Untitled Document
March 29, 2024 [GMT]
'ஒவ்வொரு 2.5 நாட்களுக்கும் சராசரியாக பெண் அல்லது சிறுமி கொல்லப்படுகின்றனர்' - அதிர்ச்சி தகவல்!
[Thursday 2019-01-31 06:00]

2018 ஆம் ஆண்டில் இருந்து பெண் அல்லது சிறுமி ஒவ்வொரு 2.5 நாட்களுக்கும் சராசரியாக கொல்லப்படுவதாக ஃபெமிசைட் (femicide ) இன் தொடக்க அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய ஃபெமிசைட் ஆய்வகம், நீதி மற்றும் பொறுப்புக்கான முதல் வருடத்திற்கான


அமெரிக்காவில் வரலாறு காணாத கடுங்குளிர்!
[Thursday 2019-01-31 06:00]

துருவ சுழல் என்று அறியப்படும் வரலாற்றில் காணாத கடுங்குளிரை எதிர்கொள்ள இருப்பதால், அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க தொடங்கியுள்ளன. ஆர்ட்டிக் வானிலையின் விளைவால் அமெரிக்கா முழுவதும் குறைந்தது 6 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுங்குளிர் நிலவி வருவதால், அந்த சூழலை எதிகொள்ளும் வகையில், அமெரிக்காவில் 2000 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்து பனிக்கட்டியை அகற்றும் பணியாளர்கள் அண்டார்டிக்காவின் பகுதிகளை விட அதிக குளிராக சிகாகோ இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் வெளியே செல்ல வேண்டாமென சிகாகோ மேயர் வலியுறுத்தியுள்ளார்.


காற்று மாசு காரணமாக தாய்லாந்தில் பாடசாலைகள் மூடல்!
[Wednesday 2019-01-30 17:00]

தாய்லாந்து தலைநகரின் அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் இரு தினங்களுக்கு மூடுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. தலைநகரின் மிகப்பெரிய நகரான பங்கொக், வளி மாசினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வளி மாசிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையிலும், பெற்றோரினால் தனியார் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்துவதனை தவிர்க்கும் வகையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இலங்கை அகதிகளை கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு - பொலிஸார் அறிக்கை!
[Wednesday 2019-01-30 17:00]

இலங்கை அகதிகள் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாக தேடப்பட்டுவந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) கொலைக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனையை உறுதிசெய்வதற்கான விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.


பிரேசில் அணை உடைந்த விவகாரத்தில் பொறியியலாளர்கள் உள்ளிட்ட ஐவர் கைது!
[Wednesday 2019-01-30 17:00]

தென்கிழக்கு பிரேசிலில் அணை உடைப்பெடுத்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் இரும்பு மற்றும் தாது அகழ்வில் ஈடுபடும் வேல் (Vale) சுரங்க நிறுவனத்தின் இரு பொறியிலாளர்கள் மற்றும் மூன்று ஊழியர்கள் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டதாக அரச வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அணையின் பாதுகாப்பிற்கு சான்றளிக்க தவறிய குற்றச்சாட்டில் குறித்த இரு பொறியிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


"ரொறன்ரோவில் அதிக பனிப்பொழிவு நாளாக பதிவு!" - மக்களுக்கு கடும் குளிர் எச்சரிக்கை!
[Wednesday 2019-01-30 17:00]

ரொறன்ரோவில் கடுமையான குளிர் காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று குறித்த பகுதியில் பதிவாகிய பனிப்பொழிவு, நாட்டில் ஏற்பட்ட அதிக பனிப்பொழிவாக பதிவாகியுள்ளது. குளிரான காற்று மற்றும் கடும் வலுவான காற்றலைகள் இந்த வார ஆரம்பத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வரை -30 முதல் -35 வரை பதிவாகியுள்ள அதேவேளை அங்கு கடும் குளிர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் காலநிலை -9 C ஆகி இருந்த போதும் இரவு -30 ஆக பதிவாகியது. இதன் போது காலை 10 மணியளவில், நகரில் 33 செ.மீ பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டது.


பிரேசில் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு 84ஐ எட்டியது!
[Wednesday 2019-01-30 09:00]

தென்கிழக்கு பிரேசிலின் புருமடின்ஹோ பகுதியிலுள்ள அணை உடைப்பெடுத்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 276 பேர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்படடு வருகின்றன. உலகின் மிகப்பெரிய இரும்பு மற்றும் தாது சுரங்கத்தை நடத்திவரும் Vale என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த அணை கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை உடைப்பெடுத்தது.


ஆயுர்வேத மருந்தில் நஞ்சு இருப்பதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!
[Wednesday 2019-01-30 09:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவை தளமாக கொண்டு செயற்படும் ஏ1 மூலிகை ஆயுர்வேத கிளினிக் லிமிட்டட்டின் மருந்துப் பொருட்கள் உடல்நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கனேடிய சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த அந்த நிறுவனத்தால் வினியோகிக்கப்படும் மருந்துப் பொருட்கள் சிலவற்றில் ஈயம் மற்றும் பாதரசம் என்பன கலந்துள்ளது. மேலும் அதனை அடுத்து பிரிட்டிஷ் கொலம்பியாவின் Surrey-யில் உள்ள அந்த நிறுவனத்தில் இருந்தும், பிரம்டனில் உள்ள அதன் துணை நிறுவனம் ஒன்றில் இருந்தும் அதிகாரிகள் மருந்துப் பொருட்களையும், அதனை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களையும், உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும், சுகாதாரத் திணைக்களம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள எச்சரிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


மலேசியாவில் இலவச உணவு கூப்பன்களை பெறுவதற்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் பலி.
[Wednesday 2019-01-30 08:00]

இலவச உணவு கூப்பன்களை பெறுவதற்கு முண்டியடித்த கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் மலேசியாவில் இரண்டு முதிய பெண்கள் பலியாகியுள்ளனர். தலைநகர் கோலாலம்பூரில் புது மாவட்டத்தில் உட்புற சந்தை ஒன்றில் வழங்கயிருந்த மொத்தம் 200 இலவச கூப்பன்களுக்கு 1,000-க்கு மேற்பட்டோர் குழுமிருந்தனர். மக்களின் கூக்குரலை கேட்டதாகவும், மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து தள்ளியதை பார்த்ததாக பாதுகாப்பு பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 78 வயதான லா லொன் நாங் மற்றும் 85 வயதான அக் போக் இருவரும் இலவச கூப்பன்கள் பெறுவதற்கான தங்களின் முறை வந்தபோது மூச்சுத்திணறி மயங்கியதாக நம்பப்படுகிறது.


நெடுஞ்சாலை 407 பயன்பாடு ஆரம்பம்
[Tuesday 2019-01-29 17:00]

நெடுஞ்சாலை 407 இன் பயன்பாடு இந்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புதிய கட்டண முறைகள் நடைமுறைக்கு வரும் நிலையில் நெடுஞ்சாலை கட்டணம் 14 சதவீதம் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவை தாக்கவிருக்கும் கடும்பனி!
[Tuesday 2019-01-29 17:00]

அமெரிக்க மாநிலங்களான மினசோட்டா, விஸ்கொன்சின் மற்றும் தெற்கு டகோட்டா ஆகியவை சைபீரியாவில் நிலவுவதை போன்ற கடும் குளிர் காலநிலையை எதிர்கொள்ள நேரிடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளிலேயே அதிகமான குளிர் இந்த வாரம் அமெரிக்காவை வாட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேற்கு மினசோட்டாவில் -54C (-65F) குளிர் காற்று வீசுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் வட்டத்திலிருந்து வரும் ஒரு துருவ சுழல் வாரத்தின் நடுவில் அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களை தாக்கக்கூடுமென அமெரிக்க தேசிய வானிலை சேவை எதிர்வுகூறியுள்ளது.


"உட்கட்டுமானத் திட்டங்களில் மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லை" : பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு!
[Tuesday 2019-01-29 17:00]

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் உட்கட்டுமானத் திட்டங்களில் மாநிலங்கள் ஒத்துழைப்பினை வழங்குவதில்லை என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒட்டாவாவில் நேற்று (திங்கட்கிழமை) கனேடிய நகராட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். குறிப்பாக நகரங்களுக்கான முக்கிய முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்கும்போது சில மாநிலங்கள் சவால்களை ஏற்படுத்தி வருகின்றன என அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


ஹுவவேய் நிறுவனத்தின் மீது மோசடி வழக்குப் போட்ட அமெரிக்கா!
[Tuesday 2019-01-29 17:00]

சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவவேய் நிறுவனத்தின் மீதும், அதன் முதன்மை நிதி அலுவலர் மங் வான்ஜோ மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது அமெரிக்காவின் நீதித்துறை. உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஹுவவேய் மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் வங்கி முறைகேடு, நீதியைத் தடுப்பது, தொழிநுட்பத் திருட்டு ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கையால் சீனா- அமெரிக்கா இடையிலான பதற்றம் கூடுவதுடன், இந்நிறுவனத்தின் உலகளாவிய விரிவாக்கத் திட்டங்கள் தடைபடும். ஹுவவேய் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மங் வான்ஜோ-வும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். மங் இரான் மீதான தமது தடைகளை மீறியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதையடுத்து, அமெரிக்கா கேட்டுக்கொண்டதால், கடந்த மாதம் கனடா அவரைக் கைது செய்தது.


ஒட்டாவா நகரில் அதிக பனிப்பொழிவு எச்சரிக்கை!
[Tuesday 2019-01-29 17:00]

ஒட்டாவா நகரில் வழமையான காலநிலையை விட அதிகளவிலான பனி தாக்கம் இருக்கும் என கனடா சுற்றுசூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தவகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பனி தாக்கத்தின் வேகம் கூடும் என அந்நிலையம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒட்டாவாவில் 15 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு பதிவாகும் என்றும் இதன் காரணமாக வீதிகளில் பயணிக்கும் போது, வாகன சாரதிகள் மிக அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


மாகாண அரசின் நிதி, மலிவான வீட்டுவசதிக்கு உதவும் : பசுமைக் கட்சித் தலைவர் மைக் ஸ்க்ரீனர்!
[Tuesday 2019-01-29 08:00]

நகரங்களில் உள்ள தொழிற்துறை மற்றும் வணிக நிலங்களைச் சுத்தம் செய்வதற்காக மாகாண அரசின் நிதியளிக்கும் திட்டங்கள் மூலம் குறைந்த விலையிலான வீட்டுவசதிக்கு உதவும் என ஒன்ராரியோவின் பசுமைக் கட்சி தலைவர் மைக் ஸ்க்ரீனர் தெரிவித்துள்ளார். பழுப்பு நிலப்பகுதிகள் என்றும் அழைக்கப்படும் நிலங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை அல்லது குறுகிய பயன்பாட்டிலேயே காணப்படுகின்றது. இந்நிலையில் ஒன்ராரியோ முழுவதும் புறநகர் எல்லைகளுக்குள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பழுப்பு நிலப்பகுதித் தளங்கள் உள்ளன என மைக் ஸ்க்ரீனர் தெரிவித்துள்ளார்.


விமானியின் அழுத்தத்தால் ஏற்பட்ட விமான விபத்து!
[Tuesday 2019-01-29 08:00]

நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய விமானத்தின், விமானி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என அந்த விபத்து குறித்த கடைசி அறிக்கை தெரிவிக்கிறது. 71 பயணிகளை கொண்ட அந்த விமானம் வங்கதேசத்தில் உள்ள தாக்காவில் இருந்து புறப்பட்டு காத்மாண்டுவை சென்றடைந்தவுடன் தீப்பற்றி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுடனான மோசமான தொடர்பே விமான விபத்துக்கு காரணம் என்று முன்னதாக கூறப்பட்டது. ஆனால், விமானி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், விமானக் குழுவினருடன் கோபமாக பேசியதாகவும், விமானியறையில் புகைப்பிடித்ததாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி, மிகுந்த மன அழுத்தத்துடனும், வேதனையுடனும் இருந்தார்; அவருடன் விமானத்தில் பயணிக்காத பெண் ஊழியர் ஒருவர் அவரின் விமானத்தின் திறமை குறித்து கேள்வி எழுப்பியதே அதற்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.


சீனாவில் கனேடியர் கைது!
[Monday 2019-01-28 18:00]

சீனாவில் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, கனேடியர் ஒருவர் மக்காவ்வில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 61 வயதுடைய கனேடிய பிரஜை பெயரிடப்படாத ஒரு பொழுதுபோக்கு நிறுவனத்திடம் இருந்து, 375 மில்லியன் கனேடிய டொலரை ஏமாற்ற முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரேசிலில் மற்றுமொரு வெள்ள அபாய எச்சரிக்கை!- 24 ஆயிரம் பேர் வெளியேற்றம்.
[Monday 2019-01-28 18:00]

பிரேசிலில் உள்ள மற்றுமொரு சுரங்க அணை உடையும் அபாயத்தில் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணையை அண்மித்த பகுதியிலுள்ள சுமார் 24 ஆயிரம் பேரை அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு மீட்பு பணியாளர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளனர். அணை உடையும் பட்சத்தில் அதனால் ஏற்படக்கூடிய நிலைமை மிகவும் ஆபத்தாக அமையும் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதன் உண்மையான அபாய நிலை குறித்து கருத்து தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


"அத்துமீறி நுழைந்த ரஷ்யாவின் இரண்டு போர் விமானங்கள் விரட்டியடிப்பு" - கனடா ராணுவம் தகவல்!
[Monday 2019-01-28 18:00]

கனேடிய வான் பரப்பினுள் நுளைந்த ரஷ்யாவின் இரண்டு போர் விமானங்கள் தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வட அமெரிக்க கரையோர பகுதி வழியாக கனடாவின் எல்லைப் பரப்புக்குள் நுளைந்த ரஷ்யாவின் Tu-160


"வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவருக்கு பாதிப்பு வந்தால் சிறந்த பதிலடி தருவோம்": அமெரிக்கா எச்சரிக்கை!
[Monday 2019-01-28 18:00]

வெனிசுவேலா நாட்டில் தற்காலிக அதிபராக அறிவித்துக்கொண்ட எதிர்க் கட்சித் தலைவர் குவான் குவைடோவுக்கோ, அமெரிக்க தூதர்களுக்கோ ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்கா பதிலடி தரும் என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். அத்தகைய அச்சுறுத்தல் சட்டத்தின் ஆட்சி மீதான மோசமான தாக்குதலாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவும், வேறு 20 நாடுகளும் குவைடோ-வை இடைக்கால அதிபராக அங்கீகரித்துள்ள நிலையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடையே புதன்கிழமையும், சனிக்கிழமையும் அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் குவைடோ. அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டிவரும் நிலையில், வெனிசுவேலாவில் அரசியல் அரசியல் சிக்கல் கொதிநிலையை அடைந்துள்ளது.


"லிபரல் தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடிய மக்கள் அதிக வரி செலுத்த வேண்டி இருக்கும்"
[Monday 2019-01-28 18:00]

அடுத்த தேர்தலில் மீண்டும் லிபரல் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடியர்கள் அதிக வரி செலுத்த வேண்டி ஏற்படும் என கன்சர்வேடிவ் தலைவர் அண்ட்ரூ ஷெர்ர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது குறித்து விவாதிக்க கன்சர்வேடிவ் தலைவர் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், புதிய வேட்பாளர்களுடனும் மூன்று நாள் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார். இது குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்த அவர், லிபரல் அரசாங்கத்தின் குறைபாடுகள் தொடர்பில் பட்டியலைக் குறிப்பிட்டு, அதில் குறிப்பாக நிதி பற்றாக்குறையை சுட்டிக்காட்டினார்.


பெருவில் பனிப்புயல் தாக்கி 15 பேர் உயிரிழப்பு!
[Monday 2019-01-28 08:00]

பெரு நாட்டில் பனிப்புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெருவின் வடகிழக்கு பகுதியில் வீசிய பனிப்புயலில் விடுதியொன்று உடைந்து வீழ்ந்ததில் இந்த ஏற்பட்டுள்ளது. பெரு நாட்டின் வடகிழக்கு பகுதியில் பலத்த பனிப்புயல் வீசி வருகிறது. இந்நிலையில் அபுரிமக் பகுதிக்குட்பட்ட அபன்கே நகரிலுள்ள ஒரு பிரபல விடுதியில் இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர்.


உலகிலேயே சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 'கனடா' முதலிடம்.
[Monday 2019-01-28 08:00]

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பில், உலகின் சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்ட நாடாக கனடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிஏவி கன்சல்டிங் ஆகியவை இணைந்து உலகம் முழுவதுமுள்ள 80 நாடுகளை சேர்ந்த இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.


கனடாவின் சில பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை!
[Sunday 2019-01-27 19:00]

கனடாவின் சில முக்கிய பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


பிரேசில் வெள்ளப்பெருக்கு: பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் ஜனாதிபதி!
[Sunday 2019-01-27 19:00]

தென்கிழக்கு பிரேசிலில் அணை உடைந்து ஏற்பட்ட அனர்த்தத்தை, அந்நாட்டு ஜனாதிபதி ஜயர் பொல்சனாரோ நேரில் பார்வையிட்டுள்ளார். ஹெலிகொப்டர் மூலம் நேற்று (சனிக்கிழமை) அப்பகுதிக்குச் சென்ற அவர், நிலைமையை நேரில் பார்வையிட்டுள்ளார். புருமாடின்ஹோ நகருக்கு அருகில் இரும்பு மற்றும் தாது சுரங்கம் காணப்படும் பகுதியிலுள்ள அணை நேற்று முன்தினம் உடைப்பெடுத்தது. சம்பவத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதோடு, 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.


வடக்கு அல்பேர்டாவிற்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை!
[Sunday 2019-01-27 18:00]

கனடாவின் வடக்கு அல்பேர்டா பகுதியில் பனிப்புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை அல்லது இரவு இந்த பனிப்புயல் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுமார் 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் -23 செல்சியஸ் குளிர் காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


பிலிப்பைன்ஸ் தேவாலய குண்டுவெடிப்பில் 20 பேர் பலி!
[Sunday 2019-01-27 18:00]

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இரு வெடிகுண்டுகள் வெடித்ததில் 20 பேர் இறந்துள்ளதாகவும், பல டஜன் மக்கள் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய போராளிகள் தீவிரமாக உள்ள ஜோலோ தீவில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தின்போது முதல் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒரு கருவி ரிமோட் மூலம் வெடித்தது. இந்த பகுதியில் உள்ள பெரும்பான்மை முஸ்லீம் பகுதிக்கு அதிக சுயாட்சி தர கோரி நடந்த கருத்தறியும் வாக்களிப்புக்கு பிறகு இந்த தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. அபு சாயாஃப் குழு உள்ளிட்ட போராளி குழுக்களின் மையமாக ஜோலோ தீவு நீண்டகாலமாக இருந்து வருகிறது.


சீனாவிற்கான கனேடிய தூதுவர் ஜோன் மக்கலம் பதவிநீக்கம்!
[Sunday 2019-01-27 18:00]

சீனாவிற்கான கனேடிய தூதுவர் ஜோன் மக்கலமை, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அதிரடியாக பதவிநீக்கியுள்ளார். சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவியின் நிதியியல் தலைமையதிகாரி மெங் வான்சூ கனடாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர், அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மக்கலம் வெளியிட்ட முரண்பாடான கருத்துக்களை தொடர்ந்தே இந்த பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளது. எனினும், மக்கலமை பதவி விலகுமாறு கோரியதாகவும், அவர் பதவி விலகாத காரணத்தால் பதவிநீக்கம் செய்ததாகவும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, அவரும் அவரது குடும்பத்தாரும் நாட்டிற்கு வழங்கிய சேவைக்காக நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா