Untitled Document
October 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நிலநடுக்கங்களால் நேற்று 13 தடவைகள் அதிர்ந்தது ஜப்பான் - பீதியில் உறைந்த பொதுமக்கள்!
[Thursday 2013-04-18 07:00]

ஜப்பானின் மியாகி தீவுப் பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, 13 முறை பின் அதிர்வுகள் ஏற்பட்டன. இவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதும் இல்லை. சில இடங்களில் கடல் உள்வாங்குவது உள்ளிட்ட மாற்றங்கள் ஏற்பட்டதாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள், பொருள் சேதம் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.


பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு - இந்தியாவுக்கு சிறப்புத் தூதரை அனுப்புகிறது ஐ.நா!
[Thursday 2013-04-18 07:00]

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் சிறப்பு தூதரை அனுப்ப முடிவு செய்துள்ளது.இந்தியாவில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கேள்வி எழும்பியுள்ளதையே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது.ஏப்ரல் 22-ம் தேதி இந்தியா வரும் ஐ.நா. சிறப்பு தூதர் ரஷிதா மான்ஜோ, 10 நாள்கள் தங்கியிருந்து தில்லியில் உயரதிகாரிகள், சமூக அமைப்பினரை சந்தித்து இந்தியாவில் நிகழ்ந்துள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விவரங்களை கேட்டறிகிறார். தமிழகம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அவர் செல்ல இருக்கிறார்.


லண்டனில் பிக்பென் கடிகாரத்தின் மணியோசை நிறுத்தி வைக்கப்பட்டு இரும்புப் பெண்மணிக்கு இறுதி மரியாதை!
[Thursday 2013-04-18 07:00]

இங்கிலாந்து முன்னாள் பிரதமரும், இரும்பு பெண்மணி என்று பாராட்டப்பட்டவருமான மார்கரெட் தாட்சரின் உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் மார்கரெட் தாட்சர் (89). தன்னுடைய உறுதியான நடவடிக்கைகள் மூலம் அவர் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டார். அவர் பதவி விலகிய பின்னர் கடந்த 23 ஆண்டுகளாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 8ம் தேதி அவர் இறந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் தேவாலய கல்லறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


ஒபாமாவுக்கும் விஷக் கடிதம் - அமெரிக்காவில் பரபரப்பு!
[Thursday 2013-04-18 06:00]

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், றிசின் எனப்படும் கடுமையான விஷம் பூசப்பட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில், அதிபர் ஒபாமாவுக்கும், செனட்டருக்கும் விஷம் பூசிய கடிதங்களை அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை எவ்பிஐ புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் புதன்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக எவ்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட விஷக் கடிதம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவிடம் 23 இலட்சம் படையினர் - முதல்முறையாக வெளியான வெள்ளை அறிக்கையில் தகவல்!
[Wednesday 2013-04-17 17:00]

சீனா, உலகிலேயே மிக வலிமையான ராணுவத்தை பெற்றுள்ளது. சீன மக்கள் விடுதலை ராணுவம் என்று அழைக்கப்படும் இந்த ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை பற்றிய வெள்ளை அறிக்கை முதன் முதலாக வெளியிடப்பட்டது. அதன்படி அங்கு 23 லட்சம் துருப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத்தவிர கட்டளைப்பிரிவு, அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை பிரிவுகளில் வேலை பார்ப்போர்களும் இருக்கிறார்கள். மேலும் சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்திற்காக 10,000 கோடி டாலருக்கு மேல் செலவிடப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


வெடித்தது குக்கர் குண்டாம் - மூன்றாவது நாளாகவும் வெறிச்சோடிக் கிடக்கிறது பொஸ்டன் நகரம்!
[Wednesday 2013-04-17 17:00]

நியூயார்க் இரட்டை கோபுர கட்டிட தாக்குதலுக்கு பின் நேற்று முன்தினம் பொஸ்டன் நகரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பொஸ்டன் நகரில் மராத்தான் ஓட்டப் பந்தயத்தின் இறுதி எல்லைக்கோடு அருகே அடுத்தடுத்து இரு முறை சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் பலியானார்கள். 170 பேர் படுகாயம் அடைந்தனர். மூலைக்கு மூலை கண்காணிப்பு காமிராக்கள், டிடெக்டர் கருவிகள் என பாதுகாப்பில் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி அசத்தி வரும் அமெரிக்காவில் அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு வெடி குண்டுகளை வைத்திருப்பது அந்நாட்டு பாதுகாப்பு ஏஜென்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


கொடிய விஷம் பூசப்பட்ட கடிதம் மூலம் அமெரிக்க செனட்டரைக் கொல்லச்சதி!
[Wednesday 2013-04-17 17:00]

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர் ரோஜர் விக்கர். இவருக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம் பிஸ் நகரில் இருந்து இது தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அந்த கடிதத்தை அனுப்பியவரின் முகவரி எதுவும் குறிப்பிடப்பட வில்லை. மேலும் அதில் செனட் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விக்கர் இது குறித்து உளவுத்துறையிடம் அவர் புகார் செய்தார்.அதை தொடர்ந்து அந்த கடிதம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.


சீனா, ஜப்பான், பபுவாநியூகினியாவில் இன்று நிலநடுக்கங்கள்!
[Wednesday 2013-04-17 17:00]

நேற்று மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளை அதிரவைத்த நிலநடுக்கம் இன்று ஜப்பான், சீனா, பபுவாநியூகினியா நாடுகளில் பீதியையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு தெற்கே 180 வது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மியாகே தீவு அருகே இன்று கடலுக்கு அடியில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆகப்பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக மியாகே தீவில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சுனாமி குறித்த எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.


போராட்டம் நடத்தினால் முன்னறிவிப்பின்றி தென்கொரியா மீது தாக்குதல் நடத்துவோம்! - வடகொரியா மீண்டும் மிரட்டல்!
[Wednesday 2013-04-17 07:00]

தென்கொரியாவில் எங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தால், எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய ராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கொரிய தலைநகர் சியோலில் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முன்னாள் அதிபர்கள் கிம் ஜாங் இல், கிம் இல் சங் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.


116 ஆண்டுகளில் முதல்முறையாக தடைப்பட்ட பொஸ்டன் மாரத்தான் போட்டி!
[Wednesday 2013-04-17 06:00]

இரட்டை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, பாஸ்டன் மாரத்தான் போட்டி அதன் வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக தடைபட்டது. கடந்த 1896ஆம் ஆண்டில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில்தான் முதல் முறையாக நவீன கால மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து, 1897இல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. அப்போது முதல், கடந்த 116 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாத மூன்றாம் திங்கள்கிழமை இப்போட்டி நடந்து வருகிறது. இது உலகில் நடைபெறும் 6 மிகப்பெரிய மாரத்தான் போட்டிகளில் ஒன்றாகும்.


ஈரான் நிலநடுக்கத்தினால் பாகிஸ்தானில் 35 பேர் பலி!
[Wednesday 2013-04-17 06:00]

ஈரானில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தினால்,பாகிஸ்தானில் குறைந்த்து 35 பேர் உயிரிழந்தனர். ஈரானின் சரவனில் நேற்று மாலை 3.44 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகள் பதிவானதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், 7.8 அலகுகள் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் சரவன், ஜாஹிதான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கட்டடங்களிலிருந்து வெளியேறினர். தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.


நேற்று ஒரே நாளில் 21 பேரைத் தூக்கிலிட்டுக் கொன்றது ஈராக்!
[Wednesday 2013-04-17 06:00]

பயங்கரவாத குற்றங்கள் தொடர்பாக ஈராக்கில் நேற்றுஒரே நாளில் 21 பேர் தூக்கிலிடப்பட்டனர். பயங்கரவாத குற்றம் சுமத்தப்பட்ட 21 பேரும் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர்கள். அங்கு இந்த ஆண்டில் இதுவரை 50 பேர் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மரண தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என சர்வதேச அளவில் கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில் ஈராக் சட்ட அமைச்சர் ஹாசன் அல் ஷம்மரி மரண தண்டனை தொடரும் என்று அறிவித்துள்ளார்.


பொஸ்டன் குண்டுத் தாக்குதல்: அமைதி காக்கும்படி ஒபாமா கோரிக்கை - பரபரப்புத் தகவல்கள்! Top News
[Tuesday 2013-04-16 17:00]

அமெரிக்காவின் மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள பொஸ்டன் நகரில் இன்று சுமார் 27 ஆயிரம் பேர் பங்கேற்ற மராத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.போட்டியில் பங்கேற்றவர்கள் இறுதிக் கோட்டை நெருங்கிய வேளையில் பீரங்கி முழங்கியது போன்ற சப்தத்துடன் குண்டு வெடித்தது. தொடர்ந்து 1/2 மணி நேரத்திற்குள் ஒரு குண்டும், அப்பகுதியில் உள்ள நூலகத்தில் மற்றுமொரு குண்டும் வெடித்தன.இதனால், மாரத்தானில் பங்கேற்றவர்கள் மூலைக்கு ஒருவராக சிதறி ஓடத் தொடங்கினார்கள். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.


முஷாரப்புக்கு ஏமாற்றம் - நான்கு தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!
[Tuesday 2013-04-16 17:00]

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் 4 தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு மே 11ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம்லீக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான முஷாரப், இஸ்லாமாபாத், கசூர், சித்ரால், கராச்சி என நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தார். இதில் சித்ரால் தொகுதியை தவிர மூன்று தொகுதிகளில் பல்வேறு காரணங்களால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையி்ல் வேட்புமனு ஏற்கப்பட்ட சித்ரால் தொகுதியிலும் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். இதனால் முஷராப் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


வடகொரிய எல்லை அருகே வீழ்ந்து நொருங்கியது அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர்!
[Tuesday 2013-04-16 17:00]

கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் வடகொரியாவின் எல்லை அருகே அமெரிக்க ராணுவ ஹெலிகொப்டர் திடீரென விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. அண்டை நாடான தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக கூட்டு போர் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், ஆத்திரமடைந்துள்ள வடகொரியா, எந்த நேரத்திலும் தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது போர் தொடுப்போம் என்று அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தென்கொரியா- அமெரிக்காவின் கூட்டுப் படைகள் இன்றும் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வந்தன.


ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் இன்று பிற்பகல் பாரிய நிலநடுக்கம்! - நூற்றுக்கணக்கானோர் பலி?
[Tuesday 2013-04-16 16:00]

ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் இன்று பிற்பகல் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 3.45 மணியளவில் இந்தப் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. றிச்டர் அளவுகோலில் இது 7.8 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 40 பேர் பலியானதாக ஈரானிய தொலைக்காட்சி அறிவித்துள்ளது. எனினும் நூற்றக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


டிவியில் தொடர்ந்து 62 மணி நேரம் பேசி நேபாள நிகழ்ச்சித் தொகுப்பாளர் உலக சாதனை!
[Tuesday 2013-04-16 07:00]

நேபாள "டிவி'யில், "டாக் ஷோ' எனப்படும் நிகழ்ச்சியில், ஒருவர், தொடர்ந்து 62 மணி நேரம், 12 நிமிடங்கள் பேசி, உலக சாதனை படைத் துள்ளார்.நேபாள "டிவி' யில், நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுபவர், ரபி லேமிசானே. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ரபி, "நேபாளத்தில் பிறந்தவர் பகவான் புத்தர்' என்ற தலைப்பில், 62 மணி நேரம் 12 நிமிடங்களுக்கு "டாக் ஷோ' வை நடத்தினார் இதன் மூலம், அவர், உலக சாதனைகளுக்கான, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். ரபி நடத்திய இந்நிகழ்ச்சியில், நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசாந்தா , நேபாளத்திற்கான இந்திய தூதர், ஜயந்த் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கோவில் உரிமைப் பிரச்சினை - சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு!
[Tuesday 2013-04-16 07:00]

கம்போடியா, தாய்லாந்து நாடுகளின் எல்லையில் பிரியா விகார் கோயில் அமைந்துள்ளன. இது யுனெஸ்கோவால் உலக புராதனப் பகுதியாக அறிவிக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும்.இந்த கோயில் தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில், தங்களிடையே உள்ள பிரச்னையை தீர்த்துக் கொள்வதற்காக இரு நாடுகளும் தற்போது நெதர்லாந்தின் தி ஹாக் நகரில் உள்ள ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளன.


மாற்று கர்ப்பப்பை பொருத்தப்பட்ட உலகின் முதல் பெண் கர்ப்பமானார்!
[Tuesday 2013-04-16 06:00]

மாற்று கர்ப்பப்பை பொருத்தப்பட்ட, உலகின் முதல் பெண், கர்ப்பமடைந்துள்ளார்.துருக்கியைச் சேர்ந்தவர் தேர்யா சிர்த். பல லட்சம் பெண்களில் ஒருவர், கர்ப்பப்பை இல்லாமல் பிறக்கின்றனர். தேர்யாவும் அவர்களில் ஒருவர். கடந்த 2000ம் ஆண்டு, சவுதி அரேபியாவில், ஒரு பெண்ணுக்கு, உயிருடன் உள்ள பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பையை தானமாகப் பெற்று பொருத்தப்பட்டது. ஆனால், உடலுடன் பொருந்தாததன் காரணமாக, 99 நாட்களுக்குப் பிறகு அகற்றப்பட்டது.


அமெரிக்காவில் இரட்டைக் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி, 133 பேர் காயம்!
[Tuesday 2013-04-16 06:00]

அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் நடந்த மாரத்தான் போட்டி முடியும் நேரத்தில் ‌அடுத்தடுத்து இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்புகளில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முதல் குண்டுவெடிப்பை அடுத்து பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்து சிதறி ஒடினர்.சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்‌நதாக பொஸ்டன் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. இச்சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். மேலும் 133 பேர் வரை காயமாடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனை‌யடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் பொஸ்டன் நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு மேலாக விமானங்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தானின் வரலாற்றிலேயே முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் திருநங்கை!
[Monday 2013-04-15 18:00]

பாகிஸ்தானின் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.கராச்சி தொகுதியில் போட்டியிட, பிந்தியா ராணா என்பவர் தாக்கல் செய்த வேட்பு மனுவை, தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது குறித்துப் பேசிய பிந்தியா ராணா, பாகிஸ்தான் அரசியல் பற்றி நான் இதுவரை கவலைப்பட்டதில்லை. ஆனால், தேர்தலில் மாபியா, மிகப்பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பணக்காரர்கள் மட்டும் போட்டியிடும் போது பொது மக்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கருதியே இந்த முடிவு எடுத்துள்ளேன். பாகிஸ்தானில் திருநங்கைகள் அனுபவிக்கும் கஷ்டங்களை எடுத்துரைப்பேன் என்று கூறியுள்ளார்.


இரு மகள்களுடன் இந்தியப் பெண் லண்டனில் மர்மமாக மரணமான விவகாரம் - பொலிசார் தீவிர விசாரணை!
[Monday 2013-04-15 18:00]

லண்டனில் இந்திய வம்சாவளி பெண், தனது 2 மகள்களுடன் மர்ம மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இங்கிலாந்தின் மேற்கு லண்டன் பகுதியில் உள்ளது ருயிஸ்லிப். இந்நகரின் மிட்கிராப் என்ற பகுதியில் வசித்தவர் ஹீனா சோலங்கி (34). இவருடைய கணவர் கல்பேஷ் (42). இவர்களுடைய மகள்கள் ஜேஸ்மின் (9), பிரிஷ் (4). கல்பேஷின் பெற்றோரும் விடுமுறைக்காக வந்திருந்தனர். அவர்களும் வீட்டில் தங்கியிருந்தனர். ருயிஸ்லிப் பகுதியில் உள்ள பள்ளியில், ஆய்வக டெக்னீஷியனாக பணியாற்றினார் ஹீனா.


தாட்சரின் இறுதிச்சடங்கு - லண்டனில் இன்று ஒத்திகை!
[Monday 2013-04-15 17:00]

மறைந்த முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சரின் இறுதிச் சடங்கு வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகைகள் இன்று நடைபெற்றன. விமானப்படைக்கு உரிய செயின்ட் கிளமென்ட் தேவாலயத்தில் இருந்து குதிரைகள் பூட்டிய ராணுவ வண்டியில் இங்கிலாந்து நாட்டின் தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டி ஒன்று செயின்ட் பால்ஸ் தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. மனித நடமாட்டம் அற்ற தெருக்களில் 700 ராணுவ வீரரகளின் அணி வகுப்போடு இசைக் குழுவினர் இறுதி மரியாதைக்கு உரிய இசையினை வாசித்துக் கொண்டு வந்தனர்.காவல்துறையினரும், ராணுவ வீரர்களும் அவர்களது சீருடையில் இன்று வந்திருந்தாலும் புதன் அன்று இறுதிச் சடங்கிற்கு உரிய சீருடையில் வருவர்.


வெனிசுலா அதிபர் தேர்தலில் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் சாவேஸ் ஆதரவாளர் வெற்றி!
[Monday 2013-04-15 17:00]

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அதிபராக இருந்த சாவேஸ் (58) புற்றுநோயால் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் சாவேசின் ஆதரவாளர் நிகோலஸ் மதுரோ (50), எதிர்க்கட்சி தலைவர் ஹென்ரிகியூ காப்ரிலேஸ் (40) ஆகியோர் போட்டியிட்டனர்.நேற்று ஓட்டு பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில், நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரிகியூ காப்ரிலேசை விட 3 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றார். இவர் 50.8 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரி கியூவுக்கு 49.1 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. இத்தகவலை தேசிய தேர்தல் கவுன்சில் தலைவர் திபிசே லுசேனா அறிவித்தார்.


சிறிலங்காவில் சித்திரவதை..! அமைப்பு ரீதியாகக் கையாளப் படுகிறது: - ஹாங்காங் மேல்நீதிமன்றம்
[Monday 2013-04-15 09:00]

தமிழர்களின் உலகளாவிய எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஒரு உந்து விசையாக ஹாங்காங் மேல்நீதிமன்றம் ஒன்று இரு தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், சிறிலங்காவில் சித்திரவதை அமைப்பு ரீதியாகக் கையாளப் படுகிறது என்று உறுதி செய்துள்ளது. அவர்கள் இருவரும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்த இருவரின் பெயர்களை பாதுகாப்பு காரணம் கருதி நீதிமன்றம் வெளியிட மறுத்துள்ளது.


பாகிஸ்தானில் அவாமி கட்சித் தலைவர் குண்டுவெடிப்பில் பலி!
[Monday 2013-04-15 07:00]

பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அவாமி தேசிய கட்சி தலைவர் முகரம் ஷா கொல்லப்பட்டார். தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதிகள்தான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்கக் கூடுமென்று சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் மே 11-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை பயங்கரவாதிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். மதச்சார்பற்ற கட்சியான அவாமி தேசிய கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, முட்டாஹிதா குவாமி இயக்கம் ஆகிய கட்சிக் கூட்டங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த இருப்பதாக தலிபான் பயங்கரவாதிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.


உலகின் மிக உயரமான போப் இரண்டாம் ஜான் பால் சிலை - போலந்தில் திறந்துவைப்பு!
[Monday 2013-04-15 07:00]

உலகின் மிக உயரமான போப் இரண்டாம் ஜான் பால் சிலை போலந்து நாட்டில் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்தவர் போப் ஜான்பால்,2. இவர் கடந்த 78ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி போப்பாக பதவியேற்றார். இவர் போலந்து நாட்டை சேர்ந்தவர். இத்தாலியை சேராத ஒருவர் போப்பாக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2005ம் ஆண்டு இறக்கும் வரை போப்பாக இருந்தார். வரலாற்றில் நீண்ட காலம் போப்பாக இருந்தவர் பட்டியலில் 2ம் இடம் பிடித்தவர். இவருடைய உருவ சிலை போலந்து நாட்டில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.


இணையதளத்தில் வெளியான ஆபாச படத்தால் 2 மாணவிகள் தூக்கு போட்டு தற்கொலை!
[Monday 2013-04-15 07:00]

மேற்கத்திய நாடுகளில் இணையதள மோகம் இளைஞர்களை படுவேகமாக சீரழித்து வருகிறது. இணையதளத்தில் வெளியான ஆபாச படத்தால் 2 மாணவிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கனடாவில் உள்ள நோவோ ஸ்காட்யா என்ற இடத்தில் வசிப்பவர் லியா பார்சன். இவரது மகள் ரெட்டா பார்சன். கடந்த 2011,ம் ஆண்டு 4 இளைஞர்கள் ரெட்டாவை பலாத்காரம் செய்தனர்.இதுபற்றி போலீசார் விசாரித்தனர். ஒரு வருட விசாரணைக்கு பிறகும், போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா