Untitled Document
April 19, 2024 [GMT]
பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய விருதை மலேசிய பிரதமருக்கு அளித்து கவுரவம்.
[Saturday 2019-03-23 16:00]

பாகிஸ்தான் நாட்டின் தேசியநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுக்கு பாகிஸ்தான் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனையேற்ற மஹதிர் முஹம்மது நேற்று இஸ்லாமாபாத் வந்தார். இன்று பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் நடைபெற்ற தேசியநாள் விழாவில் மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுக்கு அந்நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் ‘நிஷான் - இ- பாகிஸ்தான்’ எனப்படும் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


வடகொரியா மீதான கூடுதல் தடைகளை உடனடியாக விலக்கிய டிரம்ப்!
[Saturday 2019-03-23 08:00]

வடகொரியா மீது அமெரிக்கா விதித்த சமீபத்திய தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள தாம் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டுக்கு டிரம்ப் கூறியுள்ளார். ஏற்கனவே இருக்கும் தடைகளுடன் கூடுதலாக விதிக்கப்படும் பெரிய அளவிலான தடைகள் விலக்கப்படும் என அவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். வடகொரியா மீதான தடைகளை மீறி அந்நாட்டுக்கு நிலக்கரியை அனுப்பிய இரு சீன கப்பல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளை அவர் குறிப்பிடுகிறார் என்று கருதப்படுகிறது.


"நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் ஜும்மா தொழுகை" - பல்லாயிரம் மக்கள் திரண்டனர்! Top News
[Saturday 2019-03-23 08:00]

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 8 இந்தியர்கள் உள்பட 50 பேர் பலியாகினர். அமைதிப் பிரதேசமாக விளங்கும் நியூசிலாந்து நாட்டு மக்களை இந்த தாக்குதல் நிலைகுலைய வைத்தது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்த மசூதிகளில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள நூர் மசூதி அருகேயுள்ள ‘ஹாக்லே பார்க்’ திறந்த வெளியில் இன்று வெள்ளிக்கிழமை (ஜும்மா) தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் தலையில் முக்காடு அணிந்து நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்ட்ரன் கலந்து கொண்டார்.


எட்மன்டன் பகுதிக்கு கடும் குளிர் எச்சரிக்கை!
[Saturday 2019-03-23 08:00]

கனடாவின் சில பகுதிகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. எட்மன்டன், ஒட்டாவா உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு கடும் குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் மிச்சல் டெமர் கைது.
[Saturday 2019-03-23 08:00]

பிரேசிலில் 2016 முதல் 2018 வரை அதிபராக இருந்தவர் மிச்சல் டெமர் (வயது 47). இவர் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மிச்சல் டெமர் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க மார்சிலோ பிரெட்ஸ் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், அணுசக்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஒதுக்கி 2 லட்சத்து 62 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம்) லஞ்சம் பெற்ற வழக்கில் மிச்சல் டெமரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


"எங்கள் நாட்டுமக்களுக்கு சேர வேண்டிய 500 கோடி டாலரை டிரம்ப் திருடி விட்டார்" - வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு!
[Friday 2019-03-22 17:00]

தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான வெனிசுலா நாட்டு அதிபர் பதவிக்கு நடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ பெற்ற வெற்றி செல்லாது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், எதிர்க்கட்சி தலைவரான ஜுவான் குவய்டோ தன்னை வெனிசுலா அதிபராக பிரகடனப்படுத்தி கொண்டார். அவருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. அதைதொடர்ந்து 50-க்கும் அதிகமான நாடுகளும் அவரை பிரதமராக அங்கீகரித்த நிலையில் நிக்கோலஸ் மடுரோ தனது பதவியை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ரஷியா, சீனா, கியூபா, பொலிவியா உள்ளிட்ட சில நாடுகள் மடுரோவை ஆதரித்து வருகின்றன. இந்நிலையில், நிக்கோலஸ் மடுரோ தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த பல உதவிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டின் சுமார் 700 கோடி டாலர் மதிப்பிலான பெட்ரோல் கிணறும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.


கூட்டுறவு அலுவலகத்திலிருந்து வடகொரியா வெளியேற்றம்!
[Friday 2019-03-22 17:00]

வடகொரியாவும் தென்கொரியாவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரிய அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். வடகொரியாவின் உத்தரவை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு அதிகாரிகள் வெளியேறுவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. எதிரி நாடுகளாக செயற்பட்டு வந்த தென்கொரியாவும் வடகொரியாவும் கடந்த ஆண்டு சமாதானமடைந்த நிலையில் இருநாட்டு அதிகாரிகளும் கலந்துரையாட வடகொரிய எல்லையில் கூட்டுறவு அலுவலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேசுவதற்கு தொலைபேசி சேவைகளும் ஏற்படுத்தப்பட்டது. எனினும் தற்போது குறித்த அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியுள்ளது.


தென்கொரியாவில் 1,600 பெண்களை ரகசியமாக ஆபாச படம் பிடித்து இணையதளத்தில் விற்பனை!
[Friday 2019-03-22 17:00]

தென்கொரியாவில் ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பகிர்வது ஆகியவை சட்டப்படி குற்றமாகும். இந்தநிலையில், மர்ம கும்பல் ஒன்று அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் ஓட்டலில் அறை எடுத்து தங்கிய பெண்களை ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் பிடித்து, இணையதளத்தில் விற்று, பணம் சம்பாதித்தது அம்பலமாகி உள்ளது. இதனால் சுமார் 1,600 பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


புகலிடக் கோரிக்கையாளர்களை கனடா வரவேற்கிறது: பிரதமர் ட்ரூடோ.
[Friday 2019-03-22 17:00]

புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும், புதியவர்களை வரவேற்பதாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ மிசிசாகாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


யூடியூப் சேனலுக்காக குழந்தை நட்சத்திரங்கள் சித்ரவதை செய்த வளர்ப்பு தாய் கைது!
[Friday 2019-03-22 17:00]

உலகளவில் தற்போது இருக்கும் இணையதள வசதிகள் கொண்டு, யார் வேண்டுமென்றாலும் பிரபலம் ஆகலாம் என்றாகிவிட்டது. யூடியூப் எனும் இணையதளம் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன் மூலம் பல முறைகளில் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பிரபலங்களாக மாற்றி வருகின்றனர். அவ்வகையில் உருவாக்கப்பட்டது தான் 'ஃபெண்டாஸ்டிக் அட்வெஞ்சர்ஸ்' எனும் யூடியூப் சேனல். இதனை மச்செல் ஹாக்னி(48) எனும் பெண் உருவாக்கியுள்ளார். இதற்காக 6-15 வயதுடைய, 7 குழந்தைகளை தத்தெடுத்து, குழந்தை நட்சத்திரங்களாக வளர்த்துள்ளார். இந்த யூடியூப் சேனலை 8 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்த சேனலின் ஒவ்வொரு வீடியோவும் 25 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த சேனலில் பிரபலமான குழந்தைகள் பங்கு பெறும் 'குக்கி கேப்ச்சர் மிஷன்' மற்றும் 'சூப்பர் பவர் பேபி பேட்டில்' எனும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.


சமூக ஊடகங்கள் தீவிரவாத உள்ளடக்கங்களை அகற்றுவதற்கு கனடா வலியுறுத்தல்!
[Friday 2019-03-22 08:00]

சமூக ஊடக நிறுவனங்களின் வலைத்தளங்களில் உள்ள தீவிரவாத மற்றும் மூளைச் சலவை செய்யும் உள்ளடக்கங்களை அகற்றுவது தொடர்பாக கனடா தற்போது கூடிய கவனம் செலுத்தி வருகின்றது. இதன்படி, வெறுக்கத்தக்க மற்று பயங்கரவாத செயற்பாடுகளை தூண்டும் விதமான கருத்துக்களை சமூக ஊடகங்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது. நியுஸிலாந்து, கியுபெக் நகரம், பிட்ஸ்பேக் மற்றும் சில இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வலதுசாரி தீவிரவாதிகள் இணையத்தை பயன்படுத்தி வெறுக்கத்தக்க கருத்துக்கள் மற்றும் மூளைச் சலவை செய்து மற்றவர்களை தூண்டும் வகையில் செயற்பட்ட சந்தர்ப்பங்களை கருத்தில் கொண்டு இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


51 பள்ளிக் குழந்தைகளுடன் பேருந்தை கடத்தி கொளுத்த முயன்ற ஓட்டுநர்! Top News
[Friday 2019-03-22 08:00]

இத்தாலியில் 51 பள்ளிக் குழந்தைகளுடன் வேனைக் கடத்தி கொளுத்த முயன்ற ஓட்டுநர் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிர் தப்பிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவுசெய்னவ் சி (Ousseynou Sy) என்ற செனகலைச் சேர்ந்த ஓட்டுநர் மிலன் நகரின் கிழக்கில் உள்ள கிரெமா என்ற இடத்தில் புதனன்று ஜிம்மில் இருந்து பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த குழந்தைகளின் வேனைக் கடத்தினான். 51 குழந்தைகளையும் வேனில் வைத்து பூட்டி, கொளுத்திவிடப் போவதாக மிரட்டினான்.


'போயிங் 737' பற்றி சுய விசாரணைகளை ஆரம்பித்தது கனடா!
[Friday 2019-03-22 08:00]

அமெரிக்காவை நம்புவதை காட்டிலும் கனடாவும், ஐரோப்பாவும் போயிங் 737 மெக்‌ஸ் விமானங்கள் பற்றி சுயமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. அமெரிக்க விசாரணையாளர்களின் விமர்சனங்களை தொடர்ந்து இரட்டை கருத்துகளை நம்பாது தாங்களே விசாரணைகளை முடுக்கிவிடுவதற்கு எண்ணியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய மற்றும் கனேடிய கட்டுப்பாட்டு அதிகாரிகள், போயிங் 737 மெக்ஸ் ஜெட்களின் திட்டமிட்ட பாதுகாப்பு மேம்பாடு தொடர்பாக தங்களின் சொந்த விமர்சனங்களை ஆய்வுக்குட்படுத்த திட்டமிட்டுள்ளனர். போயிங் விமானங்களின் மென்பொருள் மேம்படுத்தல் இரண்டு விமான விபத்துகளுக்கும் காரணமாகியது.


"இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தால் கடும் விளைவுகள் ஏற்படும்" - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
[Friday 2019-03-22 08:00]

இந்தியா மீது மேலும் தீவிரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாதக் குழுக்கள் மீது உண்மையான நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தாக்குதல்கள் தொடர்ந்தால் அது மிகப் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


மாணவிகளை கல்லூரி விழாவுக்கு அழைத்ததால் பேராசிரியரை கொன்ற மாணவன்!
[Thursday 2019-03-21 17:00]

பாகிஸ்தானின் பாகவல்பூர் பகுதியில் அரசு சாதிக் ஈகர்தன் கல்லூரி உள்ளது. இதில் 4000 மாணவிகளும், 2000 மாணவர்களும் பயில்கின்றனர். இந்த கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிபவர் கலீத் அமீது ஆவார். இவர் 4 மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி பிரிவுபசார விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளையும் விழாவிற்கு அழைத்துள்ளார். பாகிஸ்தானில் இஸ்லாமிய பெண்களுக்கென தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அதன்படியே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது வழக்கம். இதற்கு மாறாக மாணவிகளை நிகழ்ச்சிக்கு அழைத்தது பெரும் குற்றம் என காதீப் உசைன் எனும் மாணவன் எண்ணியுள்ளான்.


சர்வதேச மதிப்பெண்கள் பதிவுக்கான மெட்ரிட் அமைப்புடன் கனடா இணைகின்றது!
[Thursday 2019-03-21 17:00]

சர்வதேச மதிப்பெண்கள் பதிவுக்கான மெட்ரிட் அமைப்புடன் கனடா 104 வது அங்கத்தவராக இணைந்து கொள்கின்றது. இந்த அமைப்பு தற்போது 120 நாடுகளை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமை பெறுவதற்கான நடைமுறை திகதி அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னர், எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி குறித்த நெறிமுறை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து கனடாவின் வர்த்தக குறியீட்டு உரிமையாளர்கள் மெட்ரிட் அமைப்பு முறையை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.


அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!
[Thursday 2019-03-21 17:00]

அமெரிக்காவில் மாநில நீதிமன்றங்களும் மாவட்ட நீதிமன்றங்களும் தனிதனியாக இயங்கி வருகின்றன. இவ்விரு நீதிமன்றங்களிலும் வழங்கப்படும் தீர்ப்புகள் தொடர்பாக மேல் முறையீடு செய்ய மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தனி நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்தப்படியாக மிகுந்த அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களாக மேல்முறையீடு நீதிமன்றங்கள் இங்கு உள்ளன. இந்நிலையில் கொலம்பியா மாவட்ட மேல் முறையீடு, நீதின்மன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான நியோமி ராவ் என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன் மொழிந்திருந்தார். இந்த நியமனத்துக்கு செனட் சபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து கொலம்பியா மாவட்டத்தின் மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதியாக நியோமி ராவ் நேற்று வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரட் கவானா பதவி பிரமானம் செய்து வைத்தார்.


தீவிரவாத தாக்குதல்கள் : கனடா புலனாய்வு துறையும் உச்சபட்ச அவதானத்துடன் செயற்படுகிறது!
[Thursday 2019-03-21 17:00]

நியுஸிலாந்து – கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களை அடுத்து கனடா போன்ற நாடுகளின் புலனாய்வுத் துறையினரும் சமூக வலைத்தளங்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர். வெறுக்கத்தக்க கருத்துப் பறிமாற்றங்கள் மற்றும் தீவிரவாத மூளைச் சலவைகளை எதிர்த்துப் போரிடுவதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.


தாய்லாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் திருநங்கை!
[Thursday 2019-03-21 17:00]

ஜுன்டா எனப்படும் ராணுவ தலையீடு கொண்ட ஆட்சி நடைபெற்றுவரும் தாய்லாந்து நாட்டின் பிரதமராக பிரயுத் சான்-ஓ-சா பதவி வகித்து வருகிறார். அந்நாட்டின் ஆட்சி முறையில் ராணுவத்தின் தலையீட்டை நீக்கி, முழுமையான மக்களாட்சி நடக்கும் வகையில் 500 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு 2015-ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தடுத்து வெளியான தேர்தல் அறிவிப்புகளும் தள்ளிக்கொண்டே போனநிலையில் தாய்லாந்து பாராளுமன்றத்துக்கு 24-3-2019 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பியு தாய் கட்சியை சேர்ந்த சுதாரத் கி யுராபான் என்ற பெண் வேட்பாளரும், முன்னாள் பிரதமரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான அபிஷிட் வெஜா ஜிவா என்பவரும் பிரதமர் போட்டிக்கான பிரதான போட்டியாளர்களாக தேர்தல் களத்தில் உள்ளனர். தற்போதைய பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.


நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு : பலியானவர்களுக்கு ‘ஹக்கா’ நடனமாடி மாணவர்கள் அஞ்சலி.
[Thursday 2019-03-21 08:00]

அமைதி பூங்காவான நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் கிறைஸ்ட்சர்ச் நகரை சேர்ந்த பள்ளி மாணவ–மாணவிகள், தங்கள் நாட்டின் பாரம்பரிய நடனத்தின் மூலம் துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க நடவடிக்கை : ஜெர்மனி அதிரடி!
[Thursday 2019-03-21 08:00]

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14–ந் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. அதனை தொடர்ந்து இந்த இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா வலியுறுத்தியது. அதன்படி இந்தியாவுக்கு ஆதரவாக, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன. ஆனால் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது மறுப்பு ஓட்டுரிமை அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டைபோட்டது. சீனா இப்படி முட்டுக்கட்டை போடுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் 2009, 2016 மற்றும் 2017–ம் ஆண்டுகளிலும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வலியுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 3 முறையும் சீனா, இந்த தீர்மானத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.


ஜூலை மாதம் வரை போயிங் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்படும்: ஏர் கனடா அறிவிப்பு!
[Thursday 2019-03-21 08:00]

போயிங் விமான சேவைகளை ஜூலை மாதம் வரைநிறுத்தி வைக்கவுள்ளதாக கனடா விமான சேவைகள் தெரிவித்துள்ளது. எத்தியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து கடந்த வாரம் கனடாவுக்கு சொந்தமான போயிங் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெருக்கடிக்கு மத்தியில் விமான சேவைகளை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கனடாவின் விமான சேவைகள் தெரிவித்துள்ளது. கனடாவின் விமான சேவைகளில் 6 வீதம் வரை போயிங் விமானங்கள் இடம்பிடித்துள்ளன.


கூகுள் நிறுவனத்துக்கு 'ரூ.11,648 கோடி' அபராதம் - ஐரோப்பிய யூனியன் கமிஷனர்!
[Thursday 2019-03-21 08:00]

அமெரிக்காவை சேர்ந்த இணையதள ஜாம்பவானான ‘கூகுள்’ நிறுவனத்துக்கு நேற்று போட்டிகளுக்கான ஐரோப்பிய யூனியன் கமிஷனர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,648 கோடி அபராதம் விதிப்பதாக அறிவித்தார். ஒப்பந்த விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். கூகுள் நிறுவனம் ஆன்-லைன் வர்த்தக சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி தனது போட்டியாளர்கள் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது. கூகுள் வர்த்தகரீதியாக மிகவும் முக்கிய விளம்பரதாரர்களுக்கு மட்டுமே தேடு விளம்பரங்கள் வெளியிட தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அனுமதி வழங்கியுள்ளது.கூகுள் முதலில் தனது போட்டியாளர்களின் இணையதளங்களில் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது.


மொசாம்பிக் இயற்கை பேரிடர்: 3 நாள் துக்க தினம் அறிவிக்கப்பட்டது!
[Wednesday 2019-03-20 17:00]

மொசாம்பிக்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாள் துக்க தினத்தை அனுட்டிக்க அந்நாடு தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று (புதன்கிழமை) தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை துக்கத்தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. மொசாம்பிக்கின் போர்ட் சிட்டி பெய்ராவில் கடந்த வியாழக்கிழமை 170 கே.பி.எச் வேகத்தில் வீசிய இடாய் சூறாவளி மொசாம்பிக் உட்பட சிம்பாப்வே மற்றும் மலாவி நாடுகளை பாதித்திருந்தது.


கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேந்தவர் நியமனம்!
[Wednesday 2019-03-20 17:00]

இந்திய வம்சாவளியான ஜக்மீத் சிங், கனடா நாடாளுமன்றத்தில் பதவியேற்கும் முதல் வெள்ளை நிறத்தவரல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார். புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


63 சதவீத மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் – அதிர்ச்சி தகவல்!
[Wednesday 2019-03-20 17:00]

63 சதவீத மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்ராறியோவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு, ஒன்ராறியோவில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலுள்ள சுமார் 160,000 மாணவர்களிடையே முன்னெக்கப்பட்டுள்ளது.


போயிங் விமானங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா உத்தரவு!
[Wednesday 2019-03-20 17:00]

போயிங் 737 மக்ஸ் 8 ரக விமானங்கள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமெரிக்க போக்குவரத்து திணைக்கள செயலாளர் எலைன் சாவோ அந்நாட்டு கண்காணிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளார். போயிங் விமானங்கள் விபத்துக்குள்ளாகி வரும் நிலையில் அவை வானில் பறப்பதற்கான அனுமதியை எவ்வாறு பெற்றுக்கொண்டது என்பது தொடர்பாக ஆராயுமாறும் அவர் மேலும் கோரியுள்ளார். இரண்டு போயிங் விமானங்கள் 5 மாதங்களுக்கும் குறைவான காலத்துக்குள் விபத்துக்குள்ளாகியுள்ளன. கடந்த ஒக்டோபரில் இந்தோனேஷியாவிலும் அதைத் தொடர்ந்து இம்மாதம் எத்தியோப்பாவிலும் மேற்படி விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. இதில் 300 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.


209 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் தீ! - அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! Top News
[Wednesday 2019-03-20 09:00]

நியுயோர்க்கிலிருந்து லண்டன் சென்ற போயிங் 777 ரக விமானத்தில் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து கனடா, சென். ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று(செவ்வாய்கிழமை) அவசரமாக தரையிறக்கப்பட்டது. 209 பயணிகளுடன் ஜோன் எப். கெனடி சர்வதேச விமானநிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற போயிங் 777 ரக விமானத்திலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. விமானம் பறந்து சில மணி நேரங்களில், விமானத்தின் பொதிகள் களஞ்சியப்படுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து பயணிகளால் விமானிக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, குறித்த விமானத்தை கனடாவின், சென். ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா