Untitled Document
August 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சிறுவர்களின் காமத்தை தூண்டி உடலுறவு கொண்ட பெண் தண்டிக்கப்பட்டுள்ளார்!
[Thursday 2017-08-10 09:00]

அமெரிக்காவில் ப்ரூக் லஜினெஸ் என்ற 38 வயதான இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் சிறுவர்களின் காமத்தை தூண்டி அவர்களுடன் உடலுறவு கொண்ட குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டுள்ளார். மிச்சிகன் மாகாணத்தில் உள்ள லிமா டவுன்ஷிப் என்ற இடத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார் ப்ரூக் லஜினெஸ் என்ற 38 வயதான பெண். இவர் கடந்த ஆண்டு ஸ்னாப் சாட் என்ற சமூக வலைதளத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களை சந்தித்துள்ளார்.


அமெரிக்க ராணுவ பயிற்சி எதிரொலி: - குயாம் தீவு மீது ஏவுகணை வீச வடகொரியா திட்டம்
[Wednesday 2017-08-09 13:00]

சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஜூலையில் 2 முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்துள்ளது.அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் ஐ.நா. சபை பொருளாதார தடை விதித்துள்ளது.


இதுவரை காணாத அமெரிக்காவின் கோபத்தை இந்த உலகம் கண்டுவிடும்: - அமெரிக்கா எச்சரிக்கை
[Wednesday 2017-08-09 13:00]

நெருப்புடன் விளையாடாதீர்கள் என வட கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் குவாம் தீவு ராணுவ தளத்தை தாக்குவோம் என்று பதிலுக்கு வட கொரியாவும் எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.


சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: - 100க்கும் மேற்பட்டோர் பலி
[Wednesday 2017-08-09 08:00]

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் திடீரென இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவாகியுள்ளது.சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி, 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மத்திய கிழக்கு நாடுகளில் யுத்தத்தை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கொலையும் தற்கொலையும்!
[Wednesday 2017-08-09 08:00]

போர்ச் சூழலில் தத்தளிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் யுத்தத்தைவிடவும் கொலையும் தற்கொலையுமே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.ஈரான், சிரியா, ஏமன் உள்ளிட்ட கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்து 22 நாடுகளில் கொலை மற்றும் தற்கொலையால் 1.4 மில்லியன் உயிரிழ்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையால் தெரிய வந்துள்ளது.


வெப்பத்தை குறைக்க சிகரெட் கழிவில் ரோடு: - விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு
[Tuesday 2017-08-08 17:00]

சிகரெட் புகைத்த பிறகு பஞ்சுடன் கூடிய கழிவு துண்டுகளை கீழே வீசி விடுகின்றனர். அவை கண்ட இடங்களில் குப்பைகளாக குவிந்து கிடக்கின்றன. அவ்வாறு தூக்கி எறியப்படும் கழிவு குப்பையை ரோடு போட பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.ரோடு போடுவதற்கு கடுமையான கலவைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. அது ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையது. எளிதில் தீப்பிடிக்க கூடியது.


டோவோரக் விலங்கியல் பூங்காவில் 5 குட்டிகளை ஈன்ற அரிய வகை உயிரினமான வெள்ளை சிங்கம்!
[Tuesday 2017-08-08 17:00]

உலகின் அரிய வகை உயிரினமான வெள்ளைச் சிங்கம் ஈன்ற 5 குட்டிகள் தற்போது பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடான செக் குடியரசில் உள்ள டோவோரக் விலங்கியல் பூங்காவில் டியா மற்றும் அகி என்று பெயரிடப்பட்ட வெள்ளைச் சிங்கங்கள் உள்ளன. இதில் பெண் சிங்கமான அகி கர்ப்பமாக இருந்தது.


காதலனை கரம் பிடிக்க கோடிக்கணக்கான சொத்துக்களை உதறி தள்ளிய பெண்!
[Tuesday 2017-08-08 17:00]

கோடீஸ்வரரின் மகள் ஒருவர் காதலனை கரம் பிடிக்க தனது கோடிக்கணக்கான சொத்துக்களை உதறி தள்ளியுள்ளார். மலேசியாவை சேர்ந்தவர் கோ கே பெங், மிகப்பெரிய கோடீஸ்வரரான இவரின் சொத்து மதிப்பு 2000 கோடி ரூபாய் ஆகும்.கே பெங்கின் ஒரே மகள் ஏஞ்சலின் பிரான்ஸிஸ் கோ, இவர் இங்கிலாந்தில் படிக்கும் போது உடன் படிக்கும் ஜடிடிஹா என்பவரை காதலித்துள்ளார்.


அண்ணன் வில்லியத்தின் திருமணத்துக்காக ஹரி செய்த நெகிழ்ச்சியான செயல்!
[Tuesday 2017-08-08 09:00]

டயானாவின் மோதிரத்தை தான் வைத்திருந்த நிலையில் அண்ணன் திருமணத்துக்காக அதை இளவரசர் ஹரி அவருக்கு கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.பிரித்தானியா இளவரசி டயானா கடந்த 1997ல் கார் விபத்தில் மரணமடைந்தார். டயானா இறந்த பின்னர் அவர் பயன்படுத்திய பொருட்கள் சிலவற்றை அவரது மகன்களான வில்லியம் மற்றும் ஹரி பிரித்து எடுத்து கொண்டனர்.


அமெரிக்காவில் தாயின் அலட்சியத்தில் பரிதாபமாய் பலியான பிஞ்சுகள்!
[Tuesday 2017-08-08 09:00]

அமெரிக்காவில் கார் உள்ளே தனது குழந்தைகளை பூட்டி வைத்து சென்ற நிலையில், இரு குழந்தைகளும் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Texas மாகாணத்தை சேர்ந்தவர் Cynthia Marie Randolph (24), இவருக்கு Juliet Ramirez (2) மற்றும் Cavanaugh Ramirez (1) என இரு குழந்தைகள் உள்ளனர்.


குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு சென்ற பிரித்தானிய பெண்மணி மீது பிரேசிலில் துப்பாக்கி சூடு!
[Tuesday 2017-08-08 08:00]

பிரேசில் நாட்டில் குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு சென்ற பிரித்தானிய பெண்மணி ஒருவர் அங்குள்ள குடிசைப் பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் உள்ள குடிச்சைப் பகுதி ஒன்றில் தவறுதலாக நுழைந்த பிரித்தானிய குடும்பத்தின் மீது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.


சொகுசு கப்பலை கடத்த முயன்ற சோமாலிய கடற்கொள்ளையர்கள்: - நடந்தது என்ன?
[Tuesday 2017-08-08 08:00]

Sea Princess எனும் ஆடம்பர கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க 10 நாட்கள் இரவும் பகலும் கடுமையாக போராடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 1,900 பயணிகளுடன் Sea Princess எனும் சொகுசு கப்பல் ஐக்கிய அமீரகத்தின் துபாய் நோக்கி பயணமாகியுள்ளது.


அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுப்போம்! - வடகொரியா எச்சரிக்கை
[Monday 2017-08-07 20:00]

தென் கொரியாவின் பேச்சுவார்த்தை அழைப்பினை நிராகரித்துள்ள வட கொரியா, இந்த அழைப்பினை நேர்மையற்ற ஒன்று என விமர்சித்துள்ளது. அத்துடன், தங்கள் நாடு மீது புதிய தடைகள் விதிக்க காரணமான அமெரிக்காவுக்கு பதிலடி தருவோம் எனவும் சபதம் ஏற்றுள்ளது.


ஏலத்துக்கு வரும் டயானா எழுதிய 33 கடிதங்கள்!
[Monday 2017-08-07 20:00]

கார் விபத்தில் இறந்த, பிரிட்டன் இளவரசி டயானா, தன் கைப்பட எழுதிய, 33 கடிதங்கள், அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ளன. இந்த கடிதங்கள், 80 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏலம் போகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கால் நூற்றாண்டுக்குப் பின்னர் பாகிஸ்தான் அமைச்சரவையில் இந்து ஒருவருக்கு இடம்!
[Monday 2017-08-07 20:00]

பாகிஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக மத்திய அமைச்சரவையில் இந்து ஒருவர் இடம்பெற்றுள்ளார். சிந்து மாகாணத்தை சேர்ந்த டாக்டர் தர்ஷன் லால், பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸியின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்பாஸி கடந்த வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றுக்கொண்டார்.


அமெரிக்க அதிபரின் ட்வீட்களுடன் டாய்லெட் பேப்பர்கள்: - அமேசானின் விற்பனை
[Saturday 2017-08-05 15:00]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்வீட்டுகள் அடங்கிய டாய்லெட் பேப்பர்களை அமேசான் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ட்விட்டரில் அதிர்வலைகளைக் கிளப்பிய ட்ரம்ப்பின் டாப் டென் ட்விட்ஸ் டாய்லெட் பேப்பர்களை வடிவமைத்துள்ளது அமேசான் நிறுவனம்.


நாசாவில் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன்: - பதில் கடிதம் அனுப்பிய நாசா
[Saturday 2017-08-05 15:00]

நாசா கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க கோரி செய்தி ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், அறிவியல் அல்லது கணிதத்தில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அரசு பணியில் ஒரு வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.


உலகின் மோசமான கழிப்பறை: - பல ஆயிரம் பவுண்ட்களை ஜெயிக்க நினைக்கும் நபர்
[Saturday 2017-08-05 09:00]

சுவர்கள் உடைந்து, ஆங்காங்கே தண்ணீர் ஒழுகும் நிலையில் இருக்கும் தனது வீட்டு கழிப்பறையை உலகின் மோசமான கழிப்பறையாக தனியார் நிறுவனம் அறிவிக்கும் என ஒருவர் காத்திருக்கிறார்.பிரித்தானியாவின் Bridlington நகரை சேர்ந்தவர் John Furniss-Wright (59), இவர் வீட்டின் கழிப்பறை மிக மோசமான நிலையில் உள்ளது.


ஜேர்மனியில் மாணவியை கற்பழித்து கொன்ற நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை!
[Saturday 2017-08-05 09:00]

ஜேர்மனியில் மாணவி ஒருவரை கற்பழித்து கொலை செய்த தம்பதி இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.கிழக்கு ஜேர்மனியில் உள்ள Dessau என்ற நகரில் சீனாவை சேர்ந்த Li Yangjie(25) என்பவர் கட்டடக்கலை துறையில் படித்து வந்துள்ளார்.கல்லூரி செல்வதற்கு முன்னர் அதிகாலை நேரத்தில் மாணவி ஜாக்கிங் செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.


தண்ணீரில் மூழ்கிய மகளை காப்பாற்றி விட்டு உயிரை விட்ட தந்தை!
[Saturday 2017-08-05 09:00]

தண்ணீரில் மூழ்கிய தனது மகளை காப்பாற்றும் முயற்சியில் தந்தை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரபல தொழிலதிபராக இருப்பவர் Simon Pearson (47), இவர் மனைவி Emma (43). இவர்களுக்கு Lily (10) என்ற மகளும் Monty (6) என்ற மகனும் உள்ளனர்.விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் நோக்கில் Simon தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு தெற்கு இத்தாலிக்கு சென்றுள்ளனர்.


சீனாவில் தண்டவாளத்தின் இடையே சிக்கியவரை காப்பாற்ற ரெயிலை தூக்கிய மக்கள்!
[Friday 2017-08-04 15:00]

சீனாவின் தலைநகரான பீஜிங்கின் டோங்சிமென் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரெயில் வருவது கூட தெரியாமல் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அவர் செல்வதை கண்ட ரெயில் ஓட்டுநர் உடனே ரெயிலை பிரேக் பிடித்து உடனே நிறுத்தியுள்ளார்.


அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக கூறுவது வெறும் வதந்தி: - டொனால்ட் ட்ரம்ப்
[Friday 2017-08-04 15:00]

அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு எதிராக ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது வெறும் வதந்தியே என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். வெர்ஜினியாவில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், அதிபர் தேர்தலில் பெற்ற தோல்வியை சமாளிக்கவே ஜனநாயக கட்சியினர் இந்த வதந்தியை பரப்பியுள்ளதாகவும் கூறினார். ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் 33,000 மின்னஞ்சல்களை ரஷ்யா முடக்கியதாக கூறுவது வடிக்கட்டிய பொய் என்றார்.


தாய்ப்பாலின் அவசியம்: - பிரிட்டனில் 11 வயது மாணவிகளுக்கு சிறப்புப் பாடம்
[Friday 2017-08-04 15:00]

பிரிட்டன் நாட்டில் மகப்பேறுக்கு பின்னர் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. பிரசவத்துக்கு சில மாதங்களுக்கு பிறகு தங்களது சிசுவுக்கு பால் பவுடர், மாட்டுப் பால் உள்ளிட்ட மாற்றுப் பாலை தேடுவோர் எண்ணிக்கையும் வெகுவாக பெருகி வருகிறது.


படுகொலை செய்யப்பட்டாரா டயானா? - வெளியான பகீர் தகவல்கள்
[Friday 2017-08-04 08:00]

டயானா விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் திட்டமிட்டே அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும் டயானாவின் காதலரின் தந்தை கூறியுள்ளார்.பிரித்தானியா இளவரசி டயானா தனது காதலர் Dodi Fayed-யுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி பலியானார்.


சுவிஸில் மின்னல் தாக்கி உடல் கருகி பலியான பெண்!
[Friday 2017-08-04 08:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் பெய்த கனமழையை தொடர்ந்து பெண் ஒருவர் மின்னல் தாக்கி உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த 41 வயதான பெண் ஒருவர் தனது 40 வயதான நண்பர் ஒருவருடன் சுவிஸிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.


ஒரு பார்வையற்ற அகதியின் பயணம்: - சாதனை மனிதனின் வாழ்க்கை
[Thursday 2017-08-03 18:00]

கடந்த மாதம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது மகன் ஆலன் பட்டம் பெற்றதைப் பார்த்தபோது, ஆஃப்ரா அவர் பிறந்த தருணத்தை நினைத்துக்கொண்டார்."உங்கள் குழந்தை பார்வையற்றவராக இருப்பதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்," என்று அப்போது பாக்தாத்தில் உள்ள அவரின் ஒரு அண்டை வீட்டுக்காரர் கூறினார்.அவரது மகனின் உடல் நிலை, அங்கு ஒரு விலக்கப்பட்ட விவகாரமாக இருந்ததால், அப்போது அந்நகரில் ஆஃப்ரா ஒரு பேசுபொருளாக்கப்பட்டார்.


தூங்கி கொண்டிருந்த மனைவியை பலாத்காரம் செய்த கணவன்: - 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்
[Thursday 2017-08-03 17:00]

அமெரிக்காவில் கணவர் ஒருவர் தனது மனைவி தூங்கி கொண்டிருக்கும்போது பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்த குற்றத்திற்காக 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.புகார் தெரிவித்த அப்பெண் தூக்கத்திற்கு அடிமையானவர் மட்டுமின்றி மது அருந்தும் பழக்கமும் கொண்டுள்ளார்.


அமெரிக்காவில் காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வாலிபர்!
[Thursday 2017-08-03 17:00]

அமெரிக்காவில் உள்ள ஓஹியோவை சேர்ந்தவர் அர்துரோ நோவா (வயது 28). இவர், தனது காதலி ‌ஷனான் கிரேவ்ஸ் என்பவருடன் அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார்.சில நாட்களாக காதலி ‌ஷனான் கிரேவ்சை காணவில்லை. அதே நேரத்தில் புதிய காதலி ஒருவரை அழைத்து வந்து அவருடன் அர்துரோ நோவா தங்கி இருந்தார்.

SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா