Untitled Document
April 19, 2024 [GMT]
இலங்கை: கொழும்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 155 புதிய வீடுகள் வழங்கி இந்தியா உதவி!
[Monday 2019-02-25 21:00]

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், ஹட்டன் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.13.5 கோடி செலவில் 155 புதிய வீடுகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. உள்கட்டமைப்புத்துறை மந்திரி பழனி திகம்பரம் முன்னிலையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் குடியிருப்பை திறந்து வைத்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்தனர். ஒவ்வொரு வீடும் 7 பெர்ச் (1905 சதுர அடி) நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. மற்ற கட்டுமான வசதிகளுடன் ஒப்பிடும்போது, இந்த கட்டிடங்கள் பசுமை கிராமங்கள் எனும் அரசின் திட்டத்தின் கீழ் கூடுதல் வசதியுடன் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது.


கனடாவின் ஒருசில இடங்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை: மக்களை வெளியேற உத்தரவு!
[Monday 2019-02-25 21:00]

கனடாவின், எட்மன்டனின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளுக்கு கனடாவின் வானிலை அவதான நிலையம் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி கிரிஸ் சிடிகி, கரோலின் டெய்லர், அரோரா பிரவுன் மற்றும் அல்பேட்டா ஆகிய பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


யெமன் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்தானியா '200 மில்லியன் யூரோ' உதவி!

[Monday 2019-02-25 21:00]

யெமன் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு


கோலாகலமாக துவங்கிய 91-வது ஆஸ்கார் விருது விழா!
[Monday 2019-02-25 07:00]

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது. இதில் இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டாக் படத்தில் நடித்த ரெஜினா கிங் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த ஆவணப்படமாக ப்ரீ சோலோ படமும், வைஸ் படத்திற்கு சிறந்த ஒப்பனைக்கான விருதும் வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என பிளாக் பேந்தர் படத்திற்கு தொடக்கத்திலேயே 2 விருதுகள் கிடைத்துள்ளது.


வெளிநாட்டில் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட கனேடியர்: கடவுசீட்டு பறிமுதல்!
[Monday 2019-02-25 07:00]

எகிப்து விமான நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்ட கனேடியரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். கனேடியரான யாசர் அகமது அல்பாஸ் கடந்த திங்களன்று கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். பொறியாளரான இவர் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே எகிப்தில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த திங்களன்று ஒன்றாரியோவில் உள்ள குடியிருப்புக்கு திரும்பும் வகையில் கெய்ரோ விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது யாசர் அகமதுவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். பின்னர், அவரது பெயர் சர்வதேச விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது என அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனிடையே தமது குடும்பத்தாருக்கு குறுந்தகவல் ஒன்று அனுப்பிய யாசர் அகமது, அவர்கள் அனைவரையும் அன்பு செய்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.


வங்காளதேசத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தை கடத்த முயற்சி!
[Monday 2019-02-25 07:00]

வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 245 கிலோமீட்டர் தூரத்தில் அந்நாட்டின் தென்கிழக்கு கடற்கரை பகுதியில் பிரபல துறைமுக நகரமான சட்டோகிராம் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில், வங்காளதேச அரசுக்கு சொந்தமான


கனடாவில் பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடை!
[Monday 2019-02-25 07:00]

கனடாவில் பரவலாக வீசும் பலத்த காற்று காரணமாக சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக ரொறொன்ரோ மாகாணத்தில் மணிக்கு 90 தொடக்கம் 110 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென சுற்றுச்சூழல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு ஒன்ராறியோவில் காலநிலை தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதோடு, நாளை காலை வரை நீடிக்கலாம் என சுற்றுச்சூழல் திணைக்களம் கூறியுள்ளது.


ஸ்பெயினில் தாயை கொன்று நாய்க்கு இரையாக்கிய வாலிபர்!
[Monday 2019-02-25 07:00]

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டை சேர்ந்தவர் ஆல்பர்ட்டோ கோமஸ் (வயது 26). இவர் 66 வயதான தனது தாயுடன் வாழ்ந்து வந்தார். ஆல்பர்ட்டோ கோமசுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆல்பர்ட்டோ கோமசின் தாய் திடீரென மாயமானார். ஒரு மாதத்துக்கும் மேலாக அவரை காணவில்லை என அவரது தோழி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஆல்பர்ட்டோ கோமஸ் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.


ரொறன்ரோ போக்குவரத்துச் சபையின் முதலாம் வழித்தடம் மூடப்பட்டுள்ளது!
[Sunday 2019-02-24 17:00]

யோங்க் பல்கலைக்கழகம் ஸ்பேடினா மற்றும் செயிண்ட் கிளேர் வெஸ்ட், யூனியன் நிலையங்களுக்கான சேவை மூடப்படுவதாக ரொறன்ரோ போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. குறித்த வழி தடங்ம் நேற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரமும் மூடப்படும் என ரொறன்ரோ போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.


கற்பழிப்பு புகாரில் கைது ரூ.7 கோடி செலுத்தி ஜாமீனில் வந்த பிரபல 'பாப்' பாடகர்!
[Sunday 2019-02-24 17:00]

அமெரிக்க பாப் பாடகர் ஆர். கெல்லி (வயது 50). இவர் இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர். கடந்த 1998 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் 3 பெண்களை இவர் கற்பழித்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. கற்பழிக்கப்பட்டவர்களில் 3 பெண்கள் 13 முதல் 16 வயது உடையவர்கள். உலகம் முழுவதும்


ரொறன்ரோவில் பலத்த காற்றுடன் பனி பொழியும் வாய்ப்பு!
[Sunday 2019-02-24 17:00]

ரொறன்ரோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழமைக்கு மாறாக காலநிலை காணப்படும் என சுற்றுசூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் அதிக காற்றுடன் பனி பொழியும் சாத்தியக்கூறு இருப்பதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. ரொறன்றோ பெரும்பாகத்தில் இன்று முதல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும்.


'அமெரிக்காவில் அவசர நிலைக்கு எதிர்ப்பு' - நாடாளுமன்றத்தில் 26-ந்தேதி ஓட்டெடுப்பு!
[Sunday 2019-02-24 17:00]

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை தடுக்க டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் மெக்சிகோ எல்லை வழியாக சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட டிரம்ப் திட்டமிட்டார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது. எனினும் எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இந்த நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலை பிறப்பித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அமலில் வந்துள்ள இந்த நடவடிக்கை அமெரிக்காவில் அரசியல் மற்றும் சட்ட மோதலுக்கு வழி வகுத்துள்ளது. டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதைப்போல டிரம்பின் குடியரசு கட்சியிலும் அதிருப்தி காணப்படுகிறது. இந்தநிலையில் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள இந்த தீர்மானம் மீது 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டெடுப்பு நடத்தப்படும் என பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி கூறியுள்ளார்.


பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினர் அஞ்சலி!
[Sunday 2019-02-24 17:00]

காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில், கடந்த 14 ஆம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களுக்கு சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினர் அஞ்சலி செலுத்தினர். இந்திய தூதரகம் அமைந்துள்ள வளாகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் 200 -க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏந்திச் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.


வெனிசுலாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்!
[Sunday 2019-02-24 08:00]

தென் அமெரிக்க நாடான வெனிசுலா தனது எல்லையை மூடியதால் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கும், இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்ட ஜூவானுக்கும் இடையே நடக்கும் போட்டியால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வரும் உதவிப் பொருட்களை ஏற்க அதிபர் மதுரோ மறுத்து விட்டதால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.


கஞ்சாவுக்கு பணம் தராததால் தாயை வெட்டிக் கொன்ற மகன்!
[Sunday 2019-02-24 08:00]

கஞ்சா போதையில் பெற்ற தாயை ஆயிரம் துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக அளித்த கொடூர மகனை போலீசார் கைது செய்தனர். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பில் கதவுப் பகுதியில் ரத்தம் வருவதைக் கண்ட அண்டை வீட்டார் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடம் வந்தனர். அப்போது இங்கு போதையில் இருந்த ஆல்பர்ட்டோ கோமஸ் என்பவனைப் பிடித்து விசாரித்தனர்.


"இரு நாடுகளுக்கு இடையேயான மோதலை தணிக்க உதவுங்கள்" - ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் கடிதம்!
[Sunday 2019-02-24 08:00]

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் இந்த பதிலடி எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. இந்தியாவின் பதிலடி எவ்வாறு இருக்குமோ? என்ற அச்சமும் அந்த நாட்டு தலைவர்களிடம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என ஆளாளுக்கு அலறி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த பதற்றத்தை தணிப்பதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியையும் நாடி வருகின்றனர். அந்தவகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பிரான்சிஸ்கோ ஆன்டனியோ கார்ட்டொரியலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்முத் குரேஷி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- புலவாமா தாக்குதல் விவகாரத்தில், இந்தியா தனது சொந்த கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் தோல்விகளை மறைக்க தவறான யூகங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது பழிபோடுகிறது. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக, வேண்டுமென்றே பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுவது மட்டுமின்றி பதற்றமான சூழலையும் உருவாக்குகிறது.


ட்ரம்பின் நடவடிக்கைகளால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்.
[Sunday 2019-02-24 08:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இரு நாடுகளினதும் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இந்த வரி விதிப்பு கொள்கைகளினால் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எகிப்தில் நிறைவேற்றப்படும் மரண தண்டனையை நிறுத்தி வைக்க ஐ.நா. வலியுறுத்தல்.
[Sunday 2019-02-24 08:00]

எகிப்தில் கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மாதத்தில் இதுவரை 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அவர்களிடம் சித்ரவதை செய்து வலுக்கட்டாயமாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்று இருந்ததாகவும், வழக்கு விசாரணையை நேர்மையாக நடத்தாமலும் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கு எட்டியது. இதைத்தொடர்ந்து எகிப்து அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்குமாறு அந்த நாட்டு அரசை வலியுறுத்தி உள்ளது.


நான் அதிபராகாமல் இருந்திருந்தால், வடகொரியாவுடன் போர் வந்திருக்கும்: டிரம்ப் பெருமிதம்!
[Saturday 2019-02-23 17:00]

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் -வடகொரிய அதிபர் கிம் ஜாங் இடையேயான 2-வது சந்திப்பு வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வியட்னாமின் ஹனோய் நகரில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப், தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், வடகொரியாவுடன் போரில் ஈடுபட்டு இருப்பார்கள் என்றார்.


'லிபரல் அரசாங்கம் மீது மக்கள் கடும் அதிருப்தி': ஆய்வில் தகவல்.
[Saturday 2019-02-23 17:00]

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி அரசாங்கத்தின் ஆட்சி மீது பெரும்பாலான மக்கள், கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இணையம் ஊடாக கடந்த 15ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதி வரையில், எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட, வாக்களிக்கத் தகுதி உள்ள 1,500 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் புதிய லிபரல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கனடா மோசமான செயற்பாடுகளையே வெளிப்படுத்தியுள்ளதாக, கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 46 சதவீதம் பேர் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் நாடு திறம்படச் செயற்படுவதாக 22 சதவீதம் பேரும், பெரிதாக கூறுவதற்கு எதுவும் இல்லை


'இந்தியா-பாகிஸ்தான்' இடையே பதற்றமான சூழ்நிலை மிகவும் ஆபத்தானது - டிரம்ப்!
[Saturday 2019-02-23 17:00]

புல்வாமா தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மிக, மிக மோசமான மற்றும் ஆபத்தான நிலையை எட்டியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள தமது அலுவலகத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசிய டிரம்ப், தாக்குதலில் 50 பேரை இந்தியா இழந்திருப்பதாக கூறினார். இதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்சனைகள் அதிகரித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மிகவும் வலுவான ஏதோ ஒன்றைச் செய்ய இந்தியா ஆராய்ந்து வருவதாக கூறியுள்ள அவர், இருநாடுகள் இடையேயான உறவில், மிக, மிக மோசமான மற்றும் ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருப்பதாக சுட்டிக் காட்டினார். இதை தடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும், இதில் தாங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.


ரொறன்ரோ பெரும்பாகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
[Saturday 2019-02-23 17:00]

ரொறன்ரோ உள்ளிட்ட ரொறன்ரோ பெரும்பாகம் முழுவதிற்கும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் சிறப்பு வானிலை எச்சரிக்கை ஒன்றினைப் பிறப்பித்துள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் வேளையில், சேதங்களை ஏற்படுத்தக்கூடிய வேகமான காற்று ரொறன்ரோவை தாக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மணிக்கு 90 இலிருந்து 110 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் காற்று வீசும் என்றும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றின் வேகம், கட்டடங்கள், குறிப்பாக கட்டடங்களின் கூரைகள், ஜன்னல்கள் என்பற்றை சேதப்படுத்தக் கூடும் எனவும், மரங்கள் கம்பங்கள் முறிந்து வீழந்து மின் தடை ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாத தாக்குதல்- "அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்".
[Saturday 2019-02-23 17:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.


லிபரல் அரசாங்கத்தின் வரவு
[Saturday 2019-02-23 08:00]

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தின் தேர்தலுக்கு முந்தைய மத்திய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளது. மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பில் மோர்னியோ தெரிவித்துள்ளார். லிபரல் அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நிலையில், இதுவரை மூன்று வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கனேடிய மத்திய பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த அரசாங்கத்தின் நான்காவது வரவு செலவுத் திட்டமாகவும், தேர்தலுக்கு முந்தைய பாதீடாகவும் இது அமையவுள்ளது.


வங்கதேசம் தீ விபத்து
[Saturday 2019-02-23 08:00]

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பல நூற்றாண்டுகள் பழைமையான சவ்கார்பஸார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இரசாயன களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டுவரும் குடியிருப்பு கட்டடமொன்றில் நேற்றுமுந்தினம் (புதன்கிழமை) இந்த தீ விபத்து ஏற்பட்டது. நான்கு மாடி கட்டடத்தில் பரவிய தீயினை சுமார் 200 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.


ரொறொன்ரோ போக்குவரத்துச் சபைக்கு 61 மில்லியன் டொலர் இழப்பு!
[Saturday 2019-02-23 08:00]

ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் (TTC )கடந்த ஆண்டு பயணிகள் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கையாளர் பொதுஅறிக்கை தெரிவிக்கிறது. ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் கட்டணம் கடந்த ஆண்டு குறைக்கப்பட்டமையினால், அதன் மொத்தம் வருவாயில் 5.4 சதவிகிதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. அதில், 2018 அம் ஆண்டு Metrolinx உபகரணங்கள் தவறாக பயன்படுத்தியமை காரணமாக மட்டுமே வருமானத்தில் 3.4 மில்லியன் டொலர் இழப்பைக் காட்டுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.


69 பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யப்போவதாக பாகிஸ்தான் அரசு தகவல்!
[Saturday 2019-02-23 08:00]

உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் விளங்குகிறது என்பதுதான் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் குற்றச்சாட்டு. இதை அந்த நாடு மறுத்து வந்தாலும், அதில் துளியும் உண்மை இல்லை என்பதை பயங்கரவாதிகள் அடிக்கடி நிரூபித்து வருகின்றனர். தற்போது காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளில் முக்கியமானதும், மும்பை தாக்குதலில் ஈடுபட்டதுமான ஜமாத்-உத்-தவா அமைப்பை சமீபத்தில் அந்த நாடு தடை செய்திருக்கிறது. இதையும் சேர்த்து இதுவரை 69 அமைப்புகள் தடை செய்யப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


"அமெரிக்காவுக்கு எதிராக ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயார்" - புதின்!
[Friday 2019-02-22 17:00]

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயார் என அந்நாட்டு அதிபர் புதின் கூறியுள்ளார். ரஷ்ய ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், அமெரிக்காவுடனான ஆயுத போட்டியை ரஷ்யா விரும்பவில்லை என்றார். இதே நேரத்தில் ரஷ்யாவை குறி வைத்து அணு ஆயுத ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்த அமெரிக்க முயல்வதாக அவர் கூறினார். ஏவுகணைகளை ஏவி மாஸ்கோவை தாக்கும் வகையில் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், பதிலடி கொடுக்க ரஷ்யாவும் தயார் என்றார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா