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
[Sunday 2021-08-08 06:00]

அமெரிக்காவில் விமானத்தை தவறவிட்ட பெண் இன்று மில்லியனராக மாறியுள்ள சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் Missouri-யில் இருக்கும் Kansas-ஐ சேர்ந்த Angela Caravella என்ற 51 வயது மதிக்கத்தக்க பெண் புளோரிடாவில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு திரும்புவதற்காக கடந்த மாதம் விமானத்திற்காக விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார்.


பிரித்தானியாவில் இலங்கை இளைஞன் செய்த கொடூர செயல்!
[Saturday 2021-08-07 17:00]

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவரின் பொறாமை குணத்தால் இளம் பெண் தன் வாழ்நாள் முழுவதும் துயரத்தை அனுபவிக்கும் கொடூரமான நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த விவகாரத்தில் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட இலங்கை இளைஞர் Lakshman Samarakoon என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


குற்றவாளி மீது காதலில் விழுந்த ரஷ்ய இளம் அதிகாரி: சினிமாவை மிஞ்சிய ஒரு உண்மை சம்பவம்!
[Saturday 2021-08-07 17:00]

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த ஒரு அழகிய இளம்பெண் உளவாளியாக பயிற்சி பெற்ற நிலையில், பிரபல கேங் ஒன்றின் தலைவனை மயக்கி அவனிடமிருந்து இரகசிய தகவல்களை சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டார். ஆனால், Aliia Roza (19) என்ற அந்த பெண், யாரை மயக்க இராணுவத்தால் அனுப்பப்பட்டாரோ அந்த கேங் தலைவனுடனேயே காதலில் விழுந்துவிட்டார். ஆம், Vladimir என்ற அந்த கேங் தலைவனை உண்மையாகவே காதலிக்கத் தொடங்கிவிட்டார் Aliia.


சுவிஸில் இரு முக்கிய மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
[Saturday 2021-08-07 17:00]

சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் ஆர்காவ் மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சூரிச் மற்றும் ஆர்காவ் மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளால் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.


20 மாத குழந்தையை தனியே தவிக்க விட்டு பிரித்தானிய தாயார் செய்த கொடூர செயல்!
[Saturday 2021-08-07 17:00]

பிரித்தானியாவில் தனது 20 மாத குழந்தையை தனியாக வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு, 6 நாட்களாக பட்டினி போட்டு கொன்ற கொடூர தாய்க்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பிரைட்டனில் வசிக்கும் 19 வயது இளம் பெண் வெற்பி குடி (Verphy Kudi), கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் திகதி, தனது 20 மாத குழந்தை ஆசியாவை (Asiah) வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார்.


கொவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 1,519 பேர் பாதிப்பு - 17 பேர் பலி!
[Saturday 2021-08-07 17:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,519பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர்.


"அந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்" - எச்சரித்த பிரித்தானியா!
[Saturday 2021-08-07 06:00]

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குல் தொடர்ந்து வருவதால், இங்கிருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக வெளியேறும் படி எச்சரிக்கப்படுகின்றனர். ஆப்கானிஸ்தானில் இராணுவத்துக்கும், தாலிபன் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் இராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு நிலைமை மோசமாகி வருகிறது.


பிரான்சில் அமுலுக்கு வரும் புதிய கொரோனா கட்டுப்பாடு விதி!
[Saturday 2021-08-07 06:00]

பிரான்சில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கி, நாளை முதல் புதிய கொரோனா கட்டுப்பாடு விதி நடைமுறைக்கு வரவுள்ளது. கொரோனாவின் நான்காவது அலையில் சிக்கியிருக்கும் பிரான்ஸ், மக்கள் தடுப்பூசி போடும் படி அறிவுறுத்தி வருகிறது. இதற்கிடையில் நாட்டில் வரும் 9-ஆம் திகதி முதல் சுகாதார பாஸ் கட்டாயம் என்ற கட்டுப்பாட்டு விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.


மீன் பிடிக்க சென்ற பிரித்தானிய நண்பர்களுக்கு காத்திருந்த எதிர்பாராத அதிர்ஷ்டம்!
[Saturday 2021-08-07 06:00]

பிரித்தானியாவில் மீன் பிடிக்க சென்ற நண்பர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய சம்பவம் நடந்துள்ளது. பிரித்தானியாவின், இங்கிலாந்தைச் சேர்ந்த Kyle Kavila, Gareth Valarino மற்றும் Sean Desuisa ஆகிய நண்பர்கள் கடந்த மாதம் ஜுலை 9-ஆம் திகதி, வழக்கம் போல் பொழுது போக்கிற்காக மீன் பிடிக்க சென்றுள்ளனர்.


தவிக்கும் ஜெர்மெனி: உதவ முன்வந்த அகதிகள் - நெகிழ்ச்சி சம்பவம்!
[Friday 2021-08-06 17:00]

சென்ற மாதம் பெருவெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டு 180 பேரை பலிகொடுத்த ஜேர்மனிக்கு உதவுவதற்காக அங்கு வாழும் சிரிய அகதிகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளனர். பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜேர்மன் நகரங்களை சுத்தம் செய்ய உதவியவர்களில் சிரிய அகதிகளும் அடக்கம்.


அமெரிக்காவில் பட்டப்பகலில் பெண் செய்த பயங்கர செயல்!
[Friday 2021-08-06 17:00]

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட கார்பந்தயத்தின்போது, சன்னலுக்கு வெளியே இளம் பெண் ஒருவர் AK-47 ரக துப்பாக்கியை வைத்து குறிவைத்தபடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் பிரான்சிஸ்கோ நகரில் கடந்த ஜூலை 11-ஆம் திகதி நடந்தது.


அமேசானில் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வந்த மற்றொரு பொருள்: கனேடிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
[Friday 2021-08-06 17:00]

அமேசானில் நெக்லஸ் ஆர்டர் செய்திருந்தார் கனேடிய இளம்பெண் ஒருவர். ஆனால், அவருக்கு வந்த நெக்லசை பரிசோதித்தபோது அதிலிருந்த பொருள் அவரை அதிர்ச்சியடையச் செய்தது. கியூபெக்கைச் சேர்ந்த Nadine Roy என்ற பெண், தன் பாட்டியின் நினைவாக, அவரது அஸ்தியை சேகரித்து வைக்கும் வகையில் ஒரு நெக்லசை ஆர்டர் செய்திருந்தார்.


காதலியை கொன்று சடலத்துடன் ஏழு மாதங்கள் வசித்து வந்த அமெரிக்க அரக்கன்!
[Friday 2021-08-06 17:00]

அமெரிக்காவில் வீடு ஒன்றிலிருந்து நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசிய நிலையில், அது இறந்த ஒரு விலங்கின் உடலிலிருந்து வீசுவதாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் எண்ணிவந்துள்ளார்கள். ஆனால், அது ஒரு பெண்ணின் உடலிலிருந்து வீசிய துர்நாற்றம் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.


கொரோனாவை வென்ற 14 இலட்சத்துக்கும் அதிகமான கனேடிய மக்கள்!
[Friday 2021-08-06 17:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக 14இலட்சத்து 582பேர் குணமடைந்துள்ளனர்.


சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
[Friday 2021-08-06 06:00]

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.


"எவ்வளவு நாட்கள் வரை இப்பிரச்னைகள் நீளும் என எங்களுக்கு தெரியாது" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
[Friday 2021-08-06 06:00]

சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பின்னர் வரும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.


"விரைவில் மூன்றாவது தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாகும" - பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்!
[Friday 2021-08-06 06:00]

பிரான்சில் கொரோனாவிற்கான மூன்றாவது தடுப்பூசி போடப்படுவது குறித்து ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது பல்வேறு வடிவங்களில் உருமாறி பரவ துவங்கியுள்ளது.


முகக்கவசம் அணியாவிட்டால் கிரிமினல் குற்றமாக கருதப்பட வேண்டும்: லண்டன் மேயர் வலியுறுத்தல்!
[Thursday 2021-08-05 16:00]

இனி சுரங்க ரயில்களில் மாஸ்க் அணியாவிட்டால், அது கிரிமினல் குற்றமாக கருதப்படும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வரும்படி பிரித்தானிய அரசை வலியுறுத்தி வருகிறார் லண்டன் மேயர்.


சுவிஸ் நோக்கி படையெடுக்கும் செல்வந்தர்கள்: வெளியான காரணம்!
[Thursday 2021-08-05 16:00]

பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது உண்மைதான் போலும்... ஆமாம், பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சுவிட்சர்லாந்தில் வாழிட உரிமம் வாங்கலாமாம்! வாழிட உரிமங்களில் பலவகை உண்டு. அவற்றில் ஒன்று B residence permit என்னும் வாழிட உரிமம்.


கனடாவில் மாயமான இந்திய இளைஞர்!
[Thursday 2021-08-05 16:00]

கனடாவில் நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்த இந்திய இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளார். இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினம் என்ற இடத்தைச் சேர்ந்த Tathikonda Avinash (26) என்ற இளைஞர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகத்து 1) தன் நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா