Untitled Document
April 18, 2024 [GMT]
அகதிகள் வருகையை தடுக்க இங்கிலாந்து- பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்!
[Sunday 2020-11-29 21:00]

பிரான்சிலிருந்து ஆங்கில கால்வாய் வழியாக இங்கிலாந்துக்குள் படகு வழியாக அகதிகள் வருவதை/ குடியேறிகளை வருவதை தடுக்கும் விதமாக இங்கிலாந்து- பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் தொழில்நுட்ப உதவியுடன் ஆபத்தான கடல் வழிப் பாதையில் படகுகளை தடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் உருவானது: சீனா அதிரடி தகவல்!
[Sunday 2020-11-29 18:00]

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்ற தகவலை சீனா மறைத்ததையடுத்து தற்போது உலகம் முழுவதும் 218 நாடுகள்யூனியன் பிரதேசங்களுக்கு இந்த கொரோனா பரவியுள்ளது.


பிரித்தானியாவில் கொரோனா விவகாரத்தில் நேர்ந்த கவனக்குறைவு!
[Sunday 2020-11-29 18:00]

பிரித்தானியாவில் சுமார் 1000 பேருக்கு மேலாக தவறுதால கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறித்து பிரித்தானியாவில் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு பின்பு இறப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.


கியூபா கடற்கரையில் சடலமாக கிடந்த கனேடிய பெண்!
[Sunday 2020-11-29 18:00]

கியூபாவுக்கு சென்ற கனடிய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கனடாவின் Quebec-ஐ சேர்ந்தவர் Antoinette Traboulsi. இவர் கியூபாவுக்கு சென்ற நிலையில் சமீபத்தில் அங்குள்ள கடற்கரை மணலில் புதைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


லண்டன் பல்பொருள் அங்காடியில் மோசமான செயலில் ஈடுபட்ட நபர்!
[Sunday 2020-11-29 18:00]

லண்டனில் இளம்பெண்ணை பின் தொடர்ந்து சூப்பர் மார்கெட்டுக்கு வந்த நபர் ஒருவர் அவரை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். தென்கிழக்கு லண்டனில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்கு 22 வயது இளம்பெண்ணொருவர் வந்திருக்கிறார்.


கோவிட்-19: ஒன்ராறியோவில் 1,800 பேர் பாதிப்பு - 29 பேர் பலி!
[Sunday 2020-11-29 18:00]

ஒன்ராறியோவில் 1,800 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகப் பதிவாகியுள்ள நிலையில் மாகாணத்தில் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒன்ராறியோவில் 1 இலட்சத்து 13 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மூச்சு விட சிரமப்பட்ட ரஷிய நபர்: மருத்துவமனைக்கு சென்றபோது காத்திருந்த பேரதிர்ச்சி!
[Sunday 2020-11-29 08:00]

ரஷ்யாவில் மூக்கு துவாரத்தில் சிக்கிய நாணயத்தை ஒருவர் நீண்ட 50 ஆண்டுகளுக்கு பின்னர் மருத்துவர்கள் உதவியால் நீக்கியுள்ளார். ரஷ்ய நாட்டவரான 59 வயது நபர் தமக்கு 6 வயது இருக்கும் போது, உள்ளூர் நாணயம் ஒன்றை தமது வலப்பக்க மூக்கு துவாரத்தில் சொருகியுள்ளார்.


நைஜீரியாவில் நடந்த கொடூரம்: கொத்துக்கொத்தாக கழுத்தறுத்து கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!
[Sunday 2020-11-29 08:00]

வடகிழக்கு நைஜீரியாவில் நெல் வயல்களில் வேலை செய்யும் டசின் கணக்கான மக்களை தாக்குதல்தாரிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்னோ மாநிலத்தின் தலைநகரான மைதுகுரிக்கு அருகிலுள்ள கோஷோப் கிராமத்தில் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியவர்கள் விவசாயத் தொழிலாளர்களைக் கட்டிவைத்து கழுறுத்து கொலை செய்துள்ளனர்.


ஒப்புதல் கிடைத்தவுடன் தடுப்பு மருந்தை வினியோகிக்க பைசர் நிறுவனம் முடிவு!
[Sunday 2020-11-29 08:00]

அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 90 சதவீதம் பலனளிக்கும் சக்தி வாய்ந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக பைசர் தடுப்பூசி காத்திருக்கிறது.


பிரித்தானிய அரண்மனையிலிருந்து மதிப்புமிக்க பொருளை திருடி இணையத்தில் விற்க முயன்ற ராணியின் சேவையாளர்!
[Saturday 2020-11-28 18:00]

பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து இரண்டு மதிப்புமிக்க பதக்கங்களை திருடியதாக ராணியின் சேவையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 37 வயதான ஆடமோ கான்டோ என்ற அரண்மனை ஊழியர் மீதே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆடமோ கான்டோ 6 வருடங்களாக பக்கிங்ஹாம் அரண்மனையில் பணியாற்றி வருகிறார். ஆடமோ கான்டோ திருடிய பதக்கங்களில் ஒன்றை eBay தளத்தில் 350 பவுண்ட் என விற்பனைக்கு பட்டியலிடப்பட்டதாக கூறப்படுகிறது.


இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த சுவிஸ் பாடகிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு! Top News
[Saturday 2020-11-28 18:00]

இலங்கை பெற்றோருக்கு சுவிட்சர்லாந்தில் பிறந்த பாடகியான ப்ரியா ரகுவுடன், அவரது பாடல்களை தன் இசைத்தட்டுக்களில் வெளியிடும் வகையில், பிரபல நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. ப்ரியா ரகுவின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். ப்ரியா சூரிச்சில் பிறந்தவர், அங்கேயே வாழ்ந்தும் வருகிறார். தமிழரான ப்ரியாவின் தந்தை, மேடைகளில் பாடல்கள் பாடுவதுடன், அருமையாக தபலா வாசிப்பாராம்.


கனடாவை உலுக்கிய கொலை வழக்கில் வெளியான பரபரப்பு தகவல்!
[Saturday 2020-11-28 18:00]

இலங்கைப் பெண் உட்பட 10 பேரை வேன் மோதிக்கொன்று, 16 பேர் வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு படுகாயம் ஏற்படுத்திய நபர் தொடர்பில், பிரபல தடயவியல் மனோ நல மருத்துவர் முக்கிய தகவல் ஒன்றை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ரொரன்றோவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் வேன் ஒன்றை செலுத்தி, நிற்காமல் வேகமாக சென்ற Alek Minassian (28) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.


சீனாவில் நான்கு பேரை கத்தியால் குத்தி கொன்ற நபருக்காக ஒன்று திரண்ட நாட்டு மக்கள்!
[Saturday 2020-11-28 17:00]

சீனாவில் கொலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியின் செயலை நியாயப்படுத்தி நாட்டு மக்கள் ஒன்று திரண்டு குரல் கொடுத்ததை அடுத்து, இறுதியாக அந்த நபர் சிறையிலிருந்த விடுவிக்கப்பட்டுள்ளார். யூ ஹுவான் என்ற நபரே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கிழக்கு ஷாண்டோங் மாகாணத்தின் லியோசெங் நகரத்தைச் சேரந்த யூ ஹுவான், 2016ம் ஆண்டு கொலை குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.


கொரோனா அச்சம்: இருவரை தூக்கு மேடைக்கு அனுப்பி கிம் ஜாங் அன் அடாவடி!
[Saturday 2020-11-28 08:00]

உலகின் மர்மதேசமாக அறியப்படும் நாடு வடகொரியா. இந்த நாட்டின் அதிபர் கிம் ஜங் அன் அங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வந்தாலும், வடகொரியா மண்ணில் இதுவரை ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்று அந்நாடு பெருமிதப்படுகிறது. எனினும், சீனா, தென்கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா பரவி விடாமல் தடுப்பதற்காக பல கடுமையான நடவடிக்கைகளையும் வடகொரியா அரசு எடுத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.


பிரேசில் நாட்டில் காதலனின் வெறிச்செயலால் கர்ப்பிணி பெண் எடுத்த அதிரடி முடிவு!
[Saturday 2020-11-28 08:00]

பிரேசில் நாட்டில் காதலனின் துன்புறௌத்தல் தாங்க முடியாமல், இளம் வயது கர்ப்பிணி ஒருவர் தாம் தங்கியிருந்த நாலாவது மாடி முடியிருப்பில் இருந்து வெளியே குதித்துள்ளார். குறித்த கர்ப்பிணி சுமார் 33 அடி உயரத்தில் இருந்தே குதித்துள்ளார். இன்றைய நாள் எப்படி இருந்தது என விசாரிக்க மறந்ததாக கூறி அந்த இளைஞர் 22 வயதேயான தமது கர்ப்பிணி காதலியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.


உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
[Saturday 2020-11-28 08:00]

உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இத்தொற்றால் உலக அளவில் இதுவரை 6.08 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.


வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் வைத்த கோரிக்கை!
[Friday 2020-11-27 17:00]

பைடனின் வெற்றியை உறுதி செய்தால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக உள்ள டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், இதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார்.


பிரித்தானிய பிரதமருக்கு 8 வயது சிறுவன் எழுதிய கடிதம்!
[Friday 2020-11-27 17:00]

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு 8 வயது சிறுவன் ஒருவன் கடிதம் எழுதியுள்ளதை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வரும் டிசம்பர் மாதம் 2-ஆம் திகதிக்கு பின்னர் பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் சில விலக்குகள் விதிக்கப்படலாம், அதுமட்டுமின்றி பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர போரிஸ் ஜோன்சன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


கனேடிய போலீசாரால் பரிதாமாக உயிரிழந்த ஒரு வயது சிறுவன்!
[Friday 2020-11-27 17:00]

தன் ஒரு வயது மகனை அவனது தந்தை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் பொலிசார் அவரது ட்ரக்கை துரத்திச் செல்லும்போது நடந்த தொடர் அசம்பாவிதங்களில் ஒரு அப்பாவி உயிர் பலியாகியுள்ளது. ரொரன்றோவுக்கு 130 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Kawartha Lakes என்ற பகுதியில் பொலிசார் அந்த ட்ரக்கை நிறுத்த முயன்றுள்ளனர்.


பிரித்தானிய இளவரசியின் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நபர்: ஏன் தெரியுமா? Top News
[Friday 2020-11-27 17:00]

பிரித்தானியா இளவரசி டயானா பிகினி உடையில் படகு ஒன்றில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இளவரசி டயானா உயிரிழந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவர் மரணம் தொடர்பான மர்மம் தொடர்ந்து நீடித்து கொண்டு தான் இருக்கிறது.


கனடாவில் பரபரப்பு: தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான சரக்கு விமானம்!
[Friday 2020-11-27 17:00]

கனடாவில் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Calm ஏர் விமானநிறுவனத்திற்கு சொந்தமான 464 சரக்கு விமானம் Nunavut-ல் உள்ள Naujaat விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.


நியூசிலாந்தில் சமஸ்கிருத மொழியில் பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி!
[Friday 2020-11-27 08:00]

நியூசிலாந்தில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதன் மூலம் ஜெசிந்தா 2-வது முறையாக பிரதமர் ஆனார். இந்த தேர்தலில் ஹாமில்டன் மேற்கு தொகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா (வயது 33) தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். அப்போது கவுரவ் சர்மா இந்திய மொழியான சமஸ்கிருதத்தில் பதவியேற்றார்.


நாளுக்கு நாள் தனது செல்வாக்கை இழந்து வரும் டிரம்ப்!
[Friday 2020-11-27 08:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தேர்தலுக்கு பிந்தைய அவரது நடவடிக்கைகளால் நாளுக்கு நாள் தமது செல்வாக்கை இழந்து வருகிறார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஜோ பைடன் பொறுப்பேற்க உள்ளார். பொதுவாக தேர்தல் நாளுக்கும் ஒரு மாதம் முன்னரே புதிய ஜனாதிபதியிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் பணி துவங்கப்படும்.


ஹொங்ஹொங்கில் இன்ஸ்டாகிராம் பதிவால் இளம் தாய்க்கு நேர்ந்த கதி!
[Friday 2020-11-27 08:00]

சமூக ஊடக பிரபலம் மற்றும் அவரது பிஞ்சு குழந்தையை கயிறால் பிணைத்து, கத்தி முனையில் சுமார் 400,000 பவுண்டுகள் பெருமதி கொண்ட பொருட்களை கும்பல் ஒன்று கொள்ளையிட்டு தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹொங்ஹொங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பட்டப்பகலில் இந்த துணீகர கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.


கனடா மனிடோபாவில் நள்ளிரவில் மாயமான 14 வயது சிறுமி!
[Thursday 2020-11-26 16:00]

கனடாவில் நள்ளிரவில் 14 வயது சிறுமி காணாமல் போயுள்ளார். Manitoba-வை சேர்ந்தவர் Ashlyn Stobbe (14). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் கடைசியாக நள்ளிரவு 1 மணியளவில் காணப்பட்டுள்ளார்.


பிரித்தானியாவில் அமலுக்கு வரவிருக்கும் கடுமையான 3 அடுக்கு கட்டுப்பாடுகள்!
[Thursday 2020-11-26 16:00]

பிரித்தானியாவில் அமல்படுத்தவிருக்கும் கடுமையான 3 அடுக்கு கட்டுப்பாடுகளால் நாடுமுழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் மிக கடுமையான கட்டுப்பாடுகளின் வைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் லிவர்பூல் மற்றும் லண்டன் கடுமையான கட்டுப்பாடுகளை தவிர்க்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஒன்றாரியோவின் விடுமுறை வழிகாட்டுதல்களை அறிவித்த முதல்வர் டக் ஃபோர்ட்!
[Thursday 2020-11-26 16:00]

கிறிஸ்மஸ் நெருங்கிவரும் நிலையில், ஒன்றாரியோவின் விடுமுறை வழிகாட்டுதல்களை முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். அனைத்து ஒன்றாரியர்களும், தங்கள் பிராந்தியத்தைப் பொருட்படுத்தாமல், விடுமுறை நாட்களை தங்கள் நெருங்கிய குடும்ப வீட்டு உறுப்பினர்களுடன் மட்டுமே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தனியாக வசிப்பவர்கள் வேறு ஒரு குடும்பத்துடன் சேரலாம்.


மக்களின் எதிர்ப்பை மீறி பிரான்சில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டம்!
[Thursday 2020-11-26 16:00]

மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரான்சில் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக பாதுகாப்பு மசோதாவில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 24ஆவது பிரிவின்படி, பொலிசாருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களது புகைப்படங்களை பிரசுரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா