Untitled Document
March 29, 2024 [GMT]
போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் தலைமைச் செயலதிகாரி பயணித்து சோதனை!
[Thursday 2019-04-04 17:00]

போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமானத்தின் ஆன்டி-ஸ்டால் மென்பொருளை வெற்றிகரமாகப் பரிசோதித்தபோது அதில் தங்களது தலைமைச் செயலதிகாரியும் பயணித்ததாக அறிவித்துள்ளது. போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தை சேர்ந்த 2 விமானங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து அதன் MCAS ஆன்டி-ஸ்டால் மென்பொருளில் கோளாறு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அந்த மென்பொருளை சரிசெய்த பின் போயிங் 737 மேக்ஸ் 8 போன்றே காக்பிட் கொண்ட அதைவிட சிறிய ரக விமானமான போயிங் 737 மேக்ஸ் 7-ஐக் கொண்டு சோதனை நடத்தப்பட்டது.


பிரதமர் ட்ரூடோ நீதிக்கு துரோகம் இழைத்துள்ளார்: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு.
[Thursday 2019-04-04 17:00]

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நீதிக்கு துரோகம் இழைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் அண்ட்ரூ ஸ்சேர் தெரிவித்துள்ளார். ஜொடி வில்சன்-ரேபொல்ட் மற்றும் ஜேன் பில்போட் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ட்ரூடோ தனது கட்சியிலிருந்து நீக்கினார். இந்நிலையில் இது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


தென்கொரியாவில் 5ஜி சேவை தொடக்கம்…!
[Thursday 2019-04-04 17:00]

உலகிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் 5ஜி சேவையை தென்கொரியா வழங்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை அன்று அங்கு 5ஜி சேவைகள் தொடங்கப்பட இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றிரவே, தென்கொரியா முழுவதும் 5ஜி சேவை தொடங்கி வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எஸ்.கே.டெலிகாம், கே.டி., எல்ஜி யூபிளஸ் (SK Telecom, KT, and LG Uplus) ஆகிய நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன.


ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டம் புரூனேவில் அமலாக்கம்!
[Thursday 2019-04-04 07:00]

புருனேவில் ஒருபால் உறவுக்காரர்கள் உறவு கொண்டாலோ, திருமணத்தை தாண்டி உறவு வைத்து கொண்டாலோ கல்லால் அடித்துக் கொல்லப்படும் என்ற கடுமையான இஸ்லாமிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. புருனேவின் ஒருபால் உறவுக்காரர்கள் இந்த தீர்ப்பு குறித்து அதிர்ச்சியும் அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். "நீங்கள் காலை எழுந்தவுடன், உங்கள் அண்டை வீட்டுக்காரர், உங்களின் குடும்பம், ஏன் சாலை ஓரத்தில் இறால் பஜ்ஜி விற்கும் பெண் கூட உங்களை கல்லால் அடிப்பது சரி என்று நினைக்கலாம்" என ஒருபால் உறவுக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். வலுவான இஸ்லாமிய போதனைகள் குறித்து அந்த நாட்டின் சுல்தான் மக்களிடம் உரையாடினார். "இந்த நாட்டில் இஸ்லாமிய விதிமுறைகள் வலுவாக வளர்வதை நான் பார்க்க வேண்டும்" என சுல்தான் ஹசாநல் போல்கியா பொது கூட்டம் ஒன்றில் தெரிவித்தார் என ஏஃப்பி செய்தி முகமையில் செய்தி வெளியாகியுள்ளது. புரூனேவில் ஒரின சேர்க்கை சட்ட விரோதமானது அதில் ஈடுபட்டால் 10 வருடம் வரை சிறைதண்டனைகள் வழங்கப்படலாம். புரூனேவின் மக்கள் தொகையில் இரண்டில் மூன்று பங்கு முஸ்லிம் மக்கள். சுமார் 4 லட்சத்து இருபதாயிரம் பேர் உள்ளனர். புரூனேயில் மரண தண்டனை நடைமுறையில் ஏற்கனவே உள்ளது ஆனால் 1957ஆம் ஆண்டிலிருந்து மரண தண்டனை யாருக்கும் வழங்கப்படவில்லை.


மசூத் அசாருக்கு தடைகோருவதில் சீனா அமைதி.
[Thursday 2019-04-04 07:00]

ஜெய்ஷே முகமது இயக்கத் தலைவன் மசூத் அசாருக்கு சர்வதேச அளவில் தடைவிதிக்க ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள நேரடித் தீர்மானம் சிக்கலை மேலும் அதிகமாக்கும் என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் கெங்-சுவாங் இப்பிரச்சினையை சரியான முறையில் தீர்க்க சீனா முயன்று வருவதாக தெரிவித்தார். கடந்த மார்ச் 27ம் தேதி அமெரிக்கா வரைவு தீர்மானம் ஒன்றை ஐநா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்தது.


ரொறன்ரோவில் அதிகாரபூர்வமான முதலாவது கஞ்சா போதைப் பொருள் விற்பனை நிலையம்!
[Thursday 2019-04-04 07:00]

ரொறன்ரோவில் முதலாவது கஞ்சா போதைப் பொருள் விற்பனை நிலையம் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பல்கலைக்கழக அவென்யூபகுதியில், நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் இது திறந்து வைக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே பலரும் அங்கு வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. மிகவும் ஆர்வமுள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே அங்கு வரிசைபிடித்து நின்றதாகவும், திங்கட்கிழமை காலை அளவில் அங்கு பத்துக்கும் மேற்பட்டவர்களைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மேயுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து மந்திரி ராஜினாமா!
[Thursday 2019-04-04 07:00]

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவரான ஜெரேமி கார்பைனை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.


ஜிம்பாப்வே நாட்டில் இடாய் புயல் பாதிப்பால் 268 பேர் உயிரிழப்பு!
[Wednesday 2019-04-03 17:00]

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை கடந்த மாதம் மணிக்கு 177 கிலோ மீட்டர் வேகத்தில் ‘இடாய் புயல்’ தாக்கியது. இதனால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்தன. இடாய் புயலின் கோரத்தாண்டவத்துக்கு மொசாம்பிக் நாட்டில் சுமார் 500 பேர் பலியாகினர். தெற்காப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் கிழக்கு பகுதியையும் இந்த கோரப்புயல் பதம் பார்த்தது. புயலை தொடர்ந்து பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலைகளை வெள்ளநீர் அடித்துச் சென்று விட்டதால் நகரங்கள் எல்லாம் தீவு கூட்டங்களாக காட்சி அளிக்கின்றன.


ஐந்து இலட்சம் மதிப்புள்ள இரசாயன பொருள் திருட்டு: எட்மன்டன் தம்பதி மீது குற்றச்சாட்டு!
[Wednesday 2019-04-03 17:00]

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திலிருந்து மூன்று தொன் இரசாயன பொருட்களை திருடியதாக எட்மன்டன் தம்பதியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 49 வயதான ஆணொருவர் மற்றும் 44 வயதான பெண்ணொருவர் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருடப்பட்ட இரசாயனப் பொருட்களின் பெறுமதி 5 இலட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டொலர் என எட்மன்டன் பொலிஸ் சேவை குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.


அமெரிக்க அதிபர் ஓய்வு விடுதிக்குள் பொய் சொல்லி நுழைய முயன்ற பெண்!
[Wednesday 2019-04-03 17:00]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஓய்வு விடுதி உள்ள இடத்தில், கணினிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் மென்பொருளுடன் நுழைய முயன்ற சீனப் பெண் கைது செய்யப்பட்டார். புளோரிடாவின் Palm கடற்கரையில் டிரம்பின் ஓய்வு விடுதி உள்ளது. அங்கு கடந்த சனிக்கிழமை சென்ற சீனப்பெண் ஒருவர், நடக்காத ஒரு நிகழ்ச்சியின் பெயரைச் சொல்லி உள்ளே நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.


கட்சிக் கூட்டத்தில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் இரண்டு பேரை வெளியேற்றினார் பிரதமர்!
[Wednesday 2019-04-03 17:00]

பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தில் இருந்து ஜொடி வில்சன்-ரேபொல்ட் மற்றும் ஜேன் பில்போட் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக இரு முன்னாள் அமைச்சர்களும் முரண்பாடான கருத்துக்களை முன்வைத்துவரும் நிலையிலேயே அவர்களை கூட்டத்தில் இருந்து விலக்கியதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒட்டாவாவில் உள்ள தேசிய லிபரல் கட்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.


உலகளவில் மாசடைந்த, துர்நாற்றமுள்ள காற்றால் உயிரிழந்த 50 சதவீதத்தினர் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்களே – ஆய்வு முடிவு!
[Wednesday 2019-04-03 17:00]

உலகளவில் மாசடைந்த, துர்நாற்றமுள்ள காற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில், 50 சதவீதத்தினர் இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே என அமெரிக்க ஆய்வு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. (Gfx in) Health Effects Institute மற்றும் Institute for Health Metrics and Evaluation ஆகிய இரு நிறுவனங்கள் சேர்ந்து 2017-ல் மேற்கொண்ட ஆய்வில் உலகளவில் காற்று மாசால் ஏற்பட்ட 50 லட்சம் மரணங்களில் 25 லட்சம் மரணங்கள் இந்தியா மற்றும் சீனாவில் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.


"பாகிஸ்தானில் இந்திய சிறுமிகளுக்கு கட்டாய திருமணம்" - விசாரணை கமிஷன் அமைத்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவு!
[Wednesday 2019-04-03 09:00]

இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் சுமார் ஒரு கோடி இந்து மக்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாட்டின் பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 75 லட்சம் இந்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோக்டி மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு படைத்த முக்கிய பிரமுகர்கள் இரு இந்து சிறுமிகளை கடத்திச் சென்றனர். பின்னர், ரவீனா(13), ரீனா(15) ஆகிய அந்த சிறுமிகளை ஒரு முஸ்லிம் மதத்தலைவர் கட்டாய மதமாற்றம் செய்து இருநபர்களுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ காட்சிகள் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இவ்விவகாரத்தால் கொதிப்படைந்த இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த சிறுமிகளை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதருக்கு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டார்.


ஈரான் நாட்டில் கனமழை: 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு! Top News
[Wednesday 2019-04-03 09:00]

ஈரான் நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கில் 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பகுதியில் உள்ள குஸஸ்தான் என்ற இடத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேஸ் மற்றும் கார்கே ((Dez and Karkheh)) ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


சீனா பள்ளி உணவில் விஷம் கலந்த ஆசிரியர்!
[Wednesday 2019-04-03 08:00]

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் ஜியாவோஷு கிராமத்தில் தனியார் மழலையர் பள்ளி உள்ளது. இங்கு 4 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் 50-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி காலை உணவு சாப்பிட்ட 23 குழந்தைகளுக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் 16 குழந்தைகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். 7 குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


"பிரக்சிட் வெளியேற்றத்துக்கு மேலும் கால அவகாசம் கோரப்படும்" – தெரசா மே!
[Wednesday 2019-04-03 08:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 46 ஆண்டுக்கால உறவைத் துண்டித்துக் கொண்டு, எந்த வித ஒப்பந்தமும் இன்றி வெளியேறும் பிரிட்டன் பிரதமர் தெரசா மேயின் முடிவுக்கு, அந்நாட்டு எம்பிக்கள் ஆதரவு கிடைக்காத நிலையில், பிரக்சிட்டை அமல்படுத்த மேலும் கால அவகாசம் கோரப்படும் என்று தெரசா மே அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரட்டனுக்கு இன்னும் எட்டு நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.


பத்திரிகையாளர் கசோகி பிள்ளைகளுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை வழங்கிய சவுதி பேரரசு!
[Tuesday 2019-04-02 17:00]

எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஜமால் கசோகி. 59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார். அவர் தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின் மன்னராட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2ந்தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்திற்கு சென்றபொழுது அவர் கொல்லப்பட்டார். இதற்கு சவுதி அரேபிய இளவரசர் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சவுதி அரேபிய அரசு மறுத்து வந்தது. கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டினார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு சவுதி அரேபிய அரசு ஒப்பு கொண்டது. எனினும் அதை சண்டையில் ஏற்பட்ட மரணம் என்று மட்டுமே தெரிவித்தது. பின்னர்தான் சவுதியிலிருந்து அனுப்பப்பட்ட குழு அவரை கொன்றது என தெரியவந்தது. இச்சம்பவம் சவுதி அரேபியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


கியூபெக்கில் காருக்குள் இருந்து சடலம் கண்டெடுப்பு!
[Tuesday 2019-04-02 17:00]

கியூபெக் – நியூயோர்க் எல்லையில் காரொன்றுக்குள் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை கியூபெக் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நியூயோர்க்கிலிருந்து கியூபெக் நோக்கி ஹெமிங்ஃபோர்ட் எல்லையை கடக்க முற்பட்ட காரொன்றிலிருந்து நேற்று முன்தினம் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. ஹெமிங்ஃபோர்ட் எல்லையில் காரை சோதித்த சுங்க அதிகாரிகளே காரில் சடலம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.


'எச்-1பி' விசா மோசடி - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு!
[Tuesday 2019-04-02 17:00]

அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த விசாக்களை பெறுவதில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும். அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தினார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் அமெரிக்க அரசு முனைப்பாக இருந்தது.


கனடா வெப்பமடையும் விகிதம் அதிகரிப்பு!
[Tuesday 2019-04-02 17:00]

உலகின் பிற நாடுகளைவிட கனடா சராசரியாக இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையொன்றின் பிரகாரம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான கனேடிய அமைப்பினால் இந்த மாற்று காலநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டு முதல் கனடாவின் வருடாந்த சராசரி வெப்பநிலையானது அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் ராப் இசைப்பாடகர் நிப்சே ஹுசில் சுட்டுக் கொலை!
[Tuesday 2019-04-02 17:00]

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் நிப்சே ஹுசில் (33). ராப் இசைப்பாடகரான இவர் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் துணிக்கடை நடத்துகிறார். நேற்று இவர் தனது நண்பர்களுடன் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இதில் நிப்சே ஹுசில் உள்பட 3 பேருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதில் நிப்சே ஹுசில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.


கடையிலிருந்து குழந்தையை தூக்கி வீசிய தந்தை! Top News
[Tuesday 2019-04-02 09:00]

உக்ரைனில் சேட்டை செய்த குழந்தையை கடையில் இருந்து வெளியே வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர். தலைநகர் கிவ்வில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஆர்டம் ((Artem)) என்பவர் தனது 6 வயது மகளுடன் கடைக்குச் சென்றிருந்தார். அப்போது அந்தச் சிறுமி அதிக சுட்டித்தனத்துடன் சேட்டை செய்தார். மேலும் தான் விரும்பிய பொருளை வாங்கித்தரக் கேட்டு தந்தையிடம் அடம் பிடித்தார்.


ரஷ்யாவின் 4வது பணக்கார பெண்மணி விபத்தில் பலி!
[Tuesday 2019-04-02 08:00]

ஜெர்மனியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், ரஷ்யாவின் 4வது பணக்கார பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆறு இருக்கைகள் கொண்ட ரஷ்யன் ஏர்லைன் எஸ்7 விமானம் ஒன்று ஞாயிற்று கிழமை பயணிகளுடன் பிரான்சிலிருந்து பிராங்க்பர்டில் உள்ள ஈஜல்ஸ்பாக்((egelsbach)) நோக்கி சென்றது. பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக காலியான இடத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது.


செயின்ட் அன்ட்ரூஸ் விமான நிலையத்தில் திடீர் வெடிப்பு! Top News
[Tuesday 2019-04-02 08:00]

கனடா, மனிடோபா செயின்ட் அன்ட்ரூஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் திடீரென வெடித்து தீப்பிடித்துள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட இவ்வெடிப்பு சம்பவத்தில் விமான நிலையம் கரும்புகையால் சூழ்ந்துள்ளது.


கொலம்பியாவில் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிறுவன்!
[Tuesday 2019-04-02 08:00]

கொலம்பியாவில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் 14 வயது சிறுவன் மேலும் இருவரை சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெடல்லின் ((Medellin)) என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறிய கடையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த சிறுவனை கடையின் உரிமையாளர் வெளியேற்றினார். அப்போது அந்தச் சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் கடைக்காரரும், அருகில் இருந்த நபர்மீதும் தாக்குதல் நடத்தியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு 25 சதவீதம் அதிகரிப்பு!
[Monday 2019-04-01 17:00]

ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது அந்நாட்டில் சேர்க்கை பெற்ற மொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 12 புள்ளி 4 சதவீதமாகும். 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 புள்ளி 5 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் கடந்த மாதம் 20-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஆஸ்திரேலியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயின்ற, சர்வதேச பட்டதாரிகள் அந்நாட்டில் பணியாற்றும் தற்காலிக விசாவிற்கான அவகாசம் கூடுதலாக ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் எரிந்தபடி விழுந்த விண்கல்!
[Monday 2019-04-01 17:00]

அமெரிக்காவில் விண்கல் ஒன்று எரிந்தபடியே பூமியில் விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவில் புளோரிடா மாகாணத்தில் ஓட்டுநர் ஒருவர் வழக்கம்போல தமது காரில் பயணித்துக் கொண்டிருந்தார். கெய்னெஸ்வில்லே என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, விண்கல ஒன்று எரிந்தபடியே பூமியை நோக்கி பாய்ந்து வந்தது.


நேபாளத்தில் புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி 35 பேர் பலி!
[Monday 2019-04-01 17:00]

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதையடுத்து ராணுவத்தினர், போலீசார் மற்றும் மீட்புப்பணியினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட புயல் மற்றும் கன மழையில் சிக்கி 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். அவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா