Untitled Document
March 28, 2024 [GMT]
கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பிரான்ஸ்!
[Saturday 2021-05-08 06:00]

பிரான்சில் நாளை நள்ளிரவு முதல் குறிப்பிடப்படும் சில நாடுகளில் இருந்து வந்தால், 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் இப்போது மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. கொரோனாவால் ஏராளமான பாதிப்பை சந்தித்துள்ள பிரான்ஸ், இந்த முறை மிகவும் கவனமாக ஊரடங்கு, தடுப்பூசி போன்றவைகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.


'ஸ்புட்னிக் வி'-யை தொடர்ந்து ரஷ்யா கண்டுபிடித்த மற்றொரு தடுப்பூசி!
[Saturday 2021-05-08 06:00]

கொரோனாவிற்காக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ள ரஷ்யா, அதை விநியோகம் செய்து வரும் நிலையில், தற்போது ஸ்புட்னிக் லைட் என்ற பெயரில் மற்றொரு தடுப்பூசியையும் அந்நாடு உருவாக்கியுள்ளது. கொரோனா பரவல் ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இப்போது தீவிரமாக பரவி வருகிறது. ஆசிய கண்டங்கள் மட்டுமின்றி, மேலும் பல நாடுகளில் இந்த கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை.


ஜேர்மனியில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டம்: யார் யாருக்கு பொருந்தும்?
[Friday 2021-05-07 15:00]

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சுதந்திரம் வழங்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை ஜேர்மன் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி ஊரடங்கு, தனிமைப்படுத்தல் முதலான விதிகளைப் பின்பற்றவேண்டியதில்லை.


இன்று மாலை பிரித்தானிய அரசு வெளியிடவிருக்கும் முக்கிய அறிவிப்பு!
[Friday 2021-05-07 15:00]

பிரித்தானியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு விடுமுறைக்கு பயணிப்பதற்கான நாடுகளின் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், வரும் மே 17-ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.


நிரந்தர வாழிட உரிமம் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்க துவங்கிய கனடா!
[Friday 2021-05-07 15:00]

90,000 வெளிநாட்டவர்கள் பயன்பெறும் வகையில், நிரந்தர வாழிட உரிமம் வழங்கும் திட்டம் ஒன்றிற்கான விண்ணப்பங்கள் வழங்கும் திட்டம் ஒன்றை கனடா துவங்கியுள்ளது. அத்திட்டத்தின் கீழ், 40,000 வெளிநாட்டு மாணவர்கள், அத்தியாவசிய பணியாற்றும் 30,000 தற்காலிக பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையில் தற்காலிக பணியாற்றும் 20,000 பேருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்கப்பட உள்ளது.


பிரான்ஸை ஓடவிட்ட பிரித்தானியா: அதிகரிக்கும் பதற்றம்!
[Friday 2021-05-07 15:00]

பிரித்தானிய கடல் பரப்பில் அமைந்துள்ள ஒரு தீவுப் பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பில் எழுந்த பிரச்சினை, கிட்டத்தட்ட போர் உருவாகிவிடுமோ என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து, அதாவது, பிரெக்சிட்டைத் தொடர்ந்து, பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே மீன் பிடித்தல் தொடர்பில் பிரச்சினைகள் உருவாகின.


அமெரிக்காவில் 12 வயது சிறுமி வெறிச்செயல்: மூவர் கவலைக்கிடம்!
[Friday 2021-05-07 15:00]

அமெரிக்காவில் நடுத்தர பள்ளி ஒன்றில் 12 வயது சிறுமி துப்பாக்கியால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியையை சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Idaho மாநிலத்திலே உள்ள நடுத்தர பள்ளியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. 6ம் வகுப்பு படிக்கும் மாணவி (12 வயது) தனது பையில் கை துப்பாக்கியை மறைத்து வைத்து பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார்.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 15.66 கோடியாக உயர்வு!
[Friday 2021-05-07 08:00]

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


'இந்தியாவுக்கு உதவாவிட்டால் உயிர்பலி உலகமெங்கும் எதிரொலிக்கும்' - யுனிசெப் எச்சரிக்கை!
[Friday 2021-05-07 08:00]

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, ஆவேச எழுச்சியாக மாறி வருகிறது. நேற்று வாரத்தில் இரண்டாவது முறையாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது. ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் 24 மணி நேரத்தில் இறந்திருக்கிறார்கள். இந்த தருணத்தில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. ஐ.நா.சபையின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப், உயிர் காக்கும் மருந்துகளையும், முக ஷீல்டுகளையும் அனுப்பியது.


98 சதவீத இறப்புகளை தடுக்கும் பைசர் தடுப்பூசி!
[Friday 2021-05-07 08:00]

முதல் மற்றும் இரண்டாவது பைசர் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், அது 98 சதவீத இறப்புகளை தடுத்து நிறுத்துவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், தடுப்பூசி தான் அதற்கு நிரந்தர தீர்வு என்று கூறப்பட்டது. இதனால் உலகின் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தன.


பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் போர் உருவாகும் சூழலை உருவாக்கிய பெண் அமைச்சர் குறித்து வெளியான முக்கிய தகவல்!
[Friday 2021-05-07 08:00]

பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் போர் உருவாகும் சூழலை உருவாக்கியுள்ள பெண் அமைச்சர், ஒரு மீனவரின் மகளாம். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானால் கடல்வள அமைச்சராக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள Annick Girardin (56), பிரெக்சிட்டை வெறுப்பவர். உலகம் முழுவதும் ஆங்கிலம் வியாபித்து வரும் நிலையில், ஆங்கிலத்திடமிருந்து பிரெஞ்சு மொழியைக் காப்பாற்றுவதற்காக தெருவில் இறங்கிப் போராடியவராம் Annick.


லண்டன் தேம்ஸ் நதியில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன்!
[Friday 2021-05-07 08:00]

லண்டன் தேம்ஸ் நதியில், இருந்து சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரின் புகைப்படத்தை குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். கடந்த 28-ஆம் திகதி பிரித்தானியாவின் தலைநகரான் லண்டனில் இருக்கும் தேம்ஸ் நதியில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டான்.


கொரோனா தொற்று: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 15.58 கோடியாக உயர்வு!
[Thursday 2021-05-06 08:00]

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


கோவிட்-19: அமீரகம் வருபவர்களுக்கு இனி இது கட்டாயமில்லை!
[Thursday 2021-05-06 08:00]

இன்னும் அடுத்த 5 மாதங்களில் உலகில் பல மாற்றங்களை காணமுடியும். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. ஒட்டுமொத்தமாக கொரோனா பரவலில் வரும் 5 மாதங்களில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தையும், ஒரு தெளிவான நிலையும் வரும்.


தனக்கென புதிய வலைத்தளத்தை தொடங்கிய டிரம்ப்!
[Thursday 2021-05-06 08:00]

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


பிரித்தானியாவை மிரட்டும் பிரான்ஸ்!
[Wednesday 2021-05-05 16:00]

பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, பிரித்தானிய தீவு ஒன்றிற்கு செல்லும் மின்சாரத்தைத் துண்டித்துவிடுவோம் என பிரான்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது. சமீபத்தைய சில வாரங்களாகவே பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் மீன் பிடித்தல் தொடர்பில் உரசல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.


மற்றவர் மூக்கில் விட்ட குச்சிகளை கொண்டு 9000 பேருக்கு கொரோனா சோதனை: வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
[Wednesday 2021-05-05 16:00]

இந்தோனேசியாவில் விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள எற்கனவே வேறொருவர் மூக்கில் விட்டப்பட்ட குச்சிகளை கழுகி மீண்டும் புதிது போல் விற்ற மருத்து நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் (Covid nasal swab test) மூக்கு அல்லது தொண்டையில் இருந்து, நுனியில் பஞ்சு கொண்ட ஒரு குச்சி மூலமாக எடுக்கப்பட்ட சளி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்துவது வழக்கமாகிவிட்டது.


ரொறன்ரோவில் 12 வயது சிறுமியை நூதன முறையில் கடத்த முயன்ற நபர்!
[Wednesday 2021-05-05 16:00]

கனடாவில் 12 வயது சிறுமியை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் கடந்த 23ஆம் திகதி மாலை 5.40 மணிக்கு நடந்துள்ளது. அன்றைய தினம் 12 வயதான சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.


அமெரிக்காவில் நள்ளிரவில் மர்ம நபரால் பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
[Wednesday 2021-05-05 16:00]

அமெரிக்காவில் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று தூங்கி கொண்டிருந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். நார்த் கரோலினாவின் சார்லோட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.


பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படவிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!
[Wednesday 2021-05-05 16:00]

பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்றின் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில், பிரித்தானியா அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்களையும், தகுதி வாய்ந்த இந்திய இளைஞர்களையும் ஏற்றுக்கொள்ளவும் உறுதியளித்துள்ளது.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 15.49 கோடியாக உயர்வு!
[Wednesday 2021-05-05 07:00]

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


விரைவில் திருமணம் செய்துகொள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா முடிவு!
[Wednesday 2021-05-05 07:00]

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்து வருபவர் ஜெசிந்தா ஆர்டென் (வயது 40). தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக உள்ள கிளார்க் கைபோர்டு (வயது 44) என்பவருடன் கடந்த 2019ம் ஆண்டு நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கோடை காலத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வது என திட்டமிட்டு உள்ளார். எனினும், திருமண தேதியை அவர் வெளியிடவில்லை.


பிரேசில் பாடசாலையில் இளைஞன் வெறிச்செயல்: ரத்தவெள்ளத்தில் சரிந்த நால்வர்!
[Wednesday 2021-05-05 07:00]

பிரேசிலில் சிறார் பாடசாலை ஒன்றில் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் சிறார்கள் எனவும், இருவர் பாடசாலை ஊழியர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. பிரேசிலின் சாண்டா கேதரினா மாகாணத்தில் அமைந்துள்ள சிறார் பாடசாலை ஒன்றில் 18 வயதான இளைஞர் ஒருவர் கத்தி போன்ற கூரான ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்துள்ளான்.


பிரித்தானியாவில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உடல் கருகி பலி!
[Tuesday 2021-05-04 16:00]

பிரித்தானியாவில் இன்று காலை ஒரு வீட்டில் எரிவாயு வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியில், ஆஷ்ஃபோர்டு நகரத்தில் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில் Willesborough, Mill View பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சக்திவாய்ந்த வெடுக்குண்டு வெடித்த சத்தம் கேட்டுள்ளது.


ரொறன்ரோவில் உறுதியான தமிழ் இருக்கை: அள்ளி கொடுத்த உலக தமிழர்கள்!
[Tuesday 2021-05-04 16:00]

கனடாவின் ரொறன்ரோவில் தமிழ் இருக்கை அமையவுள்ளது. கனடாவின் ரொறன்ரோவின் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான முயற்சிகளை தமிழ் இருக்கை அறக்கட்டளை அமைப்பும், கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து மேற்கொண்டன.


பிரித்தானியா விதித்த கட்டுப்பாடுகளை நிராகரித்த பிரான்ஸ்!
[Tuesday 2021-05-04 16:00]

மீன் பிடி உரிமம் தொடர்பில் பிரித்தானியா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை நிராகரிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. Channel தீவுகள் பகுதியில் மீன் பிடிக்க உரிமம் வழங்குவது தொடர்பாக பிரித்தானியா புதிய தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


அமெரிக்காவில் கடித்து குதறப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த இளம்பெண்: அதிர்ச்சி பின்னணி!
[Tuesday 2021-05-04 16:00]

அமெரிக்காவில் நாய்களுடன் வாக்கிங் சென்ற இளம்பெண் ஒருவர் கடித்துக் குதறப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொலராடோவிலுள்ள Durango என்ற பகுதியில், அந்த பெண் தன் இரண்டு நாய்களுடன் வாக்கிங் சென்றுள்ளார். பின்னர் அவரது காதலன் வீட்டுக்குத் திரும்பும்போது, அங்கே அந்த இரண்டு நாய்கள் மட்டும், இருக்க, அவரது காதலியைக் காணாததால் பொலிசாருக்கு தகவலளித்துவிட்டு தானே தன் காதலியைத் தேடிச்சென்றுள்ளார்.


மெக்சிகோவில் பயங்கரம்: மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 23 பேர் பலி - 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
[Tuesday 2021-05-04 16:00]

மெக்சிகோவில் மேம்பாலம் இடிந்ததால் கீழே விழுந்து மெட்ரோ ரயில் நொறுங்கியது.இதில் பயணித்த 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா