Untitled Document
March 29, 2024 [GMT]
நீச்சல் உடையில் வந்தவர்களுக்கு இலவச பெற்றோல்! ர‌ஷியாவில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிலை:
[Wednesday 2019-11-20 20:00]

ர‌ஷியாவில் நீச்சல் உடையில் வரும் அனைவருக்கும் இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என்ற வினோத சலுகை ஒன்றை பெட்ரோல் நிலையம் அறிவித்து விளம்பரப்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் நிலையம் திறந்தது முதல் 3 மணி நேரத்துக்குள் நீச்சல் உடையில் வரும் அனைவருக்கும் இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


மேலும் உயிரிழப்புகள் நடக்கக்கூடும்: ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் பற்றி அகதி விடுக்கும் எச்சரிக்கை
[Wednesday 2019-11-20 17:00]

அண்மையில், பப்பு நியூ கினியாவில் ஆஸ்திரேலியாவின் நித உதவியுடன் உருவாக்கப்பட்ட Bomana குடிவரவுத்தடுப்பு முகாமில் சிறைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 50 தஞ்சக்கோரிக்கையாளர்கள், தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டிருந்தால் மேலும் பல தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார் குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி.


அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொல்லை; இந்திய வாலிபர் கைது!
[Wednesday 2019-11-20 06:00]

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தவர் லோகேஷ் நாயக். (வயது 35). இந்தியரான இவர் கடந்த ஆகஸ்டு மாதம் தன்னுடன் பணியாற்றி வந்த அமெரிக்காவை சேர்ந்த 24 வயதான பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பான புகாரின் பேரில் கடந்த 8-ந்தேதி லோகேஷ் நாயக்கை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து, காணொலி காட்சி மூலம் அமெரிக்க நீதிபதி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.


வன்முறை களமான ஹாங்காங் பல்கலைக்கழகம்!
[Wednesday 2019-11-20 06:00]

ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஜனநாயக ஆர்வலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பகுதியில் உள்ள பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து, அதை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் போலீசார் உள்ளே நுழையாமல் இருக்க அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியும், அம்புகளை ஏவியும் தாக்கினர். போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் போராட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே வர மறுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிரடியாக பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்தனர். 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை தவிர போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்வோம் என போலீசார் கூறினர்.


அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வடகொரியா!
[Wednesday 2019-11-20 06:00]

அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது போருக்கான முன்னோட்டம் என கூறி வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியா உடனான அணு ஆயுத பேச்சுவார்த்தையை எளிதாக்கும் வகையில் நல்லெண்ண அடிப்படையில் இந்த மாதம் நடக்கவிருந்த கூட்டு போர் பயிற்சியை தள்ளிவைப்பதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் தெரிவித்தன. அத்துடன் அணுஆயுத விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரைந்து செயல்பட வேண்டுமெனவும், இது தொடர்பாக விரைவில் சந்தித்து பேசுவோம் எனவும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், அமெரிக்கா தனது விரோதப்போக்கை கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.


இந்தியாவுடனான தபால் சேவையை மீண்டும் தொடங்கவிருக்கும் பாகிஸ்தான்!
[Tuesday 2019-11-19 17:00]

இந்தியா பாகிஸ்தான் இடையே பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான், எல்லைப்பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு தகுந்த வகையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே 370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க இந்தியா எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தியாவுடனான அனைத்து ரீதியிலான உறவுகளை பாகிஸ்தான் குறைத்துக்கொண்டது. இதன் எதிரொலியாக ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவுடனான தபால் மற்றும் வான்வெளி சேவைகளையும் பாகிஸ்தான் நிறுத்தியது.


கல்கரியில் பனிப்பொழிவு எச்சரிக்கை!
[Tuesday 2019-11-19 17:00]

கல்கரியில் அதிகமான பனிப்பொழிவை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெயார் ட்ரை, ப்ரூக்ஸ், வுல்கன், மெடிசின் ஹெட், ஹை ரிவர் ஆகிய இடங்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ஆல்பர்ட்டாவில் இருந்து குறைந்த அழுத்த நகர்வொன்று, மாகாணத்திற்குள் நகர்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) 10 முதல் 15 சென்டிமீட்டர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.


நாடு முழுவதும் இணைய சேவையை முடக்கிய ஈரான்!
[Tuesday 2019-11-19 17:00]

ஈரானில் வெடித்திருக்கும் போராட்டங்களை அடக்கும் விதமாக, நாடு முழுவதும் இணையதள சேவையை, அந்நாட்டு அரசு முடக்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை 300 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தலைநகர் தெஹ்ரான் உட்பட நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள், வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைப்படுவதால் இணையதள சேவையை சனிக்கிழமை முதல், திங்கட்கிழமை நள்ளிரவு வரை முடக்கியிருக்கிறது.


250 வேலை குறைப்பினை எதிர்கொள்ளும் அபாயத்தில் கல்கரி பல்கலைக்கழகம்!
[Tuesday 2019-11-19 17:00]

சமீபத்திய மாகாண நிதி குறைப்பினால், 250 வேலை குறைப்பினை எதிர்கொள்ளும் அபாயத்தினை கல்கரி பல்கலைக்கழகம் எதிர்கொண்டுள்ளது. காலியிடங்களை குறைத்தல் மூலம் 100 வேலை குறைப்பினையும், ஓய்வு மற்றும் ராஜினாமாக்கள் மூலம் 150 வேலை குறைப்பினையும் மேற்கொள்ளவுள்ளது. இரண்டு சுற்றுக்களான இந்த பணி நீக்கங்கள் இருக்குமென யு சி சி புரோவோஸ்ட் மற்றும் துணைத் தலைவர் ட்ரு மார்ஷல் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தானின் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி!
[Tuesday 2019-11-19 09:00]

காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் பலமுறை இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. கார்கில் போர் போன்ற மிகப்பெரிய யுத்தங்களும் நிகழ்ந்து பெருமளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அணு ஆயுதத்தைத் தாங்கியபடி கண்டம் விட்டு கண்டம் சென்று 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி 2 ஏவுகணையை இந்தியா கடந்த சனிக்கிழமை பரிசோதனை செய்தது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கையும் தாக்கியது.


வடகொரியா திடீர் ராணுவ பயிற்சி!
[Tuesday 2019-11-19 08:00]

கொரியா எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையை விரைந்து நடத்திட நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வடகொரியாவின் விமானப்படை திடீர் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த ராணுவ பயிற்சி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு செய்தார்.


ஹாங்காங் போராட்டம்: பல்கலைக்கழகத்தில் பொருட்களுக்கு தீவைத்த மாணவர்கள்!
[Tuesday 2019-11-19 08:00]

சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாங்காங்கில் பல்கலைக்கழக மாணவர்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். கிரிமினல் குற்றவாளிகளை சீனாவிற்கு நாடு கடத்த எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதிய சட்ட மசோதாவை கைவிடுவதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்த போதும், சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடுவதால் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர் போலீசார்.


ரொறன்ரோவில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று சிறுவர்கள்!
[Monday 2019-11-18 17:00]

ரொறன்ரோவில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓக்வுட் அவென்யூ மற்றும் ரோஜர்ஸ் வீதிப் பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தேடுதலின் போது, ஆர் கார்பைன் க்ளோக் 9 மிமீ அரை தானியங்கி துப்பாக்கியொன்றையும், 24 சுற்று வெடிமருந்துகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


அமெரிக்காவில் பல்கலைக்கழக ஆய்வகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது!
[Monday 2019-11-18 17:00]

அர்காடெல்ஃபியா ஹெண்டர்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியர்களாக பணியாற்றும் டெர்ரி டேவிட் பேட்மேன், பிராட்லி ஆலன் ரோலண்ட் ஆகிய இருவரும் ஆய்வகத்தில் மெத்தம்ஃபெட்டமைன் என்ற போதைப்பொருளை தயாரித்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர்.


முடிவுக்கு வந்த சானிச் பாடசாலை ஊழியர்களின் போராட்டம்!
[Monday 2019-11-18 17:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சானிச் பாடசாலை ஊழியர்களின் போராட்டம், முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படவுள்ளது. நேற்று முன் தினம் (சனிக்கிழமை) தொழிற் சங்க ஊழியர்களுக்கும். பாடசாலை நிர்வாகத்துக்கும் இடையில் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது வாரமாக தொடர்ந்த இந்த பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


கலிபோர்னியா விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு!
[Monday 2019-11-18 17:00]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரெஸ்னோ என்ற நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை பலர் விருந்து நிகழ்ச்சிக்காக கூடியிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் அலறியடித்து ஓடத் துவங்கினர். தொடர்ந்து அந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த இரு நபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.


ரொறென்ரோவில் பாதசாரி மீது துப்பாக்கிப் பிரயோகம்!
[Monday 2019-11-18 17:00]

கனடாவில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஔிப்படத்தை பொலிஸார் வௌியிட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.40 மணியளவில் மேற்கு ரொறென்ரோவில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அங்கு திடீரென துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்ட நிலையில் கண்காணிப்பு பணியில் இருந்த பொலிஸார் சென்று அவதானித்துள்ளனர்.


வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து விளையாடிய சிறுவர்கள்! Top News
[Monday 2019-11-18 08:00]

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிலும் சிலர் பாம்பு உயிரோடு இருந்தால் மட்டும் அல்ல செத்து கிடந்தால் கூட அதன் அருகில் செல்ல பயப்படுவார்கள். ஆனால் வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சிறுவர்கள் ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வியட்நாமின் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் சிறுவர்கள் சிலர் விளையாடுவதற்கு ஏதும் கிடைக்காமல் சுற்றித்திரிந்தனர். அப்போது அங்கு பாம்பு ஒன்று செத்து கிடந்ததை கண்டனர். செத்த பாம்பை கண்டு, அந்த சிறுவர்கள் பதற்றம் அடையவில்லை. மாறாக தங்களுக்கு விளையாட அருமையான பொருள் கிடைத்து விட்டதென்று உற்சாகமடைந்தனர்.


அவுஸ்திரேலியாவில் கஞ்சா செடியைக் காப்பாற்ற தீ வைத்தவர் கைது!
[Monday 2019-11-18 08:00]

நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ பரவிய விவகாரத்தில், கஞ்சா செடிகளைக் காப்பாற்ற தீ வைத்த நபரைக் ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் பரவிவரும் காட்டுத்தீயினால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. பத்தாயிரம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.


அதிபர் டிரம்ப் நலமுடன் இருக்கிறார் - வெள்ளை மாளிகை தகவல்!
[Monday 2019-11-18 08:00]

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில், 73 வயதான டிரம்ப், நேற்று முன்தினம் மேரிலேண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் அவரது உடல் பரிசோதிக்கப்பட்டது. திட்டமிடப்படாமல் திடீரென நடந்த இந்த முழு உடல் பரிசோதனை குறித்த தகவல் வேகமாக பரவியது.


துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா!
[Sunday 2019-11-17 18:00]

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து இரு கட்சி வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றனர். இன்று அதிகாலை நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால், காலை 7 மணி நிலவரப்படி, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கோத்தபய ராஜபக்சேவை விட கூடுதலாக ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார்.


இலங்கையின் அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே!
[Sunday 2019-11-17 18:00]

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், இலங்கையின் ஏழாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக இலங்கை அரசுக்கு சொந்தமான ஊடகம் தெரிவித்துள்ளது.


இரானில் 50% உயர்ந்த பெட்ரோல் விலை - போராட்டத்தில் குதித்த மக்கள்!
[Sunday 2019-11-17 18:00]

இரான் அரசு பெட்ரோல் வாங்குவதற்கு ரேஷன் முறையைக் கொண்டு வந்ததை அடுத்தும், பெட்ரோல் விலையை உயர்த்தியதை அடுத்தும் அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலையானது குறைந்தபட்சம் 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இரான் மீது அமெரிக்க கொண்டுவந்த பொருளாதாரத் தடையை ஈடுகட்டும் விதமாக, பெட்ரோல் பொருட்களுக்கான மானியம் குறைக்கப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடை, இரான் பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தைச் ஏற்படுத்தியுள்ளது.


ஹாங்காங் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்!
[Sunday 2019-11-17 18:00]

சீன அரசை எதிர்த்து வரும் போராட்டக்காரர்கள் ஹாங்காங் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட நிலையில், அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகையை பயன்படுத்தினர். சீனாவுடனான சாலைப் போக்குவரத்தைத் துண்டிக்கும் வகையில், போராட்டக்காரர்கள் தொடர்ந்து ஹாங்காங் பல்கலைக்கழகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர். நேற்றிரவு ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது செங்கல், அம்பு, பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.


போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு!
[Sunday 2019-11-17 09:00]

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடங்கிய போர் 19-வது ஆண்டாக நீடித்து வருகிறது. அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை விரட்டியடித்து விட்டாலும்கூட, அமெரிக்க படைகள் அங்கிருந்து தலீபான்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் அங்கு அமெரிக்க படையில் இடம் பெற்று போர் புரிந்து வந்த 2 ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் கிளிண்ட் லாரன்ஸ், மேஜர் ஜெனரல் மேத்யூ கோல்ஸ்டீன் ஆகியோர் மீது விசாரணை நடைபெற்றது.அமெரிக்க படை வீரர்களை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சுட்டுக்கொல்லும்படி சக வீரர்களுக்கு கிளிண்ட் லாரன்ஸ் உத்தரவிட்டதில் 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 6 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.


ஹாங்காங் போராட்டத்தை கட்டுப்படுத்த சீன ராணுவத்தினர் குவிப்பு!
[Sunday 2019-11-17 09:00]

ஹாங்காங்கில் போராட்டத்தில் ராணுவ வீரர்களை சீனா களம் இறக்கியுள்ளது. குற்றவழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்டமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் ஹாங்காங் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். தொடர் போராட்டத்தால் பல இடங்கள் கற்களும், குப்பை கூளமுமாகக் காட்சியளிக்கின்றன.


9 வயதில் பொறியாளர் பட்டம்: உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்!
[Sunday 2019-11-17 08:00]

பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். தனது 8 வயதிலேயே உயர்கல்வியை முடித்ததற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற லாரன்ட், தற்போது என்ஜினீயரிங் படிப்பையும் முடிக்கும் நிலையில் உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் என்ஜினீயரிங் படிப்பில் அவர் சேர்ந்திருந்தார். ஆலந்து நாட்டின் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் அடுத்த மாதம் (டிசம்பர்) பட்டம் பெற இருக்கும் லாரன்ட், உலகிலேயே இளம் வயது பட்டதாரி என்ற சிறப்பை பெற உள்ளார். இவரது நுண்ணறிவு திறன் அளவு (ஐ.கியூ.) 145 அளவுக்கு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.


பொலிவியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் 5 பேர் பலி!
[Saturday 2019-11-16 17:00]

பொலிவியாவில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் இவா மொரேல்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்ததால் பதவியை ராஜிநாமா செய்த மொரேல்ஸ், மனைவியுடன் மெக்சிகோவில் தஞ்சமடைந்துள்ளார்.

Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா