Untitled Document
March 29, 2024 [GMT]
கொவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 1,388 பேர் பாதிப்பு - 52 பேர் பலி!
[Thursday 2021-06-10 16:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 388பேர் பாதிக்கப்பட்டதோடு 52பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 96ஆயிரத்து 798பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 843பேர் உயிரிழந்துள்ளனர்.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 17.51 கோடியாக உயர்வு!
[Thursday 2021-06-10 08:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


வட கொரிய அதிபர் கிம்மின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம்: என்ன காரணம்?
[Thursday 2021-06-10 08:00]

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில மாதங்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு பயந்து அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்று பரவலாக சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக பொது வெளியில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டுள்ளார். இதற்கு முன்பு இருந்ததை விட உடல் மெலிந்த நிலையில் கிம் ஜாங் உன் தற்போது தோற்றமளிக்கிறார். இதனால், அவரது உடல் நிலை குறித்தும் ஊகங்கள் எழத்தொடங்கியுள்ளன.


ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் விரைந்த அதிபர் ஜோ பைடன்!
[Thursday 2021-06-10 08:00]

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக பிரிட்டன் சென்றடைந்துள்ளார். ஐரோப்பாவில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன், பிரிட்டனில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளார்.


கனடாவை உலுக்கும் மர்ம நோய்: 6 பேர் பலி!
[Wednesday 2021-06-09 16:00]

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோயினால் 6 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.


பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த சம்பவம்: வெளியான மற்றுமொரு திடுக்கிடும் தகவல்!
[Wednesday 2021-06-09 16:00]

பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டவாது சந்தேக நபர் ஆயுதம் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக BFMTV தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோனை நபர் ஒருவர் பளார் என கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


வேகமடுக்கும் 'டெல்டா' வகை கொரோனா: பிரித்தானியாவில் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு!
[Wednesday 2021-06-09 16:00]

பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஜூன் 21-ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் ஜூன் 21-ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரலாமா வேண்டாமா என்பதை, அதற்கு முந்தையை நான்கு வாரங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அமைச்சரவையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


பிரான்சில் இன்று முதல் அமுலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?
[Wednesday 2021-06-09 16:00]

இன்று முதல் (ஜூன் 9), பிரான்சில் மூன்றாவது கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல் அமுலுக்கு வருகிறது. அதன்படி என்னென்ன மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன என்பதைக் காணலாம். இன்று முதல் உணவகங்கள், மதுபான விடுதிகள் முதலானவற்றில் கட்டிடங்களுக்கு உள்ளேயும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு, பானம் அருந்த அனுமதியளிக்கப்படுகிறது.


இரண்டாம் உலகப்போரின்போது மாயமான கனேடிய போர் வீரர்கள் குறித்து வெளியான அதிமுக்கிய தகவல்!
[Wednesday 2021-06-09 16:00]

ஜேர்மன் கிராமம் ஒன்றில் பெயர் தெரியாத ஒரு அமெரிக்கரின் கல்லறை ஒன்று உள்ளது. ஜேர்மனியின் Auerstedt கிராமத்தில் உள்ள அந்த கல்லறையில், ’1945ஆம் ஆண்டு உயிரிழந்த பெயர் தெரியாத அமெரிக்க போர் வீரர்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ஒரு அமெரிக்கரின் கல்லறை அல்ல என்கிறார் ஜேர்மன் ஆய்வாளரான René Schütz. அது கனேடிய போர் விமானம் ஒன்றிலிருந்து விழுந்த கனேடிய போர் வீரரின் கல்லறை என்கிறார் அவர்.


சுவிஸில் கோவிட் சான்றிதழ் விநியோகம் துவங்கியது!
[Wednesday 2021-06-09 16:00]

சுவிட்சர்லாந்தில் கொரோனா சான்றிதழ் விநியோகம் துவங்கி, முதல் சான்றிதழ் வழங்கப்பட்டாயிற்று. மின்னணு அல்லது காகித வடிவில் கிடைக்கும் இந்த கொரோனா சான்றிதழ் சர்வதேச பயணம் முதல் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும்.


பிரான்ஸில் பரபரப்பு: அதிபர் இமானுவல் மேக்ரூனை கன்னத்தில் அறைந்த இளைஞர்! Top News
[Wednesday 2021-06-09 08:00]

பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரூனை இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 57 லட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 லட்சத்து ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 17.47 கோடியாக உயர்வு!
[Wednesday 2021-06-09 08:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


சுவிஸில் பச்சிளம் குழந்தையை சித்திரவதை செய்து கொடூரமாக கொன்ற தந்தை!
[Wednesday 2021-06-09 08:00]

சூரிச் ஓபர்லாந்தைச் சேர்ந்த ஒரு தந்தை தனது எட்டு மாத மகனை உலுக்கி, மரணத்திற்கு காரணமான சம்பவத்தில் தண்டனைத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார். குறித்த சம்பவத்தில் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கனடாவில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் குடும்பம்!
[Tuesday 2021-06-08 17:00]

கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் நடந்த இந்த சம்பவத்தில், 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46 வயதான ஆண், மற்றும் 15 வயதான சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.


விலங்குகளுக்கு கோவிட் தடுப்பூசி உருவாக்கிய ரஷியா!
[Tuesday 2021-06-08 17:00]

உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை வெல்லும் ஒரே ஆயுதமான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. ஆனாலும், இன்னும் பல கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது.


கொவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 1,583 பேர் பாதிப்பு - 37 பேர் பலி!
[Tuesday 2021-06-08 17:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 583பேர் பாதிக்கப்பட்டதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 94ஆயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 761பேர் உயிரிழந்துள்ளனர்.


பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சடலங்கள்!
[Tuesday 2021-06-08 16:00]

பிரான்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆயிரக்கணக்கான சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக பல்கலைக்கழக முன்னாள் தலைவர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரீஸ் பல்கலைகழக தலைவரான Frederic Dardel மீது, பிணங்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மெக்ஸிகோவில் பிரித்தானியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்!
[Tuesday 2021-06-08 16:00]

மெக்ஸிகோவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் முதலையால் தாக்கப்பட்ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த மெலிசா மற்றும் ஜார்ஜி லாரி இருவரும் ஐடென்டிகள் ட்வின்ஸ் எனப்படும் உடன் பிறந்த இரட்டை சகோதரிகள் ஆவர். இருவருக்கும் வயது 28.


கோவிட்-19 தோற்றம்: சீனாவை கட்டாயபடுத்த முடியாது - உலக சுகாதார அமைப்பு!
[Tuesday 2021-06-08 08:00]

சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை. உகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா பரவியதாக கருதப்படுகிறது. அதே சமயத்தில், கொரோனா வைரசை சீனா தனது உகான் பரிசோதனை கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்று ஒருசாரார் கூறுகின்றனர்.


ஜப்பானில் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கை பெண்!
[Tuesday 2021-06-08 08:00]

இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பல கனவுகளுடன் ஜப்பானுக்கு சென்ற நிலையில், அவர் மிகவும் கொடூரமான உயிரிழந்த சம்பவம் குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது, இலங்கையின் கொழும்புவில் இருக்கும் Kadawatha-வின் Imbulgoda பகுதியைச் சேர்ந்தவர் Sandamali(33). இவர் ஜப்பானில் மிகவும் கொடூரமான முறையில் உயிரிழந்தார். இவரின் மரணம் குடும்பத்தினரை கடும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.


விண்வெளிக்கு பயணிக்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்!
[Tuesday 2021-06-08 08:00]

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான்நிறுவனத்தின் நிறுவனரான ‌ஜெப் பெசோஸ்,புளூ ஆரிஜின்என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.


பிரித்தானிய அரசின் அதிரடி அறிவிப்பால் விரக்தியில் நாடு திரும்பும் பிரித்தானியர்கள்!
[Monday 2021-06-07 16:00]

பிரித்தானிய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பின் காரணமாக, சுற்றுலாவுக்காக போர்ச்சுகல் நாட்டுக்கு சென்றிருந்த பிரித்தானியர்கள் விரக்தியுடன் நாடு திரும்பி வருகின்றனர். எந்த பயணத் தடையும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளும் இல்லாமல் சுற்றுலா சென்று வர அறிவிக்கப்பட்ட பச்சை நிற நாடுகளின் பட்டியலில் போர்ச்சுகல் நாடும் இருந்தது. இதனால் பிரித்தானியர்கள் பலரும் தங்கள் விடுமுறை நாட்களை கழிக்க போர்ச்சுகலில் உள்ள பல சுற்றுலா தலங்களுக்கு சென்றிருந்தனர்.


சுவிஸ் இளம்பெண்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: தடுப்பூசி காரணமா?
[Monday 2021-06-07 16:00]

சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட பிறகு பல இளம் பெண்கள் திடீரென தங்கள் மாதவிடாயில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அடையாளம் கண்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மட்டுமின்றி தன் நாட்டு மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி அளித்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் இடம் பிடித்துள்ளது.


தென் ஆப்பிரிக்காவில் பெண்ணின் உடலில் 32 முறை உருமாறிய கொரோனா: வெளியான அதிர்ச்சி தகவல்!
[Monday 2021-06-07 16:00]

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கொரோனா 32 முறை உருமாறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஆய்வாளர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.


மெக்ஸிகோவில் பயங்கரம்: துண்டிக்கப்பட்ட மனித தலையை வாக்குச்சாவடியில் தூக்கி எறிந்த மர்ம நபர்!
[Monday 2021-06-07 16:00]

மெக்ஸிகன் எல்லை நகரமான டிஜுவானாவின் டெர்ராஸாஸ் டெல் வேலே பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் ஒருவர் துண்டிக்கப்பட்ட மனித தலையை வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் இடைக்கால தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் மெக்சிகன் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.


கோவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 1,389 பேர் பாதிப்பு - 12 பேர் பலி!
[Monday 2021-06-07 16:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 389பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 92ஆயிரத்து 563பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 724பேர் உயிரிழந்துள்ளனர்.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 17.40 கோடியை கடந்தது!
[Monday 2021-06-07 08:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


3 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தயாராகும் சீன அரசு!
[Monday 2021-06-07 08:00]

சீனாவில், 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அதற்கு சீனா அங்கீகாரம் கொடுத்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸிற்கு தற்போது 35 வயதிற்கு மேற்பட்டோருக்கே அதிகமாக போடப்பட்டு வருகிறது. இன்னும் சிறிய குழந்தைகளுக்கு ஏற்ற கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா