Untitled Document
March 29, 2024 [GMT]
விண்ட்சரில் உக்ரேனிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!
[Monday 2020-02-10 17:00]

உக்ரேனிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விண்ட்சரில் உள்ள போலந்து கழகத்தில், நினைவஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடந்த நினைவஞ்சலி நிகழ்வில், டசன் கணக்கான ஈரானியர்கள் கலந்துக்கொண்டு, அஞ்சலி செலுத்தினர். இதன்போது விமான விபத்தில் உறவுகளை இழந்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உயிரிழந்தவர்களின் பழைய காணொளிகளையும் குரல் பதிவுகளையும் பார்த்து, கண்ணீர் சிந்தினர்.


சீன மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு பதிலாக ரோபோக்கள்!
[Monday 2020-02-10 17:00]

சீனாவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை அங்கு 811 பேர் பலியாகியுள்ளனர். 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் தாக்குதலால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடம் இல்லாத சூழல் நிலவுகிறது. ஏற்கனவே 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உகான் நகரில் 10 நாட்களுக்குள் சீன அரசு கட்டி முடித்து உள்ளது. மேலும், மருத்துவமனைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.


பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
[Monday 2020-02-10 17:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து வருகை தந்த 30வயது மதிக்கதக்க இருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார். தற்போது இவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


30 ஆயிரத்தைக் கடந்தது கொரேனா வைரஸ் தாக்கம்!
[Sunday 2020-02-09 17:00]

புதிய கொரேனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானோர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளோர் தொகை வெள்ளி பெப்பிரவரி 7ஆம் நாள் நிலவரப்படி, 31,198 ஆக உயர்ந்துள்ளது. 637 பேரின் இறப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிலிப்பைன்ஸ் இல் இறந்த ஒருவரைத் தவிர, ஏனைய இறப்புக்கள் சீனாவிலேயே சம்பவித்துள்ளன. அதேவேளை கடந்த பெப்பிரவரி 6 வியாழன் மற்றும் பெப்பிரவரி 7 வெள்ளி ஆகிய நாட்களில், புதிதாக நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் என அடையாளம் காணப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சி வரும் நாட்களிலும் தொடருமானால் அது வரவேற்க்த்தக்க அறிகுறியாக மாறும்.


பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பொது இடத்தில் தூக்கு: பாகிஸ்தான்!
[Sunday 2020-02-09 17:00]

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி கொலை செய்யும் சம்பவங்களும் சமீபகாலமாக பாகிஸ்தானில் அதிகமாக உள்ளது. இதற்கிடையில், கடந்த 2018-ம் ஆண்டு அந்நாட்டின் ஹைபர்-பக்துவா மாகாணத்தின் நவ்ஷாரா பகுதியை சேர்ந்த 8 வயது நிரம்பிய சிறுமி மர்ம நபரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றம், கொலை போன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை இருக்கும்போதும் இந்த கொடூர சம்பவத்திற்கு பின்னர் தண்டனைகள் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தன.


கொரோனா வைரஸ் 9 நாட்கள் உயிரோடு இருக்கும் - அதிர்ச்சி தகவல்!
[Sunday 2020-02-09 17:00]

ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் இதழில் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர்கம்ப் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் சராசரியாக 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். குறைந்த வெப்ப நிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும். காற்றிலோ, தரையிலோ கூட 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்.


சீனாவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 89 பேர் பலி!
[Sunday 2020-02-09 17:00]

சீனாவில் கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூகானில் இருந்து பல்வேறு பகுதிகளிலும் கொரானா வைரஸ் பரவியுள்ளது. சீனாவுக்கு சென்று திரும்பிய பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, தைவான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சிலருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சீனாவுக்கு செல்வதை தவிர்க்கும்படி தங்களது நாட்டு மக்களை பல்வேறு அரசுகளும் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், சீனாவில் ஹூபே மாகாணத்தை சேர்ந்த 2,147 பேர் உள்ளிட்ட 2656 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சீனாவில் நேற்று ஒரே நாளில் கொரானா வைரசுக்கு 89 பேர் பலியாகினர். இதில் ஹூபே மாகாணத்தில் அதிகப்பட்சமாக 81 பேர் உயிரிழந்துள்ளனர்.


தாய்லாந்தில் 26 பேரை சரமாரியாக சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்!
[Sunday 2020-02-09 17:00]

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நாகோன் ராட்சசிமா பகுதியில் அமைந்த வணிக வளாகத்தின் முன் நேற்று மதியம் கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ராணுவ வீரர் திடீரென அங்கிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 12 பேர் பலியாகி உள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து அவர் பணய கைதிகளாக பலரை பிடித்து வைத்திருந்து உள்ளார். சம்பவம் நடந்த பகுதி அருகே புத்த கோவில் ஒன்றும் ராணுவ தளம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்நிலையில், பலி எண்ணிக்கை 21 ஆக அறிவிக்கப்பட்டது. இதன்பின்பு 4 பேரில் உடல்களை வணிக வளாகத்தில் இருந்து சிறப்பு படையினர் கண்டெடுத்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.


கொரோனா வைரஸ்: சீனாவில் தாய் - மகள் இடையே நடந்த பாசப்போராட்டம்!
[Sunday 2020-02-09 17:00]

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 723 ஆக உயர்ந்திருந்தது. இந்தநிலையில் இன்று பலி எண்ணிக்கை 803ஐ தாண்டியுள்ளது. 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சீன அரசு செய்தி மீடியாவான ஷினுவா, டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.


உலகின் பல பகுதிகளில் வழக்கத்தை விட பெரிதாகத் தோன்றிய நிலவு!
[Sunday 2020-02-09 08:00]

சூப்பர் மூன் எனப்படும் பெரிய அளவிலான நிலவு நேற்று உலகின் பல பகுதிகளில் பார்க்கப்பட்டது. நடப்பாண்டின் முதல் பெரிய முழுநிலவு நேற்று தெரிந்தது. உலகின் பல பகுதிகளில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் இன்று வரை இந்த சூப்பர் மூன் நிகழ்வைப் பார்க்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஈரானிடம் ஒரு பில்லியன் டொலர் கோருகிறது கனடா!
[Sunday 2020-02-09 08:00]

உக்ரேனிய விமானம் 176 பயணிகளுடன் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ஈரானிடம் 1 பில்லியன் டொலர் இழப்பீடு கோருவதற்கு கனடா திட்டமிட்டுள்ளது. உக்ரேனிய விமானத்தின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கனேடிய வழக்கறிஞர்கள் தெஹ்ரான் மீது ஒரு வர்க்க நடவடிக்கை வழக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த வழக்கு கடந்த ஜனவரி 24ஆம் திகதி ரொறன்ரோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம், ஈரான் புரட்சிப் படையின் மூத்த தளபதியின் படுகொலை தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்ட பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானில் இருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட, உக்ரைனின் போயிங்-737 என்ற விமானம் தற்செயலாக சுட்டுவீழ்த்தப்பட்டது.


கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு!
[Sunday 2020-02-09 08:00]

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 723 ஆக உயர்ந்திருந்தது. இதேபோன்று 34 ஆயிரத்து 598 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது என சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருக்கும் குடும்பம்: கனடா அரசிடம் கண்ணீருடன் கோரிக்கை!
[Sunday 2020-02-09 08:00]

கனடாவில் இருந்து இன்னும் சில வாரங்களில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருக்கும் இலங்கை குடும்பம் கனடா அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளது. கல்கரியில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த உதய நிஷான் பெர்னாண்டோ, சுலக்‌ஷணா தம்பதி தங்கள் மூன்று குழந்தைகளுடன் மார்ச் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர். கனடாவில் தொடர்ந்து வாழ்வதற்கான எல்லா வழிகளும் அடைபட்டுவிட்ட நிலையில், பெர்னான்டோவுக்கு கடைசி வழி மனிதநேய மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பம்தான். நாடு கடத்தும் திகதி நெருங்கிவரும் நிலையில், அந்த மனிதநேய மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பத்திற்கு பதில் வரும் வரையிலாவது எப்படியாவது கனடாவில் இருக்க தங்களாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது பெர்னாண்டோ குடும்பம்.


31,000 கொரோனா வைரசால் பாதிப்பு: சீனாவின் அனுமதிக்காக காத்திருக்கும் ஆஸ்திரேலிய விமானம்!
[Sunday 2020-02-09 08:00]

கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆஸ்திரேலியர்கள் அழைத்து செல்ல சீனாவிடம் அனுமதிக்கோரி காத்திருக்கிறது ஆஸ்திரேலிய விமானம். இதில் கொண்டு வரப்படக்கூடிய ஆஸ்திரேலியர்கள், வட ஆஸ்திரேலிய பிரதேசமான டார்வினுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு பயன்படுத்தப்படாத கிராமப்புறத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சீனாவிலிருந்து வெளியேறிய ஆஸ்திரேலியர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்காணிக்க இருக்கின்றனர். இதனை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் உறுதி செய்திருக்கிறார். இந்த சூழலில், கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரை விட்டு வெளியேற ஆஸ்திரேலிய அரசு ஏற்பாடு செய்யும் கடைசி விமானம் இது எனத் தெரிவிக்கப்படுகின்றது.


சீனாவில் பலாத்காரம் செய்ய வந்தவனிடமிருந்து சாதுர்யமாக தப்பித்த பெண்!
[Friday 2020-02-07 18:00]

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லியான கொரோனா வைரஸ், சீனாவில் இளம்பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளது. பெயரை கேட்டாலே நடுங்க வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இளம்பெண்ணை எப்படி காப்பாற்றியுள்ளது என்பதை பார்ப்போம். கொரோனாவின் மையமான வூகான் நகரில் இருந்து 3 மணி நேரம் பயண தூரத்தில் உள்ள நகரம் ஜிங்ஷான். இங்கு கடந்த வாரம் 25 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவன் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு, வீடு ஒன்றில் நுழைந்துள்ளான். அந்த வீட்டின் படுக்கையறையில் இளம்பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். இதனை கண்ட கொள்ளையன், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்தோடு நெருங்கியுள்ளான்.


500 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த அரோரா கஞ்சா நிறுவனம்!
[Friday 2020-02-07 18:00]

எட்மண்டனை தளமாகக் கொண்ட கஞ்சா நிறுவனமான அரோரா கஞ்சா நிறுவனம், சுமார் 500 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அத்தோடு, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெர்ரி பூத்தையும் அப்பதவியிலிருந்து அந்நிறுவனம் நீக்கியுள்ளது. மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக சுமார் 500 முழுநேர சமமான ஊழியர்களை நீக்கியுள்ளதாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தந்தையருக்கும் 7 மாதகாலம் மகப்பேறு விடுமுறை வழங்க பின்லாந்து அரசு முடிவு!
[Friday 2020-02-07 17:00]

தாய்மார்களை போலவே தந்தையருக்கும் 7 மாதகாலம் ஊதியத்துடன் கூடிய பேறு கால விடுமுறை வழங்க பின்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது. தந்தையர்களும் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை ஊக்குவிக்கும் வகையிலும், பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தும் வகையிலும் இந்த திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில் மேலும் 5 கனேடியர்களுக்கு கொரோனா தொற்று!
[Friday 2020-02-07 17:00]

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் ஐந்து கனேடியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த கப்பலில் உள்ள 251 கனேடியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் இந்த எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. ஜப்பானிய சுகாதார அமைச்சகம் நடத்திய, சமீபத்திய சோதனைகளில் அடையாளம் காணப்பட்ட 41 கொரோனா வைரஸ் தொற்று பிரஜைகளில், கனேடியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்க இந்திய விஞ்ஞானி தலைமையில் குழு நியமனம்!
[Friday 2020-02-07 17:00]

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 635 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 30,840 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,863 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான குழு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்க ஆய்வகத்தில் வைரஸின் முதல் தொகுப்பை உருவாக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி ஒருவர் தலைமையிலான குழு, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் நிலையை நெருங்கியுள்ளது. ரத்தம் உள்ளிட்ட மனித மாதிரிகளில் இருந்து புதிய கொரோனா வைரஸை தனியே பிரித்தெடுப்பதில் ஆஸ்திரேலியாவின் டோஹர்ட்டி இன்ஸ்டியூட் கடந்த வாரம் வெற்றிபெற்றது.


சீனாவில் இருந்து மீட்கப்பட்ட கனேடியர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க திட்டம்!
[Friday 2020-02-07 17:00]

சீனாவில் இருந்து அழைத்துவரப்பட்ட 176 கனேடியர்களும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சீனாவிலுள்ள கனேடியர்களை பாதுகாக்கவும், அங்குள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வரவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.


328 நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் விண்வெளி வீராங்கனை பூமி திரும்பினார்!
[Friday 2020-02-07 08:00]

அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த மார்ச் 14, 2019 சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். இன்றுடன் (வியாழக்கிழமை ) அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 328 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார். இன்று கிறிஸ்டினா கோச் பூமிக்குத் திரும்பி உள்ளார். 36 நாடுகளைச் சேர்ந்த சுமார் 550-க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் இன்றுவரை விண்வெளியில் வலம் வந்திருக்கிறார்கள். 18 விண்வெளி வீரர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்.


இத்தாலியில் கோர விபத்து: ரெயில் தடம் புரண்டு 2 பேர் பலி!
[Friday 2020-02-07 08:00]

இத்தாலியின் மிலனில் இருந்து துறைமுக நகரான சலேர்னாவுக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த ரெயில் மிலன் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள லோடி நகருக்கு அருகே அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போதும் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென தடம் புரண்டது. ரெயிலின் என்ஜின் மற்றும் அதன் பின்னால் இருந்த 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, கவிழ்ந்தன.


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீன மருத்துவர் மரணம்!
[Friday 2020-02-07 08:00]

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து முதன் முதலில் எச்சரித்த சீன மருத்துவர், அதே வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார். உகானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரான லி வென்லியாங், கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பாகவே, உகானில் சார்ஸ் போன்ற புதிய வைரஸ் பரவுவதாக தனது நண்பர்களிடமும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து இருந்தார். ஆனால், லீ வென்லியாங்கிற்கு சம்மன் விடுத்த சீன போலீசார், இது போன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்து இருந்தனர்.


பிரான்சில் இன்ஃபுளுவென்சா வைரஸ் நோய்க்கு 26 பேர் உயிரிழப்பு!
[Thursday 2020-02-06 17:00]

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இது இன்ஃபுளூவென்சா வைரஸ் மூலம் பரவுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் இந்த காய்ச்சல் காரணமாக அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டனர். கடுமையான சுவாசக் கோளாறை ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ் காய்ச்சலினால், பிரான்சில் கடந்த நவம்பர் மாதம் முதல் 311 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 49 பேரின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஜெர்மனியை ஒட்டி அமைந்துள்ள செக் குடியரசு நாட்டிலும் இந்த வைரஸ் நோயினால் 12 பேர் பலியாகினர். சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்ஃபுளுவென்சா வைரஸ் நோய் தொற்றினால் பிரான்சில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


சீனாவில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!
[Thursday 2020-02-06 17:00]

சீனாவை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகரில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. வுகான் நகரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. பிறந்த 30 மணி நேரத்திலேயே வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.


துருக்கி பனிச்சரிவு: மீட்பு பணியில் ஈடுபட்ட 33 பேர் பனியில் சிக்கி உயிரிழப்பு!
[Thursday 2020-02-06 17:00]

துருக்கியில் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கச் சென்று மீண்டும் பனியில் சிக்கி 33 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வேன் மாகாணத்தின் பாசெசேஹிர் நகரில் செவ்வாய்க்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. மலைப் பாதையில் ஏற்பட்ட அந்தப் பனிச் சரிவில் 2 பேர் சிக்கினர். அவர்களை மீட்பதற்காக 300 பேர் அடங்கிய மீட்புக் குழு வரவழைக்கப்பட்டது. அவர்கள், பனிச்சரிவில் மாயமானவர்களைத் தேடும் பணியில் 2-ஆவது நாளாக நேற்று ஈடுபட்டிருந்தனர்.


வழமைக்கு திரும்பியது சிடர்பிரே கல்லூரி!
[Thursday 2020-02-06 17:00]

ஸ்கார்பாரோவில் உள்ள சிடர்பிரே கல்லூரியில் துப்பாக்கி சூடு காரணமாக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணமாகவே கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மார்க்கம் வீதி மற்றும் லாரன்ஸ் அவென்யூ கிழக்கு பகுதியில் உள்ள சிடர்பிரே கல்லூரியில், நேற்று (புதன்கிழமை) மதியம் 1:10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.


பயனாளர்களிடம் வருத்தம் தெரிவித்த கூகுள் நிறுவனம்!
[Thursday 2020-02-06 17:00]

மென்பொருள் கோளாறு காரணமாக புகைப்பட செயலிகளில் இருந்த பயனாளர்களின் வீடியோக்கள் அந்நியர்களுக்கு அனுப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதனால் கூகுள் டேக்அவுட் பொறியை பயன்படுத்திய மிகக் குறைந்த சதவீத பயனாளர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் 21 முதல் 25ம் தேதிக்குள் கூகுள் போட்டோஸ் செயலியில் இருந்து வீடியோக்களை தரவேற்றம் செய்ய இந்த பொறியை பயன்படுத்தியவர்களே பாதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா