Untitled Document
April 19, 2024 [GMT]
புதிய மன்னரை தேர்ந்தெடுப்பதில் மலேசியா தீவிரம்!
[Thursday 2019-01-24 08:00]

தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே முன்னெப்போதும் இல்லாத வகையில் திடீரென மலேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் பதவி விலகியதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய மன்னரை தேர்ந்தெடுக்க அரச குடும்பத்தினர் வாக்களிக்க உள்ளனர். பொதுவாக ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை யாங் டி- பெர்துவன் அகாங் என்று அழைக்கப்படும் ஒரு புதிய ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் மன்னராக பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில், மலேசிய வரலாற்றில் முதல்முறையாக மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் இந்த ஜனவரி மாதத்தின் துவக்கத்தில் திடீரென பதவி விலகினார். மலேசியாவில் அரசியலமைப்பு முடியாட்சி அமைப்பு அமலில் உள்ளது. இருப்பினும், ஆட்சியாளர்கள் தினசரி நிர்வாகத்தில் பங்கேற்பதில்லை. வரும் ஜனவரி 31 ஆம் தேதி ஒரு புதிய மன்னர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பனி நீர்வீழ்ச்சியாக காட்சி தரும் நயாகரா!
[Wednesday 2019-01-23 17:00]

வட அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சி தற்போது உறைந்து பனி நீர்வீழ்ச்சியாக காட்சியளிக்கின்றது. வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியிலுள்ள புகழ்பெற்ற பேரருவி நயாகராவாகும். இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயற்கை அழகினை காண ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இது சுமார் 56 கி.மீ நீளம் கொண்டது.


2019-ம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில் கனடாவுக்கு 7-வது இடம்.
[Wednesday 2019-01-23 17:00]

2019ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீசா இன்றி எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் இந்த புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜப்பான் கடவுச்சீட்டு பெற்றுள்ளது. ஜப்பான் கட்வுச்சீட்டினை பயன்படுத்தி 190 நாடுகளுக்கு வீசா இன்றி சென்றுவர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி 189 நாடுகளுக்குச் சென்று வர முடியும்.


சீன தேசிய கீதத்தை அவமதித்தால் சிறைத்தண்டனை?
[Wednesday 2019-01-23 17:00]

சீனாவின் தேசிய கீதத்தை அவமதிக்கும் நபருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஹாங் கொங் அரசாங்கத்தினால் இன்று(புதன்கிழமை) இந்த சர்ச்சைக்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. சீனா மீது தேசப்பற்றை மேலோங்கச் செய்யும் வகையிலேயே இந்த சர்ச்சைக்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


"கனடாவின் புதிய உணவு வழிகாட்டி" - சுகாதார நிபுணர்கள் வரவேற்பு!
[Wednesday 2019-01-23 17:00]

கனேடிய சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய உணவு வழிகாட்டியை, சுகாதார நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். இந்த புதிய வழிபாட்டி, கடந்த 2007ஆம் ஆண்டின் பதிப்பைவிட மிக தெளிவான முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கனடாவின் 2019ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட உணவு வழிகாட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது.


அமெரிக்க அதிபர் வேட்பாளராக முயலும் கமலா ஹாரிஸ்!
[Wednesday 2019-01-23 17:00]

2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் குதிப்பதாக அறிவித்துள்ளார் சென்னையைப் பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ். 2016ல் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, அம் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக முன்னதாக பதவி வகித்தவர். 54 வயதாகும் கமலா, அதிபர் டொனால்டு டிரம்பை தீவிரமாக விமர்சிப்பவர். ஜனநாயகக் கட்சிக்குள் வளர்ந்துவரும் நட்சத்திரமாக கூறப்படுகிறவர். ஏபிசி தொலைக்காட்சியின் குட்மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது தம் நாட்டை நேசிப்பதாகக் கூறினார். வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு போட்டியிடும் எட்டாவது நபர் கமலா. ஜனநாயக கட்சி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும். "அமெரிக்க விழுமியங்களை பாதுகாப்பதற்காக குரல் உயர்த்தும் உங்களைப் போன்ற மில்லியன் கணக்கானவர்களைத்தான் நாட்டின் எதிர்காலம் நம்பியிருக்கிறது. அதற்காகத்தான் அமெரிக்க அதிபர் பதவியை நோக்கிச் செல்லுகிறேன்" என்று டிவிட்டரில் வெளியிட்ட ஒரு காணொளியில் தெரிவித்துள்ளார்.


திருடப்பட்ட காரிலிருந்த குழந்தையை பத்திரமாக மீட்ட பொலிஸார்!
[Wednesday 2019-01-23 04:00]

கனடாவின் கல்கரி பகுதியில் திருடப்பட்ட காரிலிருந்த குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனடாவின் கல்கரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று உள்ளுார் நேரப்படி இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை 2.25 மணியளவில் திருடப்பட்டிருந்தது. திருடப்பட்ட காரில் ஆறு மாத குழந்தை ஒன்றும் காணப்பட்ட நிலையில், விரைந்து செய்யப்பட்ட பொலிஸார் சில மணித்தியாலங்களிலேயே திருடப்பட்ட காரை கண்டுபிடித்தனர்.


பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அமெரிக்க பாடகர் கைது!
[Wednesday 2019-01-23 04:00]

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் கிறிஸ் பிரவுண், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 29 வயதான கிறிஸ், பிரான்ஸில் பாரிஸ் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்- உடன் அவரது நண்பர் மற்றும் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டுவிட்டு, விடுதியில் தங்கியிருந்தபோது துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக 24 வயதான யுவதியொருவர் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.


வெனிசுவேலா ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் கைது!
[Tuesday 2019-01-22 18:00]

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவரிசையிலேயே இந்த இராணுவத்தினரின் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரோவுக்கு எதிராக, அந்நாட்டு இராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளமையும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள், மதுரோவுக்கு எதிரான தமது போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிவருகின்றனர்.


கைது செய்யப்பட்ட கனேடியர்களை விடுதலை செய்யுமாறு கோரி சீன ஜனாதிபதிக்கு கடிதம்!
[Tuesday 2019-01-22 18:00]

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களையும் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சீன ஜனாதிபதி சி சின்பிங்கிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட இராஜதந்திரிகளினால் சீன ஜனாதிபதி சி சின்பிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதம் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


மெக்ஸிக்கோ எரிபொருள் குழாய் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு!
[Tuesday 2019-01-22 17:00]

மத்திய மெக்ஸிக்கோவில் நிலத்திற்கு அடியில் எரிபொருளை கொண்டுசெல்லும் குழாய்கள் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91ஆக அதிகரித்துள்ளது. குழாய்களின் ஊடாக செல்லும் எரிபொருளை சிலர் திருடி கொள்கலன்களில் நிரப்புவதற்கு முயற்சித்தபோது, கடந்த வெள்ளிக்கிழமை இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. மெக்சிக்கோவில் குழாய் மூலம் எரிபொருள் எடுத்துச் செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாநிலத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய எரிபொருளை பொதுமக்கள் சேகரித்துக்கொண்டிருந்தனர்.


கனடாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பாடசாலைப் பேருந்து சேவைகள் ரத்து!
[Tuesday 2019-01-22 17:00]

கனடாவில் கடும் பனிபொழிவு நிலவிவரும் நிலையில் சில முக்கிய பகுதிகளில் பாடசாலைப் பேருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை அங்கு வெப்பநிலை -14


சீன மக்கள் தமிழ் கற்றுக்கொள்வதின் காரணம் என்ன?
[Tuesday 2019-01-22 17:00]

கடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவற்றை பார்க்கும் இணைய பயன்பாட்டாளர்களுக்கு ஆச்சர்யம் மட்டுமின்றி, அவர்களது பின்னணி குறித்த பல்வேறு கேள்விகளும் எழுகின்றன. எனவே, இந்த காணொளி/ புகைப்படங்களை வெளியிட்டு வரும் சீனாவின் யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் துறையை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியது. சீனாவிலுள்ள யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் வங்காளம், நேபாளி, சிங்களம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு 2017ஆம் ஆண்டு தமிழ் துறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, கடந்தாண்டு ஆண்டு மார்ச் முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


போப் ஆண்டவருடன் பிரார்த்தனை செய்ய புதிய செயலி அறிமுகம்!
[Tuesday 2019-01-22 08:00]

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் உலக அமைதி வேண்டியும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் நாட்டின் மக்களுக்காகவும் அவ்வப்போது பொது பிரார்த்தனை நடத்துவார். இது போன்ற நிகழ்வுகளின்போது போப் ஆண்டவருடன் இணைந்து தாங்களும் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என்பது கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் விருப்பமாக உள்ளது. அதே சமயம் நடைமுறையில் இது சாத்தியமற்றதாக இருந்தது. ஆனால் தொழில் நுட்ப உதவியின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் தற்போது சாத்தியமாகி உள்ளது.


கனடாவில் கடும் குளிர் : வெப்பநிலை '-21
[Tuesday 2019-01-22 08:00]

கனடாவில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் அங்கு வெப்ப நிலை -21


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்.
[Tuesday 2019-01-22 08:00]

ஜனநாயக கட்சியின் செனட்டர் கமலா ஹாரிஸ், 2020 அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் தான் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் உள்பட இதுவரை எட்டு பேர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கின்றனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் செனட்டராக கடந்த 2016ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் பதவியையும் கமலா வகித்துள்ளார்.


பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாமல் செய்யுமாறு போராட்டம்!
[Monday 2019-01-21 18:00]

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்குமாறு கோரி நேதன் பிலிப் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு வொஷிங்டனில் நடைபெற்ற இந்தப் பேரணியின் மூன்றாவது ஆண்டு ஊர்வலமாகவே ரொறண்டோவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


சீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி!
[Monday 2019-01-21 17:00]

தற்போது நிலவி வரும் குளிர்கால நிலை, வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் அமைந்துள்ள ஷான்டாங் மலைப் பள்ளத்தாக்கு பகுதியில் சில பிரமிப்பூட்டும் காட்சிகளை உருவாக்கியுள்ளது. இயற்கை அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக பனி கொட்டித் தீர்த்து நீர்வீழ்ச்சி, பனி வீழ்ச்சியாக மாறி காணப்படுகிறது. வெப்பநிலையானது படிப்படியாக வீழ்ச்சியடைந்ததால், மணற்பாறைகளிலிருந்து வெளியேறும் நீர்க்கசிவு அதிர்ச்சியூட்டும் பனி அடுக்கை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவின் ஹுவாவி நிறுவனத்தை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தடை செய்ய வேண்டும்.
[Monday 2019-01-21 17:00]

ஹுவாவி நிறுவனத்தை தடை செய்வதன் மூலம் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது தெளிவான தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது வெளிநாட்டு விவகாரங்களுக்கான உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சி விமர்சகர் எரின் ஓ


200, 500, 2000 ரூபாய் மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளம் நாட்டின் மத்திய வங்கி தடை!
[Monday 2019-01-21 17:00]

நேபாளம் நாட்டில் உள்நாட்டு பணத்துக்கு நிகராக இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் இதை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்தது. 100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு தடை விதிக்க நேபாளம் மந்திரிசபை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானித்தது. இந்த முடிவுக்கு உள்நாட்டில் வாழும் இந்தியர்களும், இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்பவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் பேர் நேபாளத்துக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். 5 முதல் 8 நாட்கள்வரை அங்கு தங்கியிருக்கும் அவர்கள் சராசரியாக 11 ஆயிரம் ரூபாய்வரை அங்கு செலவிடுகின்றனர்.


நீண்ட நேரமாக ஓடுபாதையில் சிக்கிய விமானம்!
[Monday 2019-01-21 17:00]

கனடாவில் சுமார் 16 மணித்தியாலங்கள் விமானம் ஒன்று ஓடுபாதையில் சிக்கிக்கொண்டமை காரணமாக பயணிகள் பெரும் சௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் நியூவார்க் நகரிலிருந்து ஹாங் கொங்கிற்கு விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை புறப்பட்டது. எனினும் நடுவானில் பயணி ஒருவருக்கு அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்டதால், விமானம் கனடாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கூஸ் பே (Goose Bay) விமான நிலையத்தில் தரையிறங்கியது. மருத்துவ உதவியாளர்கள், பயணியை விமானத்திலிருந்து வெளியேற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அதன்பின்னரும் விமானத்தினால் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முடியவில்லை.


சீனா பொருளாதாரம் - பின்னடைவுக்கு என்ன காரணம்?
[Monday 2019-01-21 17:00]

நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிகாரபூர்வ தரவுகளால் சர்வதேச பொருளாதாரத்தின் மீது இது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்த அச்சம் எழுந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில், சீனா பொருளாதாரம் 6.4% என்ற அளவில் வளர்ந்திருந்தது. இந்த வளர்ச்சியை அதற்கு முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் சீனா 6.5% என்ற வளர்ச்சியை எட்டியிருந்தது. இந்த முழு ஆண்டில் சீனா 6.6% என்ற அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது. 1990ஆம் ஆண்டு முதல் சீனாவில் பதிவான மிக குறைவான வளர்ச்சி விகிதம் இது. தற்போது வெளியாகியுள்ள இந்த புள்ளிவிபரங்கள் ஏற்கனவே கணிக்கப்பட்ட தரவுகளுடன் ஒத்துபோகிறது என்றாலும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாட்டின் பலவீனமான வளர்ச்சி பெரும் கவலையை அளிக்கிறது.


விளையாட்டாக லாப சீட்டு வாங்கியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
[Monday 2019-01-21 09:00]

கனடாவை சேர்ந்த ஒருவருக்கு எதேச்சையாக வாங்கிய அதிர்ஷ்டலாப சீட்டில் 7.9 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென் எல்பர்ட் நகரத்தைச் சேர்ந்த ராய்மெண்ட் முசல் என்பவர் சந்தைக்கு சென்றிருந்த போது எதேச்சையாக அதிர்ஷ்ட லாப சீட்டை கொள்வனவு செய்திருந்தார். அந்த சீட்டுக்கு தற்போது $7.9 மில்லியன் பரிசு விழுந்துள்ளமையை தான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக கனடாவில் விற்கப்படும் லொட்டோ 649 எனப்படும் அதிர்ஷ்டலாப சீட்டில் இரண்டு நபர்களுக்கு சேர்ந்து 15.8 மில்லியன் டொலர்கள் முதல் பரிசு வழங்கப்படும். அதில் முசலுக்கு 7.9 மில்லியன் டொலரும், ஒன்றாறியோவை சேர்ந்த மற்றொருவருக்கு மிகுதி பரிசும் கிடைத்துள்ளது.


'சமரசக் பேசிய டிரம்ப்' - முற்றாக நிராகரித்த எதிர்க்கட்சி!
[Monday 2019-01-21 09:00]

அமெரிக்க வரலாற்றிலேயே நீண்ட அரசுத் துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர தாம் முன்வைத்த யோசனைகளை நிராகரித்ததற்காக, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். தமது யோசனைகள் என்ன என்பதைத் தெரியப்படுத்தும் முன்னரே, அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் ஏறத்தாழ ஒரு மாதமாக தொடர்ந்து வரும் சூழலில் சமரசத்திற்கு இறங்கி வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். மெக்சிகோ எல்லை சுவருக்கான நிதியில் அவர் உறுதியாக இருந்தாலும், 'டிரீமர்ஸ்' என்று அழைக்கப்படும் சிறு வயதில் அமெரிக்கவிற்கு வந்த குடியேறிகள் தொடர்பாக ஒரு சமரசத்தை முன் வைக்கிறார் டிரம்ப். எல்லைச் சுவர் கட்டுவதற்கான 5.7 பில்லியன் டாலர் நிதியில் அவர் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளவில்லை. ஜனநாயகக் கட்சியினரும் எல்லைச் சுவருக்கு நிதி தர முடியாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். அவரது சமரசத் திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஜனநாயக கட்சி கூறியுள்ளது. அமெரிக்காவில் நடந்து வரும் இந்த பகுதியளவு அரசாங்க முடக்கம்தான், அதன் வரலாற்றிலேயே ஒரு நீண்ட அரசு முடக்கமாகும். இதனால் ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


கடவுச் சீட்டை தொலைத்த கனேடியர் : 4 மணிநேரத்தில் மீட்டுக் கொடுத்த இந்திய காவல்துறை!
[Monday 2019-01-21 09:00]

கனடா, ரொறன்ரோவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது தனது கடவுச் சீட்டு மற்றும் கைத்தொலைபேசியை தொலைத்த நிலையில், மும்பை பொலிஸார் அதனை தேடி மீள அவரிடம் ஒப்படைத்துள்ளனர். டேவிட் அண்ட்ரூ டெல்லர் (வயது 30) என்ற குறித்த கனடா சுற்றுலாப் பயணி கடந்த முதலாம் திகதி இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்றுள்ளார். இந்தநிலையில், மும்பை சுற்றுலா தலங்களை கண்டு களித்த பின்னர் விமானம் மூலம் நேற்று (சனிக்கிழமை) காலை 5 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.


உலகின் மிக வயதான 'மசாஸோ நோனாக்கா' காலமானார்!
[Sunday 2019-01-20 17:00]

உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிககாலம் வாழ்ந்த நபராக அறியப்படுகிறார். 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்த இவர் கடந்த 1997-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவருக்கு பின்னர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்து ஜப்பானில் கடந்த 2013-ம் ஆண்டில் மரணம் அடைந்த ஜிரோய்மோன் கிமுரா என்பவர்தான் கின்னஸ் சான்றுகளின்படி மிக அதிக காலம் வாழ்ந்தவராக கருதப்படுகிறார். அவருக்கு பின்னர் பல நாடுகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிக ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்த நபர்களாக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.


ஒன்றாறியோவில் கடும் குளிர் நிலவும் என எதிர்வு கூறல்!
[Sunday 2019-01-20 17:00]

ஒன்றாறியோவில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் குளிரான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்காரணமாக அநாவசிய வெளிப்பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மெக்ஸிக்கோவில் எரிபொருள் குழாய் வெடிப்பு : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71ஆக உயர்வு.
[Sunday 2019-01-20 17:00]

மெக்ஸிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் எரிபொருளை கொண்டுசெல்லும் குழாயை திருடர்கள் துளையிட்டதன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழாயிலிருந்து வெளியேறிய எரிபொருளை பிடிப்பதற்காக அங்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டோரின் உடல்கள் அங்கேயே இன்னமும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்ஸிகோ அதிபர் மானுவல் லோபஸ் ஒபராடோ அறிமுகப்படுத்தியுள்ள புதிய எரிபொருள் கொள்கையால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாற்குறையாலே இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா