Untitled Document
March 28, 2024 [GMT]
கடலில் 'பிளாஸ்டிக்' : நீச்சல் வீரர் எச்சரிக்கை!..
[Thursday 2018-12-13 08:00]

டோக்கியோ: கடலில் மூன்று நிமிடத்துக்கு ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கிடைத்ததாக பிரான்ஸ் நீச்சல் வீரர் பென் லொகோமிட் தெரிவித்துள்ளார்.பிரான்சின் நீச்சல் வீரர் பென் லொகோமிட் 51. இவர் கடந்த ஜூன் 5ல் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஜப்பானில் இருந்து பசுபிக் கடல் பகுதியில் அமெரிக்காவின் ஜான் பிரான்சிஸ்கோ நகருக்கு நீச்சல் பயணத்தை தொடங்கினார்.


சாலையில் சாக்லேட் ஆறாக ஓடியதால் பரபரப்பு!..
[Thursday 2018-12-13 08:00]

பெர்லின்: நம்மூரில் தார் சாலையே தரமில்லாமல் இருக்கும். ஜெர்மனியில் சாலை எங்கும் 'சாக்லேட்' ஆறாக ஓடியதால், மக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் என்பதால் ஐரோப்பிய நாடுகளில் 'கேக்', 'சாக்லேட்' உள்ளிட்ட இனிப்பு வகைகளின் தயாரிப்பு அமோகமாக நடக்கிறது.


பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி.
[Thursday 2018-12-13 08:00]

பிரான்ஸ் நாட்டில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள ஸ்டிராஸ்பர்க் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று முன்தினம் மாலையில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இரவு 8 மணி அளவில் அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர், மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் பதறியடித்தவாறு ஓட்டம் எடுத்தனர்.


பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு: - தப்புவாரா தெரசா மே?
[Wednesday 2018-12-12 18:00]

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.


ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை ஜாமினில் விடுதலை செய்த வான்கோவர் நீதிமன்றம்!
[Wednesday 2018-12-12 18:00]

சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஜவ், கனடாவில் வாங்கூவர் நகரத்தில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை கனடா எடுத்தது.அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்? என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஈரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறியதாக கூறப்படுகிற விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


மனச்சிதைவை குணப்படுத்த மருந்தை கண்டுபிடித்த ரஷியா ஆராய்ச்சியாளர்கள்
[Wednesday 2018-12-12 18:00]

மனதளவில் நினைத்ததை செயல்பட இயலாத மனக்கோளாறுகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.


வயிற்றுக்குள் பாம்பு: - கத்தியால் வயிற்றில் குத்தி தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!
[Wednesday 2018-12-12 14:00]

துருக்கியில் தன்னுடையை வயிற்றுக்குள் பாம்பு இருப்பதாக கூறி வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் வயிற்றில் குத்தி கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kocaeli மாகாணத்தை சேர்ந்தவர் சுக்ரு (22).< இவருக்கு சில நாட்களாக மனநல பிரச்சனை இருந்த நிலையில் தனது வயிற்றில் பாம்பு இருப்பதாக குடும்பத்தாரிடம் கூறினார்.


ஒரு டாலர் லஞ்சம் பெற்ற சீனர்கள் மீது வழக்கு.
[Wednesday 2018-12-12 09:00]

சரக்கு வாகன ஓட்டுநர்களிடமிருந்து பொருளை ஏற்றி, இறக்குவதற்கு லஞ்சம் பெற்ற இரண்டு சீன குடியேறிகள் மீது சிங்கப்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய சரக்கு வாகனங்களில் இருந்து பொருட்களை ஏற்றி, இறக்க பயன்படுத்தப்படும் டிரக்குகளின் ஓட்டுனர்கள் தங்களது பணியை தாமதமின்றி செய்வதற்தாக பலமுறை ஒரு டாலர், அதாவது இந்திய மதிப்பில் 70 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானமா? - பரபரப்பு தகவல்கள்.
[Wednesday 2018-12-12 09:00]

அமெரிக்க நாட்டில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அந்த தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள், பாலியல் புகார்களை கூறினர். ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்ளிட்ட 2 பெண்கள், தங்களுடன் டிரம்ப் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதை வெளியே சொல்லி விடப்போவதாக மிரட்டியதாக கூறப்பட்டது. ஒருவேளை, இந்த விவகாரம் வெளியே கசிந்து விட்டால், அது ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக திரும்பி விடும் என்பதால் அவர்களுக்கு டிரம்பின் வக்கீலாக இருந்த மைக்கேல் கோஹன் பணம் தந்து அவர்களின் வாயை அடைத்தார் என்று தகவல்கள் வெளியாகின.


பிரான்ஸில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: - நால்வர் உயிரிழப்பு
[Wednesday 2018-12-12 08:00]

பிரான்ஸின் ஸ்ட்ரஸ்போர்க் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 12 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்ட்ரஸ்போர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தைக்கருகில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய ஆறு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


நைஜீரியாவில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த 70 வயதான முதியவர்!
[Wednesday 2018-12-12 08:00]

நைஜீரியாவில் 70 வயதான முதியவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. யகுபு சஞ்சி (70) என்பவர் நைஜீரியாவின் Lapai பகுதியில் வசித்து வருகிறார். அந்த ஊரின் பெரிய மனிதராக கருதப்படும் சஞ்சி அதிகளவு திருமணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை கைவிடுமாறு சீனாவை வலியுறுத்திய அமெரிக்கா!
[Wednesday 2018-12-12 08:00]

தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா, சீனாவை வலியுறுத்தியுள்ளது. சீனாவின் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி கனடாவில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கனேடிய பிரஜையொருவர் சீனாவில் கைது செய்யப்பட்டார்.


கர்ப்பிணியை கத்தியால் குத்திய இந்திய வம்சாவளி கணவருக்கு 7 ஆண்டு சிறை!..
[Tuesday 2018-12-11 21:00]

சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி நபரான ஜெயசீலன் சந்திரசேகர்(30) என்பவர் விலைமாதாக முன்னர் தொழில் செய்துவந்த மயூரி(27) என்பவரை விரும்பி கடந்த 2013-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்துக்கு பின்னர் கணவருக்கு ஒழுக்கமான மனைவியாக வாழ்ந்துவந்த மயூரி, கடந்த ஆண்டில் தனது முன்னாள் காதலரும், விபச்சார தரகருமான ஒருவருடன் மீண்டும் நட்பை புதுப்பித்து வந்ததாக நம்பிய ஜெயசீலன் சந்திரசேகர், தனது மனைவி வீட்டைவிட்டு வெளியே செல்ல தடை விதித்தார்.


அவுஸ்திரேலியாவில் சாதிக்க வயதில்லை என்பதை நிரூபித்த 102 வயது மூதாட்டி!
[Tuesday 2018-12-11 18:00]

அவுஸ்திரேலியாவில் சாதிக்க வயதில்லை என்பதை 102 வயது மூதாட்டி ஒருவர் நிரூபித்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்டைச் சேர்ந்தவர் Irene O


கனடாவிலிருந்து மெக்சிகோவுக்கு சுற்றுலா சென்று மாயமான இளம் பெண்ணுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
[Tuesday 2018-12-11 18:00]

கனடாவின் Quebecஇலிருந்து மெக்சிகோவுக்கு தனது ஆண் நண்பர் ஒருவருடன் சுற்றுலா சென்றார் Christine St-Onge (41).பின்னர் Christineஇன் ஆண் நண்பர் மட்டும் கனடா திரும்பினார்.கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து Christineஇடமிருந்து தகவல் எதுவும் வரவில்லை, அவர் எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை. இந்நிலையில், Quebec திரும்பிய Christineஇன் நண்பர் ஊர் திரும்பிய அடுத்த நாள் இறந்து கிடந்தார்.


மலைப்பாம்பிடம் உயிரை பறிகொடுத்து எஜமானரின் குடும்பத்தினரை காப்பாற்றிய நாய்!
[Tuesday 2018-12-11 18:00]

மலேசியாவில் மலைப்பாம்பிடம் தனது உயிரை பறிகொடுத்து தனது எஜமானரின் குடும்பத்தினரை காப்பாற்றிய நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Jalan Kejatau பகுதியில் உள்ள வீட்டில் வாழும் குடும்பத்தார் நாய் ஒன்றை வளர்த்து வந்தனர்.


ரஷ்யாவில் 50க்கும் மேற்பட்ட பெண்களை கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
[Tuesday 2018-12-11 17:00]

ரஷ்யாவில் 50க்கும் மேற்பட்ட பெண்களை கொலை செய்த மிக்ஹெய்ல் பப்கோவ் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அங்காஸ்க் பகுதியை சேர்ந்த போலீசான மிக்ஹெய்ல் பாப்கோவ், 1992 முதல் 2007 வரை 56 பெண்களை கொலை செய்துள்ளார். இரவு நேரத்தில் தனது காரில் லிஃப்ட் கேட்டு வரும் பெண்களை சுத்தியல் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்து வந்துள்ளார்.


அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்கள் வித்தியாசமான முறையில் கௌரவிப்பு!
[Tuesday 2018-12-11 15:00]

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நாடியா முராட் மற்றும் டெனிஸ் முக்வெஜ் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் தீப்பந்தங்களுடனான வித்தியாசமான பேரணியொன்று இடம்பெற்றது. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நூற்றுக் கணக்கானோர் கூடி நேற்று (திங்கட்கிழமை) இப்பேரணியை முன்னெடுத்திருந்தனர்.


வட கொரிய தலைவரின் உயர்மட்ட உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை!
[Tuesday 2018-12-11 15:00]

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னின் உயர்மட்ட உதவியாளர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. தீவிர மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் இம்மூவருக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.


1 டாலர் கூட பாகிஸ்தானுக்கு நிதி வழங்கக்கூடாது.அமெரிக்க தூதர் ஆவேசம்.
[Tuesday 2018-12-11 09:00]

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 33 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.2 லட்சம் கோடி) இதுபோல் நிதியாக வழங்கப்பட்டு உள்ளது.


கொலை செய்யப்பட்ட கசோக்கியின் கடைசி நிமிடங்கள் குறித்த ஆடியோ பதிவு.
[Tuesday 2018-12-11 09:00]

வாஷிங்டன்: துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி சென்ற சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, அங்கு கொலை செய்யப்பட்டார். முதலில் இதனை மறுத்த சவுதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது.


அமெரிக்கா- ஜப்பானுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு!
[Tuesday 2018-12-11 09:00]

2018ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானின் தசுக்கு ஹொன்ஜோ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான நோய் எதிர்ப்பு அமைப்பை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான கண்டுபிடிப்பில் ஈடுபட்டவர்களுக்கே மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.


வானத்திலும் பாலியல் தொல்லை: விமான பணிப்பெண் ஆதங்கம்.
[Tuesday 2018-12-11 09:00]

ஹாங்காங்: உலகம் முழுவதும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை


பிரிட்டன் விரும்பினால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவை கைவிடலாம்!
[Monday 2018-12-10 18:00]

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் அனுமதி இல்லாமல் பிரெக்ஸிட் முடிவை பிரிட்டனால் ரத்து செய்ய முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரிட்டனின் உறுப்பினர் நிலை விதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இதனை செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். பிரெக்ஸிட் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்றால், அந்த முடிவினை ஒருதலைபட்சமாக பிரிட்டனால் எடுக்க முடிய வேண்டும் என பிரெக்ஸிட்டிற்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் பிராசாரம் செய்பவர்களின் குழு தரப்பில் வாதிடப்பட்டது.


மனிதர்களுக்கு பன்றியின் இருதயம்: - விஞ்ஞானிகள் ஆய்வு
[Monday 2018-12-10 17:00]

இருதய நோய்கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர். மருந்து மாத்திரைகள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இருதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இருதயம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் காத்து கிடக்கின்றனர்.


இயேசுவை நான் திருமணம் செய்துகொண்டேன்!
[Monday 2018-12-10 13:00]

ஜெஸிக்கா ஹெய்ஸ், தமக்கு தாமே திருமண உடையையும் மோதிரத்தையும் வாங்கிக் கொண்டார். ஆனால், திருமணத்திற்காக தேவாலயத்தில் பாதிரியார் முன்பு நிற்கும்போது, அவர் அருகில் மணமகன் என்று யாரும் இல்லை. அவர் இயேசுவுடன் திருமணம் செய்து கொள்கிறார். 41 வயதான ஹெய்ஸ், கடவுளின் மனைவியாக இருக்க விருப்பப்பட்டு, கன்னிப் பெண்ணாக தெய்வத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.


ஜப்பானின் பேரரசியாகும் மாசகோ: - என்ன சொல்கிறார்?
[Monday 2018-12-10 13:00]

ஜப்பான் பட்டத்து இளவரசி மாசகோ தான் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நாட்டின் பேரரசியாக பதவியேற்கவுள்ளது குறித்து "பாதுகாப்பற்று" உணர்வதாகவும், ஆனால் ஜப்பான் மக்களுக்கு தன்னாலான சிறந்த சேவையை அளிப்பதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


துருக்கி விடுத்த கோரிக்கையை நிராகரித்த சவுதி அரேபியா!
[Monday 2018-12-10 12:00]

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலையுடன் தொடர்புடையவர்களை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. தமது நாட்டு பிரஜைகளை எந்த காரணம் கொண்டும் வேறு நாட்டிடம் ஒப்படைக்க மாட்டோம் என சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அடெல் அல் ஜூபைர் தெரிவித்துள்ளார்.

Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா