Untitled Document
March 29, 2024 [GMT]
கொரோனா தொற்று: மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ஜேர்மனி!
[Sunday 2020-04-12 17:00]

ஜேர்மனியில் கொரோனா தொடர்பில் சமீபத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை விட, ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் ஞாயிறு பகல் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இதுவரை 120,479 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். ராபர்ட் கோச் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் இது முந்தைய நாள் வெளியான எண்ணிக்கையில் இருந்து 2,821 அதிகமாகும்.


கோவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 84 பேர் உயிரிழப்பு!
[Sunday 2020-04-12 17:00]

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று ஈஸ்டர் பண்டிகை நாள் என்ற நிலையில் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் பண்டிகையை வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாடி வருகின்றனர். கனடாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில நேற்றுமட்டும் 84 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 653 ஆகப் பதிவாகியுள்ளன.


கொரோனா பரவிய ஒரே மாதத்தில் அதற்கான தீர்வை கண்டறிந்த பெண் ஆய்வாளர்: மூடி மறைத்த சீனா!
[Sunday 2020-04-12 17:00]

உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரோனா கிருமியின் மரபணுவை வரிசைப்படுத்தி, அதற்கான தீர்வை ஜனவரியிலேயே கண்டறிந்த ஆய்வாளரை சீனா மிரட்டி பணியவைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா- வுஹானில் வெளவால் பெண்மணி என அறியப்படும் Shi Zhengli என்ற பிரபல வைரஸ் ஆய்வாளரே கொரோனா வைரஸ் தொடர்பில் அதன் மரபணுக்களை வரிசைப்படுத்தி, தீர்வையும் வெளியிட்டவர். இவரே சீனாவின் வெளவால் குகைகளில் மறைந்திருக்கும் சார்ஸ் போன்ற கொடிய வைரஸ்களை அடையாளம் கண்டவர். மட்டுமின்றி, வுஹான் நகரில் கொரோனா பரவிய தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து அதை உறுதிப்படுத்தியும் உள்ளார்.


கனடாவில் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் கிடந்த சடலங்கள் - அதிர்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்!
[Sunday 2020-04-12 17:00]

தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Dorval என்ற இடத்தில் அமைந்துள்ள Résidence Herron என்னும் முதியோர் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக 27 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். வரிசையாக அமரர் ஊர்திகள் அந்த முதியோர் இல்லத்திலிருந்து வெளியேறுவதைக் கண்ட முதியவர்களின் குடும்பத்தினர், அந்த இல்லத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முயன்று வருகின்றனர்.


சீனாவில் மறுஉருவெடுக்கும் கொரோனா: புதிதாக 46 பேருக்கு வைரஸ் பாதிப்பு!
[Sunday 2020-04-12 08:00]

கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகமெங்கும் பரவி வருகிறது. அங்கு இந்த வைரஸ் நோய் கட்டுக்குள் வந்து இருந்தது. இந்த நிலையில் இப்போது மீண்டும் புதிதாக அங்கு இந்த வைரஸ் தொற்றுநோய் பரவத்தொடங்கி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் - ஆக்ஸ்போர்டு பேராசிரியர் நம்பிக்கை!
[Sunday 2020-04-12 08:00]

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இதற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று ஆக்ஸ்போர்டு பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸிற்கு இதுவரை 108,330 பேர் உயிரிழந்துள்ளனர். 1,771,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் எளிதாக பரவுவதால், இதற்கான தடுப்பூசியை உலகின் பல்வேறு நாடுகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. அதற்கான வேலைகளும் பல்வே நாடுகளில் நடை பெற்று வருகிறது.


பிரித்தானியாவில் நேர்ந்த சோகம் - மாரடைப்பால் இறந்த மனைவி! அடுத்த நாளே கொரோனாவால் பலியான கணவன்.
[Sunday 2020-04-12 08:00]

பிரித்தானியாவில் மனைவி, கணவர் உடல்நிலை குறித்து கவலைப்பட்ட போது மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அடுத்த நாளே கொரோனா பாதிப்பால் கணவரும் உயிரிழந்துள்ளார். Durham கவுண்டியை சேர்ந்தவர் டேவிட் மோரிசன். இவர் மனைவி அன். அன் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அதற்கு அடுத்தநாளே கடுமையான கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் இருந்த டேவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


"சீனா நம்பமுடியாத அளவிற்கு எங்களை சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது" - அமெரிக்கா குற்றச்சாட்டு!
[Saturday 2020-04-11 17:00]

வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) விதிகளை நியாயமற்றது என்றும் சீனா 30 ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு எதிராகப் இதனை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். சீனா நம்பமுடியாத அளவிற்கு எங்களையும் பிற நாடுகளையும் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. உதாரணமாக, அவர்கள் வளரும் தேசமாக கருதப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.


கொரோனா பீதி: இத்தாலியில் ஊரடங்கு நீட்டிப்பு!
[Saturday 2020-04-11 17:00]

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடளாவிய முடக்கம் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அதிகளவில் முகங்கொடுத்த நாடுகளில் இத்தாலியும் உள்ளடங்குகிறது. குறித்த வைரஸ் பரவலால் நாடளாவிய ரீதியில் நாளாந்த ஆயிரக்கணக்கானோர் மரணித்து வருகின்றனர். வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இத்தாலியில் நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


கொரோனாவை பரப்பிய பயணி: பரிதாபமாக உயிரிழந்த லண்டன் சாரதி!
[Saturday 2020-04-11 17:00]

லண்டனில் உபர் கார் ஓட்டுனர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் காரில் பயணித்த பெண் தொடர்ந்து இருமினார் என தெரியவந்துள்ளது. தெற்கு லண்டனை சேர்ந்த அயுக் அக்பர் என்ற 33 வயது நபர் உபர் கார் ஓட்டுனராக இருந்தார். அக்பர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 3ஆம் திகதி உயிரிழந்தார். இந்நிலையில் அக்பர் மரணம் தொடர்பிலும் அவர் பட்ட அவஸ்தை குறித்தும் அவரின் சகோதரர் யாசிர் வேதனையுடன் பேசியுள்ளார். யாசிர் கூறுகையில், அக்பர் கார் ஓட்டி சென்ற போது அதில் இருந்த பெண் பயணி தொடர்ந்து இருமியபடி இருந்ததாக அவர் என்னிடம் கூறி கவலைப்பட்டார்.


அபாய கட்டத்தை நெருங்கும் பிரித்தானியா: உதவ முன்வந்த ஜேர்மனி!
[Saturday 2020-04-11 17:00]

பிரித்தானியாவில் ஏப்ரல் மாத மையத்தில் இன்னும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜேர்மன் ராணுவம் பிரித்தானியாவுக்கு 60 வெண்டிலேட்டர்களை வழங்க உள்ளது. பிரித்தானிய வெண்டிலேட்டர் தயாரிப்பாளர்களால் போதுமான வெண்டிலேட்டர்களை சரியான நேரத்துக்குள் தயாரிக்க முடியாததால் பல்வேறு நாடுகளிலிருந்து வெண்டிலேட்டர்களைப் பெற பிரித்தானியா முயன்று வருகிறது. ஜேர்மன் பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், ஜேர்மன் ராணுவம் பிரித்தானியாவுக்கு 80 வெண்டிலேட்டர்களை கூடிய விரைவில் அனுப்ப இருப்பதை உறுதி செய்துள்ளார்.


கோவிட்-19: அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சமாக உயர்வு!
[Saturday 2020-04-11 09:00]

உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் 16 லட்சத்து 97 ஆயிரத்து 533 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 18 ஆயிரத்து 737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 830 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 109 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 687 பேர் பலியாகியுள்ளனர்.


அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி இனத்தை சேர்ந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று!
[Saturday 2020-04-11 08:00]

கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகையே பயமுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த கொடிய வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. 16 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமேசான் காடுகளுக்கும் நுழைந்துவிட்டது. யனோமாமி என அழைக்கப்படும் பழங்குடியினத்தவர்கள் அமேசான் காடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வெளியுலக தொடர்பு இல்லாதவர்கள்.


மெக்ஸிகோவில் மகளுக்கு உணவு வாங்க சென்ற தாயார்: வீடு திரும்பியபோது சடலமாக கிடந்த பரிதாபம்!
[Saturday 2020-04-11 08:00]

மெக்ஸிகோ நாட்டில் ஊரடங்கு காரணமாக குடியிருப்பில் தனித்திருந்த 13 வயது சிறுமியை நபர் ஒருவர் வீடு புகுந்து தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நோகலேஸ் நகரில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் படுக்கை அறையில் 13 வயதேயான அன்னா பவுலாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.


"நான்கு நாட்களாக என்னை கொரோனா வைரஸ் மெதுவாக தின்று வருகின்றது" - பிரான்ஸில் வசிக்கும் இலங்கை தமிழரின் உருக்கமான பதிவு!
[Saturday 2020-04-11 08:00]

பிரான்ஸில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மனதை உருக வைக்கும் பதிவை வெளியிட்டுள்ளார். ராயகரன் என்கிற இலங்கைத் தமிழரே ஊரடங்கின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த பதிவை எழுதியுள்ளார். அதில், மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்த ஒரு தந்தை, தாய், இரண்டு மகன்கள் இன்று கொரோனாவால் வாடுகின்றனர். அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சையும் இல்லை. கொரோனா என்னைக் கொல்கிறது. எனது நோய் எதிர்ப்பு சக்தி, என் உயிருக்காகப் போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காகப் போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ மருந்தில்லை. மருந்தை வழங்கி போராட்டத்தை வீரியமாக்கும் இடத்தில் அரசு இல்லை.


கொரோனாவால் பாதிக்கப்பட்ட சவுதி மன்னர் குடும்பம்: 150 பேருக்கு தொற்று உறுதி!
[Friday 2020-04-10 17:00]

சவுதிஅரோபியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 3,200 பேர் பாதிக்கப்பட்டும் 44 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த நிலையில் சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தினரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


உலகையே அச்சுறுத்தும் கொரோனாவிடமிருந்து தப்பிய 16 நாடுகள்..!
[Friday 2020-04-10 17:00]

உலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கொரோனா பரவியுள்ளது.ஆனால் 16 நாடுகள் மட்டும் கொரோனா கொடூரத்திலிருந்து ஆச்சரியமாகத் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஏமன், கிரிபட்டி, கொமொரோஸ், லெசோதோ, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, வட கொரியா, பலாவ், சாலமன் தீவுகள், சமோவா, தஜிகிஸ்தான், டோங்கா, துர்க்மெனிஸ்தான், துவாலு, நவ்ரு மற்றும் வனடு ஆகிய நாடுகளே அவை. இந்த நாடுகள் இதுவரை உத்தியோகப்பூர்வமாக கொரோனா பாதிப்பு தொடர்பில் அறிவிக்கவில்லை என்றாலும், இந்த 16 நாடுகளிலும் கொரோனா பாதிப்பு இல்லை என அறுதியிட்டுக் கூற முடியாது என்கின்றனர் நிபுணர்கள்.


கோவிட்-19: கனடாவில் பலியான மருத்துவ ஊழியர்!
[Friday 2020-04-10 17:00]

கனடாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். ஒன்றாறியோ மாகாணத்தின் Brampton-ல் உள்ள மருத்துவமனையில் 58 வயதான ஊழியர் பணிபுரிந்து வந்தார். அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த மருத்துவ ஊழியர் உயிரிழந்துள்ளார்.


கொரோனா அச்சுறுத்தல்: சுவிஸில் கர்ப்பிணி பெண்ணை தாக்கிய மர்ம நபர்கள்!
[Friday 2020-04-10 17:00]

சுவிட்சர்லாந்தில் பல்பொருள் அங்காடி அருகே சமூக விலகல் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் இடையே கர்ப்பிணி மீது pepper spray தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் மூவரை Aargau மண்டல பொலிசார் கைது செய்துள்ளனர். வியாழனன்று பகல் சுமார் 3.30 மணியளவில் Migros அருகே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனா அச்சுறுத்தக் இருப்பதால் கர்ப்பிணியான தமது மனைவியின் அருகே இருந்து சமூக விலகல் கடைபிடிக்க இளைஞர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.


நீண்ட நாள் தனிமைப்படுத்துதலுக்கு பின் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் கனடிய பிரதமர்!
[Friday 2020-04-10 17:00]

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது தனிமைப்படுத்தலின் பின் முதன்முறையாக அமைச்சரவைக் கூட்டத்தை இன்று கூட்டவுள்ளார். கடந்த மார்ச் மாதம் 12ஆம்திகதி முதல் பிரதமர் ட்ரூடோ வீட்டிலிருந்து பணிபுரிகிறார். பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டபின் 14 நாட்கள் தன்னைதானே ட்ரூடோ தனிமைப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலிருந்தே பணிபுரியத் தொடங்கினார்.


சீன ஆய்வகத்தில் ஏற்பட்ட பிழையால் உருவானது தான் கொரோனா வைரஸ் - அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்! Top News
[Friday 2020-04-10 08:00]

சீனாவில் இருக்கும் மர்மமான வுஹான் வைரஸ் ஆய்வகத்தின் அரிதான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதன் உள்ளே இருக்கும் ஆய்வாளர்கள், விண்வெளி வீரர்கள் போன்று உடையணிந்திருப்பதை பார்க்க முடிகிறது. கொரோனா வைரஸின் துவக்க இடம் என்று கூறப்படும் சீனாவில் இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் இங்கிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு பரவிய இந்த வைரஸால் ஒரு சில நாடுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் போயுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


கென்யாவில் கொரோனா வைரஸை வேண்டுமென்றே பரப்பிய பாதிரியார் கைது!
[Friday 2020-04-10 08:00]

கென்யாவில் தெரிந்தே கொரோனா வைரஸை பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பாதிரியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். Nairobi கவுண்டியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த ரிச்சர்ட் என்ற பாதிரியார் குணமான நிலையிலேயே அவரை பொலிசார் கைது செய்தனர். இது குறித்து பொலிசார் கூறுகையில், ரிச்சர்ட் கடந்த மார்ச் 10ஆம் திகதி Nairobi-ல் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் Siaya கவுண்டிக்கு மார்ச் 14ஆம் திகதி சென்று இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.


கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்: வெளியான ஆதாரம்!
[Friday 2020-04-10 08:00]

கனடாவில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை ரொரன்றோ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஸ்காபுரோவில் Finch Avenue East and Bridletowne Circle பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி மூலம் பதிவான காணொளி ஒன்று எமக்கு கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுரோவில் 58 வயதான கமலகண்ணன் அரசரட்ணம் என்பவர் இன்னொருவரின் தாக்குதலில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையில் அவர் அடித்துக்கொலை செய்யப்படவில்லை என்பதோடு தள்ளிவிடப்பட்டநிலையில் விழுந்து உயிரிழந்துள்ளார் என காணொளி வெளிவந்துள்ளது.


அமெரிக்காவில் கொரோனா தொற்று இல்லையென்று அனுப்பப்பட்ட சிறுமி உயிரிழந்த சோகம்!
[Thursday 2020-04-09 17:00]

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தை சேர்ந்தவர் 13 வயதான சார்லோட் பிஜி. இவரது தாயார் செவ்வாய் அன்று பகல் தமது மகள் இறந்து விட்டாள் என தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக போதைமருந்து எண்ணெய் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வந்தவராவார் சார்லோட் பிஜி.


பிரிட்டீஷ் கொலம்பியாவில் 8 வயது சிறுவன் மர்ம மரணம்!
[Thursday 2020-04-09 17:00]

கனடாவில் திடீரென 8 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரிட்டீஷ் கொலம்பியாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பொலிசார் கூறுகையில், பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள north Okanagan பகுதியில் இருந்து எங்களுக்கு அவசர உதவி கோரி போன் வந்தது.


ருமேனியாவில் சோகம்: புதிதாக பிறந்த 10 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு!
[Thursday 2020-04-09 17:00]

சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரஸ் சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி அனைத்து தரப்பினரையும் பலி வாங்கி வருகிறது. அது பிறந்த குழந்தைகளைக் கூட விட்டு வைப்பதில்லை. இதை உறுதிப்படுத்துவதுபோல் ஐரோப்பிய நாடான ருமேனியாவில் பிறந்த குழந்தைகள் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.


கோவிட்-19: அடுத்த கட்ட அபாய நிலை குறித்து சீன ஜனாதிபதி எச்சரிக்கை!
[Thursday 2020-04-09 17:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் சீனாவிலும் அதன் இரண்டாவது பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் அதிகாரம்மிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழுவில் கலந்துகொண்டு பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் சீனர்களால் இந்த ஆபத்து ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நாட்டில் மீண்டும் கொரோனா தாக்கம் வரக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அரச செய்தி நிறுவனமான ஷின்ஹுவா (Xinhua) தெரிவித்துள்ளது.


கொரோனா தொற்று: மலேசியாவில் சுமார் 4,000 பேருக்கு பாதிப்பு!
[Thursday 2020-04-09 08:00]

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேவேளையில் இன்று ஒரே நாளில் புதிதாக நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கையை விட தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷாம் தெரிவித்துள்ளார். மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 4,119ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 156 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 166 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா