Untitled Document
March 29, 2024 [GMT]
பிரேசில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு மக்கள் அஞ்சலி!
[Friday 2019-03-15 07:00]

பிரேசில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. துப்பாக்கசிச் சூடு நடத்தப்பட்ட பிரேசிலின் சாவ் பாலோ (SAO PAULO) பகுதியின் SUZANO என்ற பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலர் அணிதிரண்டு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.30 மணியளவில் சாவ் பாலோவில் உள்ள ராவுல் பொது பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த இரு இளைஞர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.


[Friday 2019-03-15 07:00]


வன்கூவரில் வீடற்றவர்களின் கணக்கெடுக்கும் பணிகள் ஆரம்பம்!
[Friday 2019-03-15 07:00]

வன்கூவர் நகரில் வீடற்றவர்களின் கணக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றும் இரவு வேளைகளில் அவசர முகாம்களில் தங்கியுள்ள மக்களை கணக்கெடுக்கும் பணிகள் ஆரம்பமாகின. இதன் முழு விபரம் மே மாதமளவில் வான்கூவர் நகரசபைக்கு வழங்கப்படும் என்றும் இந்த தொகுப்பு அறிக்கை நகரின் இணையதளத்தில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் 6 அணுமின்நிலையங்களை இந்தியாவில் அமைக்கவிருக்கிறது அமெரிக்கா!
[Friday 2019-03-15 07:00]

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க ஆயுதக்கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புத்துறையின் கீழ்நிலைச்செயலாளர் ஆண்ட்ரியா தாம்ப்சனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து இரு தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், இந்தியாவில் 6 அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,


அமெரிக்காவில் வீசிய கடும் சூறாவளி, பனிப்பொழிவு!
[Thursday 2019-03-14 17:00]

அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் வீசிய கடும் சூறாவளி, பனிப்பொழிவு காரணமாக 1,339 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இங்கு பலத்த காற்றுடன் பனிப்பொழிவும் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


பாகிஸ்தான் டீ கடையில் அபிநந்தனின் போஸ்டர்! Top News
[Thursday 2019-03-14 17:00]

பாகிஸ்தானில் இருக்கும் டீ கடை ஒன்றில் அபிநந்தனின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்திய இந்தியா தீவிரவாத முகாம்களை அழித்தது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிய நிலையில் இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவர் சிறைபிடிக்கப்பட்டிருந்த போது பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோவில், டீ அருந்திக் கொண்டிருக்கும் அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.


ஐரோப்பாவுக்கு பயணிக்கவிருக்கும் கனேடியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
[Thursday 2019-03-14 17:00]

ஐரோப்பா செல்லும் கனேடியர்கள் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டுமானால், இனி சில விசேஷித்த படிவங்களை கூடுதலாக நிரப்ப வேண்டியதோடு ஒரு சிறு கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த புதிய கட்டுப்பாடுகள் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் அமுலுக்கு வருகின்றன. சட்ட விரோத புலம்பெயர்தலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், எல்லையை பாதுகாப்பதற்காகவும், கனேடியர்கள் உட்பட சர்வதேச பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய பயண தகவல் மற்றும் அங்கீகரிக்கும் அமைப்பு (ETIAS) என்று அழைக்கப்படும் அந்த புதிய திட்டத்தின்படி, கனேடியர்கள் ஆன்லைனில் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும், கட்டணம் ஒன்றைச் செலுத்திவிட்டு அது அங்கீகரிக்கப்படும்வரை காத்திருக்க வேண்டும். ஷெங்கன் மண்டலம் (Schengen Zone) என்று அழைக்கப்படும் ஐரோப்பாவிலுள்ள 26 நாடுகளுக்கு பயணிப்பதற்குதான் இந்த கட்டுப்பாடுகள். இந்த பட்டியலில் பிரித்தானியாவும் ரஷ்யாவும் இடம்பெறவில்லை. தற்போதைக்கு கனேடியர்கள் சுற்றுலாவுக்காக சென்று குறுகிய காலம் தங்கும்பட்சத்தில் அவர்களுக்கு விசா தேவையில்லை.


பிரேசில் பள்ளியில் சரமாரி துப்பாக்கிசூடு: 10 பேர் பலி! Top News
[Thursday 2019-03-14 17:00]

பிரேசில் நாட்டில் முன்னாள் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 மாணவர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் சாவோ பாலோ பகுதியில் அமைதியாக நடந்துகொண்டிருந்த பள்ளி ஒன்றில், மர்ம நபர்கள் இரண்டு பேர் முகமூடி அணிந்து வில் அம்பு, வெடிபொருள்கள் ஆகியவற்றுடன் நுழைந்துள்ளனர். 1600 மாணவர்கள் இருந்த அந்த பள்ளியில் இருவரும் திடீரென துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்தனர். இதில் ஐந்து மாணவர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர். அதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய இருவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டனர். இறந்த பள்ளி மாணவர்கள் அனைவருமே 13 வயது முதல் 16 வயதிற்குட்பட்டவர்களாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், காயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டபொழுது, தாக்குதல் நடத்தியவர்கள் அதே பள்ளியில் படித்த 17 வயதான கில்ஹெர்மி டவுஸி மோன்டிரோ மற்றும் 25 வயதான ஹென்றி டி காஸ்ட்ரோ என்கிற முன்னாள் மாணவர்கள் என்பது தெரியவந்தது. தாக்குதலுக்கு முன்பாக ஒருவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு காரை இருவரும் திருடி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.


மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை!
[Thursday 2019-03-14 17:00]

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், அவர் இயங்குவதற்கு அனுமதித்து வரும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஏற்கனவே மூன்று முறை முயற்சிகள் நடைபெற்றாலும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டது. மசூத் அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என சீனா கூறி வருகிறது. இந்த சூழலில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. பெரும்பாலான நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தயாராக இருந்த போதிலும், சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டது. இதனால், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.


மாலாவியில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு!
[Thursday 2019-03-14 09:00]

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலாவியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சில கிராமங்கள் முற்றிலுமாக நீருக்குள் மூழ்கி உள்ளன.


பிரெக்சிட் வாக்கெடுப்பில் தோல்வியடைந்த சந்தித்த இங்கிலாந்து பிரதமர்!
[Thursday 2019-03-14 09:00]

பிரெக்சிட் வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவு குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றம் நடத்திய வாக்கெடுப்பில் இரண்டாவது முறையாக தெரசா மேயின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து ஒப்பந்தமின்றி வெளியேறும் முடிவுக்கு எதிராக எம்.பிக்கள் வாக்களித்துள்ளனர். நான்கு வாக்குகளில் தெரசா மே அரசு கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.


துப்பாக்கிக் கலாசாரத்தை கட்டுப்படுத்த 11 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு!
[Thursday 2019-03-14 09:00]

ஒன்ராறியோவில் அதிகரித்துவரும் துப்பாக்கி கலாசாரத்தினையும் வன்முறை கும்பல்களையும் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் வகையில், ஒன்ராறியோ மாநில அரசாங்கத்திற்கு அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கு 11 மில்லியன் டொலர்களை மத்திய அரசாங்கம் வழங்கவுள்ளது. ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு நொவம்பர் மாதத்தில், இவ்வாறான வன்முறைகளை ஒழிப்பதற்காக மத்திய அரசினால் 327.6 மில்லியன் டொலர்கள் செலவு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதற்கு அமைய, அதன் ஒருகட்டமாக இந்த நிதி ஒன்ராறியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை ரொறன்ரோவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எல்லைப்பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் தடுப்புத்துறையின் அமைச்சர் பில் பிளையர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின்கீழ் ஒன்ராறியோவுக்கு 65 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுவதாகவும், அதில் 11 மில்லியன் டொலர்கள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பூமியைக் காப்பாற்ற பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்ட 16 வயது சிறுமி.
[Thursday 2019-03-14 09:00]

நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு வழங்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் (Greta Thunberg) என்ற இந்த சிறுமி பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது குறித்து ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். இதற்காக தனது பள்ளிப் படிப்பைக் கூட பாதியிலேயே நிறுத்தி விட்ட கிரேட்டா, சுற்றுச்சூழலைக் காப்பாற்ற ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், நார்வே நாட்டைச் சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிரேட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர்.


'போயிங் 737' விமானங்களுக்கு கனடா தடை!
[Thursday 2019-03-14 08:00]

எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான


மசூத் அசாருக்கு தீவிரவாதத்துடன் தொடர்பில்லையென தொடர்ந்து வலியுறுத்தும் சீனா.
[Wednesday 2019-03-13 17:00]

மசூத் அசாருக்கும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லையென சீனா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பிற்கும் மசூத் அசாருக்கும் தொடர்பு இருப்பதைப் போன்ற ஓடியோ ஆதாரத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் இந்தியா அளித்துள்ளது. இந்நிலையில், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று விவாதிக்கப்பட்டு வருகின்றது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காலக்கெடு இன்று (புதன்கிழமை) பிற்பகல் வேளையில் முடிவடைகின்றது. இந்நிலையில், மசூத் அசாருக்கும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்திற்கும் தொடர்பில்லையென சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி குறிப்பிட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் இல்லையென்றும் கூறிவருகின்றது.


ஒன்ராறியோ பாடசாலைகளில் தொலைபேசி பாவனைக்கு தடை!
[Wednesday 2019-03-13 17:00]

ஒன்ராறியோ பாடசாலைகளில் வகுப்பு நேரங்களில் மாணவர்களின் கையடக்க தொலைபேசி பாவனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்நடைமுறையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இது தொடர்பான முறையான அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் லிசா தொம்சன் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விபத்துக்குள்ளான 'போயிங் 737 மேக்ஸ் 8' விமானத்தின் கருப்பு பெட்டியை உலக நாடுகளுக்கு அனுப்புவோம் - எத்தியோப்பியா தகவல்.
[Wednesday 2019-03-13 17:00]

157 பேர் உயிரிழந்த எத்தியோப்பியா விமான விபத்திலும், 189 பேர் உயிரிழந்த இந்தோனேஷியா விமான விபத்திலும் தொடர்புடைய போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஒவ்வொரு நாட்டிலும் தடை செய்யப்பட்டு வருகிறது. விமானம் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இவ்விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானம் விபத்துக்குள் சிக்கிய போது என்ன நடந்தது என்பதை கண்டறிய உதவியான 'பிளாக் பாக்ஸை


லண்டனுக்கான அனைத்து விமான சேவைகளையும் 'எயார் கனடா' இரத்து செய்தது.
[Wednesday 2019-03-13 17:00]

லண்டனிலிருந்து வரவிருந்த மற்றும் லண்டனுக்கு புறப்படவிருந்த அனைத்து விமானச் சேவைகளையும் எயார் கனடா இரத்து செய்துள்ளது. போயிங் மக்ஸ் 8 ரக விமானங்கள் தமது வான்வெளியில் பறப்பதற்கு பிரித்தானியா தடை விதித்ததை தொடர்ந்தே எயர் கனடாவின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொன்றியலிலிருந்து கரீபியன் தீவுகளுக்கான இரு விமான சேவைகளை எயார் கனடா இன்று (புதன்கிழமை) இரத்து செய்துள்ளது. ஹலிஃபக்ஸ் நோக்கி நேற்று மாலை பயணிக்கவிருந்த எயார் கனடா விமானம் இரத்து செய்யப்பட்டதுடன், செயின்ட் ஜோன்ஸ் நோக்கி இன்று பயணிக்கவிருந்த விமானமும், நாளைய தினத்திற்கான விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.


வெனிசுலா நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டால், தண்ணீருக்கும் உணவுக்கும் மக்கள் அவதி.
[Wednesday 2019-03-13 17:00]

வெனிசுலா நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு காரணமாக மக்கள் நீரும் உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதிபர் நிகோலஸ் மதுரோ பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 7-ஆம் தேதி முதல் நாட்டின் பல்வேறு நகரங்களில் மின்வெட்டு காரணமாக மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். தண்ணீர் வினியோகமும் மின்சாரத்தைச் சார்ந்தே இருப்பதால் குளிக்கவும், குடிநீர், உணவு தயாரிப்பு உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் அவதியுறும் மக்கள் கழிவு நீர்க் கால்வாய்களில் போட்டி போட்டுத் தண்ணீர் பிடிக்கும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் தலைவிரித்தாடிய கல்வித்துறை லஞ்சம் ஊழல்.
[Wednesday 2019-03-13 08:00]

வாஷிங்டனில் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பான வழக்கில் பிரபல ஹாலிவுட் நடிகைகள், கல்லூரி நிர்வாகிகள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 300 FBI புலனாய்வு அதிகாரிகளும் போலீசாரும் நடத்திய விசாரணையில் அமெரிக்காவின் மிகப்பெரிய கல்வி முறைகேடு விவகாரம் வெடித்துள்ளது. ஸ்டான்போர்டு, Yale, ஜார்ஜ் டவுன் போன்ற பிரசித்தி பெற்ற அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான லஞ்ச ஊழல் புகார்கள் தலைவிரித்தாடுகின்றன.


மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இன்று வாக்கெடுப்பு தொடங்குகிறது.
[Wednesday 2019-03-13 08:00]

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் இன்று விவாதித்து வாக்கெடுப்பை நடத்த உள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், அவர் இயங்குவதற்கு அனுமதித்து வரும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் போம்பே உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். பிரதமர் மோடியும் அமெரிக்காவின் ஆதரவைக் கோரி பல்வேறு தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதும் சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது.


பிரேசில் அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆனது!
[Wednesday 2019-03-13 08:00]

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது. அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


பாலியல் புகாரில் போப் ஆண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை.
[Wednesday 2019-03-13 08:00]

போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் நிதி ஆலோசகர் கார்டினல் ஜார்ஜ் பெல் (வயது 75). ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இவர் போப் ஆண்டவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். 40 வயதைக் கடந்து விட்ட 2 ஆண்கள், 1970-ஆம் ஆண்டுகளில் நீச்சல் குளம் ஒன்றில் வைத்து, கார்டினல் ஜார்ஜ் பெல், தங்களிடம் தவறாக நடந்ததாகவும், முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் புகார் கூறினர். இதே போன்று 1980-ம் ஆண்டுகளில் 3 சிறுவர்கள் முன்பாக ஜார்ஜ் பெல், தன் முழு உடலையும் நிர்வாணமாக காட்டியவாறு நின்றார் எனவும் புகார் எழுந்துள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் செயல்திட்டத்தில் மாற்றம்!
[Tuesday 2019-03-12 17:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் செயல்திட்டத்தின் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் செயல்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த டிசம்பர் மாதமே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற இருந்தது. செயல் திட்டத்தில் சில அம்சங்கள் குறித்து பிரிட்டன் எம்.பி.க்களுக்கு கடும் அதிருப்தி இருந்த நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தால் தோல்வியடைந்திருக்கும் என்பதால் ஒத்திவைக்கப்பட்டது.


எத்தியோப்பிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் இரங்கல்!
[Tuesday 2019-03-12 17:00]

எத்தியோப்பிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் வெளியிட்டுள்ளார். எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் உயிரிந்தனர். விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது. குறித்த விமானத்தில் பயணித்த 18 கனேடியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கனேடிய பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


மீண்டும் கிம் ஜாங் அன்னை சந்திக்க டிரம்ப் தயார்!
[Tuesday 2019-03-12 17:00]

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த முதல் உச்சி மாநாட்டுக்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர். ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் அன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார்.


'போயிங் 737' விமானத்திற்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் தடை!
[Tuesday 2019-03-12 17:00]

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இயக்குவதற்கு சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய விமான பயணியர் நிறுவனங்கள் தற்காலிக தடை விதித்துள்ளன. போயிங் மேக்ஸ் 8 ரக பயணியர் விமானம் ஞாயிற்றுக்கிழமை விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 157 பேர் பலியானதை தொடர்ந்து இந்த முடிவு வந்துள்ளது. 5 மாதங்களுக்குள் இந்த ரக பயணியர் விமானம் விபத்திற்குள்ளாவது இது இரண்டாவது முறை. உலகிலேயே 6வது மிக பெரிய, விறுவிறுப்பாக இயங்குகின்ற சிங்கப்பூரின் சான்கி விமான நிலையம் ஐரோப்பாவோடும், அமெரிக்காவோடும் ஆசியவை இணைக்கின்ற முக்கிய விமான முனையமாகும். இங்கிருந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் இத்தகைய பெரிய விமானத்தை சில நிறுவனங்கள்தான் இயக்கி வருகின்றன. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் எதையும் எந்தவொரு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களும் இயக்கவில்லை. சில்க்ஏர் மற்றும் ஃபீஜி ஏர்வேய்ஸ் என்ற இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள்தான் இவற்றை ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கி வருகின்றன. இந்த விமானத்திலுள்ள பாதுகாப்பு ஆபத்துக்களை மீளாய்வு செய்து,மேலதிக தகவல்களை இந்த நிறுவனம் பெறுவது வரை இந்த தற்காலிக தடை அமலில் இருக்கும் என்று ஆஸ்திரேலிய பயணியர் விமான பாதுகாப்பு நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் ஷான் கார்மோடி கூறியுள்ளார்.


"பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்" - பாகிஸ்தான் உறுதி!
[Tuesday 2019-03-12 17:00]

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டத்தை தணிக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷியையும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலேயையும் அழைத்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் பேசினார். அப்போது பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்- இ-முகமது மற்றும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான கடுமையான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா