Untitled Document
January 16, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
ஜப்பானில் கடும் நிலநடுக்கம்!
[Sunday 2013-02-03 09:00]

ஜப்பானில் நேற்று கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் ஜப்பானின் ஒபிஹிரோ நகரை மையமாக வைத்து ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.9 என பதிவான இந்த பூகம்பம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. பூகம்பத்தை தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டது. ஒரு சில தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவுக்கு தக்க பதிலடி தருவோம் - வடகொரியா எச்சரிக்கை!
[Sunday 2013-02-03 09:00]

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டுக்கு தக்க பதிலடி தருவோம் என்று வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.இது தொடர்பாக வட கொரிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரிடம் கொரியன் மத்திய செய்தி நிறுவனம் சனிக்கிழமை கேட்டபோது, கருத்து கூற மறுத்து விட்டார். தென் கொரியா புதன்கிழமை ராக்கெட் ஒன்றை ஏவியது. இது, ராணுவம் தொடர்பானது அல்ல என்று அமெரிக்கா கருத்து தெரிவித்தது. அதேசமயம், கடந்த டிசம்பர் மாதம் வடகொரிய ஏவிய ராக்கெட், தடை செய்யப்பட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.


தினமும் 22 முன்னாள் அமெரிக்க இராணுவத்தினர் தற்கொலை!
[Sunday 2013-02-03 09:00]

அமெரிக்காவின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 22 பேர் தற்கொலை செய்து கொள்வதாக அமெரிக்காவின் முக்கிய அரசாங்க ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 18 பேர் இவ்வாறு இறக்கிறார்கள் என்று முன்னர் கூறப்பட்டதைவிட இது சற்று அதிகமாகும்.சுமார் 60 வயதைச் சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாய்களே இவ்வாறு அதிகமாக தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


2016 அதிபர் தேர்தலுக்கு இப்போதே தயாராகிறார் ஹிலாரி?
[Saturday 2013-02-02 17:00]

இப்போது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடைபெற்றுள்ள ஹிலரி க்ளிண்டன், வரும் 2016 ல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. 2008 ஆண்டு உட்கட்சி தேர்தலில் ஒபாமாவுக்கும், ஹிலரிக்கும் கடுமையான போட்டி நிலவியது. ஒபாமா அதிபர் ஆகிவிட்டார். ஹிலரியை தனது முக்கியமான அமைச்சர் ஆக்கி நட்புறவையும் வளர்த்துக் கொண்டார்.ஹிலரியின் பணிகளுக்கு பிரத்தியேகமாக நன்றி செலுத்துவதற்காக, அவருடன் தொலைக்காட்சியில் ஒன்றாக தோன்றி ஒரு மணி நேரம் பேட்டி கொடுத்தார்.


கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறும் என்று நாசாவுக்கு முன்னரே தெரியுமாம்!
[Saturday 2013-02-02 17:00]

பிப்ரவரி 1- ந் தேதி...2003-ம் ஆண்டு! அமெரிக்காவின் நாசா மையத்தில் அந்த 7 விஞ்ஞானிகளின் உறவுகளும் காத்திருக்கின்றனர்.. வெற்றிகரமான விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் உறவுகள் வந்துவிடுவர் எனக் காத்திருந்த அவர்களுக்கு மட்டுமே உலகமே அப்படி ஒரு கோர விபத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்...ஆனால் ஒரு உண்மை இப்போது வெளியாகியுள்ளது.. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்பதுதான் அது!


ட்விட்டருக்குள் ஹேக்கர்ஸ் ஊடுருவல் - இரண்டரை இலட்சம் பேரின் தகவல்கள் திருட்டு!
[Saturday 2013-02-02 17:00]

சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டருக்கு நேற்று பெரும் அதிர்ச்சியான நாளாக இருந்தது! ஹேக்கர்ஸ் கும்பல் ட்விட்டர் தளத்துக்குள் ஊடுருவி சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பற்றிய தகவல்களை திருடிச் சென்று அதிர வைத்திருக்கிறது.ட்விட்டர் சமூக வலைதளம் அவ்வப்போது ஹேக்கர்ஸின் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. கடந்த வாரம்கூட இப்படி ஹேக்கர்ஸ் கும்பல் தாக்குதல் நடத்த முனைந்தது கண்டுபிடிக்கப்பட்டு தற்காலிக தளம் மூடப்பட்டது.


திமிங்கலத்தின் வாந்தியால் இலட்சாதிபதியான இங்கிலாந்துக்காரர்!
[Saturday 2013-02-02 17:00]

இங்கிலாந்தில் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் "வாந்தி" முலம் ஒருவர் இலட்சாதிபதியாக உயர்ந்துள்ளார்.இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கென் வில் மென். வழக்கம் போல் தனது நாயுடன் கடற்கரையில் வாக்கிங் சென்றுகொண்டு இருத்தபோது, கரை ஓரம் ஒதுங்கி கிடந்த பாறை போன்ற ஒரு பொருளை அவரது நாய் மோப்பம் பிடித்தவாறே நின்றது.முதலில் கல் போன்று தோன்றியதால் அதை பொருட்படுத்தாமல் சிறிது தூரம் நடக்க தொடங்கினார். ஆனால் நாய் அதை விட்ட பாடில்லை. அதனால் அந்த பொருள் என்ன என்று பார்க்க நினைத்த கென் வில் மென், அதை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தார்.


கல்லூரி மாணவியை கற்பழி்த்த ஒலிம்பிக் வீரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!
[Saturday 2013-02-02 09:00]

ஜப்பானில் கல்லூரி மாணவியை கற்பழி்த்ததாக ஒலிம்பிக் பதக்க வீரருக்கு கோர்ட் 5 ஆண்டுசிறை தண்டனை விதித்தது. ஜப்பானின் ஜூடோ வீரர் மஸாத்தோ உசிஸ்ஷிபா (33), இவர் அந்நாட்டு ஜூடோ விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய பயிற்சியாளர்‌. இவர் 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும், 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார். இவர் குய்ஷூகூ பல்கலை.யில் ஜூடோ பயிற்சி பெற்று வந்த 19 வயது மாணவியை கடந்த 2011-ம் ஆண்டு, டோக்கியோவில் ஹோட்டல் ஒன்றில் மது குடிக்க வைத்து போதை மயக்கத்தில் இருந்த போது கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது.


ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா வலுப்பெற அமெரிக்கா உதவுகிறது! - விடைபெற முன் ஹிலாரி உரை
[Saturday 2013-02-02 09:00]

ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா வலுப்பெற அமெரிக்கா உதவி வருகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பொறுப்பில் இருந்து விடைபெற்றுள்ள ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை, அமெரிக்க வெளியுறவு அமைச்சராக, தனது கடைசி உரையை அவர் நிகழ்த்தினார். அதில் கூறியுள்ளது:


அமெரிக்கத் தூதரகம் மீது துருக்கியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்!
[Saturday 2013-02-02 09:00]

துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த தற்கொலைப்படை வெடிகுண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். தூதரகத்தின் நுழைவு வாயிலில் இருந்து பாதுகாப்பு சோதனைப் பகுதியில் இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்களில் ஒருவரும், வெடிகுண்டுடன் வந்த பயங்கரவாதியும் உயிரிழந்துவிட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தூதரகத்துக்கு எதிரே இரு உடல்கள் கிடந்ததாக அப்பகுதியில் உள்ள சிலர் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலராக பதவியேற்றார் ஜோன் கெரி - விடைபெற்றார் ஹிலாரி!
[Saturday 2013-02-02 09:00]

அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலராக ஜோன் கெரி பதவியேற்றுள்ளார். நேற்று பிற்பகல் நடந்த தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், அவர் உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். ஜோன் கெரி வரும் திங்கட்கிழமை தனது அலுவலக் கடமைகளைப் பொறுப்பேற்பார்.முன்னதாக, அமெரிக்காவின் இராஜாங்க செயலர் பதவியில் இருந்து ஹிலாரி கிளிண்டன் நேற்று நண்பகல் விடைபெற்றார்.


கார்கில் ஊடுருவலுக்குத் திட்டமிட்டவர் முஷாரப் தான் - பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி தகவல்!
[Friday 2013-02-01 20:00]

கார்கில் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அப்போதைய ராணுவ தளபதியுமான பர்வேஷ் முஷாரப் மற்றும் 4 தளபதிகளே திட்டம் தீட்டினர் என பாகிஸ்தான் ராணுவ ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சாகித் அசீஸ் தெரிவித்துள்ளார். கடந்த 1999ம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இமயமலையில் அமைந்துள்ள கார்கில் பனிச் சிகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாகிஸ்தான் போர் தொடுத்தது. ஆனால், இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால், பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.


அமெரிக்க செயற்கைக்கோளுடன் சென்ற ரஷ்ய ரொக்கட் பசுபிக் கடலில் வீழ்ந்தது!
[Friday 2013-02-01 20:00]

அமெரிக்காவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை தாங்கிச் சென்ற ரஷ்ய ரொக்கட் இன்று காலை பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது. ஹவாய் தீவுக்கு அப்பால் மிதக்கும் ரொக்கட் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ரொக்கட், புறப்பட்ட 40 விநாடிகளில் வெடித்துச் சிதறி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் இந்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.


நடுவானில் மயங்கி வீழ்ந்தார் விமானி - துணை விமானியின் சாமர்த்தியத்தினால் 120 பயணிகளும் தப்பினர்!
[Friday 2013-02-01 20:00]

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நேற்று இரவு 116 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் ஒரு விமானம் சியாட்டில் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அங்கிருந்த டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.


அமைதிக்கான நோபல் பரிசுக்கு மலாலாவின் பெயர் பரிந்துரை!
[Friday 2013-02-01 20:00]

தலிபான்களின் பெண்கல்வி மறுப்பு மற்றும் மதத் தீவிரவாததுக்கு எதிரான போராட்டங்களின் அடையாளமாக கருதப்படும் மலாலா யூசுப்சாய் 2013-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 15 வயதே ஆன பாகிஸ்தானின் பள்ளி மாணவியான மலாலா தனது சமூக வலைத்தளத்தில் பெண்கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி பள்ளிப் பேருந்தில் தலிபான்களால் சுடப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இராணுவ இரகசியங்களை ரஷ்யாவுக்கு விற்ற கனேடிய கடற்படை அதிகாரிக்கு என்ன தண்டனை? -பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தீர்ப்பு!
[Friday 2013-02-01 08:00]

ரஷ்யாவுக்கு இராணுவ இரகசியங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்த கனேடிய கடற்படை அதிகாரிக்குத் தண்டனை அறிவிக்கும் நீதிமன்ற அமர்வு நேற்று ஆரம்பமாகியது. சப் லெப்ரினன்ட் ஜெஃப்ரி போல் டெலீல் ஹலிஃபக்ஸ் நீதிமன்றம் ஒன்றில் நேற்று முன்னிலையானார். இவரது தண்டனையை தீர்மானிக்கும் அமர்வு இரண்டு நாட்கள் இடம்பெறும்.


நடுவானில் தூங்கிக் கொண்டிருந்த விமானியை அறையில் பூட்டிவிட்டுச் சென்றார் சக விமானி!
[Friday 2013-02-01 08:00]

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, தூங்கி கொண்டிருந்த பைலட்டை, விமானி அறையில் பூட்டி விட்டு சென்ற, சக பைலட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் போது, விமானிகள் தூங்குவது, சமீப காலமாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு, செப்டம்பரில், நெதர்லாந்தின், "டிரான்ஸ்சேவியா' விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. சக பைலட் ஒருவர் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார். இவருடன் இருந்த மற்றொரு பைலட், விமான அறையை பூட்டி கொண்டு, கழிப்பறைக்கு சென்று விட்டார்.


தீக்குளிக்கத் தூண்டியதாக திபெத் புத்த துறவிக்கு சீனாவில் மரணதண்டனை!
[Friday 2013-02-01 08:00]

சீனாவில் திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் துறவிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவரது உறவினருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு எதிராகப் போராட்டம் நடந்து வரும் திபெத்தில் இளைஞர்களை தீக்குளிக்க தூண்டியதான குற்றச்சாட்டில் இவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சிச்சுவான் மாகாண நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மொத்தம் 8 பேரை தீக்குளிக்கத் தூண்டியுள்ளனர். அதில் 3 பேர் இறந்துவிட்டனர். 5 பேர் காப்பாற்றப்பட்டனர்.


ஒபாமா பதவியேற்பில் கலைநிகழ்ச்சி நடத்திய சிறுமி சுட்டுக்கொலை!
[Friday 2013-02-01 08:00]

அமெரிக்கா சிகாகோ நகரில் உள்ள பூங்காவில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில், ஒபாமா பதவியேற்பு நிகழ்ச்சி கலைக்குழுவில் இடம்பெற்ற ஹாடியா பென்டில்டன் (15) உயிரிழந்தார். "பூங்காவில் குழுமியிருந்த 12 சிறுவர், சிறுமியர் மீது புதன்கிழமை பிற்பகல் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. குழந்தைகளை வேறொரு குழு எனத் தவறாக நினைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதிலிருந்து தப்பித்து ஓடிய போது, துப்பாக்கிக் குண்டு ஹாடியின் முதுகில் பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார்.


சிலியில் பயங்கர நிலநடுக்கம்!
[Thursday 2013-01-31 18:00]

சிலி நாட்டின் வடக்கு பகுதியில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. இதனால் அங்கு தொலைபேசி மற்றும் மின்சார சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குவாதர் துறைமுகத்தை சீனாவிடம் கையளிக்கிறது பாகிஸ்தான்!
[Thursday 2013-01-31 18:00]

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் அரேபியக்கடல் பகுதியில் முக்கியத்துறைமுகமாக விளங்குகிறது குவாதர் துறைமுகம். மிக ஆழமான பகுதியில் அமைந்துள்ள இந்த துறைமுகம் இதுவரை சிங்கப்பூர் நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்தது.தற்போது அதை சீனா வசம் ஒப்படைக்க பாகிஸ்தான் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அங்கு சீனா கம்பெனிகள் கட்டுமானப் பணிகளையும் செய்து வருகின்றன.


சிரியா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்!
[Thursday 2013-01-31 18:00]

இஸ்ரேஸ் போர் விமானங்கள் திடீரென சிரியாவில் நேற்று புகுந்து சரமாரியாக குண்டு வீசின. லெபனான் எல்லையில் உள்ள ஜாம்ரயா என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடந்தது. இங்கு சிரியா நாட்டின் ஆயுத கிடங்கு ஒன்று உள்ளது. இதில் ஏவுகணைகள் மற்றும் ரசயான ஆயுதங்கள் ஏராளமான வைக்கப்பட்டிருந்தன.மேலும் இங்கு ராணுவ ரசாயன ஆய்வு மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தது. இதில் ரசாயான ஆய்வு மையம் தரைமட்டமானது. ஏராளமான ஆயுதங்களும் அழிந்தன.


அவுஸ்ரேலிய செனட் தேர்தலில் ஜூலியன் அசஞ் போட்டி - விக்கிலீக்ஸ் நிறுவனர் அறிவிப்பு!
[Thursday 2013-01-31 18:00]

அவுஸ்ரேலிய செனட் சபை தேர்தலில் ஜூலியன் அசஞ் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசஞ் (41).இவர் விக்கிலீக்ஸ் இணையதளம் வாயிலாக அமெரிக்கா ‌மேற்கொண்ட போர் தொடர்பாக ஆயிரக்கணக்கான ராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தினார். சுவீடனில் இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தஞ்சமடைந்துள்ளார். அவரை நாடு கடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா வழியாக பாயும் பிரம்மபுத்ரா நதிக்குக் குறுக்கே மூன்று அணைகளை கட்டுகிறது சீனா!
[Thursday 2013-01-31 08:00]

சீனாவில் பாயும், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.சீனாவின், திபெத்தில் உள்ள கயிலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, அந்நாட்டில், யார்லுங் சாங்போ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.வங்கதேசத்தில் இந்த நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நுழையும் இந்த நதி, பிரம்மபுத்ரா என்ற பெயர் பெறுகிறது.சீனாவின் திபெத் பகுதியில் ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


மகளை இறக்குவதற்காக திசைமாறி விமானத்தைச் செலுத்திய விமானியால் பரபரப்பு!
[Thursday 2013-01-31 08:00]

பாகிஸ்தானில், விமானியின் மகளை தரையிறக்குவதற்காக, திசை மாறி சென்ற விமானத்தால், சர்ச்சை எழுந்துள்ளது.பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து, பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம், இஸ்லாமாபாத் நோக்கி புறப்பட்டது. இதில் பயணித்த அனைத்து பயணிகளும், விமானம் இஸ்லாமாபாத் நோக்கி செல்வதாக நினைத்திருந்தனர். ஆனால், இந்த விமானம் திடீரென லாகூர் நோக்கி சென்று தரையிறங்கியது. "இஸ்லாமாபாத் புறப்பட்ட விமானம் ஏன் லாகூரில் தரையிறங்கியது' என, பயணிகள் கேட்ட போது, எரிபொருள் நிரப்ப தரையிறங்கியதாக, ஒரு தரப்பு ஊழியர்கள் தெரிவித்தனர்.


பர்கரில் குதிரை இறைச்சி - விநியோகஸ்தருக்கு தடை!
[Thursday 2013-01-31 08:00]

அயர்லாந்தில், பர்கர் உணவில் குதிரை கறி வைத்து விற்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, குதிரை கறி வினியோகஸ்தருக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.அயர்லாந்தில், மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்களில், பர்கரில், குதிரைக் கறி வைத்து விற்கப்படுவதாக, புகார் எழுந்தது. இதுகுறித்து, வாடிக்கையாளர்கள், அரசிடம் புகார் தெரிவித்தனர்.அயர்லாந்து, விவசாயத் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், அங்குள்ள, பர்கர் தயாரிப்பு மையங்களில், கால்நடை மருத்துவர்கள், சோதனை நடத்தினர்.பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், "டெஸ்கோ' நிறுவனம் தான், குதிரை கறி அடங்கிய, பர்கர்களை விற்பனைக்கு அனுப்பி வந்தது.


அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ஜான் கெர்ரி - செனட் ஒப்புதல்!
[Thursday 2013-01-31 08:00]

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ஜான் கெர்ரி நியமனம் செய்யப்பட்டதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற செனட் (மேலவை) ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக செனட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜான் கெர்ரிக்கு ஆதரவாக 94 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் பதிவாகின. இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஹிலாரி கிளிண்டனின் பதவிக்காலம் வரும் வெள்ளிக்கிழையுடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஜான் கெர்ரி வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.


சிரிய ராணுவத்தினர் சுட்டு கொன்று ஆற்றில் வீசியுள்ள 68 சடலங்கள்!
[Wednesday 2013-01-30 20:00]

சிரியாவில் ஆற்றில் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் ஏராளமான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம், பரபரப்பையு‌ம் ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்த 22 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 60 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர் சண்டையின் காரணமாக தலைநகர் டமாஸ்கஸில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதற்கிடையே அலெப்போ நகரில் உள்ள கியூவிக் நதியில் குண்டுகளால் துளைக்கப்பட்ட ஏராளமான சடலங்கள் மிதந்து வருகின்றன.

Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா