Untitled Document
March 29, 2024 [GMT]
பத்திரிகையாளர் சந்திப்பில் இம்ரான்கானை கிண்டல் செய்த டிரம்ப்!
[Tuesday 2019-09-24 17:00]

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கோபத்துடன் பாகிஸ்தானின் பத்திரிகையாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த டிரம்ப், உங்கள் கேள்வி ஒரு அறிக்கையைப் போலவே தெரிகிறது, என்று கேலி செய்தார். பின்னர் அந்த நிருபரை நோக்கி, "நீங்கள் அவருடைய (இம்ரான்) அணியைச் சேர்ந்தவரா? நீங்கள் ஒரு அறிக்கையை வெளியிடுகிறீர்கள், கேள்வி கேட்கவில்லை” என டிரம்ப் கூறினார். அதிபர் டிரம்பால் கேலி செய்யப்பட்ட பின்னர் பேசிய பத்திரிகையாளர், "நான் அவரது (இம்ரான் கான்) அணியில் உறுப்பினராக இல்லை, ஆனால் ஒரு சுயாதீன பத்திரிகையாளராக இருக்கிறேன், நான் எனது கேள்வியை முடிக்கிறேன்..." என கூறி கேள்வியை முன்வைத்தார்.


கனடா மத்திய வங்கியின் புதிய துணை ஆளுநராக டோனி கிராவெல் நியமனம்!
[Tuesday 2019-09-24 08:00]

கனடா மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற துணை ஆளுநர் லின் பேட்டர்சனுக்குப் (Lynn Patterson) பதிலாக, நிதிச் சந்தைத் துறையின் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய டோனி கிராவெல் நியமிக்கப்பட்டுள்ளார். வட்டி வீத தீர்மானங்களை மேற்கொள்ளும் நிர்வாக குழுவில் கிராவெல் இணைந்து வங்கியின் நிதி அமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கான பொறுப்பை துணை ஆளுநர் போல் பியூட்ரியுடன் பகிர்ந்து கொள்வார் என்று கனடா மத்திய வங்கி கடந்த வாரம் வௌியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது பதவிகாலம் எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தென் கொரியாவை வாட்டி எடுத்த புயல்!
[Tuesday 2019-09-24 08:00]

தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் புயல் தாக்கியதையடுத்து, சுமார் 250 விமானங்களின் பயண சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கடுமையான புயல் புரட்டி எடுத்துவருகிறது. இதனால் அங்குள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி தரைவழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


தாராளவாதிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொலைபேசி கட்டணங்கள் குறையும் – கனடா பிரதமர்!
[Tuesday 2019-09-24 08:00]

தனது தாராளவாதிகள் (லிபரல் கட்சியினர்) அடுத்தமாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொலைபேசி கட்டணங்களை 25% குறைப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதியளித்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் தனது ஆதரவாளர்களிடம் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். இதன்போது, முக்கிய சேவை வழங்குநர்களை அவர் கட்டாயப்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னதாக செலவினங்கள் என்பது ஒரு முக்கிய விடயமாகும். என்பதுடன், ஏழு தொழில்மயமான நாடுகளின் குழுவில் கனேடியர்கள் அதிகமாக தொலைத்தொடர்பு​சேவைகளுக்கு கட்டணம் செலுத்தியுள்ளதாக ட்ரூடோ தெரிவித்தார்.


இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: டிரம்ப் டுவிட்!
[Monday 2019-09-23 17:00]

அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நலமா மோடி (ஹவுடி மோடி) நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்வாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு பற்றியும் பயங்கரவாத்திற்கு எதிராக இணைந்து போரிடுவதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினார்.


சீன தேசியக் கொடியை ஆற்றுக்குள் வீசிய ஹாங்காங் மக்கள்!
[Monday 2019-09-23 17:00]

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக தொடர்ந்து 16வது வாரமாக நடந்து வரும் போராட்டங்களின்போது சீன தேசியக்கொடி நாசப்படுத்தப்பட்டதுடன், வணிக வளாகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சீன தேசியக் கோடி போராட்டக்காரர்களால் அவமானப்படுத்தப்பட்டு, ஆற்றுக்குள் தூக்கி வீசப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. 'ஷா தின்' எனும் இடத்தில் உள்ள நியூ டவுன் பிளாசா எனும் வணிக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் நகரும் மின் படிக்கட்டுகள் மற்றும் கண்ணாடித் தடுப்புகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த வளாகத்தில் இருந்த சீன ஆதரவு வர்த்தக நிறுவனங்களையே பெரும்பாலும் போராட்டக்காரர்கள் இலக்கு வைத்துத் தாக்கினர். ஷா தின்னில் காவல் துறையால் வைக்கப்பட்டிருந்த தடுப்பு ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது. நடைபாதைகளில் செங்கற்களை பெயர்த்து எடுத்து காவல் துறை மீது வீசிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியது.


பெண்ணை தாக்கிய வினோத நோய்..! வியப்பில் மருத்துவர்கள். Top News
[Monday 2019-09-23 17:00]

ஆர்மீனியா நாட்டில் அழுதால் கண்ணில் நீருக்கு பதில் கிறிஸ்டல் கற்கள் வரும் பெண்ணுக்கு என்ன நோய் என புரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 22 வயதான சாடெனிக் கஸர்யான் எனும் இளம் பெண்ணுக்கு சமீபத்தில் கண் வலி ஏற்பட்டது. அவரது கண்ணைப் பார்த்த உறவினர்கள், பணியின் போது கண்ணாடித் துண்டு ஏதோ சிக்கியிருப்பதாகக் கூறி அகற்றினர். இருப்பினும் வலி தொடர்ந்ததால், கண் மருத்துவரை அணுகிய போது மருந்து அளித்ததால் சில கிறிஸ்டல் கற்கள் அகற்றப்பட்டன. அதன் பின்பும் கண்களில் உறுத்தல் இருந்தது. கண்களில் கிறிஸ்டல் கற்கள் வருவது அதிகரித்துக் கொண்டே சென்றது. நாளொன்றுக்கு 50 கற்கள் வரை வந்ததையடுத்து, வலி பொறுக்காமல் பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியபோதும் மருத்துவர்களால் நோயைக் கண்டறியமுடியவில்லை.


கென்யா: வகுப்பறை இடிந்து விழுந்து 7 குழந்தைகள் பரிதாப பலி!
[Monday 2019-09-23 17:00]

கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியின் டகோரேட்டி புறநகர் பகுதியில் ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான வீடின்றி இவர்களில் பலர் கூடாரம் அமைத்து குடும்பம் நடத்துகின்றனர். இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்காக இயங்கிவரும் திறன் மேம்பாட்டு பள்ளியில் இன்று காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, ஒரு வகுப்பறை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது.


அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் - அதிபர் டிரம்ப் பாராட்டு!
[Monday 2019-09-23 08:00]

ஹூஸ்டன் நகரில் என்.ஆர்.ஜி. மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசுகையில் கூறியதாவது:- மோடி சமீபத்தில் தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். மோடியுடன் இருப்பதை நான் பெருமையாக கருது கிறேன். எனது அருமை நண்பர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்களுக்கு சிறப்பான பணியை மோடி செய்து வருகிறார். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்பு ஆழமாக உள்ளது. இந்திய மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்து இருக்கிறார். அடுத்த கட்டத்துக்கு இந்திய மக்களை மோடி அழைத்துச்செல்கிறார்.


வாகனங்களுக்கு விடுமுறை கொடுத்த பிரான்ஸ் அரசு..!
[Monday 2019-09-23 08:00]

பிரான்ஸ் தலைநகரான பாரீசுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் சாம்ப்ஸ் எலிசீஸ் அவென்யூ போன்ற பிரசித்தி பெற்ற பகுதிகளுக்கு வந்த போது சாலைகளில் கார்கள் இல்லாத காட்சியைக் கண்டு வியந்தனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மக்கள் நடந்தே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
[Monday 2019-09-23 08:00]

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் பேடன் ரூஜ் நகரை சேர்ந்தவர் ஸ்டீவன் வெபர். இவரது காதலி கெனிஷா ஆன்டோயினி. இவர்கள் இருவரும் தான்சானியா நாட்டில் உள்ள பெம்பா தீவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் கடலில் நீருக்கு அடியில் 32 அடி ஆழத்தில் உள்ள மாண்டா எனப்படும் விடுதியில் தங்கினர். அப்போது ஸ்டீவன் வெபர், தனது காதலி கெனிஷா ஆன்டோயினியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பதை கவித்துவமாக கேட்க விரும்பினார். இதற்காக தண்ணீருக்குள் இறங்கிய ஸ்டீவன் வெபர் தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்தையும், திருமண மோதிரத்தையும் கண்ணாடி வழியாக விடுதிக்குள் இருந்த தனது காதலியிடம் காட்டினார். அந்த கடிதத்தில் அவர் “உன்னைப் பற்றி நான் விரும்பும் அனைத்தையும் உன்னிடம் சொல்லும் அளவுக்கு என்னால் மூச்சு விட முடியாது.


கனடாவில் பேரழிவை எதிர்நோக்கியுள்ள விவசாயம்!
[Sunday 2019-09-22 17:00]

கனடா முழுவதிலும் உள்ள தேனீக்கள் ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து இறந்து வருவதால், யோர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த பிரச்சினைக்கான தீர்வு பூச்சிகளின் டி.என்.ஏ.வில் மறைந்திருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். வரும் ஒக்டோபரில், தேனீ வளர்ப்பவர்களுக்கு நோய்வாய்ப்பட்ட தேனீக்களைக் கண்டறிய உதவும் வகையில் ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை யோர்க் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கவுள்ளது. கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத் தொழில்களை பேரழிவிற்கு உட்படுத்தக்கூடிய பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடுவதே இதன் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனேடிய இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்க பசுமைக் கட்சி புதிய திட்டம்!
[Sunday 2019-09-22 17:00]

கனடாவில் போதைப்பொருளுக்கு அடிமையாவதில் இருந்து மீண்டெழுவதற்கான திட்டம் வைத்திருப்பதாக பசுமைக் கட்சியின் தலைவர் எலிசபெத் மே தெரிவித்துள்ளார். வின்னிபெக்கில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பிரச்சார கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை கூறினார். இதன்போது போதைக்கு அடிமையாவதை ஒரு குற்றவியல் பிரச்சினையாக கருதுவதை நாம் நிறுத்த வேண்டும் எனவும் இது ஒரு தேசிய சுகாதார அவசரநிலை என்றும் கூறினார். போதைப் பொருள் பழக்கத்தால் அதிகப்படியான இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, பசுமை கட்சி ஒரு தேசிய சுகாதார அவசர நிலையை அறிவிக்கவுள்ளது. அத்துடன் மனநலம் மற்றும் அடிமையாதல் குறித்து திட்டங்களை அதிகரிக்கவும், சமூக அமைப்புகளுக்கு நிதியளிக்கவும் முடிவு செய்துள்ளது.


வணிக வளாகத்துக்குள் கார் ஓட்டிய இளைஞர் கைது!
[Sunday 2019-09-22 17:00]

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் தாறுமாறாக கார் ஓட்டிய 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிகாகோவின் புறநகரான ஷாம்பர்க்கில் உள்ள உட்ஃபீல்ட் மாலில் கருப்பு நிற கார் ஒன்று தாறுமாறாக ஓடுவதாக பிற்பகல் 2 மணியளவில் காவல்துறைக்கு 911 போன்கால்கள் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 22 வயது இளைஞரை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய காருக்குள் ஒரு இளைஞர் மட்டுமே இருந்ததாகவும் போலீஸ் வரும் வரை அவரை பொதுமக்கள் பிடித்து வைத்திருந்ததாகவும் போலீஸ் அதிகாரி பில் வுல்ஃப் தெரிவித்துள்ளார்.


10 மில்லியன் டொலரை வென்ற கனேடியர் வெளிநாட்டில் மர்ம மரணம்!
[Sunday 2019-09-22 17:00]

அதிர்ஷ்டத்தில் 10 மில்லியன் டொலரை அள்ளிய கனேடியர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். கனடாவின் ரொறன்ரோ பகுதியில் குடியிருந்து வந்த (41வயது) மைக்கேல் கெப்ரு என்பவரே எத்தியோப்பியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இவர் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் 10 மில்லியன் டொலர் தொகையை வென்றதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வேலையியிலிருந்து விலகி பிறந்த நாடான எத்தியோப்பியாவுக்கு சென்றுள்ளார்.


உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது: அதிபர் டிரம்ப்!
[Sunday 2019-09-22 08:00]

தென் சீனக்கடல் பிரச்சினையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இதற்கு மத்தியில் சீனா தனது ராணுவத்திற்கு செலவிடும் தொகையை 7 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 152 பில்லியன் டாலர் வரை சீனா ராணுவத்திற்கு செலவு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோர்ரிசனுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- பிற எந்த நாடுகளை விடவும் வேகமாக ராணுவ பலத்தை சீனா பன்மடங்கு அதிகரித்து வருகிறது. எனவே, வெளிப்படையாகவே சீனா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. உண்மையில் அவர்கள் அமெரிக்காவின் பணத்தையே பயன்படுத்தியுள்ளனர்.


விண்கற்கள் மோதலில் இரவு பகலாக மாறிய நிகழ்வு!
[Sunday 2019-09-22 08:00]

விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் இரவை பகலாக மாற்றியது. ‘ஷூட்டிங் ஸ்டார்’ என அழைக்கப்படும் விண்கற்கள், ஒன்றுடன் ஒன்று மோதி அவ்வப்போது மின்னல் போன்ற வெளிச்சத்தை உருவாக்குவது உண்டு. அந்தவகையில் வெள்ளிக்கிழமை இரவு ஆஸ்திரேலியாவின் தஸ்மானியா மற்றும் விக்டோரியா மாநில வான் பரப்பில் இந்த மின்னல்கள் தோன்றின. பகல் போன்ற பிரகாசத்தை ஏற்படுத்திய இந்த அரிய நிகழ்வு குடியிருப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.


இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளையமகன் மீது பாலியல் புகார்!
[Sunday 2019-09-22 08:00]

இங்கிலாந்து ராணி எலிசபெத், பிலிப் தம்பதியரின் இளைய மகன் ஆண்ட்ரூ (வயது 59). இவர் இளவரசர் சார்லஸ்சின் தம்பியும் ஆவார். இவர் சாரா என்ற பெண்ணை திருமணம் செய்து, 1996-ம் ஆண்டு பிரிந்து, விவாகரத்து செய்து விட்டார். அமெரிக்க பைனான்சியரும், நியூயார்க் சிறையில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டவருமான ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் வெர்ஜினியா கியுப்ரே (35). இவர் ராபர்ட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த பெண், அமெரிக்க டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இவர் 2001-ம் ஆண்டு, தான் 17 வயது பருவப்பெண்ணாக இருந்தபோது இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக கூறினார்.


விமான இயந்திரத்தை நோக்கி நாணயம் வீசிய மருத்துவம் படித்த பெண்!
[Saturday 2019-09-21 17:00]

மூட நம்பிக்கையால் விமானத்தின் எஞ்சினை நோக்கி நாணயங்களை வீசிய மருத்துவம் படித்த பெண் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவில் கோவில் மணி, பூங்காவில் உள்ள சிலை உள்ளிட்ட பொருட்களின் முன் நாணயங்களை வீசினால், அது தீயதையும், நோயையும் விரட்டி நன்மை தரும் என பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில் வாங் என்ற 23 வயது மருத்துவம் படித்த மாணவி தனது சொந்த ஊரான நன்சங்-கில் (Nanchang) இருந்து ஸின்ஜிங்கிற்கு (Xinjing) ஸிச்சுவான் (Xichuan) விமான நிறுவனம் மூலம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன் விமானத்தின் எஞ்சினை நோக்கி மூன்று நாணயங்களை வீசி எறிந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் இருந்த காவலர்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.


பல கார்களில் மோதி விபத்தை ஏற்படுத்திய டிரக் வாகனம்!
[Saturday 2019-09-21 17:00]

கனடாவின், கலெடனில் டிரக் வாகனம், பல கார்களில் மோதிய பின்னர் ஒரு கட்டடத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. நேற்று (வியாழக்கிழமை) முன்தினம் காலை இடம்பெற்ற விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். டிரக் வாகனம் சமிக்ஞை விளக்கு கம்பங்களையும் மோதிக் கொண்டு அங்கு நின்ற கார்கள் மீதும் மோதி இறுதியில் அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் மோதியுள்ளது.


பருவநிலை மாற்றத்திற்கு எதிராக 150 நாடுகளில் இளைஞர்கள் பேரணி! Top News
[Saturday 2019-09-21 17:00]

பருவ நிலை மாற்றம் குறித்து விவாதிக்க ஐ.நா சபை கூடவுள்ள நிலையில், 150க்கு மேற்பட்ட நாடுகளில் இரண்டாவது நாளாக இளைஞர்கள் பேரணிகள் மூலம் பூமியை பாதுகாக்கும் முழக்கங்களை முன்னெடுத்தனர். அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் தீ, இந்தோனேஷியா காட்டுத்தீ போன்ற பல்வேறு நிகழ்வுகளால், புவி வெப்பமயமாகி, பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றம் குறித்து விவாதித்து, முக்கிய முடிவுகளை எடுக்க ஐ.நா பொதுச்சபை அடுத்த வாரம் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பதற்காக 150க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள், விழிப்புணர்வு பேரணிகளை நேற்று நடத்தினர்.


2.5 இலட்சம் சிறுவர்களைப் பராமரிக்கும் திட்டம் – கனடா பிரதமர் அறிவிப்பு!
[Saturday 2019-09-21 17:00]

பாடசாலை காலங்களில் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் சிறுவர்களைப் பராமரிப்பதற்கான வசதியை ஏற்படுத்தவுள்ளதாக சமஷ்டி லிபரல் கட்சி அறிவித்துள்ளது. பள்ளிக்கூடம் ஆரம்பமாவதற்கு முன்பாகவும், முடிவடைந்த பின்னரும் சிறுவர்களைப் பராமரிக்கும் விதமாக இந்த வசதியை ஏற்படுத்தவுள்ளதாக சமஷ்டி லிபரல் கட்சியின் தலைவரான பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். வோட்டர்லூவில் நடைபெற்ற பிரசாரத்தின் போது இது குறித்த அறிவிப்பை ட்ரூடோ வெளியிட்டார். இதற்கு வருடமொன்றுக்கு 535 மில்லியன் டொலர் செலவாகும். வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி, 43 ஆவது பொதுத் தேர்தல் நடைபெறள்ளது. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி முதல் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ளன.


பெற்றோர் அடித்ததால் மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை!
[Saturday 2019-09-21 08:00]

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வை சேர்ந்த 8 வயது சிறுவன் ஆன்டன். பள்ளி மாணவனான இவனை பெற்றோர் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவன் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தான். இந்த நிலையில் அண்மையில் வீட்டில் இருந்த துணிகளை சேதப்படுத்தியதாக கூறி சிறுவன் ஆன்டனை பெற்றோர் கடுமையாக திட்டி, அடித்தனர். இதனால் மனமுடைந்த அவன் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்தான். இதை பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.


அமெரிக்காவில் பரபரப்பு: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு!
[Saturday 2019-09-21 08:00]

அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அப்பாவி மக்களின் உயிரை பறித்து வருகின்றன. எனவே துப்பாக்கி விற்பனை மற்றும் பயன்பாட்டில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கொலம்பியா ஹைட்ஸ் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.


கட்டட இடிபாடுகளில் இருந்து 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய வாள் கண்டெடுப்பு!
[Saturday 2019-09-21 08:00]

ஸ்பெயின் நாட்டில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற தீவுகளில் கட்டப்பட்டிருந்த பழங்கால கட்டடங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது டையோலித்திக் காலகட்டத்தைச் சேர்ந்த இந்த கட்டடங்கள் கிமு ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறப்படுகிறது.


வறுமையால் கிட்னி விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட இளைஞர்கள்?
[Friday 2019-09-20 17:00]

பொருளாதாரத்தில் கடும் சரிவை சந்தித்து வரும் ஈரானில் வறுமையால் பல இளைஞர்கள் தங்களது கிட்னியை விற்க முன்வந்துள்ளதாகவும், அதை தெருக்களில் விளம்பரப்படுத்தியதாகவும் ஈரான் எதிர்ப்பு அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது. ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அதிபர் டிரம்பின் அமெரிக்க அரசு விலகியதை அடுத்து அந்நாட்டின் முக்கிய வளமான எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. இதனால், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு ஈரானில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரானில் கிட்னி தெரு என்ற ஒரு தெருவே உள்ளதாகவும், அங்கு இளைஞர்கள் தங்களது கிட்னி, கல்லீரல், எலும்பு மஜ்ஜை, ரத்த பிளாஸ்மா உள்ளிட்டவற்றை விற்பதாக விளம்பரப்படுத்தியுள்ளனர் என என்.சி.ஆர்.ஐ. என்ற ஈரான் எதிர்ப்பு தேசிய கவுன்சில் அம்பலப்படுத்தியுள்ளது.


கனடா – அமெரிக்காவில் குறைந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை!
[Friday 2019-09-20 17:00]

கனடா மற்றும் அமெரிக்கா வில் 3 பில்லியனுக்கும் குறைவான பறவைகளே உள்ளதாக, அதிர்ச்சி ஆய்வுத் தகவலொன்று வெளியாகியுள்ளது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆய்வு நடவடிக்கையின் பின்னரே, இந்த அதிர்ச்சி ஆய்வுத் தகவல் வெளிவந்துள்ளது. 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர், வட அமெரிக்காவில் 29 சதவீதமான பறவைகள் அழிந்துள்ளதாக, குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிய நாடுகளிலும் இதே நிலைமை நிலவுவதாக இந்த அறிக்கையில், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் - சவுதி அரேபியா திட்டவட்டம்!
[Friday 2019-09-20 17:00]

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையான அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் மீது கடந்த சனிக்கிழமை ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலால் சவுதி அரேபியாவில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி அதாவது, நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றனர். ஆனால் இந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா