Untitled Document
March 28, 2024 [GMT]
அமெரிக்காவில் புதிய சர்ச்சை: இந்திய வம்சாவளி பெண் எம்.பி.யை சந்திக்க மறுத்த மத்திய மந்திரி!
[Sunday 2019-12-22 08:00]

இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்த நாட்டின் நாடாளுமன்ற குழு ஒன்றை சந்திக்க ஏற்பாடு ஆகி இருந்தது. ஆனால் அந்த குழுவில், இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் இடம் பெற்றிருந்ததால், அந்தக் குழுவையே சந்திக்க ஜெய்சங்கர் மறுத்து விட்டார். இதற்கு காரணம், கா‌‌ஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சாசன பிரிவு 370-ஐ இந்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், அங்கு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளை இந்தியா விலக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமிளா ஜெயபால் தீர்மானம் கொண்டு வந்ததுதான்.


வலி நிவாரணிகளால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக அமெரிக்க ஆய்வில் தகவல்!
[Sunday 2019-12-22 08:00]

அதிக வீரியம் கொண்ட வலி நிவாரணிகள் எடுத்து கொள்வதால் குழந்தைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களை அவசர கால மருத்துவமனைகளில் சேர்க்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். வலி நிவாரணியை தேவையின்றி எடுத்து கொள்ளுதல்,சுய-தீங்கு விளைவித்து கொள்ளுதல் போன்ற செய்கையால் பாதிக்கப்பட்ட சுமார் 2,00,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க குழந்தை மற்றும் இளைஞர்களை எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. Clinical Toxicology இதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி கடந்த 2005ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்து பார்த்தால் ஒட்டு மொத்த சம்பவங்கள் குறைந்து விட்டன. ஆனால் வலி நிவாரணிகளை தவறாக பயன்படுத்துவதால் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


மதத்தை பழித்து முகநூலில் பதிவிட்டவருக்கு தூக்கு தண்டனை - பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு!
[Sunday 2019-12-22 08:00]

பாகிஸ்தானில் முல்தான் பஹாயுதீன் ஜக்காரியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக் கிய துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் ஜூனைத் ஹபீஸ். இவர் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் மத விரோத கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் மத விரோத கருத்துகளை வெளியிடுவது கடும் குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்தை செய்து, அது நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனை விதிப்பது வழக்கம் ஆகும். இந்த நிலையில் ஜூனைத் ஹபீஸ் மத விரோத கருத்துகளை வெளியிட்ட வழக்கில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 13-ந்தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு முல்தான் நகரில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் 2014-ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய செசன்ஸ் நீதிபதி காசிப் கய்யாம், ஜூனைத் ஹபீசுக்கு தூக்கு தண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும் அவருக்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற தயாராகும் பிரிட்டன்!
[Saturday 2019-12-21 17:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில், கடந்த சில மாதங்களாக இழுபறி நிலவியதால், 650 தொகுதிகளுக்கும் அண்மையில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி அதிகப் பெரும்பான்மையுடன் 337 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைத்ததால் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் தக்கவைத்துக் கொண்டார்.


சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்து கூகுள் நிறுவனம் அறிவிப்பு!
[Saturday 2019-12-21 17:00]

கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு புத்தாண்டில் 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளத்துடன், 240 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கியவர். 2015ஆம் ஆண்டில் கூகுள் சிஇஓ ஆக பதவி உயர்வுபெற்ற சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பபேட்டின் சிஇஓ ஆகவும் அண்மையில் நியமிக்கப்பட்டார்.


ரொறன்ரோவில் பெண்ணை கொன்றுவிட்டு தப்பிச்சென்ற இளைஞன்!
[Saturday 2019-12-21 17:00]

ரொறன்ரோவின், வெஸ்ரன் வீதி – லோறன்ஸ் அவெனியூ பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள அடுக்குமாடி கட்டத்தின் லிஃப்ட் தளத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


பனியால் மூடப்பட்ட சீன நகரங்கள்! Top News
[Saturday 2019-12-21 17:00]

சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள பல நகரங்கள், பனிபோர்வையால் போர்த்தப்பட்டு மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன. ஹூனான், ஜிலின் ஆகிய வடமேற்கு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.


சீனாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம்: அமெரிக்காவிடம் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ கோரிக்கை!
[Saturday 2019-12-21 17:00]

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாது என அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். சீன அரசாங்கத்தினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடிய பிரஜைகள் இருவரும் விடுதலை செய்யப்படும் வரை குறித்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.


மெக்ஸிகோவில் இரு சொகுசு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
[Saturday 2019-12-21 08:00]

மெக்ஸிகோவில் இரு சொகுசுக் கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். கோஸூமல் என்ற தீவில் கார்னிவரல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இரு கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.


முஷாரபிற்கு மரண தண்டனை அளித்த நீதிபதி மனநலம் சரியில்லாதவர் - பாகிஸ்தான் அரசு கருத்து!
[Saturday 2019-12-21 08:00]

தேச துரோக வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரபிற்கு மரண தண்டனை விதித்த நீதிபதி மனநலம் சரியில்லாதவர் என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. முஷாரப் தூக்கில் ஏற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த பெஷாவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அகமது ஷா, தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் முஷாரப் இறந்து விட்டால், அவரது சடலத்தை சாலையில் இழுத்து வந்து நாடாளுமன்ற வளாகத்தில் 3 நாள்கள் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்ற கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


அவுஸ்திரேலியாவில் கடும் வறட்சி: 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருட்டு!
[Saturday 2019-12-21 08:00]

ஆஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாகவும், போதிய மழை இல்லாததாலும் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அதிக வெப்பம் காரணமாக அங்குள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தண்ணீரை பயன்படுத்த அந்த நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிரேட்டர் சிட்னி, புளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சக் கூடாது; 2 வாளி தண்ணீர் கொண்டுதான் வாகனங்களை கழுவ வேண்டும்; நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்ப சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கட்டுப்பாடுகளை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டாலர்கள் வரையும், வணிக நிறுவனங்களுக்கு 550 டாலர்கள் வரையும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் அந்த மாகாண மக்கள் தண்ணீருக்காக கடும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் தண்ணீர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.


இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் நபர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த 8 வயது சிறுவன்!
[Friday 2019-12-20 17:00]

பொம்மைகள் குறித்து ஆய்வு செய்து காணொளி வெளியிடும் 8 வயது சிறுவன் ரியான், யூ டியூபில் அதிகம் சம்பாதித்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டும் இவரே முதலிடம் பிடித்திருந்தார். Ryan's World என்ற யு டியூப் சேனல் வைத்திருக்கும் இந்த சிறுவன், 2019ஆம் ஆண்டில் 26 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளார்.


கனடா - நோர்த் யோர்க் பகுதியில் நடந்த கொலை சம்பவம்: இருவருக்கு பொலிஸார் வலைவீச்சு!
[Friday 2019-12-20 17:00]

நோர்த் யோர்க் அடுக்குமாடி கட்டடத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பாக, இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் இருவரினதும் ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் கடந்த 11ஆம் திகதி இரவு 8 மணியளவில் லெஸ்லி வீதி மற்றும் பிஞ்ச் அவென்யூ ஈஸ்ட் அருகே உள்ளே குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இடம்பெற்றுது.


சைபீரியாவை நோக்கி நகரும் பூமியின் காந்த வட துருவம் - குழம்பிப்போன விஞ்ஞானிகள்!
[Friday 2019-12-20 17:00]

இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல காந்தத்திலும் அதாவது பூமியை சுற்றி இருக்கும் காந்த புலத்திற்கு இரு துருவங்கள் உண்டு. வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரியவந்து உள்ளது. பூமியின் காந்த மண்டலம் தான் நம்மை சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களில் இருந்து காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும். உயிரினங்களே இருக்காது. பூமியின் ஆழத்தில் திரவ இரும்புகளில் எதிர்பாராத மாற்றங்களால் உருவாகும் காந்த துருவம் இயக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள அரசு நிறுவனங்கள் - நாசா, பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) மற்றும் அமெரிக்க வன சேவை உட்பட மேப்பிங் முதல் விமான போக்குவரத்துக் கட்டுப்பாடு வரை அன்றாட நடவடிக்கைகளில் இந்த காந்த துருவங்களைப் பயன்படுத்துகின்றன.


கடுமையான பனிப்பொழிவு: ஒன்ராறியோ முழுவதும் பல வீதிகள் மூடல்!
[Friday 2019-12-20 17:00]

கடுமையான பனிப்பொழிவினால், தென்மேற்கு ஒன்ராறியோ முழுவதும் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சீரற்ற காலநிலையால் வாகன ஓட்டுநர்கள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


ஜெர்மனியில் வேலை இல்லாததால் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறை சென்ற முதியவர்!
[Friday 2019-12-20 08:00]

ஜெர்மனியின் மோனோசென்க்ளாட்பாக் நகரைச் சேர்ந்தவர் எபெர்ஹார்டு (வயது 62). முன்னாள் கணினி அறிவியலாளரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை இழந்துள்ளார். அதன் பின்னர் தனது சேமிப்பில் இருந்த பணத்தை ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளுக்கு சுற்றுலா சென்று செலவழித்துள்ளார். கையில் இருந்த பணம் தீரவே என்ன செய்வதென்று தெரியாமல் தனது காரிலேயே வசித்து வந்துள்ளார். இதற்கிடையே அவரது ஓட்டுநர் உரிமமும் காலாவதியானது. அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் லோயர் சாக்சனி மாநிலத்தின் ஓல்டன்பெர்க் நகரில் சைக்கிள்கள் செல்லும் பாதையில் காரை ஓட்டிச் சென்று, ஏதிரே சைக்கிளில் வந்தவர்மீது வேகமாக மோதினார். இதில் சைக்கிளில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து எபெர்ஹார்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.


உலகிலேயே மிகச்சிறிய வீட்டினை உருவாக்கிய கனடிய பொறியாளர்! Top News
[Friday 2019-12-20 08:00]

உலகிலேயே மிகச் சிறிய வீட்டினைக் கட்டி கனடா நாட்டு பொறியாளர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ட்ராவிஸ் காசகிராண்டே என்பவர் சிறிய வீட்டினைக் கட்டி சாதனை படைக்க விரும்பினார். இறுதியாக மனித தலைமுடியை விட சிறிய வீட்டைக் கட்டியுள்ளார் ட்ராவிஸ். இந்த வீட்டில் கதவுகள் ஜன்னல், நாற்காலிகள், புகைபோக்கி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.


தண்டனையை நிறைவேற்றும் முன்பே முஷரப் இறந்துவிட்டால் பொதுஇடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
[Friday 2019-12-20 08:00]

பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முஷரப் 2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டின் அதிபரானார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15-ந் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதும், தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றியதற்காகவும், நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்காகவும் முஷரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தார். 2016-ம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்ற முஷரப் பின்னர் நாடு திரும்பவில்லை. விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இஸ்லாமாபாத்தில் சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தேச துரோக வழக்கை விசாரித்து வந்தது. கடந்த 17-ந் தேதி சிறப்பு கோர்ட்டில் முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2 நீதிபதிகள் இந்த தீர்ப்பையும், ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்தையும் தெரிவித்து இருந்தனர்.


நியூ சவூத் வேல்ஸ் மாகாணத்தில் பரவி வரும் புதர்தீ: அவசர நிலை பிரகடனம்!
[Thursday 2019-12-19 17:00]

ஆஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் மாகாணத்தில் பரவி வரும் புதர்தீயின் காரணமாக, அந்த மாகாணத்தில் 7 நாள்கள் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள புதர்தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், கடுமையான வெயில் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி வருகிறது.


லண்டனில் போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்!
[Thursday 2019-12-19 17:00]

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து மத வேறுபாடுகளினால் வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது, போலீசார் தடியடி நடத்தினர். மாணவர்கள் தாக்கப்பட்டதால் நாடு முழுவதும் சில முக்கிய நகரங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் எதிரொலியாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கனடா வாங்கி கொள்ளை: பொலிஸார் வலைவீச்சு!
[Thursday 2019-12-19 17:00]

வுட்ஸ்டாக்கில் ஆயுதமேந்திய வங்கி கொள்ளைக்குப் பிறகு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஸ்பிரிங் பேங்க் அவென்யூவில் உள்ள ஸ்கோடியா வங்கியில் நேற்று (புதன்கிழமை) மாலை 3:15 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றமான நிலை நிலைவியதால், வங்கி மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்தில் பெட்ரோல் அங்காடியில் திருடிய இருசக்கர வாகன கும்பல்!
[Thursday 2019-12-19 17:00]

இங்கிலாந்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் 12க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திடீரென நுழையும் மர்மநபர்கள், அங்கிருந்த அங்காடியில் அடாவடியாக பொருட்களை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வைதன்ஷாவ் (Wythenshawe) நகரத்தில் செல் (Shell) பெட்ரோல் பங்கில் பதிவான இந்த காட்சியில், இருசக்கர வாகனங்களில் வந்த முகமுடி மற்றும் ஹெல்மெட் அணிந்த நபர்கள், அங்கிருந்த அங்காடிக்குள் நுழைகின்றனர்.


சாஸ்கடூனில் இயங்கிவரும் ஹோலி கிராஸ் உயர்நிலைப் பாடசாலை மூடல்!
[Thursday 2019-12-19 17:00]

ஹோலி கிராஸ் உயர்நிலைப் பாடசாலையில் ஏற்பட்டுள்ள நீர் விநியோக தடை நாளை (வெள்ளிக்கிழமை) சீரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புமென அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் விநியோக தடை காரணமாக நேற்று மற்றும் இன்று பாடசாலை வகுப்புகளை கிரேட்டர் சாஸ்கடூன் கத்தோலிக்கம் இரத்து செய்தது.


அமெரிக்காவில் மேயர் பதவிக்கு தேர்வான 7 மாத குழந்தை!
[Thursday 2019-12-19 09:00]

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒயிட்ஹால் நகரின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த நகரின் கவுரவ மேயர் பதவி ஏலம் விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இதில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாத ஆண் குழந்தை ஏலத்தை வென்று கவுரவ மேயர் பதவிக்கு தேர்வானது. ‘மேயர் சார்லி’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வொயிட்ஹாலில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு தன்னுடைய கவுரவ மேயர் பதவியை ஏற்றுக்கொண்டது. இந்த விழாவில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் ஆடல், பாடலுடன் விழா களைகட்டியது. பதவி ஏற்பின்போது மேயர் சார்லி சார்பாக பிராங்க் என்பவர் பேசினார்.


தொழிற்சங்கங்களை மூட முயற்சித்த சாம்சங் நிறுவனம்: தலைவர், துணைத் தலைவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை!
[Thursday 2019-12-19 08:00]

தொழிற்சங்கங்களை மூட முயற்சித்ததற்காகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்க முயன்ற வழக்கில் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனத்தின் தலைவராக லீ சாங் ஹோனும், துணைத்தலைவராக காங் குயாங் ஹூன் ஆகியோரும் உள்ளனர். தொழிலாளர் சங்கங்களை மூடுவதற்காகவும், சங்க உறுப்பினர்களின் ஊதியத்தை குறைக்கவும், அவர்களின் தனிப்பட்டதகவல்களை சேகரிக்கவும் உத்தரவிட்டதாகவும், தொழிற் சங்க நடவடிக்கைகளை நசுக்குவதாகவும் புகார் எழுந்தது.


டிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் நிறைவேற்றம்!
[Thursday 2019-12-19 08:00]

அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் குடியரசு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சியாக ஜனநாயக கட்சி இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முன்னாள் துணை அதிபர் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரான ஜோ பிடன், அதிபர் டிரம்புக்கு முக்கிய போட்டியாக இருந்திடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிடனின் மகனுக்கு உக்ரேன் நாட்டிலுள்ள எரிவாயு நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளும்படி அந்நாட்டு அதிபரிடம் டிரம்ப் கேட்டு கொண்டார். இதனால் டிரம்ப், அமெரிக்க அரசியலமைப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ஆபத்து விளைவித்து விட்டார் என்று ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது. இதை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவது என முடிவு செய்து, அதன் முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் அது தாக்கல் செய்யப்பட்டது.


'கனடா ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக சேவை செய்கிறது' - குடிவரவு அமைச்சர்!
[Wednesday 2019-12-18 17:00]

தனிப்பட்டவர்களின் நிதியுதவி மூலம் அகதிகளை மீளக்குடியமர்த்தும் வெற்றிகரமான திட்டத்துடன் கனடா ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக சேவை செய்கிறது என்று குடிவரவுத்துறை அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் (யு.என்.எச்.சி.ஆர்) மற்றும் சுவிட்சர்லாந்து அரசினால் ஜெனீவாவில் நடத்தப்பட்ட உலக அகதிகள் மன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே மென்டிசினோ இந்தக் கருத்தை வௌியிட்டுள்ளார். குறித்த நிகழ்வு ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்கள், அகதிகளுக்கான சட்டவல்லுனர்கள் மற்றும் அகதிகளின் குழுத் தலைவர்களை ஒன்றிணைக்கும். உலகளாவிய இடம்பெயர்வு நெருக்கடியைப் பற்றி ஆராயும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அமெரிக்காவில் இறந்த கணவனின் உடலை 10 ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்திருந்த மனைவி!
[Wednesday 2019-12-18 17:00]

அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரைச் சேர்ந்தவர் ஜீன் சவுரோன்-மாதர்ஸ் (வயது 75). இவரது கணவர் பால் எட்வர்ட்ஸ் ஓய்வு பெற்ற படைவீரர் ஆவார். கடந்த மாதம் 22ம் தேதி ஜீன் சவுரோன்-மாதர்ஸ் வீட்டிற்கு வந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள், வழக்கமான பொதுநல சோதனையை மேற்கொண்டனர். அப்போது ஜீன் மாதர்ஸ் அங்கே இறந்து கிடந்தார். அவரது மரணம் இயற்கையானது போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டை மேலும் சோதனை செய்ததில், ஜீன் மாதர்சின் கணவரான பால் எட்வர்ட்சின் உடல் அங்கிருந்த பிரீசரில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலுடன் ஒரு கடிதமும் கண்டெடுக்கப்பட்டது.

Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா