Untitled Document
April 24, 2024 [GMT]
அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு முடிவு கிடைக்குமா?- ட்ரம்ப் விசேட உரை!
[Tuesday 2019-02-05 19:00]

பல தசாப்தங்களாக நீடிக்கும் அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு முடிவுகட்டுவதற்கான அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைக்கவுள்ளார். அரசாங்க முடக்கம் காணரமாக பிளவடைந்து காணப்படும் அமெரிக்க காங்கிரஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றவுள்ளார். இதன்போது, நாட்டின் அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒன்றிணைந்து தீர்வு காணலாம் என்ற செய்தியை ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைக்கவுள்ளார்.


அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம் : இருவர் உயிரிழப்பு!
[Tuesday 2019-02-05 19:00]

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடி வருகின்ற நிலையில், சடலங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் இருவரும் 20 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளில் சிக்கி 21 மற்றும் 23 வயதுடைய இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே இன்று குறித்த இருவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


"வெனிசுவேலா அகதிகளுக்கு 53 மில்லியன் நிதி உதவி" - பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ!
[Tuesday 2019-02-05 19:00]

வெனிசுவேலாவில் அதிகரித்துவரும் அகதிகள் நெருக்கடியை சமாளிப்பதற்கு 53 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஒட்டாவாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றின் போது பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இதனை அறிவித்துள்ளார். அதிகரித்துவரும் கடுமையான உணவு பற்றாக்குறை காரணமாக அண்மைக் காலங்களில் அண்டை நாடுகளில் குடியேறிய மக்களுக்கு உதவும் வகையிலேயே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


ஹாங்காங்கில் உருளைக்கிழங்குகளுடன் வந்த முதலாம் உலகப்போர் கையெறி வெடிகுண்டு!
[Tuesday 2019-02-05 09:00]

ஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள சாய் குங் மாவட்டத்தில் தின்பண்டங்கள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு தொழிலாளியின் கையில் உருளைக்கிழங்கை போல் இருந்த மர்ம பொருள் ஒன்று சிக்கியது. அதை உற்று நோக்கியபோது அது கையெறி வெடிகுண்டு என தெரிந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.


அல்பேர்ட்டா பகுதிக்கு கடும் குளிர் எச்சரிக்கை!
[Tuesday 2019-02-05 08:00]

அல்பேர்ட்டாவுக்கு கடுமையான குளிர் எச்சரிக்கையை கனடாவின் சுற்றுசூழல் திணைக்களம் விடுத்துள்ளது. தென் பகுதியை நோக்கி தற்போது குளிர் வானிலை கடந்து செல்லும் நிலையில், இன்று காலை அல்பேர்ட்டாவில் -40C இல் குளிர்காற்று வீசும் என கனடா சுற்றுசூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்தோடு கல்கரியில் இன்று -29 C, செவ்வாய்க்கிழமை -20 C ஆகவும், புதன்கிழமை -15 ஆகவும் காலநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


"அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்" - வீடு இல்லாதவர்களை உணவு மற்றும் உடைகள் வழங்கிய பெண்!
[Tuesday 2019-02-05 08:00]

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவுகிறது. குறிப்பாக இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் குறைவாக வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வீடுகள் இல்லாமல் பொதுஇடங்களில் வசித்து வரும் மக்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. கடும் குளிர்காற்றை தாங்கிக்கொண்டு பனித்துகள்களின் மீது படுத்து உறங்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.


கனேடிய பேராசிரியர் உயிரிழந்த வழக்கில் கொலம்பியாவில் ஒருவர் அதிரடியாக கைது!
[Monday 2019-02-04 17:00]

கொலம்பியாவில் கனேடிய பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக 57 வயதான றமாஸான் ஜென்சே என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலம்பியாவில் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சமயம், மெடிலின் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி இரவு, தனது தங்குவிடுதிக்கு திரும்பாத நிலையில் காணமல் போயிருந்தார்.


"தாய்லாந்தில் நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு" - அச்சத்தில் மக்கள்!
[Monday 2019-02-04 17:00]

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் பரவி வரும் நச்சுக்காற்றினால் மக்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாங்கொக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த அபாயகரமான நச்சுத்துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


தேவாலயத்திற்கு ஆயுதத்துடன் சென்ற கிம் ஜொங் உன்.
[Monday 2019-02-04 17:00]

உலகின் முக்கிய அரசத்தலைவர்களை போன்ற தோற்றமுடையவர்கள் அவ்வப்போது மக்கள் மத்தியில் தோன்றி பெரும் பரபரப்பினை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறானதொரு விநோத சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டார்ட்டேயின் (Rodrigo Duterte) தோற்றத்தைக் கொண்ட ஒருவர் ஹாங் கொங் தேவாலயத்திற்குள் அண்மையில் நுழைந்து பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார். ஹொங்கொங்கில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் மக்களிடையே பிரபலமான குறித்த தேவாலயத்திற்குள் அவர் நுழைந்ததும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.


கலிடன் பகுதியில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை!
[Monday 2019-02-04 17:00]

கலிடன் பகுதியில் உள்ள வீடுடொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 54 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது கலீடான் கிராமத்திற்கு அருகே மேப்பிள் கிரோவ் வீதி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு சென்ற பீல் பிராந்திய முதலுதவியாளர்கள், சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினார்.


கனேடிய குடியுரிமைக்காக பெறுவதற்காக ஆங்கில மொழியை கற்று வரும் சிரிய அகதிகள்!
[Monday 2019-02-04 08:00]

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கனடாவின்


மத்திய கணக்காளர் நாயகம் மிச்செல் பேர்குசன் காலமானார்!
[Monday 2019-02-04 08:00]

கனடாவின் மத்திய கணக்காளர் நாயகம் மிச்செல் பேர்குசன் தனது 60 ஆவது வயதில் காலமானார். புற்றுநோயால் அவதியுற்ற அவர் நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் நியூ பிரவுன்ஸ்விக்கின் கணக்காளர் நாயகமாக கடமையாற்றி வந்த அவர், கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து மத்திய கணக்காளார் நாயகமாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து புற்றுநோக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், துர்ரதிஸ்டவசமாக சிகிக்சைகள் பலனளிக்காத நிலையில், ஒட்டாவாவில் அவர்களது குடும்பத்தோர் மத்தியில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்!
[Monday 2019-02-04 08:00]

ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை கொட்டுவதால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனால் குயின்ஸ்லேண்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள டவுன்ஸ்வில் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. வீடுகள் மற்றும் தெருக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கி தவித்தன.


சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடியர்களில் ஒருவரை சந்திக்க மீண்டும் அனுமதி!
[Sunday 2019-02-03 17:00]

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடாவைச் சேர்ந்த இருவரில், ஒருவரை சந்திப்பதற்கு கனடா தூதரக அதிகாரிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் கருதி இது தொடர்பாக மேலதிக தகவல்களை வௌியிட முடியாது என்று சர்வதேச விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் (சனிக்கிழமை) மைக்கல் கொவ்ரிக் என்பவரை சந்தித்த அதிகாரிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் வௌியிடப்படவில்லை.


'அமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் கைது' - இந்திய அரசு கண்டனம்!
[Sunday 2019-02-03 17:00]

அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் ஒன்றில் பதிவு செய்த 129 மாணவர்களை கைது செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. போலி குடியேறிகளை கண்டறியும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ரகசிய அதிகாரிகளால் இந்த பல்கலைக்கழகம் நடத்தப்படுகிறது. இந்த ஃபர்மிங்டன் பல்கலைக்கழகம் மிஷிகன் மாநிலத்தில் இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தவர்கள் இது சட்ட விரோதமுறை என்பதை தெரிந்தே பதிவு செய்ததாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்திய மாணவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த கைது குறித்து மேலதிக தகவல்களை, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் இந்திய அரசு கோரியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களை பார்க்க இந்திய தூதருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. "மாணவர்களின் மரியாதை குறித்தும் நலன் குறித்தும் கவலைப்படுவதாகவும், கைது செய்யப்பட்ட மாணவர்களை இந்திய தூதர் சந்திக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்" என்றும் இந்திய வெளியுறவுத்துறையால் வலியுறுத்தப்பட்டுள்ளது.


2019 ஆம் ஆண்டுக்கான "குளோபல் சிட்டிசன் விருது" மனித உரிமைகள் பாதுகாவலருக்கு வழங்கப்பட்டது!
[Sunday 2019-02-03 17:00]


எகிப்தில் 50 இற்கும் மேற்பட்ட மம்மிகள் (பதப்படுத்தப்பட்ட உடல்கள்) கண்டுபிடிப்பு!
[Sunday 2019-02-03 17:00]

எகிப்தின் டூல்மிக் (305-30 கிமு) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 மம்மிகளே அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்களால் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்து தலைநகரான கெய்ரோவின் தெற்கே உள்ள மின்யா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள டூனா எல்-ஜெபல் என்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12 குழந்தைகளின் உடல்களும் காணப்படுகின்றமைக் கண்டறியப்பட்டுள்ளது.


குளிரால் வாடும் மக்களுக்கு அடைக்கலம் வழங்கும் நட்புறவு நிலையம்!
[Sunday 2019-02-03 07:00]

சட்பெர்ரியில் கடுமையான வெப்பநிலை நிலவுவதால், பெரும்பாலான மக்கள் இரவு வேளைகளில் டிம்மின்ஸ் Native Friendship நிலையத்தை நாடுவதாக தெரியவந்துள்ளது. அத்தோடு, இங்கு தற்போது உடற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளதால், தினந்தோறும் இரவு வேளையில் 70இற்கும் மேற்பட்டோர் இங்கு பயிற்சிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விசா விதிமீறல் காரணமாக இலங்கையில் 73 இந்தியர்கள் கைது!
[Sunday 2019-02-03 07:00]

இலங்கையில் உரிய விசா இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மீது அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வகையில், தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மட்டுகாமா பகுதியில் ஒரு தொழிற்சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 49 இந்தியர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.


அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது ரஷ்யா!
[Sunday 2019-02-03 07:00]

அமெரிக்காவுடன் 1987 ஆம் ஆண்டில் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையை முறித்துக்கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா (முன்னாள் சோவியத் யூனியன்)


அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்ய சீனா அனுமதி!
[Saturday 2019-02-02 17:00]

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் அமெரிக்கா-சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை 2 நாட்களாக நடந்தது. இதில் அமெரிக்காவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும், அறிவுசார் சொத்துகளை அமெரிக்காவுடன் சேர்ந்து பாதுகாக்கவும் சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக பீஜிங்கில் உள்ள செய்தி ஊடக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் அறிவுசார் சொத்துகள் மற்றும் தொழில்நுட்பத்தை பாதுகாக்க அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீனா அமெரிக்காவில் இருந்து விவசாய பொருட்கள், அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், ஆற்றல் மிகுந்த பொருட்களை இறக்குமதி செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறது என்று அந்த செய்தி ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.


"கொதிக்கும் நீரும் நொடிப்பொழுதில் உறைகிறது" - அமெரிக்காவில் நிலவும் கடுங்குளிர்!
[Saturday 2019-02-02 17:00]

அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுங்குளிரினால் சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பனியின் தாக்கத்தால் பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உயிரை உறையவைக்கும் கடுங்குளிருக்கு பலர் பலியாகியுள்ளனர்.


அவுஸ்ரேலிய குயின்ஸ்லாந்தில் வரலாறு காணாத வௌ்ளப் பெருக்கு!
[Saturday 2019-02-02 17:00]

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் கிழக்கு அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வரலாறு காணாத அளவில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த பிராந்தியத்தில் எதிர்வரும் நாட்களிலும் கடும் மழை பெய்யும் என்று அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) எதிர்வு கூறியுள்ளனர். கரையோர நகரமான டவுன்ஸ்வில்லேயில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் வேறிடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிராந்தியத்தில் பருவப் பெயர்ச்சி மழை கடும் தாக்கத்தை ஏற்படுத்துள்ளதாக அவுஸ்ரேலிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


ஐ.எஸ். அமைப்புடன் இணைய முயன்ற கனேடியர் சரண்!
[Saturday 2019-02-02 17:00]

ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதக் குழுவுடன் இணைந்து கொள்வதற்காக நான்கு ஆண்டுகளின் முன்னர் கனடாவிலிருந்து புறப்பட்டு சிரியாவுக்குச் சென்றதாக, கனேடியர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மிசிசாகாவைச் சேர்ந்த 29 வயதான பமீர் ஹக்கீம்ஸாதா எனப்படும் குறித்த நபரே இவ்வாறு, நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி பமீர் ஹக்கீம்ஸாதாவிற்க்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. பமீர் ஹக்கீம்ஸாதா நீதிமன்றத்தில் அளிக்க வாக்கு மூலத்தின் படி, அவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி, ரொறன்ரோவில் இருந்து புறப்பட்டு இஸ்தான்புல் சென்று, அங்கிருந்து ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்காக சிரியா செல்ல முயன்றதாக நீதிமன்றில் கூறியுள்ளார்.


"டிரம்ப் ஆதரவு தொப்பி அணிந்தவருக்கு உணவில்லை" என்று அறிவித்த ஹோட்டல் முதலாளி!
[Saturday 2019-02-02 09:00]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக "அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்" என்ற வாசகத்துடன், பேஸ்பால் விளையாட்டு தொப்பி அணிந்துள்ள யாருக்கும் உணவு பரிமாற வேண்டாம் என்று அறிவித்த கலிபோர்னிய ஹோட்டல் முதலாளி ஒருவர், தனது முடிவை மாற்றியுள்ளார். சுவஸ்த்திகா அல்லது இனவெறி கொள்கையுடைய 'கு குலக்ஸ் கிளான்' குழுவை போல, கோபம், வெறுப்பு மற்றும் வன்முறையின் அடையாளங்களாகவும் இந்த தொப்பிகள் மாறியுள்ளதாக ஹோட்டல் முதலாளி கென்ஜி லோபஸ்-அல்ட் முன்னதாக தெரிவித்தார்.


அமெரிக்காவை வாட்டும் உறை பனி
[Saturday 2019-02-02 08:00]

துருவ சுழற்சி என்று அழைக்கப்படும் கடுமையான பனிப் பொழிவும், அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் மறை 17 பாகை செல்ஷியஸ் தட்ப வெப்ப நிலை நிலவுவதன் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். லோவாவில் 18 வயது மாணவர் ஒருவர் கல்லூரிக் கட்டிடத்துக்கு வெளியே உயிரிழந்து கிடந்தமை அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கல்லூரியின் கட்டிடம் ஒன்றுக்கு கீழே கடந்த புதன்கிழமை அதிகாலை வீழ்ந்து கிடந்த குறித்த மாணவர், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்தநிலையில், கடுங்குளிர், மற்றும் பனிச்சூழல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை நிலவும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.


1000 நோயாளிகள் சிகிச்சைகளுக்காக காத்துக்கிடக்கிக்கும் அவலம்- தகவல்!
[Saturday 2019-02-02 08:00]

கடந்த ஆண்டின் சராசரி நாட்களில், ஒன்ராறியோவின் வைத்தியசாலைளில் உள்ள பொது இடங்களில் சுமார் ஆயிரம் பேர் வரையில் சிகிச்சைகளுக்காகவும், மருத்துவமனை படுக்கைகளுக்காகவும் காத்து இருப்பதாக முதல்வர் டக் ஃபோர்ட்டின் உயர்மட்ட சுகாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். அதில், பெருமளவு நோயாளர்கள் தமது சிகிச்சைகளுக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும், அவர்களுக்கு தேவையான காலத்தில் தமக்கான அடிப்படை சுகாதார உதவிகளை அவர்களால் எப்போதும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படடதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


"அமெரிக்காவை தாக்கும் கொடும் பனி" - எட்டு பேர் பலி.
[Friday 2019-02-01 18:00]

துருவ சுழற்சி என்று கூறப்படும் கொடும் பனிப் பொழிவும், அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் மைனஸ் 17 டிகிரி செல்ஷியஸ் தட்ப நிலையும் நிலவும் நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். லோவாவில் 18 வயது மாணவர் ஒருவர் கல்லூரிக் கட்டடத்துக்கு வெளியே இறந்து கிடந்தார். அந்த எட்டுபேரில் இவரும் ஒருவர். கடுங்குளிர், மற்றும் பனிச்சூழல் வியாழக்கிழமையும் நிலவும். 250 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த துருவச் சுழல் என்னும் கடுங்குளிர் பருவநிலையை அனுபவிக்கின்றனர். ஆனால் புளோரிடா போன்ற தெற்கு மாகாணங்கள் இந்த இந்தப் பேரிடரில் இருந்து தப்பின.

Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா