Untitled Document
April 19, 2024 [GMT]
கொரோனா தொற்று காலத்திலும் வெளிநாடுகள் செல்லும் கனேடியர்கள்!
[Tuesday 2021-01-19 17:00]

கனடிய விமான நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 முதல் 2021 ஜனவரி 16ஆம் திகதி வரை கனடாவிற்கும் பிரபலமான விடுமுறை இடங்களுக்கும் இடையில் 1,500க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கியுள்ளன. இந்த எண்ணிக்கையில் இரத்து செய்யப்பட்ட விமானங்கள் எதுவும் இல்லை.


தாயகம் திரும்பிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைதுக்கு உலக நாடுகள் கண்டனம்!
[Tuesday 2021-01-19 08:00]

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி. மேலும் ஊழலுக்கு எதிராக ஒரு அமைப்பை தொடங்கி அதன் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.


கொரோனாவின் கோரப்பிடியில் பிரித்தானியா: இறப்பு விகிதத்தில் முதலிடம்!
[Tuesday 2021-01-19 08:00]

கொரோனா இறப்பு விகிதத்தில், பிரித்தானியா உலக நாடுகளை முந்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில், ஜனவரி 11 முதல் அதிக கொரோனா இறப்பு விகிதத்தை பிரித்தானியா கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் பிரித்தானியாவில் சராசரியாக நாள் ஒன்றிற்கு 935 பேர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.


பொருளாதாரத்தில் அசுர வேகம்: உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நாடு!
[Tuesday 2021-01-19 08:00]

கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பல ஸ்தம்பித்து பொருளாதாரத்தில் நிலைகுலைந்துள்ள நிலையில், சீனா மட்டும் கடந்த ஆண்டில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்துடன் உலக நாடுகள் போராடியதால் உலகப் பொருளாதாரம் 4.3 சதவீதம் சரிவை கண்டுள்ளது.


அவுஸ்திரேலியாவை தொடர்ந்து பிரித்தானியா செயல்படுத்தவிருக்கும் புதிய திட்டம்!
[Monday 2021-01-18 17:00]

பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைவரும் இனி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, பிரித்தானியாவுக்குள் வருவோர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதற்காக ஹொட்டல்களை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர்கள் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.


கோவிட் விவகாரத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்: அதிர்ச்சியில் உலக நாடுகள்!
[Monday 2021-01-18 17:00]

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் 2017-ல் ஒரு குகையில் மாதிரிகளை சேகரிக்கும் போது COVID-19 பாதிக்கப்பட்ட வெளவால்களிடம் கடிவாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் தற்போது பெரும் பாதிப்பையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு சீனாவின் வுஹான் நகரில் பதிவானது. பின்னர் ஆயிரக்கணக்காண மக்களுக்கு பரவிதைத்த தொடர்ந்து, உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச பயணிகள் மூலமாக பரவியது.


கனடாவில் மாயமான இளம்பெண்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!
[Monday 2021-01-18 17:00]

கனடாவில் காணாமல் போயுள்ள இளம்பெண் தொடர்பில் முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இந்த தகவலானது ரொறன்ரோ பொலிசாரின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Susan Felix என்ற 26 வயதான இளம்பெண் கடந்த 11ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.


கொரோனா விவகாரத்தில் பிரித்தானிய அரசு எடுத்த முக்கிய முடிவு!
[Monday 2021-01-18 17:00]

பிரித்தானிய அரசு வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து பெரியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திவிட முடிவெடுத்துள்ளது. வேகமாக பரவிவரும் கொரோனா வைரசுக்கு மத்தியில் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற பிரித்தானிய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.


கனடாவில் 9 பேரின் உயிரை பறித்த உருமாறிய கொரோனா!
[Monday 2021-01-18 17:00]

கனடா நகரமொன்றில் 110 பேருக்கு பரவிய அதிவேக கொரோனா தொற்று ஒன்று, 10 நாட்களில் 9 பேரை பலிகொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள Barrie நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில், ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 9.54 கோடியாக உயர்வு!
[Monday 2021-01-18 08:00]

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


சூடானில் பயங்கரம்: கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்கள்!
[Monday 2021-01-18 08:00]

சூடானில் கிளர்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 83 பேர் கொல்லப்பட்டதுடன் 160 பேர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் 2003 ஆம் ஆண்டு முதல் டர்பர் மாகாணத்தை மையமாக கொண்டு உள்நாட்டு போர் நிலவி வருகிறது.


கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள முடியாது: பிரித்தானிய அமைச்சர்!
[Monday 2021-01-18 08:00]

பிரித்தானியாவில் ஊரடங்கை விலக்கிக்கொண்டாலும், அடுக்கு முறை கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் என வெளிவிவகார அமைசார் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஊரடங்கை விலக்கிக்கொள்ள அரசு திட்டமிட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் இன்று தெரிவித்துள்ளார்.


உலகளவில் புலம் பெயர்ந்து வசிப்போரின் பட்டியலை வெளியிட்ட ஐ.நா: முதலிடத்தில் எந்த நாட்டினர் தெரியுமா?
[Sunday 2021-01-17 17:00]

உலகளவில் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வசிப்போரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான 2020ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை, ஐ.நா மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவு வெளியிட்டுள்ளது. இது குறித்து மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவின் அதிகாரி பிளேர் மெனோசி கூறுகையில், இந்தியாவைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.


ஜோ பைடன் நிர்வாகத்தில் இடம்பெற்ற 20 இந்திய-அமெரிக்கர்கள்: வரலாற்றில் இதுவே முதல்முறை!
[Sunday 2021-01-17 17:00]

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் வரும் ஜனவரி 20-ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். மேலும், இந்திய-அமெரிக்கரான கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவியேற்கிறார். அமெரிக்க வரலாற்றிலேயே கமலா ஹாரிஸ் தான் துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கும் முதல் பெண்மணி ஆவார். அதேபோல், கமலா ஹாரிஸ் (56) தான் அமெரிக்காவின் துணைத் தலைவராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.


கனடாவில் மரத்தை வெட்டிய நபருக்கு நேர்ந்த கதி!
[Sunday 2021-01-17 17:00]

கனடாவில் மரம் வெட்டிய நபர் அதன் கீழ் பகுதியில் சிக்கி கொண்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மொண்றியலில் உள்ள Hebertville நகராட்சியில் தான் இந்த சம்பவம் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு நடந்துள்ளது.


பிரான்சில் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
[Sunday 2021-01-17 17:00]

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, தேவையற்ற பயணங்கள் தவிர்க்கும் படி பொலிசார் மக்களுக்கு எச்சரித்துள்ளனர். கொரோனா பரவலுக்கிடையே பிரான்சில் இப்போது பனிப்பொழிவு அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும், பல மாவட்டங்களில் பனிப்பொழிவு மற்றும் பனி வழுக்கல் அதிகமாக இருப்பதால், பிரான்ஸின் வானிலை மையம் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது.


ஜேர்மனியில் 'அல்லாஹு அக்பர்' என கத்தியபடி பெட்டி ஒன்றை விட்டுச்சென்ற மர்ம நபர்!
[Sunday 2021-01-17 08:00]

ஜேர்மனியின் Frankfurt விமான நிலையத்தில் ஒருவர் பெட்டி ஒன்றை கைவிட்டுவிட்டு, அல்லாஹு அக்பர் என கத்தியபடி மாயமானதை அடுத்து ஒரு முனையம் தற்காலிகமாக மூடப்பட்டது. Frankfurt விமான நிலையத்தின் ஒன்றாம் இலக்க முனையத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


பெண் ஒருவரை நிர்வாணமாக்கி கொடூரமாக சித்திரவதை செய்த பிரித்தானிய போலீசார்!
[Sunday 2021-01-17 08:00]

பிரித்தானியாவில் தவறுதலாக கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை, கடும் குளிரில் நிர்வாணமாக சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் மன்னிப்பு கோரியுள்ளனர். பிரித்தானியாவின் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதியை சேர்ந்த 52 வயது யுவோன் ஃபாரெல் என்பவரிடமே பொலிசார் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளனர்.


அமெரிக்க நாடாளுமன்றம் அருகே ஆயுதங்களுடன் சிக்கிய மர்ம நபர்!
[Sunday 2021-01-17 08:00]

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் ஆபத்தான ஆயுதங்களுடன் சிக்கிய நபரால், ஜோ பைடன் பதவியேற்பு விழாவுக்கு அச்சுறுத்தல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆயுததாரியான அந்த நபர், எதிர்வரும் புதன்கிழமை நடக்கவிருக்கும் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தமக்கு சிறப்பு அனுமதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


தாயின் கவனக்குறைவால் பறிபோன கனேடிய சிறுமியின் உயிர்!
[Saturday 2021-01-16 17:00]

கனடா நகரமொன்றில் ஆங்கிலமோ பிரெஞ்சு மொழியோ பேசத்தெரியாத பெண் ஒருவர் தன் மகளை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற வாரம், Laval நகரில் உள்ள வீடு ஒன்றிலிருந்து வந்த அழைப்பின் பேரில் அங்கு சென்ற பொலிசார், 7 வயது சிறுமி ஒருத்தி கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதைக் கண்டுள்ளனர்.


பிரித்தானிய தொழிலதிபர் வீட்டில் மிளகாய்ப்பொடி தூவப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த இந்திய பெண்!
[Saturday 2021-01-16 17:00]

பிரித்தானியாவில் தனது இரண்டாவது மனைவியை கொலை செய்ததாக கணவன் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நீதிமன்றத்தில் அதை அவர் மறுத்துள்ளார். இந்தியாவை சேர்ந்தவர் குர்பீரித் சிங் (38). பிரித்தானியாவில் வசிக்கும் பணக்கார தொழிலதிபரான இவரின் இரண்டாவது மனைவி சர்பிரீத் கவுர் (38). Wolverhampton நகரில் குர்பீரித் வசித்து வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் திகதி அவர் மனைவி கவுர் வீட்டின் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


கனடாவில் மலைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்!
[Saturday 2021-01-16 17:00]

கனடாவில் மலைப்பகுதியில் தொலைந்து போன 21 வயது இளம்பெண் உயிரிழந்துவிட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஒன்றாறியோவை சேர்ந்தவர் Nikki Donnelly (21). தனியாக மலைப்பகுதிக்கு அடிக்கடி செல்லும் பழக்கத்தை அவர் வைத்திருந்தார்.


கமலா ஹாரீஸ்ஸை புடவையில் எதிர்பார்க்கும் இந்தியர்கள்: வெளியான காரணம்! Top News
[Saturday 2021-01-16 17:00]

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில், துணை அதிபராக பதவியேற்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் பாரம்பரிய உடையான புடவையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார்.


8.5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசியை வழங்க தயாராகும் ஒன்றாரியோ அரசாங்கம்!
[Saturday 2021-01-16 17:00]

ஒன்றாரியோவில் இரண்டாம் கட்டம் முடிவதற்குள், 8.5 மில்லியன் மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க மாகாண அரசாங்கம் தயாராகி வருகின்றது. மார்ச் முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் வரை இயங்கும் என எதிர்பார்க்கப்படும் விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போது, 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தவர்கள், அதிக ஆபத்துள்ள நாட்பட்ட நிலைமைகளைக் கொண்ட நபர்கள் மற்றும் ஆசிரியர்கள், முதன்மை பதிலளிப்பவர்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் பணியில் ஈடுபடும் நபர்கள் போன்ற முன்னணி வரிசை அத்தியாவசிய தொழிலாளர்கள் அனைவரும் தடுப்பூசியின் அளவுகளுக்கு ஆரம்பகாலத் தகுதியான பெறுநர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.


உருமாறிய கொரோனா: நாட்டு மக்களை எச்சரித்த ஜப்பான் அரசு!
[Saturday 2021-01-16 08:00]

ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அரசு எச்சரித்து உள்ளது. ஜப்பானில் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த 7-ம் திகதி முதல் அங்கு நாள்தோறும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக நடைபெறவிருக்கும் விசித்திர நிகழ்வு!
[Saturday 2021-01-16 08:00]

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பே, அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக பிரியாவிடை நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்து, ஜனாதிபதி டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.


'வீட்டை விட்டு வெளியேறுவதில் இருந்து பின் வாங்குங்கள்': பிரதமர் போரிஸ் கோரிக்கை!
[Saturday 2021-01-16 08:00]

கொரோனா தடுப்பூசி அளிக்கும் திட்டம் முழுவீச்சில் நடந்தேறி வந்தாலும், வார இறுதி நாட்களில் குடியிருப்பை விட்டு வெளியேறும் முன்னர் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இங்கிலாந்து இன்னும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாக பிரதமர் ஜோன்சன் எச்சரித்துள்ளார்.


வெளியான கனடாவின் மக்கள்தொகை விபரம்!
[Friday 2021-01-15 18:00]

கனடாவில் 2020ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி நிலவரப்படி, 38,005,238 மக்கள் வசிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 411,854ஆக அதிகரித்துள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா