Untitled Document
November 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
செம்மறி ஆடுகளுக்கு மனிதர்களின் முகத்தை அடையாளம் காணும் திறன்: - ஆராய்ச்சியில் தகவல்
[Wednesday 2017-11-08 18:00]

செம்மறி ஆடுகளுக்கு மனிதர்களின் முகத்தை அடையாளம் காணும் திறன் இருப்பது மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நரம்பியல் மருத்துவ ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக 8 செம்மறி ஆடுகளை பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இங்கிலாந்து செய்தி வாசிப்பாளர் பியூயோனோ க்ரோஷ், நடிகை எம்மா வாட்சன், நடிகர் ஜாக் லான் ஆகியோரின் முகங்கள் அடையாளம் காணும் பயிற்சி வழங்கப்பட்டது.


இஸ்ரேலில் நீண்ட தாடை கொண்ட புதிய வகை சிலந்தி பூச்சிகள் ஆயிரக்கணக்கில் கண்டுபிடிப்பு!
[Wednesday 2017-11-08 18:00]

இஸ்ரேலில் நீண்ட தாடை கொண்ட புதிய வகை சிலந்தி பூச்சிகள் ஆயிரக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜெருசலேம் அருகே கைவிடப்பட்ட வனப்பகுதி ஒன்றில் ஓடும் சிற்றோடையின் கரையில் புதிய சிலந்தி பூச்சிகள் இருப்பதாக ஹீப்ரு பல்கலைக்கழக மாணவர் இகோர் அர்மிகச் கண்டுபிடித்துள்ளார்.


முன்பு செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தேன்: - ரஷ்ய இளைஞரின் அறிவிப்பால் விஞ்ஞானிகள் குழப்பம்
[Wednesday 2017-11-08 17:00]

பூமியில் பிறப்பதற்கு முன்பு தான் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாக ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறியுள்ளார். போரிஸ்கா கிப்ரியானோவிச் என்ற வோல்கோகிராடைச் சேர்ந்த 20வயது இளைஞர், பிறந்த சில மாதங்களிலேயே பேசத் தொடங்கிவிட்டதாகவும், இரண்டு வயதிலேயே எழுதப் படிக்க பழகிக் கொண்டதாகவும், கடினமான விஷயங்களை விவாதிக்கும் திறனை சிறுவயதிலேயே பெற்றிருந்ததாகவும் அவருடைய பெற்றோர் கூறுகின்றனர்.


பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்: - சுனாமி எச்சரிக்கை
[Wednesday 2017-11-08 07:00]

பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை 7:26 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் விவா நகருக்கு தெற்கே சுமார் 83 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 112 கிலோ மீட்டர் ஆழத்திலும் சுமார் 6.6 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கரோலினா பல்கலைகழகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு!
[Wednesday 2017-11-08 07:00]

தெற்கு கரோலினா அமெரிக்காவின் தென் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள மாகாணமாகும். இங்கு தெற்கு கரோலினா பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது.இந்த பல்கலைகழக வளாகத்தினுள் இன்று ஒரு மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த நபர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், காக்கி நிற கால்சட்டையும், சாம்பல் நிற மேல்சட்டையும் அணிந்திருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.


வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும்: - டொனால்டு டிரம்ப்
[Wednesday 2017-11-08 07:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று தென்கொரியா போய்ச் சேர்ந்தார். தலைநகர் சியோலுக்கு வெளியேயுள்ள ஓசன் விமானப்படை தளத்தில், மனைவி மெலனியா டிரம்புடன் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் சென்று தரை இறங்கினார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


ஏழு லட்சத்துக்கு வாங்கியும் போதை ஏறாத மது: - சீன எழுத்தாளர் வழக்கு
[Tuesday 2017-11-07 18:00]

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு ஓட்டல் மது வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு உலகிலேயே மிக விலை உயர்வான மதுவகைகள் கிடைக்கும்.இங்கு மிக குறைந்த மதுவே ரூ.2 லட்சத்துக்கும் அதிகம். இந்த நிலையில் சீனாவை சேர்ந்த எழுத்தாளர் ஷாங் வை என்பவர் அந்த ஓட்டலில் இருக்கும் மிகவும் விலை உயர்ந்த அதாவது ரூ.7 லட்சத்துக்கு மது வாங்கி குடித்தார்.


கடமையில் இருந்து தவறியதால் பதவி நீக்கப்பட்ட ஜிம்பாவே துணை அதிபர்!
[Tuesday 2017-11-07 18:00]

ஜிம்பாவே துணை அதிபர் எம்மர்சன் தனது கடமைகளை செய்வதில் தோல்வி அடைந்த காரணத்தால் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தலைநகர் ஹராரேவில் செய்தியாளர்களை சந்தித்த தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சர் சிமோன், துணை அதிபர் என்ற பதவிக்கேற்ப எம்மர்சன் பணியாற்றவில்லை என்றும் தனது கடமையில் இருந்து தவறிவிட்டதாலும் அதிபர் முகாபே அவரை பதவியில் இருந்து நீக்கினார் என்றும் அவர் தெரிவித்தார்.


அமெரிக்க அதிபர் தென் கொரியா வருகை: - வட கொரியா ஆத்திரம்..!
[Tuesday 2017-11-07 18:00]

வடகொரியா தொடர்ந்து அணுஆயுத மிரட்டல் விடுத்து வரும் வேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தென்கொரியா சென்றடைந்தார். ட்ரம்பின் வருகையால் கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்றம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மனைவியுடன் சியோலில் உள்ள ஓசான் விமானப் படைதளத்தில் வந்திறங்கிய ட்ரம்பை, தென்கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அந்நாட்டின் உயரதிகாரிகள் வரவேற்றனர். தென்கொரிய ராணுவத்தினர் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தென்கொரியாவின் உற்சாக வரவேற்பை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார்.


ஆப்கானில் ஆச்சர்ய சாதனை: - பெண்ணியல் பட்டம்பெற்ற காபூல் மாணவர்கள்
[Tuesday 2017-11-07 08:00]

ஆஃப்கானிஸ்தான் நாட்டில், மேல்சட்டை மற்றும் குட்டைப் பாவாடையோடு ஹை ஹீல்ஸ் அணிந்துகொண்டு பெண்கள் வாழ்ந்தார்கள் என்று கூறினால், உங்களால் நம்பமுடிகிறதா. ஆனால், 1960-ம் ஆண்டுகளிலேயே அப்படி வாழும் சூழ்நிலை இருந்தது. பிறகுதான், கொஞ்சம் கொஞ்சமாக தாலிபான்களின் ஆதிக்கம் பரவி, பெண்கள் ஒடுக்கப்பட்டார்கள். இந்த 2017-ம் ஆண்டில் அங்கே ஒரு பெண் உடல் முழுவதையும் போர்த்திக்கொண்டுதான் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியும். 1994-ம் ஆண்டு முதல் தாலிபான் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானில், கடந்த 20 ஆண்டுகளாகப் பெண்களின் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது


இணையத்தில் பாலியல் பொம்மையை வாங்கிய இளைஞர் கைது!
[Tuesday 2017-11-07 08:00]

நோர்வே நாட்டில் சிறுமி வடிவிலான பாலியல் பொம்மை ஒன்றை இணையத்தினூடே வாங்கிய இளைஞரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.குறித்த இளைஞருக்கான பார்சலில் இருந்த பாலியல் பொம்மை சிறுமியின் வடிவில் இருப்பதை அறிந்த சுங்க அதிகாரிகள் பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்தே இச்சம்பவம் நடந்துள்ளது.


இளம்பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்களை கேட்ட இணையதள ஜோசியர்!
[Tuesday 2017-11-07 08:00]

சுவிட்சர்லாந்தில் இணையதளம் வாயிலாக ஜோசியம் கூறும் நபர் ஒருவர் இளம்பெண்ணிடம், எதிர்காலத்தை கணிக்க அந்தரங்க புகைப்படம் கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சூரிச் பகுதியை சேர்ந்த 15 வயது இளம்பெண்ணிடமே குறித்த நபர் எதிர்காலம் குறித்து கணித்துக் கூற அந்தரங்க புகைப்படம் கேட்டுள்ளார்.


வடகொரியாவின் ஏவுகணைகளை அமெரிக்க ஆயுதங்கள் மூலம் ஜப்பான் விரட்டி அடிக்கும்: - டிரம்ப்
[Monday 2017-11-06 17:00]

அமெரிக்கவின் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் கிழக்காசிய நாடுகளுக்கு முதன் முறையாக டொனால்ட் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு செல்லும் அவர் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸில் நடைபெற உள்ள ஆசிய ஒத்துழைப்பு உச்சிமாநாடுகளில் பங்கேற்கிறார்.


டொனால்டு ட்ரம்ப்பின் கருத்துகள் அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தேடித்தரும்: - வடகொரிய அதிபர் எச்சரிக்கை
[Monday 2017-11-06 09:00]

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கருத்துகள், அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தேடித்தரும்’ என வடகொரிய அதிபர் கிம் எச்சரித்துள்ளார்.உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.


ஏமன் நாட்டு எல்லையில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் சவுதி இளவரசர் பலி!
[Monday 2017-11-06 07:00]

ஏமன் நாட்டு எல்லை அருகில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சவுதி அரேபியா இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்தார் என அந்நாட்டு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரும், ஆசிர் மாகாண துணை கவர்னராகவும் பதவி வகித்தவர் மன்சூர் பின் மாக்ரோன். இவர் நேற்று அதிகாரிகள் சிலருடன் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார்.


டெக்ஸாஸ் மாகணத்தில் துப்பாக்கிச் சூடு: - 20-க்கும் மேற்பட்டோர் பலி
[Monday 2017-11-06 07:00]

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகணத்திலுள்ள சர்ச்சில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் சதர்லேண்டு பகுதியில் பாபிஸ்ட் சர்ச்சில் வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் திடீரென சுட ஆரம்பித்தார். அதில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.


குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் டிரம்ப்!
[Monday 2017-11-06 07:00]

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உலகம் முழுவதிலும் உள்ள சீக்கியர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தற்போது ஆசியநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனாலும், குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு லாட்டரியில் ரூ.2.64 கோடி பரிசு!
[Monday 2017-11-06 07:00]

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு லாட்டரி சீட்டுக்களில் ரூ.2.64 கோடி பரிசு விழுந்துள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் கிம்பர்லி மொரிஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மளிகை கடை ஒன்றில் பலகோடி ரூபாய் பரிசு விழும் டைமன் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இந்த லாட்டரி சீட்டில் கிம்பர்லிக்கு ரூ. 6 லட்சம் பரிசு விழுந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை லாட்டரி நிறுவன அலுவலகத்துக்கு சென்று தனது பரிசு தொகையை பெற்ற கிம்பர்லி வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மீண்டும் அதே சூப்பர்மார்க்கெட்டிற்கு சென்று மேலும் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.


கார் வெடிகுண்டு தாக்குதல்: - சிரியாவில் 75 பேர் பலி
[Monday 2017-11-06 07:00]

சிரியாவில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 75 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள பகுதிகளை மீட்பதற்காக அரசு படைகள் போரிட்டு வருகின்றன. இந்நிலையில் உள்நாட்டு போர் காரணமாக ஏராளமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.


சவூதியில் ஊழல் புகார் எதிரொலி: - ஒரே நாளில் 11 இளவரசர்கள் கைது
[Sunday 2017-11-05 18:00]

சவுதி அரேபியா மன்னர் முகம்மது பின் சல்மான் ஊழல் ஒழிப்புக் குழுவின் தலைவராக பதவியேற்று ஒரு சில மணிநேரங்களியே 11 இளவரசர்களை கைது செய்து அதிரடி காட்டியுள்ளார். சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் அண்மையில் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றார். சவுதியில் அரச குடும்பத்தில் உள்ள பலர் ஊழலில் ஈடுபட்டு வருவதாக சவுதி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து சவுதியில் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் முகம்மது பின் சல்மான் இறங்கிவிட்டார். அதன் தொடக்கமாக இவர் தலைமையில் நேற்று ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.


வியட்நாமில் டாம்ரே புயல் தாக்குதலால் 27 பேர் பலி: - 40,000 வீடுகள் சேதம்
[Sunday 2017-11-05 18:00]

வியட்நாமில் டாம்ரே புயல் தாக்குதலால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பசிபிக் பெருங்கடலின் மேற்கே உருவான டாம்ரே புயல் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வியட்நாமில் நேற்று மாலை கரையைக் கடந்தது. இதன் காரணமாக காற்று பலமாக வீசியதுடன் கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்பட்டது.


ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய ரூ.376 கோடி மதிப்புடைய போதை மாத்திரைகள் பறிமுதல்!
[Sunday 2017-11-05 08:00]

ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் இருந்து கடத்தி சென்ற கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை மாத்திரைகளை இத்தாலி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து திரட்டப்பட்ட 2,040,000 டிராம்டோல் மாத்திரைகள் கன்டைனர்களில் அடைத்து லிபியா வழியாக கடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த மாத்திரைகள் வலி நிவாரணியாக பயன்படுத்த கூடியவை.


சிங்கப்பூரில் டென்ஷனை போக்க புதிய கண்டுபிடிப்பு!
[Sunday 2017-11-05 08:00]

ஆபீசில் டென்ஷனா... வீட்டில் பிரச்னையா... உடனே கையில் இருக்கும் காஸ்ட்லி செல்போனை தூக்கி போட்டு உடைக்கிறோம்... டென்ஷன் போய்விடுகிறது. ஆனால், பல ஆயிரம் போட்டு வாங்கின போன் போச்சே என கதறுகிறோம். இதற்கு புதிய வழி கண்டுபிடித்திருக்கிறார்கள் சிங்கப்பூரில். டென்ஷனை போக்க ஏதாவது உடைக்கணுமா... இங்க வாங்க என தொழிலாக மாற்றியிருக்கிறார்கள். ஹெல்மெட், கிளவுஸ் என பாதுகாப்பு அம்சங்களை கொடுத்து ஒரு சிறிய அறையில் ரக்பி பேட்டை கொடுத்து அனுப்புகிறார்கள்.


பூமியைப் போல மனிதர்கள் வாழத் தகுந்த 20 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!
[Sunday 2017-11-05 08:00]

பூமியைப் போலவே மனிதர்கள் வாழத் தகுந்த 20 புதிய கோள்களை நாசாவின் கெப்ளர் விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியைப் போல மனிதர்கள் வாழ தகுதியான வேறு பல கிரகங்களும் உள்ளதா என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கெப்ளர் தொலைநோக்கி மூலம் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில் தற்போது 20 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த முதற்கட்ட தகவல்களை கெப்ளர் திட்ட விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.


பேசுவதிலிருந்து தாம்பத்யம் வரை உதவும் ரோபோ!
[Sunday 2017-11-05 08:00]

சீனாவில் 30 வயதை கடந்த பின்னரும் ஆண்களும், பெண்களும் திருமண ஆசையே இல்லாமல் இருக்கின்றனர். இதனால் பெற்றோர்களின் நச்சரிப்பு, சமூகத்தில் சில அசவுகரியங்களை சந்திக்கின்றனர். இப்படித்தான் ஜியிங் என்ற 31 வயது இன்ஜினியரும் பிரச்னைக்குள்ளானார். உடனே, பெண் ரோபோவை உருவாக்கி அதையே திருமணம் செய்து கொண்டார். அவரது பெற்றோரும் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டனர்.


ஐ.நா தடை காரணமாக மீல் மேக்கர், சோள உணவு மூலம் பசியை போக்கும் வடகொரிய மக்கள்!
[Sunday 2017-11-05 08:00]

ஐ.நா தடை காரணமாக ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாட்டை, சோயா மீல் மேக்கர், சோள மாவு கேக் மற்றும் காய்கறி மூலம் வடகொரிய மக்கள் உணவு தட்டுப்பாட்டை சமாளித்து வருகின்றனர். ஏவுகணைகளையும், அணு குண்டுகளையும் தயாரித்து தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளை வடகொரிய மிரட்டி வருகிறது. இதனால் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐ.நா.வில் உறுப்புநாடுகள் வலியுறுத்தின. இதன்விளைவாக வடகொரியாவுக்கு ஐ.நா வழங்கி வந்த 76 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தற்போது 42 மில்லியன் டாலராக குறைக்கப்பட்டது.


270 மில்லியன் போலி கணக்குகள்: - ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம்
[Saturday 2017-11-04 16:00]

உலகின் முன்னணி சமூக ஊடகங்களுள் ஒன்றான ஃபேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு உதவியதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தத் தகவல் மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான அந்த நிறுவனத்துக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் 2.1 பில்லியன் பயனாளர்களைக் கொண்டு இயங்கிவரும் ஃபேஸ்புக் நிறுவனம், மூன்றாவது காலாண்டு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.


ஜெர்மனியில் கத்தரிக்காயை வெடிகுண்டு என நினைத்து முதியவர் செய்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பு!
[Saturday 2017-11-04 13:00]

ஜெர்மனியில் உள்ள கார்ல்சூ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய 81 வயது முதியவர் தன் வீட்டின் பின்புறம் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கிடப்பதாக கூறியுள்ளார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து அவர் வீட்டிற்கு சென்றனர்.

SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா