Untitled Document
April 19, 2024 [GMT]
லண்டனில் 5 ஆண்டுகளாக இளம்பெண்ணை சீரழித்து வந்த கொடூரன்!
[Monday 2020-09-07 17:00]

லண்டனில் இளம்பெண்ணை 5 வருடங்களாக சீரழித்து கர்ப்பமாக்கிய நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனின் Tottenhamல் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. Adrian Donaldson என்ற 37 வயது நபர் இளம்பெண் ஒருவரை தனது வீட்டுக்கு வரவழைத்து வாரத்தில் இரண்டில் இருந்து மூன்று முறை வரை தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.


கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே கனடாவுக்குள் நுழைய முயன்ற 16ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள்!
[Monday 2020-09-07 17:00]

அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியதிலிருந்து, 87 சதவீத அமெரிக்கர்கள் (16,070) கனடாவுக்குள் நுழைய முயன்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மார்ச் 22ஆம் திகதி மற்றும் செப்டம்பர் 2ஆம் திகதிக்கு இடையில், கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (சிபிஎஸ்ஏ) 18,431பேரைத் திருப்பி அனுப்பியுள்ளது.


அமெரிக்காவில் 3 வயது பச்சிளம் குழந்தையை சுட்டுக்கொன்ற அரக்கர்கள்!
[Monday 2020-09-07 09:00]

அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. எனவே துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.


வெளியான கொரோனாவுக்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியல்: முதலிடம் யாருக்கு தெரியுமா?
[Monday 2020-09-07 09:00]

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள கொரோனாவுக்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஜேர்மனி முதல் இடத்திலும், இலங்கை 92-வது இடத்திலும், பிரித்தானியா 31-வது இடத்தையும் பிடித்துள்ளன. கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அங்கிருக்கும் நோயின் தீவிரம், பாதுகாப்பு, பின்பற்றப்படும் விதிமுறைகளை எப்படி தெரிந்து கொள்வது அவசியமோ, அந்த நாடு கொரோனாவுக்கான பாதுகாப்பான நாடு தானா என்பதை அறிந்து வைத்து கொள்வது மிகவும் நல்லது.


'போர் வந்தால் நாங்கள்தான் வெல்வோம்' - இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை!
[Monday 2020-09-07 08:00]

சீனாவை சீண்டினால் இந்தியா தோல்வியடையும் என்றும், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட துவங்கியுள்ளது. லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ரஷ்யாவில் ஆலோசனை நடைபெற்றது.


துபாயில் பயங்கரம்: விடுப்பு தர மறுத்த மேலாளரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற வெளிநாட்டு தொழிலாளி!
[Sunday 2020-09-06 17:00]

துபாயில் உள்ள அல் குவாஸ் தொழில்துறை பகுதியில் உள்ள கேரேஜில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த 21 வயது வாலிபர் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூன் மாதம் அவர் தாய் நாட்டிற்கு செல்வதற்காக தனக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று கம்பெனி மேலாளரிடம் கேட்டுள்ளார். அவர் விடுப்பு வழங்காமல் திட்டி அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி, மற்ற ஊழியர்கள் வெளியே சென்ற சமயத்தில் தனியாக இருந்த மேலாளரை கத்தியால் கழுத்தை அறுத்தும் சுத்தியலால் தாக்கியும் கொலை செய்துள்ளார்.


பிரித்தானியாவில் இரவு நேர நிகழ்ச்சியில் நேர்ந்த கொடூரம்: பலர் காயம்?..
[Sunday 2020-09-06 17:00]

இங்கிலாந்தின் பர்மிங்காம் சிட்டியில் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இரவு நேர நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றான ஹர்ஸ்ட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் எத்தனை பேர் என்ற விவரம் வெளியாகவில்லை.


ரஷ்யாவை கடுமையாக எச்சரித்த ஜேர்மனி: காரணம் இதுதான்?..
[Sunday 2020-09-06 17:00]

நவால்னிக்கு விஷம் கொடுத்து தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி புதினை கடுமையாக விமர்சித்து வருபவருமான அலெக்ஸி நவால்னி, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.


நடப்பு ஆண்டில் அதிகரித்துவரும் செல்லப்பிராணி மோசடி புகார்கள்: கனேடிய மோசடி தடுப்பு மையம் தகவல்!
[Sunday 2020-09-06 17:00]

நடப்பு ஆண்டில் இதுவரை காலப்பகுதியில் 364 செல்லப்பிராணி மோசடி புகார்களைப் பெற்றுள்ளதாக, இலாப நோக்கற்ற அமைப்பு மற்றும் கனேடிய மோசடி தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதில் 250க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் சுமார், 150,000 டொலர்களை இழந்துள்ளவர்களுடன் ஒப்பிடும்போது, கனடியர்கள் போலியாக செல்லப்பிராணிகளை வளர்ப்பாளர்களுக்கு இரையாகி இந்த ஆண்டு இதுவரை சுமார் 300,000 டொலர்களை இழந்துள்ளனர் என்றும் தடுப்பு மையம் கூறுகிறது.


"கொரோனா தடுப்பூசி ஒரு நாட்டுக்கு கிடைக்காமல் போனாலும் அதன் அச்சுறுத்தலை இந்த உலகம் தொடர்ந்து சந்திக்க வேண்டி இருக்கும்" - ஐ.நா. சபை தலைவர் எச்சரிக்கை!
[Sunday 2020-09-06 08:00]

கொரோனா நோய்த்தொற்றை ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. தடுப்பூசிகளை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் தடுப்பூசிகள் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கம் 193 உறுப்பு நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்ட கூட்டம் பொதுச்சபை அரங்கில் நடைபெற்றது.


ஒன்டாரியோவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!
[Sunday 2020-09-06 08:00]

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் மாலை திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.


பிரித்தானியாவில் அமலுக்கு வந்த புதிய விதிமுறை: முக்கிய தகவல்!
[Sunday 2020-09-06 08:00]

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் போர்ச்சுகலை தங்கள் பாதுகாப்பான பயண பட்டியலில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் பரவலை தடுப்பதற்காக பிரித்தானியாவில் பொது முடக்கம், சில தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது. இருப்பினும் நாட்டில் கொரோனா தொற்று விகிதம் அந்தளவிற்கு குறைந்த பாடில்லை. நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் நோயின் தீவிரம் இருந்து தான் வருகிறது.


இலங்கைத் தமிழர்களுக்காக கனேடிய நாடாளுமன்றம் நோக்கி ஐந்து பேர் கொண்ட ’நீதிக்கான நடைபயணம்’! Top News
[Saturday 2020-09-05 17:00]

இலங்கையில் காணாமல் போன தமிழர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றிற்கு அழைப்பு விடுக்கக்கோரி கனேடிய நாடாளுமன்றம் நோக்கி ஐந்து பேர் நடை பயணம் ஒன்றை துவக்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கனேடிய தமிழர்கள் பிராம்ப்டன் நகர கவுன்சில் முன் ஒன்று திரண்டனர். ’நீதிக்கான நடைபயணம்’ என்ற அந்த நடைபயணத்தில் ஐந்து பேர் பங்கேற்கிறார்கள்.


லண்டனில் சொகுசு விடுதியில் நிர்வாணமாக கிடந்த பெண்: கண்விழித்த போது காத்திருந்த அதிர்ச்சி!
[Saturday 2020-09-05 17:00]

லண்டனில் பெண்ணை நிர்வாண நிலையில் 62 வினாடிகள் கொண்ட வீடியோ எடுத்து அவர் வாழ்க்கையே பாழாகி போகும் நிலைக்கு தள்ளிய நபர் சட்டத்துக்கு முன்னர் கொண்டு வரப்பட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு Emily Hunt (41) என்ற பெண் கிழக்கு லண்டனில் உள்ள சொகுசு ஹொட்டலுக்கு தனது தந்தையுடன் சென்றார். பின்னர் இரவு 10 மணியளவில் நிர்வாண நிலையில் ஹொட்டல் அறையில் Emily Hunt மயக்கத்தில் கிடந்துள்ளார்.


வங்கதேசத்தில் திடீரென வெடித்து சிதறிய மசூதி: 13 பேர் உயிரிழப்பு!
[Saturday 2020-09-05 17:00]

வங்கதேசத்தில் மசூதிக்கு அருகே எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை இரவு தலைநகர் டாக்காவிற்கு வெளியே நாராயங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மசூதியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. எரிவாயு குழாயில் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.


நீண்ட நாட்களுக்கு பிறகு தனது குழந்தைகளை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முடிவு!
[Saturday 2020-09-05 16:00]

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி கிரேகோயர் ட்ரூடோ தங்கள் குழந்தைகளை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். பிரதமரின் அலுவலகம் இப்போதைக்கு, ட்ரூடோவின் மூன்று குழந்தைகள் வகுப்பில் கற்றல் திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தியது.


இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினையில் உதவ தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
[Saturday 2020-09-05 08:00]

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால், இந்தியா - சீனா இடையே கடந்த 1962- ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


வடகொரியாவின் கோரமுகத்தை அம்பலப்படுத்திய இளம்பெண்!
[Saturday 2020-09-05 08:00]

வடகொரியாவில் கிம் ஜாங் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் படும் அல்லல்களை, அங்கிருந்து வெளியேறி தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க் என்பவரே தற்போது, தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட இன்னல்களை வெளிப்படுத்தியதுடன், வடகொரியாவில் வசிக்கும் அப்பாவி மக்களின் நிலையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார்.


கனடாவில் விமானத்தில் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை: என்ன தெரியுமா?..
[Saturday 2020-09-05 08:00]

கனடாவில் வெஸ்ட்ஜெட் விமானங்களில் 2 பயணிகள் முகக்கவசம் அணிய மறுத்ததால், அவர்களுக்கு தலா 1000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் பரவலை தடுப்பதற்காக கனடாவில் முக்ககவசம் மக்கள் கூடும் பொது இடங்களில், முக்கிய பொது போக்குரவரத்துகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜேர்மனியில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய்: பின்னர் செய்த செயல்!
[Friday 2020-09-04 17:00]

நேற்று ஜேர்மனியில் பெண் ஒருவர் வீட்டில் அவரது ஐந்து குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Solingen என்னுமிடத்தில் உள்ள வீடு ஒன்றில் வாழ்ந்து வந்த Christiane K (27) என்னும் பெண், தன் மகனான Marcel (11) என்ற சிறுவனுடன் ரயிலில் பயணித்துள்ளார். அந்த சிறுவனை அவனது பாட்டி வீட்டுக்கு போகும்படி கூறிவிட்டு, ரயில் Duesseldorf என்ற இடத்தில் வந்த போது Christiane மட்டும் ரயிலிலிருந்து இறங்கியுள்ளார். ரயிலிலிருந்து இறங்கிய Christiane, ரயில் பாதையில் குதித்துள்ளார். என்றாலும் பலத்த காயங்களுடன் அவர் மீட்கப்பட்டுவிட்டார்.


25 சதவீத மருத்துகள் பற்றாக்குறையாக உள்ளதாக கனடிய அரசு தகவல்!
[Friday 2020-09-04 17:00]

2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 9,000க்கும் மேற்பட்ட வெவ்வேறு மருந்துகளில், கிட்டத்தட்ட 25 சதவீத மருத்துகள் தற்போது, பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.எம்.ஜே.ஜே ஓபனில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, வன்கூவரை தளமாகக் கொண்ட சுகாதார மதிப்பீடு மற்றும் விளைவு அறிவியல் மையத்தில் ஒரு குழு நடத்தியது.


முதல் உலகப்போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை கோழைகள் என கூறிய டிரம்ப்: வலுக்கும் எதிர்ப்பு!
[Friday 2020-09-04 17:00]

முதல் உலகப்போரில் உயிர் நீத்த அமெரிக்க ராணுவத்தினரை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கோழைகள் என வசைபாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரான்சில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தினரின் கல்லறைக்கு செல்லவும் டிரம்ப் மறுத்ததாகவும், கோழைகளின் கல்லறைக்கு தாம் மரியாதை செலுத்த முடியாது எனவும் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1918-ல் பிரான்சில் வைத்து கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தவே டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.


ரொறன்ரோ வூட்பைன் கடற்பகுதியில் படகு விபத்து: இலங்கையை சேர்ந்த ஒருவர் பலி!
[Friday 2020-09-04 17:00]

ரொறன்ரோ- வூட்பைன் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில், இலங்கையர் ஒருவர் உயிரிழந்ததோடு 6பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த 46 வயதான இலங்கைகொன் பல்லவநம்பி என அடையாளங் காணப்பட்டுள்ளார்.


கோவிட்-19: உலகம் முழுவதும் 8 லட்சத்து 72 ஆயிரம் பேர் பலி!
[Friday 2020-09-04 10:00]

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகடத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு வழங்கப்படும் நூதன தண்டனை! Top News
[Friday 2020-09-04 10:00]

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள இந்தோனேசிய அரசு, மக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டு உள்ளது.


மெக்சிகோவில் பயங்கரம்: இறுதிச்சடங்கின்போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - 9 பேர் பலி!
[Friday 2020-09-04 09:00]

மெக்சிகோவில் இறுதிச்சடங்கில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவில் மோரேலஸ் நகருக்கு அருகே உள்ள குர்னாவாக்கா நகரில் நேற்று முன்தினம், மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம் அடைந்த ஒருவரது இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்தது.


'இனி தொலைதூரத்தில் இருந்த படி திருமணம் செய்து கொள்ளலாம்' - பிரித்தானியாவின் புதிய சட்டம்!
[Thursday 2020-09-03 18:00]

பிரித்தானியாவில் சட்ட ஆணையத்தால் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களின் கீழ் எதிர்காலத்தில் தொற்றுநோய் ஏற்பட்டால், ஜூம் போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களில் தம்பதிகள் தொலைதூரத்தில் இருந்த படி திருமணம் செய்து கொள்ளலாம். பழங்கால விக்டோரியன் திருமணச் சட்டங்களைப் மதிப்பாய்வு செய்த பிரித்தானியா சட்ட ஆணையம், எதிர்காலத்தில் தொற்றுநோய் போன்ற எந்தவொரு தேசிய அவசரகாலத்திலும் திருமணங்களை தொலைதூரத்தில் இருந்த படி நடத்துவதற்கு ஒரு புதிய சட்டம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.


பிரான்ஸ் போலீசாரின் கோரமுகத்தை கிழித்தெறிந்த பத்திரிகையாளர்!
[Thursday 2020-09-03 18:00]

பிரான்சில் பொலிசாரைக் குறித்து இரண்டு விடயங்கள் அதிகம் பேசப்படுவதுண்டு. ஒன்று பொலிசாரின் வன்முறை, மற்றொன்று தற்கொலை செய்துகொள்ளும் பொலிசார். பல்வேறு நிறுவனங்களில் ஒரு தொழிலாளியாக நுழைந்து, அங்கு நடக்கும் தவறுகளை கண்டுபிடிப்பதில் புகழ்பெற்றவர் Valentin Gendrot (32) என்ற பத்திரிகையாளர். பொலிசார் குறித்து கூறப்படும் இந்த இரண்டு வியங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக உண்மையாகவே பொலிஸ் படையில் சேர விண்ணப்பித்தார் Valentin. வெறும் மூன்றே மாத பயிற்சிக்குப்பின் Valentinக்கு பொலிஸ் உடையும், துப்பாக்கி ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா